Search This Blog

12.11.08

இந்துப் பயங்கரவாதம் -பல ஆண்டுச் சதிகாரர்கள் இப்போதுதான் பிடிபட்டனர்

பல ஆண்டுச் சதிகாரர்கள் இப்போதுதான் பிடிபட்டனர்

பிரவீன் தொகாடியா இடத்தைப்
பார்வையிட்டார் "எக்ஸ்பிரஸ்" ஏடு வெளியாக்கிவிட்டது

இந்துப் பயங்கரவாதம்


பொய் பேசுகிறர்களா, உண்மையைக் கூறுகிறார்களா என்றறியும் சோதனை நார்கோ அனலைசிஸ் எனப்படும். மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் கைது செய்யப்பட்ட இருவருக்கு இச்சோதனை பெங்களூரில் நடத்தப்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு பற்றியும் கூறினார்கள்; எதிர்காலத்தில் எங்கெங்கே குண்டு வைக்கச் சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்பதையும் கூறிவிட்டார்கள். போபால், ஜபல்பூர் ஆகிய இடங்களில் குண்டு வைக்கப் போடப்பட்ட திட்டம்பற்றியும் கக்கி விட்டனர். பணம் தந்தது யார், ஆர்டிஎக்ஸ் தந்ததும், ஆயுதங்களைத் தந்ததும் யார், எந்தெந்த வகையில் உதவினார்கள் என்பதையெல்லாமே தெரிவித்து விட்டனர்.

யோக்கியர்கள் போல, இந்துத்துவாவாதிகள் இசுலாமியத் தீவிரவாதம்பற்றிப் பேசுகின்றனர். அவர்களின் யோக்கியதை என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்.

மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் சாமியாரிணி பிரக்யாசிங் தாக்கூர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் இரண்டு பேர் ஈடுபட்டு முசுலிம்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சதிச் செயல் மக்களுக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. என்றாலும், இந்துத்துவ பயங்கரவாதம் 2006 முதலே கண்காணிக்கப்பட்டு வருகிற சேதிதான்.

6.4.2006 இல் நடந்த நான்டெட் குண்டுவெடிப்பு தொடர் பாகக் கைது செய்யப்பட்ட ராகுல் மனோகர் பாண்டே, மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் என்கிற பானுராவ் வித்தல்ராவ் சவுத்ரி ஆகியோரின் கைதுகள் தீவிர வலதுசாரி (பிற்போக்கு)ச் சக்திகளின் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

மனோகர் பான்டேவுக்கும், பிரக்யாசிங் தாக்கூருக்கும் பயங்கரவாதப் பயிற்சி மேடையாக, புனே நகரம் விளங்குகிறது.

இவர்கள் இரண்டு பேரிடமும் நடத்தப்பட்ட நார்கோ அனலைசிஸ் (பொய் அறியும் சோதனை) முடிவுகளின்படி, இவர்கள் இருவருக்கும் இச்சதியில் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 2003 முதல் 2006 வரை இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளில் மகாராட் டிரா மாநிலத்தில் நடத்தப் பெற்ற சதிச் செயல்களில் இரு வருக்கும் உள்ள தொடர்புகளை இவர்கள் ஒத்துக்கொண்டி ருக்கிறார்கள். மனோகர் பான்டே சதியில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார் என்று நார்கோ அனலைசிஸ் அறிக்கை கூறுகிறது.

பொய் அறியும் சோதனையின்போது, நான்டெட் நகரத்து சங் பரிவாரைச் சேர்ந்த லட்சுமண் ராஜ்கொண்டவார் என்பாரின் வீட்டில் நடந்த வெடிவிபத்து பற்றிய விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டார். இந்த வெடிவிபத்தில் நரேஷ் ராஜ் கொண்டவார் மற்றும் ஹிமான்சு பான்சே ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்து என்று காவல்துறையினர் முதலில் நினைத்தனர். பின்னர்தான், வெடிகுண்டு தயாரிக்கும்போது ஏற்பட்டது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். தாங்கள் சக்தி வாய்ந்த வெடிப் பொருள்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதையும் பாண்டே கூறிவிட்டார்.

விபத்தில் இறந்துபோன ஹிமான்சு பான்சே இச்சதிக் குழுவின் தலைவன் என்றும், வெடிகுண்டு தயாரிக்கும் முறையைக் கற்றுக் கொடுத்ததே இந்த ஆள்தான் என்றும் கூறியதாக ஆய்வு அறிக்கையில் உள்ளது. ஜல்னா, புர்னா, பர்பானி பகுதிகள் உள்ளிட்ட மரத்வாடா பகுதியில் நடந்த எல்லா குண்டுவெடிப்புச் சதிச் செயல்களையும் செய்தவர்களே இந்த ஹிமான்சுவும், பான்டேயும்தான். புனே நகரிலிருந்து வெடிப் பொருள்களை ஹிமான்சு ஏற்றி வந்து, உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் பதுக்கி வைத்திருக்கின்றனர் எனும் விவரமும் வெளி வந்துள்ளது.

உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவும் தொடர்பும் பற்றியும் பான்டே கூறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் ஹிமான்சுக்கு எல்லா உதவிகளையும் செய்தன. மிதுன் சக்ரவர்த்தி என்பவன் புனேயிலிருந்து வந்து வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியை அளித்ததாகவும் பான்டே தெரிவித்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு மராட்டியர்களின் ஆண்டுப் பிறப்பான குடிபாதவ் நாளில்தான் நான்டெட் குண்டு வெடிப்புச் சதிக் கான திட்டமே தீட்டப்பட்ட தகவலையும் பான்டே கூறி விட்டார். ஈத் நாளன்று மசூதியில் வைக்கத் திட்டம் போடப்பட்டிருந்த வெடிகுண்டுதான் வீட்டில் வெடித்துவிட்டது.

பான்டே தெரிவித்த செய்திகளிலேயே முக்கியமானதும், அதிர்ச்சியானதும் என்னவென்றால், இவர்களின் இருப்பிடத்துக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்திவிட்டுப் போனவர் விசுவ இந்துப் பரிசத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா.

பர்பானி, நான்டெட் சதிச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவர் நார்கோ அனலைசிஸ் ஆய்வுக்காக அழைத்து வரப்பட்டார்.

பானுராவ் வித்தல் ராவ் சவுத்ரி (சஞ்சய்) தம் வாக்கு மூலத்தில் 2003 ஆம் ஆண்டிலேயே தானும் தன்னுடன் நான்கு பேரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்கப் பயிற்சி பெற்றதாகத் தெரிவித்தனர்.

ஹிமான்சு பான்சே, மரோட்டி வாக், ராகுல் மனோகர் பான்டே மற்றும் யோகேஷ் ரவீந்திர விடுல்கர் ஆகியோரும் இவருடன் பயிற்சி பெற்றவர்கள் என்கிற விவரத்தையும் கூறியுள்ளார். புனேவில் சின்ககாட் பகுதியில் உள்ள ஆகாஷ் விடுதியில் இவர்களுக்கு வெடிகுண்டுத் தயாரிப்புப் பயிற்சி தரப்பட்டதாம்.

அவரங்காபாத்தில் உள்ள மசூதியில் மறுநாள் வைத்து வெடிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுதான் ராஜ் கொண்டவாரின் வீட்டில் வெடித்துவிட்டது என்பதை இவர் ஒத்துக்கொண்டுள்ளார்.


நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதற்குக் காரணமான வெடிகுண்டுகளை வைத்த அபுசலீம் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகிய இருவரையும் பழி தீர்ப்பதற்காக ஹிமான்சு திட்டமிட்டார் எனவும் சஞ்சய் கூறினார்.

-------------------- நவீன் அம்மேம்பலா, பெங்களூர்,

"தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்", 11.11.2008

0 comments: