Search This Blog

20.11.08

விடுதலைப்புலிகள்மீது இன்னும் வன்மம் ஏன்?காங்கிரசாரின் சிந்தனைக்கு!


(1987 இல் இலங்கையில், இராஜீவ் காந்தி அவர்களை துப்பாக்கிக் கட்டையால் சிங்கள இராணுவ வீரன் ஒருவன் தாக்குவதும், அதிலிருந்து இராஜீவ் காந்தி குனிந்து தப்பிக்கும் காட்சி).



கேள்வி: - காங்கிரஸ்காரர்கள், இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்த இனத்தை மன்னித்துவிட்டார்கள். அப்படி இருக்கையில், விடுதலைப்புலிகளிடம் மட்டும் ஏன் வன்மம் கொண்டிருக்கிறார்கள்?



பதில்: - அப்படி அவர்கள் இன்னும் கோபம் கொண்டிருப்பதுகூட ஒரு விதத்தில் நியாயமாக இருக்கலாம். ஆனால், கொஞ்சம் அசந்திருந்தால், துப்பாக்கியின் மட்டையாலேயே அடி வாங்கி, மண்டை பிளந்து, அதே ராஜீவ் காந்தி கோரமாக இறந்து போயிருக்கக் கூடிய ஒரு சம்பவம் கொழும்புவில் நடந்ததே, அப்படிப்பட்ட இந்திய விரோத சிங்கள பயங்கரவாதிகளைப்பற்றி ராஜீவ் விசுவாச காங்கிரஸ்காரர்கள் கொஞ்சம்கூட சுரணை இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது. (கொலை முயற்சி செய்த சிப்பாய் எப்போதோ வெளியே வந்து ஒரு ஹீரோ போல கோலாகலமாக கவுரவிக்கப்பட்ட விஷயம் எல்லாம் நம்முடைய லோக்கல் கதர்களுக்கு எட்டியிருக்குமா என்பது சந்தேகமே!).

------------------------------ நன்றி:" குமுதம்", 26.11.2008

0 comments: