Search This Blog
21.11.08
காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவர்க்கார் மீது மாறி மாறி காறி உமிழலாமா?
என்ன செய்வது எனக் கேள்
கல்லூரியில்
படிக்கும்
தம்பி சொன்னான் ஐ.ஏ.எஸ்.தேர்வு
பற்றி அறிமுகம்
என்றார்கள் சென்றேன்
அதில் ஒருவர்
இந்து மத மாணவர்
அமைப்பில் சேரச்சொல்லும்
துண்டறிக்கை கொடுத்தார் என்றான் எளிதில்
அடையாளம் காணமுடியா வகையில்
இந்து மத
பயங்கரவாதிகள்
பல பேர்களில்
உலா வருகிறார்கள்
எச்சரிக்கை என்றேன் புனித பாரதம்
அகண்ட பாரதம்
புனிதப்போர்
தர்மப்போர்
அவர்கள் உச்சரிக்கும்போது ஏதோ உயர்வு போன்று தோன்றும்
ஆரிய அதர்மத்தை
மீண்டும் புதுப்பிக்க
முயலும்
பாசிஸ்டுகள்
அவர்கள்
ஜாக்கிரதை என்றேன்
அடிப்படையில்
அவர்கள்
கோட்சே மூலம்
காந்தியைக்
கொன்றவர்கள்
பெருந்தலைவர்
காமராசரைக்
கொல்ல
முயற்சித்தவர்கள்
உலகத்தமிழர்களின்
ஒரு வார்த்தை முகவரியாம்
கலைஞர்
தலைக்கு விலை வைத்தவர்கள்
அவர்கள்
இந்து சனாதானிகள்
இன்றைக்கும் சாதி வேண்டும் என்பவர்கள்
பார்ப்பான் உயர்வு
மற்றெவரெல்லாம்
தாழ்வு என்பவர்கள் இடஒதுக்கீட்டு எதிராக அப்பாவி
மாணவனை தீயிட்டு கொளுத்தியவர்கள் மண்டல் கமிசனுக்கு
எதிராய்
வீதிகளில் அமர்ந்து
செருப்புக்கு பாலிஸ்
போடப் போகவா
என நடித்துக்
காட்டியவர்கள் சமூக நீதிக்கு
எதிரானவர்கள்
மட்டுமல்ல
உழைக்கும்
மனிதர்களின்
நியாயங்களுக்கும்
எதிரானவர்கள்
உயிரோடு மாட்டை
உரித்தார்கள் எனச்சொல்லி
ஆறு தலித்துகளை
உயிரோடு கொளுத்திய
கொடுமைக்காரர்கள்
குஜராத்தில்
கர்ப்பிணி முசுலிம்
பெண்ணின்
வயிற்றைக் கிழித்து
உள்ளேயிருந்த
குழந்தையைக் கொன்று
குடலை மாலையாகப்
போட்டுக் கொண்டவர்கள்
ஒரிசாவில் பலபேர்
முன்னிலையில்
கன்னியாஸ்திரியை
வன்கலவி
செய்தவர்கள்
கூட்டம்
கூட்டமாய்போய்
கொலை செய்தவர்கள்
புனித பாரதம்
என்று சொல்லி
குண்டு வைப்பவர்கள்
எதையும் வெளிப்படையாகச்
சொல்லாமல் நரித்தன
வேலை செய்பவர்கள்
கையும் களவுமாய்
பிடிபட்டால்
இப்போது எங்கள்
அமைப்பில் இல்லை
முன்னால் இருந்தவர்கள்
என்பவர்கள் குற்றமற்றவர் என நீதிமன்றம்
விடுவித்தபின்னும்
தில்லி
பேராசிரியரை
கல்வி நிறுவனத்துக்குள் காறி உமிழ்ந்திருக்கிறார்கள்
இந்துமத அமைப்பைச்
சேர்ந்த
மாணவர்கள்
தம்பி உன்னிடத்தில்
வந்தால் கேள்
தேசத்தந்தை
காந்தியார்
கொலை
வழக்கில்
குற்றம் சாட்டப்பட்ட
சவர்க்கார் மீது
மாறி மாறி
காறி உமிழலாமா?
எனக் கேள்
---------------------15-11-2008 - "விடுதலை" ஞாயிறுமலரில் ப.க.தலைவர், வா. நேரு அவர்கள் எழுதியது.
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment