Search This Blog

1.11.08

உயிர்களை உருவாக்கியது கடவுளா?



உலகமும் - உயிர்களும்

உலகமும் உயிர்களும் படைக்கப்பட்டன அல்ல; எரிமலைகள் வெடித்தமையால்தான் உயிர்கள் உற்பத்தி ஆயின. இதோ ஆதாரம்:

எரிமலைகள் வெடித்துச் சிதறியதுதான் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் காரணமாக அமைந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

நீரில், வாயுக்களைக் கலந்து மின்சாரத்தைச் செலுத்தி அந்த நீரில் அமினோ அமிலம் உண் டானதைச் சோதனைச் சாலைகளில் செய்துபார்த்து இந்த முடிவுகளைக் கூறியுள்ளனர்.

எரிமலைகள் வெடித்துச் சிதறியயமைதான் தொடக்க காலத்தில் இருந்த தூசுக் குழம்பைச் சூடாக்கி வாயுக்களை உற்பத்தி செய்துள்ளன என்கிற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

1953-இல் ஸ்டான்லி மில்லர் எனும் ஆய்வாளர் இரண்டு பிளாஸ்குகளில், ஒன்றில் தொடக்க காலக் குழம்பு (Cosmic Soup) எனவும், மற்றொன்றில் வாயுக்கள் எனவும் எடுத்துக் கொண்டு ஊழி யின் தொடக்க கால நிலையை உருவாக்கிக் கொண்டார். பிறகு இவை இரண்டையும் ரப்பர் குழாய் மூலம் இணைத்தார். பின்னர் இவற்றில் மின்சா ரத்தைப் பாய்ச்சி மின்னலின் தாக்குதலை நடத்தச் செய்தார்.

சில நாள்களுக்குள் நீரில் அமினோ அமிலங்கள் உற்பத்தியாகி மேலும் சில உயிர்க் கூட்டுகளும் உருவாகி, உயிர்கள் உற்பத்தியாகக் கூடிய சூழலைத் தோற்றுவித்தன.

கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கடல்வாழ் உயிரினப் பேராசிரியர் ஜெஃப் பாடா என்பவர் ஸ்டான்லி மில்லரிடம் உதவியாளராக இருந்தவர்; மில்லர் பயன்படுத்திய சாம்பிள்களை மீண்டும் ஆய்வு செய்தார். அண்மைக்காலக் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்து ஏதும் புதிய பொருள்களைக் காண முடியுமா என ஆய்ந்தார்.

11 சாம்பிள்களை மீண்டும் ஆய்வு செய்ததில் 22 வகை அமினோ அமிலங்கள் உள்ளதைக் கண்டு பிடித்தார். இவற்றில் 10 வகைகளை ஏற்கெனவே மில்லரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மின்னல்களும் எரிமலை வெடிப்புகளும் சேர்ந்துதான் உலகில் உயிர்களை உருவாக்குவதற்கு உதவி செய்துள்ள என்பதுதான் ஜெஃப் கண்டுபிடித்த ஆய்வின் முடிவாகும்.

இன்னும்கூட பலவற்றை மில்லரின் ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியம் என பாடா கூறுகிறார். எரிமலைக் குழம்புகள் பற்றி அறிந்திடக் கண்டுபிடிக்கப்பட் டுள்ள நவீன கருவிகள் பலவேறு கூட்டுப்பொருள்களைக் கண்ட றிய உதவும் எனவும் அவர் கூறுகிறார்.

மின்னலின் மின் சக்தியும் வாயுக்களோடு சேர்ந்து எரிமலைக் குழம்புகளுடன் இணைந்த போது, உயிர்கள் உருவாவதற்கானச் சூழலைத் தோற்றுவித்தன என்பதுதான் இந்த ஆய்வுகள் உறுதிபடத் தெரிவிக்கின்றன.

உயிர்களின் உற்பத்தியில் கடவுளுக்கு தொடர்பே கிடையாது. அப்படிக் கூறுவது மூடத்தனம் என்பதுதான் முடிவு..

----------- "தி டெய்லி டெலிகிராம்" இதழில் வெளிவந்த ஆய்வு முடிவு.

1 comments:

கோவி.கண்ணன் said...

//எரிமலைகள் வெடித்துச் சிதறியதுதான் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் காரணமாக அமைந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உயிர்களின் உற்பத்தியில் கடவுளுக்கு தொடர்பே கிடையாது. அப்படிக் கூறுவது மூடத்தனம் என்பதுதான் முடிவு..//

எரிமலையை வெடிக்க வைத்தது கடவுள் என்பார்களே !
:)))))