Search This Blog

13.11.08

இந்துப் பயங்கரவாதம் - மாலேகான் குண்டுவெடிப்பு மேலும் ஒரு சாமியார் கைது


இந்துப் பயங்கரவாதம் மாலேகான் குண்டுவெடிப்புச்
சதி தொடர்பாக மேலும் ஒரு சாமியார் கைது

இந்து மதத்தவரின் தொடர்புகள் அம்பலம்


மாலேகான் குண்டுவெடிப்புச் சதி தொடர்பாக தயானந்த பான்டே என்பவரை மும்பை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த ஆள், அம்ருதானந்த் என்று பெயர் வைத்துக் கொண்டு ஆன்மிகக் குருவாகச் சொல்லிக் கொண்டிருப்பவர். அத்துடன் ஜம்முவில் சாரதா சர்வக்ய பீடம் என்று ஒரு மடம் கட்டிக்கொண்டு அதன் மடாதிபதியாகவும் இருக்கிறார். செப்டம்பர் 27 இல் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாலேகான் குண்டுவெடிப்புச் சதியில் இவர் சம்பந்தப்பட்டிருப்பதால் கைது செய்யப் பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசக் காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் இவரைக் கைது செய்துள்ளனர். கான்பூர் நகருக் கருகில் ராவல்பூர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார். இவர் காசியைச் சேர்ந்தவர். ஜம்முவில் திருகாடநகர் பகுதியில் தங்கியிருந்தவர். கான்பூருக்குச் சில நாள்களுக்கு முன்பு தான் வந்தார். இவரைக் கைது செய்து விசாரிக்க நாசிக் நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இவருக்கு சுதாகர் துவிவேதி என்ற பெயரும் உள்ளது.

தயானந்த பான்டேயின் ஆடிட்டர் வி.கே.கபூர் என்பவரும், அவரின் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போன்சலா மிலிட்டரி பள்ளியின் நிருவாகி ஓய்வு பெற்ற மேஜர் சைலேஷ் ராய்கார் அப் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு

முன்னதாகக் கைது செய்யப் பட்ட சிறீகாந்த் பிரசாத் புரோகித் பயன்படுத்திய மடிக் கணினி கைப்பற்றப்பட்டு விட்டது. குற்ற அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நார்கோ அனலைசிஸ் சோதனையின்போது இவர் - சங்கராச்சாரியாரிடமிருந்து அறிவுரைகள் வழங்கப்பட்டன எனத் தெரிவித்துள்ளார். இது பற்றிக் காவல்துறை ஆய்வு செய்தபோது தயானந்த் பான்டேதான் சங்கராச்சாரி எனக் கண்டுபிடித்துள்ளனர். இவர் தன்னை ஆதிசங்கரனின் வாரிசு எனக் கூறிக்கொண்டு பான்டே சங்கராச்சாரியார் எனக் கூறிக் கொள்வாராம். புரோகித் சம்ஜவுதா விரைவு வண்டியில் ஏற்பட்ட இரண்டு குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பதுபற்றியும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குண்டு வெடிப்பில் 68 பேர் இறந்து விட்டனர்.

மற்றொரு சாமியாரும் மாட்டுவார்


உத்தரப்பிரதேசம், காசியில் உள்ள சுமேரு பீட மடாதிபதி சுவாமி நரேந்திரானந்த் என்ப வருக்குச் சதிச் செயல்களில் உள்ள தொடர்புபற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதுபோலவே, கைது செய்யப்பட்ட புரோகித் போர்ப் படை அதிகாரியாக இருந்து கொண்டே இந்துப் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபட்டதை, ராணுவ உயர் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாகக் கமுக்கமாகச் செயல்பட்டு வந்த இந்துப் பயங்கரவாதிகளின் நட வடிக்கைகளின் முனை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முழுவதும் வெளிக்கொண்டு வரப்படவேண்டும் என்று அமைதியை விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்க் கின்றனர்.


------------------நன்றி: "விடுதலை" 13-11-2008

0 comments: