Search This Blog

17.11.08

பெரியார் இருந்த இடத்தில் வீரமணி




"வாழ்வியல் சிந்தனைகளின்" தனிச்சிறப்பு


தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் துணைத் தலைவர் சி.வேலு பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

ஆசிரியர்கள் அனைவரும் விடுதலை படிக்க வேண்டும் என நினைப்பவன் நான். தொடர்ந்து நான் வாசித்து வருகிறேன். ஆசிரியர் கூட்டணி சார்பில் எனக்கு நாமக்கல், பச்சந்தி யில் இன்று கூட்டம் உள்ளது. ஆனால் அதைத் தவிர்த்துவிட்டு, மகிழ்ச்சியோடு இங்கு கலந்து கொள்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான பகுத்தறிவு ஆசிரியர்கள் இருக்கிறோம்.

பள்ளிகளில் சரஸ்வதி படம் இருக்கும். நான் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் தந்தை பெரியார் படத்தை அருகிலேயே மாட்டிவிடுவேன்.

இன்றைக்கு பெரியார் இருந்த இடத்தில் வீரமணி அவர்களைக் கருதுகிறேன். அவரின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் ஒன்று போதும். பல மாற்றங்களையும் அந்நூல் செய்து வருகிறது. அந்நூலின் அனைத்துப் பாகங்களும் என்னிடம் உள்ளன.

சிந்திப்போம் செயல்படுவோம் எனக் கரும்பலகை அமைத்து, அதில் வாழ்வியல் சிந்தனைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன். தினமும் சக ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் படித்து வருகிறார்கள்.

ஆபிரகாம்லிங்கன் தம் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் குறித்து நம் ஆசிரியர் எழுதியிருந்தார். அதைப் பலகையில் எழுதினேன். அதைப் படித்து விட்டு பள்ளிக்கு வந்த அதிகாரிகள் வியந்து போயினர். இப்படி வியக்க வைப்பதுதான் வாழ்வியல் சிந்தனைகள்.


ஆசிரியர்களும் நிறைய சிந்திக்க வேண்டும். அவர்களிடமும் ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள் உள்ளன. ஒரு கையில் தங்கச் சங்கிலியும் (பிரேட்லெஸ்), மறுகையில் கருப்புக் கயிறும் கட்டியிருக்கிறார்கள். கேட்டால் காரணம் தெரியாது என்கிறார்கள்.

காரண காரியத்தோடு பணியாற்ற வேண்டும். அடுத்த சந்ததிக்குப் பகுத்தறிவை ஊட்டுவது நம் பொறுப்பல்லவா? அணுவைப் பிளந்து ஆராய்ச்சி செய்த ஓர் விஞ்ஞானி, அதிர்ஷ்டம் கருதி வீட்டில் குதிரை லாடம் மாட்டி இருந்தாராம். விஞ்ஞானியாக இருப்பதைவிட பகுத்தறிவாளராக இருப்பது முக்கியம்.

தமிழக அரசை எப்படி மதிப்பீடு செய்வது? பெண்ணுரிமை என்றால் என்ன? அதை எப்படி சிந்திக்க வேண்டும்? பகுத்தறிந்து பார்ப்பது எவ்வாறு? என்பதையெல்லாம் அறிய ஆசிரியர் எழுத்துகளை விடுதலையில் வரிவிடாமல் வாசியுங்கள்.

இங்கே பகுத்தறிவு ஆசிரியர் அணியை மேலும் வலுவாகக் கட்டமைக்க வேண்டும். சமூகத்திற்கு மாணவர்களின் பங்கு மிக முக்கியம். அதை உணர்ந்த ஆசிரியர்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என ஆசிரியர் வேலு குறிப்பிட்டார்.

----------------நன்றி: "விடுதலை" 17-11-2008

2 comments:

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட தமிழ் முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

இந்த மானமிகு முண்டம் ஏன் தாடிக்காரன் இருந்த இடத்திலேயே போய் இருக்க வேண்டும்?கருமம் கருமம்,வேறு இடத்திலே போய் இருந்தா என்ன?சரியான அல்பம்.

பாலா

தமிழ் ஓவியா said...

பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் எதாவது சம்பந்தம் உண்டாடா? பார்ப்பனப் பொறுக்கி பாலா?

ஊத்தைவாயன் சங்கராச்சாரியிடம் கேள் ""பெரியார் இருந்த இடத்தில் வீரமணி" இருப்பது பற்றி விளக்கமாகசொல்லுவார்.

இன்னும் சந்தேகம் இருந்தால் அக்கிரகார மாமிகளிடம் கேள்.