Search This Blog

30.11.08

எந்த தீவிரவாதிகளையும் நாம் ஆதரிப்பவர்கள் அல்ல!


மதவெறி சக்திகளுடன் கூட்டு சேருகின்ற அரசியல்
கட்சிகளை அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம்
சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


சென்னை, நவம். 30- மதவெறி சக்திகளுடன் கூட்டு சேருகின்ற எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அதை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சங்பரிவார்க் கும்பலும் வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் 20-11-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தாங்கள் ஆண்கள் என்பதை காட்டி அந்தப் புடவைகளை எல்லாம் கழற்றி விட்டு, உடனே அந்தப் பெண்ணை - சொல்லுவதற்கே கூச்சமாக இருக்கிறது.

வன்புணர்ச்சி செய்த கொடுமை

வன்புணர்ச்சி செய்கிறார்கள். இந்த கொடுமையான செய்தி நடந்த செய்தி. ஏதோ திரைப்படத்திலேயோ அல்லது ஊடகத் துறையிலேயோ, வந்த செய்தி அல்ல. உண்மையாகவே நடந்த சம்பவம் இது. மீண்டும் பெரிய அளவிலே நடக்கிறது.

பழியை கிறிஸ்தவர்கள்மீது போட்டார்கள்

மலைவாழ் மக்களை கிறிஸ்தவர்களாக்கு என்று இவன் கட்டாயப்படுத்துகின்றான். அங்கே மாவோயிஸ்டுகள் என்று சொல்லக்கூடிய தீவிரவாதிகள் மலைவாழ் பகுதியிலே இருக்கிற சிலரைக் கொல்லுகிறார்கள்.

எந்த தீவிரவாதிகளையும் நாம் ஆதரிப்பவர்கள் அல்ல. அவர்கள் கொன்று விட்டு கிறிஸ்தவர்கள்தான் இப்படி செய்தார்கள் என்று கலவரத்திற்கு ஒரு சாக்கு வேண்டுமே என்பதற்காக அவர்கள் மீது பெரும் பழியைப் போட்டு மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கினார்கள்.

இலட்சக்கணக்கானோர் அகதிகளாக

இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகி காடுகளிலே முகாம்களிலே இருக்கிறார்கள். அங்குள்ள முகாம்களிலே கூட அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இது பத்திரிகையிலே வருகிறது.
தீவிரவாதிகள் சொல்லுகிறார்கள். நாங்கள் தான் கொன்றோம். அதற்கும் கிறிஸ்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்ன காரணத்திற்காக என்று சொல்லக்கூடிய நிலைதான் இருந்தது.

கிறிஸ்தவர்களைத்தான் குறி வைக்கிறார்கள்

ஆனால் அதை அப்படியே அலட்சியப்படுத்திவிட்டு, மறுபடியும் மறுபடியும் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று சொன்னால் கிறிஸ்தவர்களைத்தான் குறி வைக்கிறார்கள்.
அதே போல குஜராத்திலே திட்டமிட்டு கலவரத்தைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

மோடி அரசு என்றைக்குப் பதவி ஏற்றதோ

மோடி அரசு என்றைக்கு அங்கே பதவி ஏற்றதோ அப்பொழுதே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தங்களுடைய பொற்காலம் என்று கருதி செயல்படத் தொடங்கி விட்டனர்.
ரொம்பவும் அவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக அது அமைந்துவிட்டது. எனவே அந்த அளவுக்கு வெறித்தனம் மோடியை வரவேற்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

மோடி சிறந்தவர் என்று இங்குள்ளவர் சொல்கிறார்

மோடிதான் சிறந்தவர் என்று சொல்லக்கூடியவர்களும் இங்கு இருக்கிறார்கள். இதை எல்லாம் நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும்.
கோத்ரா சம்பவம் உங்களுக்கு நன்றாகத் தெரியும். திட்டமிட்டு அது எப்படி நடந்தது என்று. ஒரு லாலு பிரசாத் ரயில்வே மந்திரியாக ஆகியிருக்காவிட்டால் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் உண்மையே வெளியே வந்திருக்காது (கைதட்டல்).

உச்சநீதிமன்றம் கண்டித்தும்

உச்சநீதிமன்றம் பல நேரங்களில் கண்டித்தும் கூட, அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஒரிசா ஒரு பக்கத்திலே குஜராத் இன்னொரு பக்கத்திலே என்ற நிலை இருக்கிறது.
அதுவும் அகமதாபாத் போன்ற இடங்களிலே எப்படி நடந்திருக்கிறது என்று சொன்னால் பயிற்சிப் பாசறை அங்கே நடந்திருக்கிறது. அய்நூறு பேரை தயாரித்தார்கள்.
அதுவும் எப்படி அவர்களை நடத்துகிறார்கள்? எதையும் திட்டமிட்டு செய்கிறார்கள்.

வாஜ்பேயி அரசிலே அத்வானி உள்துறை அமைச்சர்

வாஜ்பேயி அரசிலே அத்வானி உள்துறை அமைச்சராக இருக்கின்றார். அடுத்து பிரதமர் பதவிக்கு நாக்கைத் தொங்கப் போட்டிருக்கின்ற நிலை.

இந்த அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த கால கட்டத்திலே என்ன நடந்தது? அப்பொழுதுதான் இந்துத்துவா வினுடைய தத்துவத்தை இந்து மகாசபை தத்துவத்தை அப்படியே செயல்படுத்தினார்கள். இந்து மகாசபையின் தலைவர் மூஞ்சே.
இதைத்தான் ஆதாரப்பூர்வமாக அறிவுக்கரசு அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

இந்துத்துவா தத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகமே

வீரசவர்க்கார் தான் இந்துத்துவா தத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கின்றார். இரண்டாம் உலகப்போர் யுத்தத்தை சந்தித்த சர்வதிகாரி பாசிச வெறி பிடித்த இத்தாலியின் முசோலினியை சந்தித்துப் பார்த்து விட்டு, அதற்குப் பிறகு அவர்கள் திட்டமிட்டு, அவர்கள் என்னென்ன முறைகளைக் கையாண்டார்களோ அதே முறைகளை கையாள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இந்தப் பணிகளை செய்தார்கள்.

யாருக்காவது இந்த விவரங்கள் தெரிய வேண்டுமானால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தி சங்பரிவார் லீடர்

ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புகள் எப்படியிருக்கின்றன? எப்படி செயல்படுவார்கள் என்பதை பிரான்சிலே இருந்து கிறிஸ்தவ ஜெஃபர்லே அவர்கள் தி சங்பரிவார் லீடர் ஆக்ஸ்ஃபோர்டு பிரஸ் மூலமாக ஒரு அற்புதமான புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.
இந்தப் புத்தகத்திலே வங்கிகளுக்கு ஆர்.எஸ்.எஸ்.சினுடைய வரலாறு, தத்துவம் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி யெல்லாம் இருந்தது என்பதை 2005ஆம் ஆண்டு மூன்றாண்டு களுக்கு முன்னாலே வந்த நூல் இது.

இந்த நூலில் 69வது பக்கத்திலே வந்திருக்கக்கூடிய ஒரு செய்தி.

இத்தாலியில் இந்து மகாசபை தலைவர் மூஞ்சே

இந்து மகாசபை தலைவர் மூஞ்சே இத்தாலிக்குச் சென்றார். அங்கு முசோலினியை சந்தித்தார். எப்படி அவர்களுடைய இயக்கம் நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்தார். இயக்கம் நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசித்தார்.

1934ஆம் ஆண்டு இந்த தொடர்பு நெருக்கமாக இருந்தது. கல்கத்தாவில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஃபி.வி முகர்ஜி என்பவர் இந்து மகா சபை அமைப்பில் 1938இல் சேர்ந்தார். பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே நுழைந்தார்.
இன்னும் கேட்டால் மாளவியா. மண்ணுருண்டை மாளவியா மிகப்பெரிய தேசபக்தர். அவர் காசியிலே இந்து பல்கலைக்கழகம் என்பதைத்தான் உருவாக்கினார்.

இந்து பல்கலைக்கழகம் என்றுதான் பெயர்

இந்து பல்கலைக்கழகம் என்றுதான் பெயரிட்டார்கள். இவைகளை திட்டமிட்டு எப்படி செய்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தந்தை பெரியார் ஏன் பிரிட்டிஷை ஆதரித்தார் என்பதிலே இதற்கு விடைகிடைக்கும்.

இட்லர் சொன்ன ஆரிய தர்மம்

இரண்டாவது உலகப் போரிலே இட்லர் என்ன சொன்னார்? நாங்கள் ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள். ஆரிய தர்மம் - ஆரிய எண்ணம். ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதைப் பெருமையாகச் சொல்லுகிறோம் என்று சொன்னார்.

சவர்க்கார் ஒப்பந்தம் போடும் பொழுது கூட தெளிவாகச் சொல்லுகின்றார். நாங்களும் ஜெர்மானியர்களும் உறவினர்கள் என்று இங்குள்ளவர்கள் சொன்னார்கள். இட்லர் வருவதற்கு இங்கு வரவேற்பே பாடிக் கொண்டிருந்தார்கள்.
பாசிசம், நாசிசம் இவைகள் எல்லாம் வரவேண்டும் என்று சொன்னார்கள்.

இருகொடுமையாளருக்கும் ஸ்வஸ்திக்

இட்லருடைய சின்னம் ஸ்வஸ்திக் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும் இங்கே அடையாளம் ஸ்வஸ்திக். அதை மறந்து விடாதீர்கள். எனவே இவர்கள் அந்த எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டவர்கள்.

ஆகவே அதனுடைய விளைவு என்ன ஆயிற்று? அவர் எழுதியிருக்கின்ற இந்துத்துவா என்ற புத்தகத்திலே சகோதரர் அறிவுக்கரசு அவர்கள் இங்கு சுட்டிக் காட்டினார்கள் அல்லவா?

இராணுவத்தை இந்துமயமாக்கு

இந்துக்களை இராணுவ மயமாக்கு, இராணுவத்தை இந்து மயமாக்கு. இதைத்தான் அவர்கள் கோஷமாக முழங்கு கின்றார்கள்.
புரோகிதம் பார்க்கிறவன் எல்லாம் லெப்டினன்ட் கர்னலாக வந்தால் என்ன ஆகும்? அவர்கள் மனுதர்மத்தை அப்படியே கையாளுவார்கள்.
இந்த குண்டு வெடிப்பு, மற்றவைகள் எல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக்கூடிய நிலை இருக்கிறது.
சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்று
எவ்வளவு காலமாக நடந்து கொண்டிருக்கின்றது? 2004-லிருந்து தான் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு வந்திருக்கிறது.
சோனியா காந்தி அவர்களுடைய தலைமையிலே. அவரையே வெளிநாட்டுக்காரர் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இவர்கள் ஜெர்மானியனோடு எங்கள் இரத்தம் பொது இரத்தம்.
எங்கள் உறவு பொது உறவு என்று சொன்னவர்கள். இந்த நாட்டிலே ஒருவரை மணந்து அவரை இழந்து இந்த நாட்டுக் குடிமகளாகவே ஆகியிருக்கின்ற சோனியா காந்தி அன்னியர் என்று சொல்லுவதற்கு என்ன தகுதியிருக்கிறது என்ற கேள்வியை நியாயமாகக் கேட்க வேண்டும்.


சோனியா குடும்பம் செய்த தியாகம்

இந்த நாட்டிற்காக அவர்களுடைய குடும்பம் தியாகம் செய்திருக்கிறது. இந்த குடும்பத்தினுடைய கொள்கையிலே நமக்கு மாறுபாடு இருக்கலாம். வேறுபாடு இருக்கலாம். அணுகுமுறையிலே. அது வேறு செய்தி.
ஆனால் ரொம்பத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள்.

முசோலினியோடு கூட்டு

இவர்கள் முசோலினியோடு கூட்டு சேரலாம். ஆனால் அந்த நாட்டிலே இருக்கிறவர் வந்து இந்த நாட்டிலே ஒருவரை மணந்து இந்த நாட்டினுடைய மொழி கலாச்சாரத்தோடு ஒன்றிணைந் திருந்தால் அவர்கள் இன்னும் அந்நியர் என்று சொல்லு கிறார்கள்.

பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி
என்று ஆரிய மாயையிலே அண்ணா சொன்னாரே அது எவ்வளவு சிறப்பானது என்பதை நீங்கள் அழகாக எண்ணிப் பார்க்க வேண்டும்.

முற்போக்கு முத்திரையினரின் தவறு

ஆகவே அப்படிப்பட்ட நிலையிலே வாஜ்பேயும், அத்வானியும் அங்கே இருக்கின்ற நேரத்திலே என்ன நடந்தது? இந்த நிலையிலே மறுபடியும், மீண்டும் அத்வானி பிரதமராக வந்தால் என்ன ஆகும்?
எங்களுக்குப் பதவிதான் முக்கியம். நாங்கள் யாரோடும் கூட்டுச் சேருவோம் என்று நினைக்கின்ற முற்போக்கு முத்திரை குத்திக்கொண்டிருக்கின்ற நண்பர்கள் கூட தவறு இழைத் திருக்கின்றார்கள்.
அவர்கள் தவறிலிருந்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னொரு நாள் தனியாக ஒரு சிறப்புக் கூட்டம் போட்டு விளக்கம் சொல்லுவதற்கு அது வாய்ப்பாக இருக்கும். ஆனால் ஒன்றே ஒன்று.

மதவெறி சக்திகளுக்கு மறைமுக உதவி

மதவெறி சக்திகளுக்கு மறைமுகமாக உதவி செய்வது ஒன்று நேரடியாக உதவி செய்வது என்பது ஒன்று. அதிலே இப்பொழுது நடக்கக்கூடிய அரசியல் கூட்டணி பேச்சுக்கள் எல்லாம் மதவாத சக்திகளுக்கு மதவெறி சக்திகளுக்கு இந்துத்துவா என்று சொல்லக்கூடிய சக்திகளுக்கு மறைமுகமான ஆதரவை தெரிந்தோ, தெரியாமலோ புரிந்தோ, புரியாமலோ முற்போக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் கூட, அதைக் கையாளுகிறார்கள்.
இது மிகப் பெரிய எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்தர்ப்பம்.

உங்களைப் புறந்தள்ளி - அடையாளம் காட்டுவோம்

எனவே கட்சி பெயர், அணுகுமுறை முற்போக்காக இருக்கிறதா என்று பார்க்காதீர்கள். இவர்கள் யாருடன் கூட்டு சேர்ந்து அவர்கள் உதவி செய்தால் அது மதவெறிக்குப் போய் சேருமா என்றால் உங்களையும் நாங்கள் புறந்தள்ளுவோம். சரியாக நாங்கள் அடையாளம் காணுவோம் என்று சொல்லக்கூடிய உணர்வை தமிழகத்திலே, தமிழ் நாட்டிலே நாம் உண்டாக்கிக் காட்ட வேண்டும் (பலத்த கைதட்டல்).

--------------- தொடரும்



---------------------------"விடுதலை" 30-11-02008

3 comments:

Unknown said...

http://thamizhoviya.blogspot.com/2008/11/blog-post_7610.html

Annadurai too supported Hitler and wrote an article supporting him in Kudiarasu in 1937. What do we infer from this.How can veeramani
blame the hindu right when Periyar's Kudiarasu wrote in support of Hitler.

bala said...

//எந்த தீவிரவாதிகளையும் நாம் ஆதரிப்பவர்கள் அல்ல//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொரிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

அதானே.மானமிகு முண்டமே ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்.இந்த முண்டம் மற்ற பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்குமா என்ன?ஒரு திருட்டு கும்பல் இன்னொரு திருட்டு கும்பல் இருப்பதை விரும்பாது அல்லவா?இதில் ஆச்சர்யம் என்ன?

தமிழ் ஓவியா போன்ற மானமிகுவின் அடிவருடும் வெறி நாய்கள் வேண்டுமானால் மானமிகுவின் இந்த பேத்தலைப் போற்றி குரைக்கலாம்;ஆனால் பகுத்தறிவுள்ள மக்கள் மானமிகுவின் உளறலை புறக்கணிப்பர்.

பாலா

தமிழ் ஓவியா said...

ஜாதி வெறி பிடித்து அலைபவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பது உலகறிந்த விஜயம்.

இன்றுவரை ஜாதியைக் கட்டிகாப்பாற்றி வருவதும் பார்ப்பனர்கள் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஜயம்.

இது குறித்து அதாவது ஜாதியைக் கட்டிக் காத்து வருவது யார் என்பதை நாம் சொல்லுவதைவிட சங்கராச்ச்சாரியின் அந்தியந்த நண்பர் தாத்தாச்சாரி அவர்கள் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
அப்போதாவது இந்த பார்ப்பனக்கூட்டம் ஒத்துக் கொள்ளுமா? பார்ப்போம்.

ஊண்றிப் படித்து உண்மையை அறிக.

இதோ தாத்தாச்சாரி பேசுகிறார்:

"கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை. அதென்ன களவியல்?

பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள். உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகையிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே! அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.

இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்தக் காளை ஆசைப்படுகிறான்.

சுற்றிலும் உறவினர்கள் பெண்களின் பாதுகாப்பு.. அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?

பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.

ஒரே தூக்கு! அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.

ருதுவான மங்கை மாயமாய்ப் போன பின்னே.. தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது.

கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம்.

பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது.

கையும் களவுமாக பிடித்தபின் என்ன தண்டனை தெரியுமா?


கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?

"இதோ பாரடா.. நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன் அதனால் அவள் உனக்குரியவள்தான் உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள்" என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு.

இஃது களவியல் என்றால்.. தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள் காதலை அஃதாவது கற்பியலை.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’

நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம் என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.

ஆனாலும்.. இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்.. எப்படி தெரியுமா.. செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.

இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.

இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் "தாலி" வந்த கதை சுவாரஸ்யமானது.

திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்.. பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் "இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்" என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.

பனைமரத்துக்கு தால் என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்.. பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே.. இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?’’

கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள்.

ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள் என்னென்ன... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1) திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.

2) கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன.

முதலில் காசி யாத்திரை.

சந்நியாசம் வாங்கவேண்டுமென்றால்.. மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதனால் கல்யாணத்துக்கு முன் காசியாத்திரை என்றொரு சடங்கு.

அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல பாவ்லா செய்யவேண்டும.; மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.

3) ஊஞ்சலாட்டுதல்

"குழந்தாய்.. நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக" என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்றால் மஹஸ் அதாவது (festivel) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.

4 மாலை மாற்றுவது:

இது டீத்திரியர்களின் கலாச்சாரம் மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

5) திருஷ்டி சுத்தி போடுவது மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.

6) நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.

7) இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க.. பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றிக் குளிப்பாட்ட வேண்டும்.

8) பிறகு.. முழுக்க நனைந்த அவளை.. உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.

அவளது நனைந்த புடைவையை களைந்துவிட்டு.. புதுப் புடைவையை மணமகன் உடுத்திவிடும்போது.. இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப் புடைவைச் சடங்கு.

இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்.. அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்துப் பார்ப்போம்.




கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இதுவரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம்.

பாணிக்ரஹனம் இதுதான் முக்கியமான சடங்கு. கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் 'கை' பற்றுவதுபோலவும் அமைந்தது இச்சடங்கு.

மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வதுதான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.

9 கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?

முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக. இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும், மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக. நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக. 5 வது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக. 6 வது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு. 7 வது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க. தாலிக்கு அதாவது, நம் குடும்பம் இனிமேல் ஒன்று உன் அப்பா யாரோ என் அப்பா யாரோ.. ஆனால், இன்று முதல் நாம் ஒன்று என சங்கப் பாடல் படித்தோமே? அதே பொருளுக்காக யாகத்தை நெருங்குவதுதான் 7 வது அடி.

இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர். இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம் செய்துகொண்டன.

இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது. சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா ஆனது.

மேலோர்க்கு யாத்த கரணம்
கீழோர்க்கு ஆன காலமும் உண்டே....

என்கிறது தொல்காப்பியம்.

கரணம் என்றால் கல்யாணம். அதாவது, மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண கர்மாக்கள்.. மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம் என்னவென்றால் தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும் கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள் தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.

மந்த்ர பூர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும்போது அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட இயலாதென்பதால் தாலியை -பனை ஓலை கயிறை - மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.

மேற்கூறிய தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு. 'மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே’’

என்பதில் கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். பிற்பாடு - இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது- ஒன்றாக இருந்த காலம் உண்டு என்று தெரிய வரும்.

ஏன் மாறிப் போனதுமுதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச் சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து வைப்போம் அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என நினைத்தார்கள் பிராமணர்கள்

இரண்டாவது காரணம் இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட களவியல் மரபுக்காரர்களாயிற்றே!

அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்.. மவுனப் புன்னகையே மந்திரமாக.. கற்பியல் முறையில் காதல் மணம் கண்டவர்களாயிற்றே!

அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில் பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.

இத்தகைய காரணங்களால்.. சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள்.

இப்படி செய்வதற்கு அவர்கள் கையில் கசங்காமல் இருந்த மனு ஸ்மிருதி தான் ரொம்ப உதவியாக இருந்தது.

மனு மூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள இந்தக் கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச் செய்தார்கள்.

யாருக்கு சத்திரியர்களுக்கா...? வைஸியர்களுக்கா...? இல்லை, இல்லை சண்டாளர்களுக்கு.

சண்டாளர்களா? யாரவர்கள்?

மனு கூற்றுப்படி சண்டாளர்கள் யார் என்பதை என் எழுத்தில் என்னால் கூற முடியவில்லை. என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.


யார் அந்த சண்டாளர்கள்?
துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.

ஆனால், மனு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள் எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மனு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?

இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் எனக் குறிப்பிட்டேன்.

முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன்.

இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம் சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈடுபட்டிருந்தார் அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.

அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார் அவரை நாம் எதிர்க்கவேண்டும் அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.

உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.

திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம்.

தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள!; சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள்! என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம்.

காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள.; நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.

அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர் என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார் என்ன விவகாரம்? எனக் கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, 'உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள.; கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள.; நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.

எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம.; முன்வரிசையில் நான்தான் இருந்தேன். Why are you demonstrating young men? எனக் கேட்டார்

நாங்கள் போராட்டம் பற்றிச் சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.

நான் தீண்டாமை முற்றாகவேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.

இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள.; நீங்கள் மனு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மனவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம், அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.

தனது வீட்டிலுள்ள பிராணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன் கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள். சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள். பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்

நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள். பிராமணர்கள் நான் சொல்வது வெகு காலம் முன்பு.

இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள.; அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.

முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.



என்ன?.. அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?

நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன்.

பிறகு.. நான் மநுவுக்குள் மூழ்க ஆரம்பித்தேன் 'சண்டாளர்கள் என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல்.

பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?.. அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள்.

சமூகம்
ஆமாம்.. தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள் 'நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது’-சிந்தித்தார்கள் ய ளவயடெந ளடிஉநைவல அதாவது நிலையான ச_கக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு அதற்காக?

பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள் சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான் வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான் சத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் சத்திரியன்தான்.

இதுதான் அவர்கள் வகுத்த stable society
----------- நூல்: அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார் எழுதிய "இந்து மதம் எங்கே போகிறது?"

தாத்தாசாரியின் ஒப்புதல் வாக்குமூலம் மூலம் ஜாதி வெறியர்களாக வெறிபிடித்து அலைந்தது பார்ப்பனர்கள்தான் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

இனியும் பாலா போன்ற பார்ப்பனப் பொறுக்கிகள் நம்மைஜாதி வெறியர்கள் என்று சொன்னால் தாத்தாசாரியை அழைக்க வேண்டியிருக்கும்.