Search This Blog
14.11.08
விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பயந்து 25,000 சிங்கள ராணுவத்தினர் தப்பி ஓட்டம்!
விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பயந்து இதுவரை 25,000 சிங்கள இராணுவத்தினர் அவர்களுடைய இராணுவப் படையிலிருந்து தப்பி ஓடியிருக்கின்றார்கள் என்று ஆதாரத்துடன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.
சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும்! என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6-11-2008 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
எவ்வளவு சாதாரணமாகக் கொச்சைப்படுத்துகிற மாதிரி சொல்லுகிறார்கள் - பாருங்கள். அதாவது கொச்சைப்படுத்தி எழுதுகிறார்கள்.
பிச்சைக்காரர்களிடமிருந்து மீனை அள்ளிக்கொண்டு வருகிறார்களாம்!
பிச்சைக்காரர்களிடமிருந்து மீனை அள்ளிக் கொண்டுவந்து விடுகின்றார்கள் என்று கொச்சைப்படுத்துவதா? அப்படியானால், அந்த மக்களுடைய நிலை என்ன? அரை குறையாகப் படித்தவன் இருக்கின்றான் பாருங் கள். இதில் படித்தவன் என்ன நினைப்பான்? ஓகோ, இவர்கள் எல்லாம் இதற்காகத்தான் இருப்பார்கள் போலிருக்கிறது. இதற்காகத் தான் வாதாடுவார்கள் போலிருக்கிறது.
ஏனென்றால் நம்மாள் இப்பொழுதுதான் பேண்ட் போட்டு இங்கிலீஷ் எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றான். அவர் இந்த பேப் பரைப் பார்த்தால் என்ன நினைப்பான்? எவ் வளவு பெரிய பிரச்சினையை இவன் எவ்வளவு கேவலமாக ஆக்கிவிட்டான் பாருங்கள்.
எத்தனை ஆண்டுக்கால பிரச்சினை?
இது எவ்வளவு காலப் பிரச்சினை? எத்தனை ஆண்டு காலத்திற்கு முன்னாலே போடப்பட்ட ஒப்பந்தம்? எவ்வளவு பெரிய உயிர்ப் பிரச்சினை? எவ்வளவு பெரிய மான வாழ்வுப் பிரச்சினை? எதற்காக இது மாதிரி பிரச்சாரம் செய்கிறார்கள்? இந்த மாதிரி ஏராளமான செய்திகளை எடுத்துச் சொல்லலாம்.
அதுமட்டுமல்ல, அவர்கள் எடுத்துச் சொன்னால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். மற்றவர்கள் அதே கருத்தைச் சொன்னால் தேசத் துரோகிகள். புலிக்கு ஆதரவாகப் பேச வந்துவிட்டார்கள். விடுதலைப்புலிகளுக்காக இப்பொழுது பிரச்சாரம் செய்கின்றார்கள் என்று சொல்லுகின்றார்கள். நேற்று கொழும்பி லிருந்து வந்திருக்கின்ற பத்திரிகையில் - மாலை முரசு பத்திரிகையில் வந்த செய்தி:
இலங்கை அரசுக்கு இப்பொழுது ஒரு பெரிய தலைவலி பிரச்சினை என்னவென்றால் ஏற்கெனவே வன்னிப்பகுதியிலே சிங்களவர்கள் உள்ளே நுழைந்த இடத்தில்கூட, எந்த சிங்கள இராணுவச் சிப்பாயும் அங்கே தங்குவதற்குத் தயாராக இல்லை.
25,000 சிங்கள இராணுவத்தினர் ஓட்டம்
சிங்கள இராணுவத்தினர் ஓடிவந்து விடுகின்றார்கள் திரும்பத் திரும்ப கொழும்பு வந்து விடுகின்றார்கள். அடையாளம் தெரியாமல் ஓடிப் போகிறார்கள். ஒடிப் போகின்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து இராணுவத்தில் சேர்க்கிறார்கள். அவர்களாலே போரைச் சந்திக்க முடியவில்லை. இதுவரையிலே 25,000 சிங்கள இராணுவத் தினர் அப்படி ஓடியிருக்கின்றார்கள்.. இதனால் இப்பொழுது அங்கு என்ன நிலைமையென் றால் ஆளே கிடைக்கவில்லை - இராணுவத் திற்கு. இந்த செய்தி தமிழ் பத்திரிகையில் வந்தி ருக்கிறதே தவிர, ஆங்கில பத்திரிகையில் இந்த செய்திகள் வரவில்லை. அப்படி வந்தாலும் அதை வேறுவிதமாகச் சொல்லுவான் விடு தலைப்புலிகள் பலகீனமாகிவிட்டார்கள் என்று சொல்லுகின்றான்.
2,30,000 தமிழர்கள் காடுகளில்
இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் காடு களில் வாழுகின்றார்கள். மனித நேயத்தோடு சிந்திக்க வேண்டாமா? அந்த மக்கள் திரும்ப வேண்டாமா? சொந்த வீடுகளை இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, தாயை இழந்த பிள்ளை, பிள்ளையைத் தொலைத்த தாய், இப்படிப்பட்ட நிலையிலே இருப்பவர்களுக்கு ஒரு விடிவு ஏற்பட வேண்டாமா? என்று போர் நிறுத்தம் கேட்டால், அவ்வளவு பெரிய பிரச் சியை, எப்படி இந்த மீனவர் பிரச்சினையைக் கொச்சைப்படுத்தினார்களோ, அதேபோல, அவர்கள் எப்படிக் கொச்சைப்படுத்துகின் றார்கள்?
விடுதலைப்புலிகள் பலகீனமாகிவிட்டார்களா?
ரொம்ப சுலபமாக விடுதலைப்புலிகள் எல் லாம் பலகீனமாகி விட்டார்கள். ஏனென்றால் சிங்கள ராணுவம் அவ்வளவு வீரத்தோடு போராடுகிறது - பாருங்கள். நேற்று தமிழ்ப் பத்திரிகையில் வந்த செய்தி, இலங்கையில் உள்ள பேருந்தில் ஒவ்வொன்றாக தேடுகிறார்களாம். யார்? சிங்கள இராணுவ அதிகாரிகள், யாராவது கொஞ்சம் மிடுக்காக சிங்களவன் இருந்தான் என்றால் டக்கென்று ஓடிப்போய் அவரைப் பிடிக்கின்றார்களாம். யாரை? சிங்களவர்களை, சிங்கள இராணுவத் தினரை.
நீ இராணுவத்திலிருந்து ஓடி வந்தவனா?
ஏனென்றால் நீ இராணுவத்திலிருந்து ஓடி வந்தவனா? (சிரிப்பு - கைதட்டல்) என்று கேட்டு ஆளைப் பேருந்தில் இருந்து இறக்குகிறார் களாம். போதுமா? எவ்வளவு பெரிய வீரர்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டாமா? இப்பொழுது அவன் வேலையே தமிழனைக் கண்டுபிடிப்பதில் இல்லை. இராணுவத்தி லிருந்து பயந்து திரும்பி ஓடுகின்றவர்களைப் பிடிப்பதுதான் சிங்களவர்களுடைய வேலை. இதுதான் சிங்களவர்களின் வீரம் (பலத்த கைதட்டல்).
விடுதலைப்புலிகள் கொழும்பைத் தாக்கினார்கள்
விடுதலைப்புலிகள் திடீரென்று விமானம் மூலம் கொழும்பைப்போய் தாக்கினார்கள். விடுதலைப்புலிகள் எல்லாம் பலகீனமாகிவிட் டார்கள் என்று நினைத்தவர்களைத் தாக் கினார்கள். ஒன்றே ஒன்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டில் உள்ள ஏடுகள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஏடுகளை நம்பிப் பிடித்துக் கொண்டிருக்கின்ற அப் பாவித் தமிழர்கள் அல்லது அறியாமைத் தமிழர்கள், நுனிப்புல் மேய்கிற தமிழர்கள் அவர்களும் சேர்ந்து தெரிந்துகொள்ள வேண் டிய செய்தி என்னவென்றால் எந்த அமைப்பும் தமிழ்நாட்டிலோ, அல்லது இன்னொரு இடத் திலோ விடுதலைப்புலிகளுக்காக வாதாட வேண்டிய அவசியமே இல்லை.
விடுதலைப்புலிகளை காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்குத் தெரியும்
அவர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்கள் என்றைக்கும் தயாராக இருக்கின்றார் கள் (பலத்த கைதட்டல்). எனவே இதை அப் படியே திசை திருப்புகின்றார்கள். கலைஞர் அவர்கள் இவ்வளவு பெரிய முயற்சி எடுக் கின்றார். எவ்வளவு யோக்கியப் பொறுப்பற்று இருந்தால் தமிழனுக்கு ஒரு உணர்வு இருந் தால், இந்த அம்மா ஒரு கேள்வியைக் கேட் கிறதே. இங்கே நம்முடைய கழகப் பொரு ளாளர் அவர்களும் சொன்னார்களே!
இந்தப் பணமெல்லாம் விடுதலைப்புலிகளுக்காக
ஆகா! இந்தப் பணமெல்லாம் முதலமைச்சர் கலைஞர் எதற்கு சேர்க்கிறார் தெரியுமா? விடுதலைப்புலிகளுக்குக் கொண்டு போய் கொடுப்பதற்காக என்று சொல்லுகின்றீர்களே, இந்தப் பணம் எப்படிப் போகும்? யாருக்குப் போகும்? தெளிவாக அவர் மத்திய அரசாங்கத் திற்கு எழுதி மத்திய அரசாங்கத்திலிருந்து உடனடியாக 24 மணிநேரத்திற்குள்ளாக பதில் வருகிறது. 24 மணிநேரத்திற்குள்ளாகப் பதில் வாங்கக் கூடிய ஒரே ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்றால், அவர் கலைஞர்தான். அந்தம்மா சொல்கிறது - என்னையே நோக்கி அடிக்கடி வந்துகொண்டிருந்தார்கள் என்று. இவர் களுடைய தொல்லை தாங்காமல் வந்திருப்பார்களே ஒழிய, வேறு பொதுப்பிரச்சினைக்காகவா வந்தார்கள்?
கொண்டு செல்கின்ற பொருள்கள் எல்லாம்
இங்கே இருந்து கொடுக்கப்படுகிற பொருள்கள் அனைத்தும் நேரே நமது இந்தி யத் தூதுவருக்கு கப்பல் மூலமாக அனுப்பப் படும். கப்பல் மூலமாக அனுப்பப்படுவது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூல மாகவோ, அல்லது அய்.நா.வினுடைய பொதுப் பார்வையாளர்கள் மூலமாகவோ அங்கே அவதிப்படுகின்ற தமிழர்களுக்கு, உண வாக, மருந்தாக கிடைக்கும் என்று தெளி வாகச் சொல்லிவிட்ட பிற்பாடு அப்புறம் என்ன விடுதலைப்புலிகளுக்கு? என்ன தெரியாமல் சொல்லுகின்றார்களா? சரி அய்யா! யார் கேட்பது இந்தக் கேள்வியை? இந்தப் பணம் எங்கே போகிறது என்று கொடுத்தவரல்லவா இந்தக் கேள்வியை கேட்கவேண்டும் (சிரிப்பு - கைதட்டல்). ஒரு காசுக்கூட கொடுக்காதவன் கேட்டால் என்ன அர்த்தம்? (சிரிப்பு - கைதட்டல்). உனக்கு நாணயம் இருந்தால், தெளிவு இருந்தால் முதலில் பணத்தைக் கொடுங்கள். அந்தப் பண்பாடு இருக்கிறதா உங்களுக்கு? கலைஞருக்கு அந்த பண்பாடு இருந்ததய்யா. இந்த அம்மா முதலமைச்சராக இருந்தபொழுது, சுனாமி வந்தது.
சுனாமி நிவாரண நிதி - ஸ்டாலின் - ஜெயலலிதாவிடம் வழங்கினாரே!
சுனாமி நிவாரண நிதிக்காக கலைஞர் அவர்களுக்கு வந்தத் தொகையை மு.க. ஸ்டாலின் அவர்களிடம் கொடுத்து, ஸ்டாலின் அவர்கள் அந்த அம்மையாரைப் பார்த்து கோட்டையிலே கொடுத்தாரே (கைதட்டல்) காரணம் - பெரியாரை அண்ணாவை ஒழுங்காகப் படித்தவர்கள் அவர்கள். அத்தகைய பண்பாடு கலைஞரிடம், தி.மு.க.விடம் இருக்கிறது.
ஏனென்றால் பொது விசயம் என்று வருகின்றபொழுது ஒற்றுமை தேவை. இந்த அம்மையார் திடீரென்று ஒரு நாள் சட்ட சபைக்கு வருவார்கள். திடீரென்று ஒருநாள் தோன்றுவார்கள்.
கட்சி அலுவலகத்திற்கு வருவதற்கே போஸ்டர்
கட்சி அலுவலகத்திற்கு அந்த அம்மையார் வருவதற்கே போஸ்டர் அடித்து ஒட்டுகின் றார்களே (சிரிப்பு - கைதட்டல்). உலகத்தில் இப்படி நடக்கின்ற சம்பவம் வேறு எங்காவது உண்டா? சொந்தக் கட்சி அலுவலகத்திற்கு வருவதே என்னமோ பெரிய விசயம். மாதிரி பேசுகிறார்கள்.
என்ன சந்திராயன் இறங்குகிற மாதிரியா?
சந்திர மண்டலத்திற்குப் போய் சந்திராயன் இறங்குகிற மாதிரியா - அது? ஆனால், நம் முடைய நாட்டுப் பத்திரிகைகள் அவ்வளவையும் தாங்கிப் பிடிக்கும். காரணம், கன்னியா குமரியிலே தேள் கொட்டினால் அது காஷ்மீர் பார்ப்பனருக்கு நெறிகட்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்களே. அந்த உணர்வைத் தவிர வேறு என்ன இருக்கிறது? (கைதட்டல்)
கேள்வி கேட்டீர்கள். இப்படிப் போகவேண்டும் என்று பதில் சொல்லப்பட்டுவிட்டது. இன்னமும் கலைஞர் பொறுமை காக்கின்றார். அவர் இப்பொழுது விடுகின்ற அறிக்கையில் இந்த சூழ்நிலையில் நாம் ஒன்றுபட்டு செயல் பட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.
நான் ஒருவனே இதனை சாதித்துவிட முடியாது
நான் ஒருவனே இதனை சாதித்துவிட முடியாது. அரசாங்கம் என்று சொன்னால் கேள்வி கேட்டிருக்கின்றார்கள். ஆனால் அதற்காக அவர் ஆத்திரப்படவில்லை. ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்றுகூடக் கேட்க வில்லை. இன்னொருவர் சொல்லுகிறார். ஏன் அரசாங்கமே ஈழத் தமிழர்களுக்கான நிதியைக் கொடுக்கக் கூடாது? என்று கேட்கிறார். அரசாங்கத்திலிருந்த பணத்தைக் கொடுத்திருந்தால் மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை எப்படி காட்ட முடியும்? நாம் ஏன் சென்னை - அண்ணா சாலையில் கொட்டுகின்ற மழையில் மனிதச் சங்கிலி என்று நடத்தி ஒருவரை ஒருவர் ஏன் கைகோர்த்துக் கொண்டு நின்றோம். எல்லோருக்கும் அந்த உணர்வு இருக்கிறது என்று நாம் நின்று காட்டினோம். அதற்குப் பிறகுதான் புரிந்துகொண்டார்கள். கலைஞர் தலைமையில் போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால்
இதுவே கலைஞர் தலைமையில் இந்த அறப்போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால், அல்லது தமிழர்கள் தலைமையில் நடக்காமலிருந்தால் இந்நேரம் என்ன சொல்லியிருப்பார்கள். உலக வரலாற்றிலே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததைப் பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லியிருப்பார்கள். ஆனால் தமிழர்கள் இவ்வளவு பெரிய அறப்போராட்டத்தை ஒன்று சேர்ந்து நடத்தியிருக்கின்றார்கள். அதற்குரிய முக்கியத் துவத்தை பத்திரிகையில் கொடுத்திருக் கின்றார்களா?
மனிதச் சங்கிலியால் போக்குவரத்து பாதிப்பாம்!
அடுத்து பத்திரிகையில் எழுதுகின்றார்கள். மனிதச் சங்கிலியால் போக்குவரத்து தடைபட்டது. Traffic Blockage என்று. நான்கு மணிநேர நெருக்கடி, போக்குவரத்து பாதித்தது என்று. மைலாப்பூரில் அறுபத்தி மூவர் திருவிழா நடைபெறுகிறது (சிரிப்பு கைதட்டல்) அன்றைக்கு ஏற்பட்ட நெருடிக்கடியை எவராவது எழுதியிருக்கின்றீர்களா?
நேற்று கும்பகோணத்தில் பேசினேன். மகாமகத்தில்தானே, ரொம்ப பேர் குளிக்க வந்தார்கள். ரொம்பப்பேர் குளத்தில் இறங்கியவுடன் தண்ணீர் உயர்ந்தது என்று சொல்லுகின்றார்கள்.
பெரியார் கேட்ட கேள்வி
பெரியார் கேள்வி கேட்டாரே, இத்தனை லட்சம் பேர் தண்ணீரில் மூன்று மணிநேரம் நின்றால் அவனவன் அவசரத்திற்கு என்ன செய்வான்? என்று கேட்டாரே (கைதட்டல்). இன்னும் கொஞ்சநேரம் நின்றுபார். இன்னும் எத்தனை அடி தண்ணீர் உயர்ந்திருக்கிறது பார் என்று கேட்டார். இதுபற்றி நேற்று கும்பகோணம் குளக்கரையில் நடந்த கூட்டத்திலேயே நான் தெளிவாகக் கேட்டேன். வருஷா வருஷம், மாதா மாதம் திருவிழா நடத்துகிறீர்களே, மதுரை ஆற்றிலே கள்ளழகர் இறங்குகிறார், திரும்பினார், மீனாட்சி திருக்கல்யாணம். யார் - பட்டர்தான் தாலியை எடுத்துக் கட்டுகிறார்.
வருடா வருடம் கல்யாணம் பண்ணாமல் அழகர் திரும்பிப் போவதா?
சுந்தரேசுவரர் பாவம் அப்பாவியாகப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றார் (கைதட்டல்). இதைக் கேட்கிற எவனுக்காவது புத்தி இருக்கிறதா? நமது நாட்டிலே. அய்ந்து லட்சம் பக்தர்கள் கடவுளை சேவிப்பதற்காக கூட்டம் வந்தது என்று சொல்லுகின்றார்கள்.
கல்யாணம் செய்யவந்த அழகர் திரும்பிப் போய்விட்டார். சென்ற வருடம்தான் அழகர் வருவதற்கு முன்பே கல்யாணம் முடிந்துவிட் டது. சரி இந்த வருடம் வருவதற்குள் புத்தி இருக்கவேண்டாமா? அழகரைப் பார்க்கப் போகிறவனுக்குப் புத்தி இருக்கவேண்டாமா? (சிரிப்பு - கைதட்டல்).
போன வருடமும் லேட்டாதான் வந்தான். இந்த வருடமும் லேட்டாதான் வந்தான். ஒவ் வொரு வருடமும் அழகர் லேட்டாகவே வருவது. மாடுகளும்தான் வழக்கத்தால் செக்கைச் சுற்றும். அப்புறம் மனிதனுக்கு என்னய்யா அர்த்தம்? இப்பொழுது ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
மூளைச் சாவு ஏற்பட்டால்
Brain Death மூளைச் சாவு ஏற்பட்டால் உடல் உறுப்புகளை கொடையாகக் கொடுப்பது. இது ஒரு நல்ல முடிவு. ஏனென்றால் உடல் உறுப்புதானம் மூலமாக இப்பொழுது அந்த இடத்தில் ஜாதி செத்துப் போய்விட்டது, மதம் செத்துப் போய்விட்டது (கைதட்டல்). கடவுளும் செத்துப் போனார் என்று அர்த்தம் (கைட்டல்). மக்களுக்கு ஒரு நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கின்றார்கள். அதன் விளைவு - ஒருவரு டைய பையனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளது. நம்முடைய நாட்டில் பிரெய்ன் டெத்
இப்பொழுது Brain Death என்று அந்த வார்த்தையையே சொல்லுகின்றார்கள். நம் முடைய நாட்டில் உள்ளபடியே பிரைன் டெத்தைப்பற்றி கணக்கெடுத்தால் எவ்வளவு ஜனத்தொகை இருக்கும் என்பதைப்பற்றி நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள். (கைதட்டல்).
--------------------நன்றி: "விடுதலை" 14-11-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment