Search This Blog
16.11.08
பார்ப்பன ஏடுகளை வாங்காதீர்கள்
ஈழத்தமிழர்களின் இன்னல்கள் களைய கோடிகைகள்
உயர்ந்தன கோரிக்கைகள் குவிந்தன
நமது ஒற்றுமை உணர்வை காட்டியாக வேண்டும்
சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை
சென்னை, நவ.16- ஈழத்தமிழர்களின் இன்னல்கள் களைய கோடிகைகள் உயர்ந்தன கோரிக்கைகள் குவிந்தன என்ற நிலையை நாம் ஒருமித்து காட்ட வேண்டும். இதில் கருத்து வேறுபாடுகள் நம் மிடையே வரத் தேவையில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும்! என்ற தலைப் பில் சிறப்புக் கூட்டம் 6-11-2008 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
புலிகளுக்கு தமிழக மக்களிடம் அபார ஆதரவு
விடுதலைப்புலிகளுக்கு தமிழ் மக்களிடம் எவ்வளவு அபாரமான ஆதரவு இருக்கிறது என்பதை புள்ளி விவரத்துடன் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருந்தார் தினமணி வைத்தியநாதய்யர், 29-ந் தேதி ஒரு மாதிரி எழுதுவார். 30-ந் தேதி அடுத்த நாள் தலையங்கத்தில் இன்னொரு மாதிரி எழுதுவார். இது வேடிக்கையாக இருக்கும்.
ஆனந்த விகடனோ!
தினமணியை முந்திக் கொண்டு ஆனந்த விகடன் சீனிவாசஅய்யர், நிச்சயம் தமிழ் ஈழம் வேண்டும் என்று தலைப்பிட்டு 4195 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி ஈழத் தமிழர்களின் விவகாரத்தில் இங்கு நிலவும் மனநிலை இதுதான் என்று அடித்துச் சொல்லும் சர்வே என்ற முகவுரையோடு விடுதலைப்புலிகளின் ஆற்றல், ராஜதந்திரம் அவர்களுக்கு தமிழக மக்களிடையே இருக்கும் அபரிதமான ஆதரவு இவற்றை எல்லாம் சொல்லி புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தார்.
ஆக, இவர்கள் எழுதினார்கள் என்றால் ஜார்னலிசம் அது செய்தி. அது தேச பக்தி. ஆனால் மற்றவர்கள் எழுதினால் சாதாரணமாக எழுதினால் பேசினால் இவர்கள் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று இவர்கள் சொல்லுகின்றார்கள். இதைத்தான் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உணர்வை அணைக்கப் பார்க்கிறார்கள்
திசை திருப்புகிறார்கள். இந்த உணர்வு கொழுந்து விட்டு எரியப் போகிறது என்ற உணர்வு வந்தவுடனே இந்த உணர்வை அணைப்பதற்காக அச்சுறுத்திப் பார்க்கிறார்கள். இன்னும் கேட்டால் டெல்லியை நோக்கி அங்கே இருக்கிற அதிகார வர்க்கத்தைப் பார்த்து ஆகா! நீங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? என்றெல்லாம் சொல்லு கின்றார்கள்.
தெருமுனைப் பிரச்சாரம் திண்ணைப் பிரச்சாரம்
இந்த நிலையை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இங்கே வந்திருக்கின்ற ஒவ்வொருவரும் நீங்கள் திண்ணைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். தெருமுனைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். பேருந்திலே உட்கார்ந் திருக்கின்றபொழுது பிரச்சாரம் செய்ய வேண்டும். அவர்கள் எப்படிப் பிரச்சாரம் செய்வார்களோ அது போன்று பிரச்சாரத்தை செய்ய வேண்டும்.
தீயை அணைப்பதற்கு எல்லோரும் ஒன்று சேர்ந்து
கடைசியாக ஒரு வேண்டுகோள். ஈழப் பிரச்சினைக்கான காரணங்கள் இன்னும் நடக்கவில்லை. நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பெரும் பாலான கோரிக்கைகள் நடந்தேறியிருக்கின்றன. இறுதியாக போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி அங்கே நிரந்தரமாக வர வேண்டும். தமிழ்நாட்டிலே முதல்வர் கேட்கிறாரே. எல்லோரும் ஒன்று சேருங்கள். தீயை அணைப்பதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டுமே.
எனவே எல்லோரும் ஒன்று சேருவோம் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம். இந்த குரல் நின்றுவிடவில்லையே.
கோரிக்கை நின்று விடவில்லையே. இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறு கோரிக் கைகள். முதலில் மருந்தே போகாமல் இருந்தது. உணவே போகாமல் இருந்தது. உதவியே நடக்காமல் இருந்தது. அவர்களே இப் பொழுது டெல்லியிலே இப்பொழுது என்ன சொல்லுகிறார்கள். இராணுவ நடவடிக்கை இதற்குத் தீர்வு ஆகாது. அரசியல் தீர்வு வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். அதை நாம் வலியுறுத்திக் கேட்கலாமே. இப்பொழுது அரசியல் தீர்வு என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்கள் என்று கேட்க லாம்.
ராஜீவ், ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போட் டார்களே அந்த ஒப்பந்தப்படி வடக்கும், கிழக்கும் இரண்டும் இணைய வேண்டும் என்று சொன்னார்களே அதற்கு சிங்கள ராஜபக்சே அரசு ஈடு கொடுத்திருக்கிறதா? அதை மதித்திருக்கிறதா? கடைப்பிடித்திருக் கிறதா? இது மாதிரி நாம் கேட்கலாமே.
பார்ப்பன ஏடுகளை புறக்கணியுங்கள் இந்த நேரத்திலே ஒரு கோரிக்கையை வைக்கின்றோம். பார்ப்பன ஏடுகளைப் புறக்கணியுங்கள். புறக்கணிப்போம் என்று குரல் கொடுங்கள். புறக்கணிப்பீர்களா? இல்லையா? தமிழர் தலைவர் குரல் (புறக்கணிப்போம் - புறக்கணிப்போம் - பொது மக்களுடைய குரல்)
ஒற்றுமையைக் காட்ட முன்வாருங்கள்
அடுத்து நண்பர்களே இந்தப் பிரச்சினையில், ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமைப் பிரச்சினையில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கிற, இன உணர்வு மனிதநேயப் பிரச்சி னையிலே நமக்குள் கட்சி இல்லை. ஜாதி இல்லை. மதம் இல்லை. தமிழர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுடைய தலைமையிலே காட்டப்பட வேண்டிய பொறுப்பு நம் அனை வருக்கும் உண்டு. கட்சிகளை கலைத்து விட்டு வாருங்கள் என்று யாரும் சொல்லவில்லை. தேர்தல் வரும் பொழுது அவரவர் போட்டி யிடுங்கள் அவரவர்கள் கட்சிக்கேற்ப கொள்கைகளைச் சொல்லுங்கள்.
எல்லோரும் சேர்ந்து தீயை அணைப்போம்!
அங்கே யுத்தம் நடைபெறட்டும் ஆனால் இப்பொழுது இவர்களைக் காப்பாற்றுகிற பொழுது தீயை அணைக்கின்ற பொழுது ஈழத்திலே பற்றி எரிகின்ற தீயை அணைக்க வேண்டும் என்று எழுதுகின்ற பொழுது நாம் எல்லோரும் ஆளுக்கொரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, அல்லது மணலை எடுத்துக் கொண்டு ஊற்ற வேண்டும். கொட்ட வேண்டும். தீயை அணைக்க வேண்டும் என்றுதான் நாம் நினைப்போம். நாம் யாராவது சொல்லுவோமா? இல்லிங்க அவர் கடவுள் நம்பிக்கையாள ருங்க நான் நாத்திகன். அவருடைய வீட்டில் பிடித்திருக்கின்ற தீயை நான் அணைக்க மாட்டேன் என்று சொல்லுவது புத்திசாலித்தனமா?
அதே மாதிரி இது கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர் வீடுங்க ஆகவே நான் வர மாட்டேன். நான் நாமம் போட்ட வீடாகத் தான் பார்ப்பேன் என்று அவர் சொன்னால் நாம் ஏற்போமா?
அனைவரும் எப்படித் துடிப்பார்களோ...
தீயணைப்பு என்று சொல்லும்பொழுது அனைவரும் எப்படித் துடித்துப் போய் அணைக்க வேண்டுமோ அது போலத் தமிழர்கள் நாம் - இதிலே நமக்குள்ளே எது நம்மைப் பிரிக்கிறது என்று பார்க்காமல் எது நம்மை இணைக்கிறது என்பதை மட்டுமே பார்த்து தமிழர்கள் ஒன்று சேர வேண்டும்.
போர் நிறுத்தம் அங்கே நடப்பதற்கு முன்னாலே இங்கே ஒரு போர் நிறுத்தம் நடைபெற வேண்டும். என்ன போர் நிறுத்தம் என்று சொன்னால் ஒருவரை ஒருவர் விமர்சிக்
கிறோம். பாருங்கள். அப்படி விமர்சிப்பதே வேண்டாம்.
கலைஞருக்கு இருக்கின்ற உணர்வால்
இன்றைக்குக்கூட கலைஞர் அவர்களுக்குத் தமிழின உணர்வு இருக்கின்ற காரணத்தால் தெளிவாகக் காட்டியிருக்கின்றார். இன்றைக்கு நடைபெற்ற விடுதலை (வைகோ கண்ணப்பன்) என்பதைத் தெளிவாக நினைத்துப் பார்க்க வேண்டும். சில விசயங்களை நாம் அகலப்படுத்தக் கூடாது. ஒரு சிறிய கீறல் இருந்தால்கூட அதைப் பொருட்படுத்தக் கூடாது. முதலமைச்சர் கலைஞர் எல்லோரையும் தானே அழைத்தார். இன்னும் கேட்டால் அது அரசாங்கக் கூட்டம் செயலாளர் கையெழுத்துப் போட்டுக்கூட அனுப்பலாம்.
முதலமைச்சரே கையெழுத்துப் போட்டு அனுப்புகிறார்
ஆனால் முதலமைச்சர் கூட்டுகிற கூட்டத்திற்கெல்லாம் செயலாளர் கையெழுத்துப் போட்டு அனுப்புவதில்லையே முதலமைச்சரே கையெழுத்துப் போட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்புவார்.
அமைச்சர்கள் வெளியே இருந்து வரவேற்பார்கள். இதெல்லாம் அந்த காலத்தில் கிடையவே கிடையாதே அவ்வளவு பண்பாடுள்ள ஒரு சூழ்நிலையிலே மீண்டும், மீண்டும் தமிழகக் கட்சிகளை நாம் இணைத்தோம் இணைத்து குரல் கொடுத்தோம்.
கோடிக்கைகள் உயர்ந்தன கோரிக்கைகள் குவிந்தன
வர வாய்ப்பில்லாதவர்கள்கூட அன்றைக்கு வர வாய்ப்பில்லையே என்று நினைக்க வேண் டாம். அருள்கூர்ந்து நம்முடைய பங்களிப்பு இதிலே இருக்கிறது என்று காட்டுங்கள். ஒன்று சேருங்கள். யாருக்குப் பெருமை என்பது முக்கியமல்ல.
அவரே சொல்லிவிட்டார். யாரால் இது நடந்தது என்று தனித்தனியே நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தோம். கோடிக் கைகள் உயர்ந்தன. கோரிக்கைகள் குவிந்தன என்று சொல்லக் கூடிய அளவிற்கு நம்முடைய வாய்ப்புகள் இருக்க வேண்டும்.
ஒருவரை ஒருவர் விமர்சிக்காமலாவது இருக்க வேண்டும்
ஆகவேதான் தமிழர்கள் எல்லோரும் வற்புறுத்த வேண்டும். ஈழப் பிரச்சினையைப் பொறுத்த வரையிலே நமக்குள் மாறுபாடுகள், வேறுபாடுகள் வேண்டாம்.
குறைந்தபட்சம் ஒருவரை ஒருவர் விமர்சிக்காமலாவது நாம் இருக்க வேண்டும். பதில் கூறுவது என்று ஆரம்பித்து அதிலேயும் அரசியல் கண்ணோட்டம் என்று சொல்லக் கூடிய அளவிலே இருக்கக்கூடாது.
ராஜினாமா செய்ய வேண்டுமாம்
ஆனால் வருத்தப்பட வேண்டிய அம்சம் என்னவென்று சொன்னால் சிலருக்கு ஒரு ஆசை. ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?
கலைஞர் அவர்கள் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த பிரதமருக்குத் தந்தி கொடுக்கச் சொன்னார். இந்த அம்மா என்ன தந்தி கொடுக்கச் சொன்னது? கலைஞரை டிஸ்மிஸ் பண்ணுங்கள் கலைஞர் ஆட்சியை அப்புறப்படுத்துங்கள் என்று சொல்லுகிறது.
இது என்ன ஈழத் தமிழர்களைப் பாதுகாக் கின்ற பிரச்சினையா? அதே நேரத்தில் தமிழின விரோதிகளையும் அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
யாராவது பெட்ரோல் டின்னுடன் வந்தால்...
தீயை அணைக்கிறோம் என்ற பெயரில் யாராவது பெட்ரோல் டின்னைக் கொண்டு வந்தால், அவர்களையும் அடையாளம் காணுங் கள். அந்த காலத்திலே நமது கூட்டங்களில் தெளிவாக எடுத்துச் சொல்வோம்.
கலைஞர் அவர்கள் இதற்கு முன்பு இரண்டு முறை பதவியை இழந்தவர்கள் அல்லவா? இந்தப் பதவி என்ன காசுவதமா?ஆனால் அதே நேரத்திலே ஒன்றை நாம் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்களுடைய உரிமை களை இன்றைக்குப் பேசக் கூடிய ஓர் ஆட்சி நமக்குக் கிடைத்திருக்கிறது. இதை சொன்னால் கேட்கக் கூடிய மத்திய அரசும் அங்கு இருக் கிறது.
விடியல் தெரிகிறது வெள்ளி முளைக்கிறது
இரண்டும் இருக்கின்ற காரணத்தால்தான் விடியல் தெரிகிறது. வெள்ளி முளைக்கிறது. அதையும் இழந்து விட்டோமேயானால் தமிழர்களிலே எத்தனை பேர் நாம் தியாகம் செய்வதற்குத் தயாராக இருப்போம் என்பதை மனசாட்சியோடு சிந்தித்துப் பாருங்கள். பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று கேட்டு வாய்ப் பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறு கின்றேன்.
பார்ப்பன ஏடுகளை வாங்காதீர்!
பார்ப்பன ஏடுகளை வாங்காதீர்கள். வேறு ஏடுகளை வாங்குங்கள் என்று கூறி முடிக்கின்றேன்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
------------------நன்றி: 'விடுதலை" 16-11-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment