Search This Blog

16.4.08

இராமர், இராமாயணம் - வரலாற்று அறிஞர்கள் கூறுவது என்ன? (2)

மரபு வழியாக இராமாயணம் வால்மீகி முனிவரால் இயற்றப் பெற்ற முதல் காப்பியம் என்று கருதப்பட்டு வருகிறது. இந்திய இலக்கியங்களில் வால்மீகியைப் பற்றிய எண்ணிறந்த கற்பனைக் கதைகள் காணப்படினும் அவருடைய காலம், தொடக்க வாழ்க்கை ஆகியன குறித்து எதையும் உறுதிபட நிலை நிறுத்த இயலவில்லை. இராமாயணம் மொத்தத்தில் இடைச் செருகல் இல்லாத படைப்பு அன்று என்பது உண்மையே ஆன போதிலும் தனி ஒருவரினால் இயற்றப் பெற்ற நூல் என்பதால் வால்மீகி என்பவர் வாழ்ந்தார் என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

இந்நூலாசிரியரின் இந்தக் கீழ்க்கண்ட வரிகள் தாம் சிந்திக்கத் தக்கன. நாம் கூறும் இராமாயணம் கற்பனைக் கதை, வழி வழியாக வந்த கதை ஜெகம்புகழும் புண்ணிய கதை என்னும் கருத்துக்கு வலுச் சேர்ப்பன.

“Valmiki must have created the Ramayana from the simple ballads that would have been current till his days from times immemorial”
(வால்மீகி தம் காலத்திற்கு முற்பட்ட தம் காலம் வரையில் நிலவி வந்த நாடோடிப் பாடலில் இருந்து இராமாயணத்தை உருவாக்கியிருக்கவேண்டும்).
இதிகாசங்கள், புராணங்கள், ஆக்ஞானங்கள் முதலான பிற்கால வேத காலங்களில் அத்தகைய கற்பனைக் கதைகள், மரபுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
பௌத்த ஜாதகக் கதை ஒன்றில் தரசரத ஜாதக் கதை என்பதல் இராமனை முற்றிலும் மாறுபட்ட கோணத்த்ல் காட்டியிருக்கின்றனர். இங்கே சீதை மிதிலையின் ஜனகரின் மகளாகக் கூறப்படாமல் இராம பண்டிதரின் சகோதரி என்று விவரிக்கப் பட்டுள்ளார். சீதைதான் அப்படி என்றால், தசரதன் அயோத்தியின் அரசனாகக் காட்டப் பெறாமல், வாரணாசியின் அரசர் என்று கூறப்பட்டிருக்கிறார். இராமன் தன்னுடைய வனவாசத்தை முற்றிலும் இமாலயக் காடுகளில் கழித்திருக்கிறார்.

சுனில் குமார் சாட்டர்ஜி இந்த ஜாதக இராமாயணக் கதையே இப்போதுள்ள இராமாயணத்திற்கு அடிப்படை என்று கூறுகிறார். ஏனென்றால் இந்த ஜாதகக் கதை இராமாயணம் இப்போதுள்ள வால்மீகியின் இராமாயணத்திற்குக் காலத்தால் முந்தியது. டி.சி. சர்க்கார் என்பவர், பௌத்த ஜாதகக் கதை பிராமணீயக் கற்பனைக் கதைகளை இழிவு படுத்த பௌத்தர்கள் வேண்டுமென்றே மேற்கொண்ட திரிபு முயற்சி இது என்று கூறுகிறார். எனினும் திரித்துக் கூறப்பட்ட கதை என்றாலும் வழக்கத்திலிருந்த கற்பனைக் கதையே இராமாயணம் என்பதற்கு இது சான்றாகிறது.

இராமாயணம் கற்பனைக் கதையே என்பதற்கு இன்னும் சில ஆதாரங்களைக் காணலாம். வேதகால, நாகர் ஆதாரங்களின் அடிப்படையில் இராமாயணக் கதை தோன்றியது என்று சுகுமார் சென் எனும் வரலாற்றாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

சீதை அசுவினி சகோதரர்களின் சகோதரி என்று வேத ஆதாரம் ஒன்றில் காட்டப் பெற்றுள்ளது.
சீன ஆதாரங்களில் காணப்படும் இராமாயணக் கதை கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் மய்யத்தில் பவுத்த மூல நூலிலிருந்து மொழி பெயர்க்கப் பெற்றது கிடைத்துள்ளது. இந்நூலில் இராவணன் நாக அரசனாகக் கூறப்பட்டிருக்கிறார். துறவி வேடத்தில் சென்று இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதாக இந்த வரலாற்றுக் கதை கூறுகிறது.

இதுவரை கிடைத்துள்ள இராமாயணம் பற்றிய ஏடுகள் கிடைத்துள்ள காலம் மிகப் பழமையானது. கி.பி. 1020 கடைசியாக உள்ள காலம் கி.பி. 180 வரை.
பரோடாவில் உள்ள ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் கிடைத்துள்ள இராமாயண மூலப்படிகளை யெல்லாம் சேகரித்து இராமாயண ஆய்வு நூல் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த நூல் கி.பி. 500 க்கு முற்பட்ட தொகுப்பாகக் கருதப்படுகிறது.

பல்வேறு கருத்துகளின் அடிப்படையினை ஆய்வு செய்த வின்டர்னிட்சு கி.பி. இரண்டாம் நூற்றாண்டுதான் இராமாயணத்தின் காலம் என்று முடிவிற்கு வந்தார். பரோடா நிறுவனம் ஆய்ந்த முடிவு நூலை உருவாக்கிய பின்னரும் வின்டர்னிட்சு முடிவு செய்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான் இராமாயணக் கதை இப்போதைய வடிவத்தைப் பெற்றது என்பதை மறுக்க முடியவில்லை.

இராமாயணத்தில் சேர்க்கைகள், மாற்றங்கள், பிற்சேர்க்கைகள் ஆகியன இராமாயணத்திற்கு, இப்போது நாம் காணும் வடிவத்திற்கு வால்மீகியின் படைப்புக் காலத்திற்கு மாறுபட்ட காலத்திற்கு உரிய காலம் கி.மு. 200 அதாவது இரண்டாம் நூற்றாண்டு கிடைத்துள்ள இரமாயணம் தோன்றிய காலம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக் காலமாகும்.

இராமாயணத்தின் வரலாற்றுத் தன்மையை அறிஞர் பெருமக்கள் ஆய்வு செய்துள்ளன. இராமாயணக் கதையின் கருத்து முழுமையாக வரலாற்று ஆதாரம் உள்ளது என்று ஒரு சிலர் வாதிட்ட போதும் மற்றொரு பிரிவினர் இராமாயணம் கற்பனைப் படைப்பு என்பதனை ஆராய்ச்சி வாயிலாக மறுத்து எடுத்துரைத்துள்ளனர்.

மிக எளிமையான ஏதோ ஒரு வரலாற்றுச் செய்தி இருந்திருக்க வேண்டும். அதற்குக் கவிஞர்களின் கற்பனை, கற்பனைக் கதைகள், கற்பனைகள் அலங்காரங்கள், அழகுகள், ஒப்பனைகள் நாளடைவில் சேர்க்கப்பட்டு இராமாயணத்தை வரலாறு போல் காட்டிவிட்டனர்.
எச். டி. சங்காலியா என்ற தொல்பொருள் ஆய்வாளர் தொல்பொருள் ஆய்வினை மேற்கொண்டு இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்களை யெல்லாம் ஆய்வு செய்து இராமாயணம் பற்றிய ஆய்வில் ஆதாரங்கள் ஏதுமில்லாக் கற்பனையே என்று வெளிப்படுத்தினார்.

------முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் "விடுதலை" 5-2-2008 இதழில் எழுதியது

0 comments: