Search This Blog

26.11.08

மதக்கலவரங்களை நாடு முழுவதும் உண்டாக்க 5000 இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி


செயல்படுமா நடுவண் அரசு?

மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலனாய்வில் புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. உயர்மட்டத் தலைவர்கள் ஒவ்வொருவராக இந்தச் சதியில் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துகொண்டு இருக்கிறது.

குறிப்பாக இந்திய இராணுவ அதிகாரியாக இருந்துவரும் சிறீகாந்த் புரோகித் கொடுத்துவரும் வாக்குமூலம் பல முக்கியத் தலைவர்களின் தொடர்பை அம்பலப்படுத்தி யுள்ளது.

விசுவ இந்துபரிசத்தின் பொதுச்செயலாளரான பிரவீன் தொகாடியாவும் இந்தச் சதியில் தொடர்புடையவர் என்று கூறியிருக்கிறார்.

இந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய அமைப்பான அபிநவ் பாரத்துக்கு நிதி உதவியைப் பெருமளவில் தொகாடியா செய்துள்ள விவரம் வெளியில் வந்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம் கோரக்பூர் தொகுதி மக்களவை உறுப்பினரும் - பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத் என்பவர் மீதும் சந்தேகக்கண் விழுந்துள்ளது. அந்த ஆசாமியோ என்னைக் கைது செய்து பாருங்கள், பார்க்கலாம் என்று சவால்விட்டு திரிந்து கொண்டுள்ளார்.

இந்துக் கடவுள்களின் கைகளில் ஆயுதங்கள் எதற்கு இருக்கின்றன? ஒவ்வொரு இந்துவும் இந்துக் கடவுள்கள்போல ஆயுதம் எடுத்துப் போராடவேண்டும் என்று திமிரடியாகப் பேசி வருகிறார்.

இந்தப் பெரிய மனுசன்கள் மீதெல்லாம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்ற முறையில் சமீர் குல்கர்னி கொடுத்த வாக்குமூலம் மிகப்பெரிய அளவு அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.

மதக்கலவரங்களை நாடு முழுவதும் உண்டாக்க 5000 இந்துக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம். இதில் 55 பேர் வங்கதேசத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனராம் - அங்கு மதக்கலவரத்தைத் தூண்டுவதற்கு!


இராணுவத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துத்துவா தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்கிற தகவல் ஏற்கெனவே வெளியில் வந்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு இந்தப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, குற்றவாளிகள் எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாகவிருந்தாலும், விளம்பரம் பெற்ற தலைவர்களாகவிருந்தாலும் சரி, கொஞ்சம்கூட தாட்சண்யம் பார்க்காமல் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்!

இந்துக்கள் மீது வழக்குத் தொடுக்கக் கூடாது. இந்து அமைப்புகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்கிற முறையில் பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவரே மிரட்டுகிறார் என்றால், சட்டத்தை எந்த அளவுக்கு அந்தக் கூட்டம் கிள்ளுக்கீரையாகக் கருதுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இப்படித்தான் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்காமல், அலட்சியமாக இருந்து வருகிறது மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக்கூட்டணி அரசு.

சரியான வகையிலே வழக்கைத் துரிதப்படுத்தி எதிரிகள் சந்து பொந்துகளில் நுழைய முடியாதபடிக்கு விழிப்புணர் வுடன் வழக்கை நடத்தியிருந்தால், உண்மையான குற்ற வாளிகள் இந்நேரம் சிறைச்சாலைகளில்தான் இருந் திருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால், அந்தக் குற்றத்திற்காக அவர்கள் எல்லாம் தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பார்கள்.

அரசியல் நோக்கத்தோடு அல்ல -ஆட்சி முறையில் நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு இன்னும் வேகமாக மத்திய அரசு செயல்பட்டு இருக்கவேண்டும்.

அந்தக் கடமையைச் செய்யாத காரணத்தால்தான் என்னைக் கைது செய்து பாருங்கள்! என்று காவிக்கூட்டம் சவால் விடுகிறது - செயல்படுமா நடுவண் அரசு?

---------------------"விடுதலை" தலையங்கம்26-11-2008

2 comments:

VANJOOR said...

மும்பை பற்றி எறிகிறது....மும்பையில் தாஜ்மஹால் ஹோட்டலில் பயங்கரவாதம.

AS THERE IS A WIDE BOMBINGS BEEN CARRIED OUT,

THE BOMBERS MAY HAVE BEEN SEEN BY MANY CITIZENS.

IT IS TIME FOR EACH AND EVERY CITIZEN SHOULD COME FORWARD AND PROVIDE THE EVIDENCES TO CATCH ALL THE BOMBERS/GROUPS.

THE BOMBERS AND WHOLE BASE OF THE GROUP SHOULD BE DETAINED AND SHOULD BE EXECUTED .

NO MERCY SHOULD BE SHOWN TO ANY TERRORIST FROM ANY SOURCE AS THEY ARE KILLING THE INNOCENTS WITHOUT MERCY.

WE WANT PEACE PEACE PEACE AND THE RIGHT FOR EACH AND EVERY CITIZEN OF INDIA TO LIVE IN PEACE AND HARMONY WITH ONE ANOTHER.

I AM VERY SADDENED AND HAVE NO WORDS TO EXPRESS MY SAD FEELINGS. vanjoor வாஞ்ஜுர்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கு நன்றி
வாஞ்சூர்