சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று சொன்ன டாக்டர் டி.எம். நாயர் வாயில் சர்க்கரையைத்தான் போடவேண்டும்.
ஒவ்வொரு நிமிடத்திலும் நாடு அந்த நிலையைப் பார்த்துக்கொண்டுதான், அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறது.
குறிப்பாக, ஈழத் தமிழர் பிரச்சினையில் பார்ப்பன மக்கள் நடந்துகொண்டு வரும் போக்கைக் கவனிக்கும் எவரும் பொறுமையை இழக்கத்தான் செய்வார்கள்.
தமிழர்களை சிங்களவர்கள் வெறுப்பதைவிட பல மடங்கு அதிகமாக இந்தப் பார்ப்பனர்கள் வெறுப்பதை அறிய முடிகிறது.
அதுவும் ஏடு நடத்தும் பார்ப்பனர்கள், எழுதுகோல் பிடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்கள் தமிழர்கள் மீதான தங்களின் பரம்பரை வன்மத்தை, இந்தச் சந்தர்ப்பத்தில் பல மடங்கு பெருக்கியே காட்டுகிறார்கள்.
தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு (6.11.2008) பார்ப்பன ஏடுகள், ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கினை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, கடைசியாக தமிழர்களே, பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்கவேண்டாமா? என்ற வினாவை எழுப்பியபோது, புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! என்று பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.
தமிழர்களின் இந்த உணர்வைக்கூட அவர்கள் கொச்சைப்படுத்துவார்கள் - கேலி செய்வார்கள் என்பதை அறியாதவர்களா நாம்?
இந்தியா டுடே என்ற தமிழ் வார ஏட்டில் (5.11.2008) வாஸந்தி என்ற பார்ப்பன அம்மையார் ஏன் இந்த வார்த்தைப் போர்? என்ற தலைப்பில் நஞ்சைப் பிழிந்து கொடுத்துள்ளார்.
தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர், மனத்துக்குத் தெம்பைத் தருவது; முக்கியமாக அவரது பரம வைரியான அ.தி.மு.க. தலைவி, திடீரென்று ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு ஆதரவுக் கரம் நீட்டி கருணாநிதி வெறும் வேஷதாரி என்று சொன்னதும், அடிபட்ட வேங்கையாகப் பொங்க வைப்பது. எதிர்க்கட்சியி னரின் பொறுப்பற்ற விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்ல முதல்வர் ஏன் மெனக்கிடுகிறார் என்பது புரியவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஆழம் தெரியாமல் காலை விட்டதில் தேசியத் தலைவராக உருவாகி வந்த பிம்பத்தில் கீறல் விழுந்ததை அவர் கவனிக்கவில்லை. முரசொலியில் வெளியிடப்படும் அறிக்கைகளும், மடல்களும் அவரது தன்னம்பிக்கை தளர்ந்து போனதைத் தெரிவிக்கின்றன. தன்னைவிட ஜெயலலிதா தமிழினப் பற்றுடையவர் இல்லை என்பதை பக்கம் பக்கமாக விளக்கும் பலவீனம் அவருக்கு ஏற்பட்டு இருப்பது விசித்திரம். புலிகளின் பகிரங்க அபிமானியான ம.தி.மு.க. தலைவர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகங்களை வாபஸ் பெறவேண்டும் என்று சொன்னால், அதை யாரும் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. ஆனால், மத்திய அரசில் முக்கிய பங்கு உள்ள தி.மு.க. தலைவர் தாமே முடுக்கிவிட்டுக் கொண்ட உணர்ச்சி வேகத்தில் சிக்குண்டு, அண்டை நாட்டின் இறையாண்மையை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது சர்ச்சைக்குரியது.
பழுத்த அரசியல்வாதியான முதல்வருக்கும், சட்ட சாஸனத்தின் மேல் பதவிப் பிரமாணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை என்பது வேறு நாடு என்பது அவர்களை நிர்ப்பந்திப்பதோ, எச்சரிக்கை விடுவதோ அந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமானது என்பதும் தெரியாதா? வங்கதேசப் போர் நடத்தி கிழக்குப் பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தரவில்லையா என்று நமது தமிழ் உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் ஈழப்போருக்கு உதவச் சொல்கிறார்கள். நாம் பாகிஸ்தானுக்குச் சொந்தமாக இருந்த கிழக்குப் பகுதியில் நுழைந்து போரிட்டது மாபெரும் தவறு.
- இதுதான் பார்ப்பன அம்மையாரின் கடைந்தெடுத்த நச்சு எழுத்துகள்.
தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர் கலைஞருக்குத் தெம்பைத் தருகிறதாம்.
எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேலி, லோகக் குரு என்ற பட்டப் பெயர் மட்டும் இவர்களுக்கெல்லாம் இனி இனி என்று இனிக்கும்.
ஆமாம்! அவர்கள் நம்பிக்கைப்படி ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் அவர்தான் தலைவர். வாடிகன் நகருக்குக்கூட சங்கராசாரிதான் குரு - இதனை நாம் நம்பவேண்டும் - அப்படி நம்பாவிட்டால், ஏற்காவிட்டால் அதற்காக அவர் தயாராகச் சூட்ட வைத்திருக்கும் பட்டம் இனத் துவேஷம்!
கடலைத் தாண்டிச் செல்லுவதே தோஷம் என்று எழுதி வைத்திருக்கிற அதே கூட்டம்தான் சங்கராச்சாரியாரை லோகக்குரு - உலகத்துக்கே குரு என்று சொல்லுகிறது - இப்படியெல்லாம் நாம் கேள்வி எழுப்பினால், அதற்கும் ஒரு பட்டத்தை நமக்குச் சூட்ட தயாராக வைத்திருக்கிறார்கள் - அதுதான் விதண்டாவாதம் என்னும் பட்டம்.
பயங்கரவாதம் என்பதில்கூட அவர்களுக்கு இரட்டை அளவுகோல் உண்டு. இராமன், சம்பூகன் என்ற சாதுவை வாளால் வெட்டிக் கொன்றால் அவர்கள் தயாராக வைத்திருக்கும் சொலவடை தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச் செய்வதும் ஒருவகை தர்மம்தான் என்பதுதான்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி - அவர்கள் கண்ணோட்டத்தில் மகாசமர்த்தன் - நிருவாகி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரே வாரத்தில் கலவரத்தை அடக்கிய திறமைசாலி - பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்று நூல் பிடித்ததுபோல பார்ப்பனர்கள் எழுதுவார்கள்.
கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்த சங்கராச் சாரியாரை வரவேற்று தம் சொந்த காரில் அழைத்து வந்து காஞ்சி மடத்துக்குக் கொண்டு வந்து அமர்த்துவார் இந்து ஏட்டின் ஆசிரியர் என். ராம்.
தம் இன மக்களின் மான வாழ்வுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்துக்கு ஆளானவர்களை இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பயங்கரவாதிகள் என்று நாமகரணம் சூட்டுகிறார்கள்.
இலங்கை இன்னொரு நாடாம். அதில் தலையிடக்கூடாதாம். இந்த நிலையை எடுப்பதற்கு - பாகிஸ்தானோடு இந்தியா போர் நடத்தி வங்க தேசத்தை உருவாக்கித் தந்தது தவறு என்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்துப் போட்டு எழுதுகிறார் பார்ப்பன அம்மையார் இந்தியா டுடே இதழில்!
இந்தச் சாமர்த்தியம் எல்லாம் யாருக்கு வரும் - அவாளைத் தவிர!
தமிழில் ஏடு நடத்தி, தமிழர்களிடத்திலே விற்றுப் பணம் பறித்து தமிழர்களையே கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?
தமிழர்களே சிந்திப்பீர் - செயல்படுவீர்!
-------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 13-11-2008
Search This Blog
13.11.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment