Search This Blog

11.11.08

நான் ஏன் தேசத் துரோகியாக இருக்கிறேன்?


தேசாபிமானம்

நான் ஒரு தேசாபிமானியல்லன். அது மாத்திரமல்ல; தேசாபிமானத்தைப் புரட்டு என்றும், அது தனிப்பட்டவர்களின் வயிற்றுச் சோற்று வியாபாரம் என்றும் சொல்லியும், எழுதியும் வரும் தேசத் துரோகியாவேன். ஒரு காலத்தில் தேசாபிமானத்துக்காகச் சிறை செல்லும்படியான அவ்வளவு தேசாபிமானியாய் இருந்து, பல முறை சிறை சென்று வந்துதான் அதன் அனுபவத்தைச் சொல்லுகிறேனே ஒழிய, வெளியில் இருந்து வேடிக்கை மாத்திரம் பார்த்துவிட்டு நான் இப்படிச் சொல்ல வரவில்லை.

இதனால் பாமர மக்கள் தூஷணைக்கும் பழிப்புக்கும்கூட ஆளாகியிருக்கிறேன் என்றாலும் எனது உறுதியான எண்ணத்தை நான் மாற்றிக்கொள்ள முடியவில்லை.

நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது என்பதுதான் தேசாபிமானிகளின் - மகாத்மாக்களின் சுயராஜ்ய தர்மமாகும். இந்த சுயராஜ்யம் வருவதைவிட இப்போது இருக்கும் பரராஜ்யமே மேலானது என்பது எனது கருத்து.

இன்றைய பரராஜ்யத்தில், தோட்டி புல் சுமக்கும் வேலையை விட்டு மந்திரி வேலை செய்தாலும் செய்யக்கூடும்.

ஆனால், அவனவன் ஜாதித் தொழிலையும் பரம்பரைப் பெருமையையும் பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் காங்கிரஸ் சுயராஜ்யத்தில், தோட்டி புல் சுமப்பதைவிட வேறு தொழில் ஏற்பட முடியுமா என்று யோசித்துப்பாருங்கள். இந்தக் காரணத்தினால் தான் நான் தேசத் துரோகியாக இருக்கிறேன்; சுயராஜ்யத்துக்கும் விரோதியாக இருக்கிறேன். ஆனால், பார்ப்பனர் ஜாதியையும் பறை ஜாதியையும் அழித்து, எல்லோரும் சரிசகமமான மனிதர்கள் என்று ஆக்கும் தேசாபிமானத்திற்கும் சுயராஜ்யத்துக்கும் நான் விரோதியல்லன்; துரோகியுமல்லன் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.


நான் இந்திய சுயராஜ்யம், இந்திய தேசாபிமானம் என்பதைப் பற்றி மாத்திரம் பேசுவதாக நினைத்துவிடாதீர்கள். உலகத்தில் உள்ள எல்லா தேசங்களின் தேசாபிமானங்களையும் சுயராஜ்யங்களையும் கண்டும், தெரிந்தும்தான் பேசுகிறேனே ஒழிய கிணற்றுத் தவளையாய் இருந்தோ வயிற்றுச் சோற்றுச் சுயநல தேசபக்தனாக இருந்தோ நான் பேச வரவில்லை.

எந்தத் தேசத்திலும் - எப்படிப்பட்ட சுயராஜ்யத்திலும் - குடி அரசு நாட்டிலும் ஏழை - பணக்காரன், முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இருந்துதான் வருகின்றது. நம் நாட்டில் இவைகள் மாத்திரம் அல்லாமல் பார்ப்பான்-பறையன், மேல்ஜாதி-கீழ்ஜாதி ஆகிய அர்த்தமற்ற அயோக்கியத்தனமான வித்தியாசங்களும் அதிகப்படியாக இருந்து வருகின்றன. இவைகளை ஒழிக்கவோ அழிக்கவோ இன்றைய தேசாபிமானத்திலும் சுயராஜ்யத்திலும் கடுகளவாவது யோக்கியமான திட்டங்கள் இருக்கின்றனவா என்று உங்களைக் கேட்கின்றேன்.

உலகத்திலேயே மேம்பட்ட செல்வச் செருக்குடைய நாடான அமெரிக்க நாட்டிலேயே 2 கோடி பேர்களின் குடும்பங்கள் (1934-இல்) வேலை இல்லாமல் திண்டாடுகின்றனவென்றால், உலகததில் சூரிய அஸ்தமனம் இல்லாத பிரிட்டிஷ் சுயராஜ்ய இங்கிலாந்தில் 20 இலட்சம் பேர்களின் குடும்பங்கள் வேலை இல்லாமல் பட்டினி கிடக்கின்றனவென்றால், சுயராஜ்ய ஜனநாயக ஆட்சிக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?

சுயராஜ்யம் உள்ள சுதேச சமஸ்தானங்களை எடுத்துக்கொள்ளுங்கள். பிரிட்டிஷ் இந்தியா சின்ன கருப்பன் ஆனால், சுதேச சமஸ்தான இந்தியா பெரிய கருப்பனாய் இருக்கிறது.

இப்படிப்பட்ட தேசாபிமானம், சுயராஜ்யாபிமானம் என்கின்ற சூழ்ச்சிகளையும், தந்திரங்-களையும் விட்டுவிட்டு மனித ஜீவ அபிமானம் என்கின்ற தலைப்பின் கீழும் கொள்கையின் கீழும் எல்லோரும் ஒன்று சேருகின்ற வரையில் நான் தேசத் துரோகியாக இருந்து, தேசாபிமானப் புரட்டையும், சுயராஜ்யப் புரட்டையும் வெளியாக்காமல் இருக்க முடியாது.

-------------- கோவை டவுன் ஹாலில், 12.10.1934இல் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, "பகுத்தறிவு"- 21.10.1934

2 comments:

bala said...

//ஏன் தேசத் துரோகியாக இருக்கிறேன்?//


ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிட முண்டம்,கருப்பு சட்டை பொறிக்கி நாய்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

இது ஒரு கேள்வி.இதைப் போய் கேக்கறீங்க?இந்த மூஞ்சி மிக மிக கீழ்த்தரமான ஆசாமி.ஒரு சில காசுக்காக பெற்ற அன்னையையும்,மனைவியையுமே விற்கத் துடிக்கும் அளவுக்கு கேவலமான கஞ்சத் தனம் படைத்த ஆசாமி.இந்த மூஞ்சி,நாட்டிற்கு எதிராக எட்டப்பன் வேலை செய்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே.

இது கூட உங்களைப் போன்ற கருப்பு சட்டை சொறி நாய்களுக்கு தெரிய வில்லையே?அது சரி.இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் கூட புரியாத அளவில் கரூப்பு சட்டை முண்டங்களின் ஐ க்யூ இருப்பதால் தானே ஓசி பிரியாணிக்காக பாசறையில் குரைக்கும் நாய்களாக சமுதாயத்தில் வாழ்கிறீர்கள்.இதெல்லாம் ஒரு பிழைப்பா,தூ.

பாலா

தமிழ் ஓவியா said...

யாருடா எட்டப்பன் வேலை செய்தது? பார்ப்பனனைத்தவிர உலகத்திலேயே வேறு யாராலும் எட்டப்பன் வேலையை சரியாக செய்யமுடியாது,
பார்ப்பனர்சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற நூலில் பார்ப்பனரால் காட்டிக்கொடுக்கப்பட்டு அழிந்த ராஜ்ஜியங்கள் ஏராளமானவைகளை பட்டியலிட்டுள்ளனர்.

பெரியார் பார்ப்பானும், பறையனும் ஒழிந்து அனைவரும் சரிசமமாக வாழவேண்டும். அதற்கு இடம் இல்லாத் நாட்டிற்கு நான் துரோகி என்று கூறுகிறார்.ஜாதி ஒழிக்கப்பட்டு அனைவரும் சமம் என்கிற போது நான் விரோதியல்லன் என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.

இதோ பெரியார் சொன்ன பகுதி:

நான் தேசத் துரோகியாக இருக்கிறேன்; சுயராஜ்யத்துக்கும் விரோதியாக இருக்கிறேன். ஆனால், பார்ப்பனர் ஜாதியையும் பறை ஜாதியையும் அழித்து, எல்லோரும் சரிசகமமான மனிதர்கள் என்று ஆக்கும் தேசாபிமானத்திற்கும் சுயராஜ்யத்துக்கும் நான் விரோதியல்லன்; துரோகியுமல்லன் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

பெரியார் எளிமையாக தனது நிலையை விளக்கியுள்லார். ஆனால் பார்ப்பன பயங்கரவாதி மாமா பாலாவோ அப்படியே திசை திருப்பி பின்னூட்டம் போடுகிறான் என்றால் இவனை எதைக் கொண்டு சாற்றுவது?

பணத்திற்கும் பதவிக்கும் பொண்டாட்டியை விட்டு "சிபாரிசு" செய்யச் சொன்ன பார்ப்பனக்கூட்டம் பெரியாரைப் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

காந்தியை பார்ப்பான் கொன்றபோது பெரியார் அமைதியாக இருந்திருந்தாலே போதும் அக்கிரகாரங்கள் அத்துணையும் பொசுக்கப்பட்டிருக்கும்.
அபோது பார்ப்பனகூட்டத்தைக் காப்பாற்றிய மனித நேயத்தைச் செய்தவர் பெரியார்.

பார்ப்பனரல்லாதமக்களுக்கு மட்டுமல்ல பார்ப்பனர்களின் நலனுக்கும் உழைத்தவர் பெரியார்.காரணம் அவர் ஒரு மனித நேய மாண்பாளர்.