Search This Blog

13.11.08

பார்ப்பான் மீன் பிடித்திருந்தால் இதை எழுதுவானா? இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகாரன்?


பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் நமது இன
உணர்ச்சியைக் குறைக்க, திசை திருப்பவே எழுதுவார்கள்

சென்னை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு


பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும் நம்முடைய இன உணர்ச்சியைக் குறைக்க, திசை திருப்ப எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள். அதே சமயம் அவர்களுடைய இன உணர்வைப் பெருக்கிக் கொள்ளுவார்கள் என்று சென்னை பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தவைர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும்! என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6-11-2008 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலிருந்து ...

மேற்படி சபையாராலேயே மேலே விவரித்துள்ள நோக்கங்களை ஸ்தாபிப்பதற்கு, இன்று திராவிடன் என்ற இத்தமிழ் தினசரி பத்திரிகையும், ஆந்திர பிரகாசிகா என்ற தெலுங்கு தினசரி பத்திரிகையும் ஆரம்பிக்கப்படுகின்றன.

பெரும்பாலான பிராமணரல்லாதார்


முன்சொன்னபடி தென்னிந்தியர்கள் பெரும்பாலோர் பிராமணரல்லாத இந்துக்கள் ஆவார்கள். பிராமணர்கள் என்பவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையினர். எனவே பிராமணர், பிராமணரல்லாதார் என்ற இரு வகுப்பினருக்குள் பிராமணரல்லாதாராகிய திராவிடர்களே தென்னிந்திய மகாஜனங்களின் திருத்தமாய் நாம் கூறலாம். இத்தனை நாள் இவர்கள் தாலாட்டித் தூங்க வைக்கப்பட்டிருந்ததிலிருந்து இப்பொழுதுதான் அவர்கள் உடம்பை உதறி திடம் பெற்று எழுந்து நிற்பதைக் கண்டு, மனம் பொறாத சிலர், இவர்களுடைய நோக்கங்களையும் பூர்த்தியாய் ஆராய்ந்து பாராமல், மேல் வாரியாய் கோஷம் கூறத் தொடங்குவதுபோல வேஷம் போட்டு மேலே குவிந்துள்ள அபிப்பிராயங்கள் சில தந்திரசாலிகளின் பேராசையோ அல்லது விருப்பங்களையோ குறிப்பது என்று சொல்லக் கூடும். நம்முடைய எதிரிகள் இப்படிபிரச்சாரம் செய்யக் கூடும் என்றெல்லாம் இதிலே எழுதி தங்களுடைய நோக்கத்தை சொல்லியிருக்கின்றார்கள்.

சமூகநீதியை எதிர்ப்பான்

அன்றைக்குத் தொடங்கிய அந்தப் பணி இன்றைக்கும் தேவைப்படுகிறது. ஒவ்வொன்றிலும் சமூக நீதியா? எதிர்ப்பான். இரண்டு மூன்று உதாரணங்களை சொல்லலாம். உங்களுக்குத் தெரியும். அண்மையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் ஒரு ஆணையே போட் டார். தி.மு.க. ஆட்சி 1967-ல் பதவிக்கு வந்தது. தி.மு.க. ஆட்சியில் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். கலைஞர் அவர்கள் போக்குவரத்துத்துறை அமைச்சராக வந்தவுடனே பேருந்துகளில் ஒரு நடவடிக்கையை எடுத்தார். பேருந்தில் டி நகர், டி. நகர் என்று போட்டார்கள் - பாருங்கள். அதை முதலில் எடுத்து விட்டு, தியாகராயர் நகர் என்று போடவேண்டும் என்று ஆரம்பித்தார். நாம் தொடர்ந்து விடுதலையில் எழுதிக் கொண்டிருப்போம்.

யாராவது டி.நகர் என்று சொல்லிவிட்டால்

நம்மாட்கள்கூட சிறிய விஷயமாக இருந்தாலும் நமக்குள் சில உறுதிகள் வேண்டும். எதிரிகள் அதில் தெளிவாக இருப்பார்கள். நம்மாட்கள்தான் தெளிவாக இருப்பதில்லை.

நம்மாட்கள் யாராவது என்னிடம் டி. நகர் என்று சொல்லிவிட்டால் அவ்ளவவு சுலபமாக விடமாட்டேன். என்னய்யா டி. நகர்? தியாகராயர் நகர் என்று முழுப் பெயரையும் சொல் லய்யா. என்னய்யா அவசரம் உனக்கு? நீ எங்கே போகப் போகிறாய்? என்று கேட்பேன் (சிரிப்பு).

பார்ப்பனரின் விஷமம் எந்த அளவுக்கு?

தியாகராயரை நாம் மறைத்துவிட்டால் மக்களுக்கு எப்படித் தெரியவரும்? எந்த அளவுக்கு பார்ப்பான் விஷமம் செய்வார் என்றால், உங்களுக்குச் சொல்ல வேண்டும் இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லி என்ற பத்திரிகை ரொம்ப பிரபலமாக வந்தப் பத்திரிகை. இப்பொழுதுள்ள பாம்பே டைம்ஸ் ஆஃப் இந்தியா குரூப்பைச் சேர்ந்தது. அந்த இல்லஸ்ட் டிரேட்டட் வீக்லி இப்பொழுது நின்று போய்விட்டது.

அன்றைக்கு மிகப் பெரிய வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வரும். அந்த பத்திரிகைக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்னையிலிருந்து சென்ற பார்ப்பனர் ராமன் என்பவர்தான் ஆசிரியராக இருந்தார். குஷ்வந்த் சிங்கூட ஒரு காலத்தில் அதற்கு ஆசிரியராக இருந்தார். பல பேர் ஆசிரியராக இருந்தனர். பல பேர் ஆசிரியர்களாக மாறி மாறி வருகிறார்கள்.

டி.நகர் என்று அழைத்தால்


தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ராமன் என்பவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராகச் சென்றார். நான் சொல்லுவது 1965, 1966 கால கட்டம். அவர்தான் அண்ணா அவர்களைக்கூட ஒரு பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியைக் கூட இல்லஸ்ட்டிரேட்டட் வீக்லியிலே தொடர்ந்து போட்டார்கள்.

அந்த ராமன் என்பவர் எழுதுகிறார்:

நான் சென்னைக்குப் போயிருந்தேன். அங்கே டி. நகர் என்று ஒரு பகுதி இருந்தது. டி.நகர் என்றால் என்ன என்று கேட்டேன். தியாகராயர் நகர் என்று சொன்னார்கள். இந்த ராமன் என்பவர் ஒன்றும் பம்பாயிலே பிறந்து வளர்ந்தவர் அல்ல. இங்கிருந்து சென்றவர்தான்.

யார் அந்த தியாகராயர்?

இவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்தான். பம்பாயிலிருந்து சென்னைக்கு வந்த அவர் சொன்னார். டி.நகர், தியாகராயர் நகர் என்று பெயர் வைத்திருக்கிறார்களே, யார் அவர்? அங்கே உள்ள யாருக்கும் தெரியவில்லை. அது உண்மையாகக் கூட இருக்கலாம். நான் மறுக்கக் கூட விரும்பவில்லை. ஆனால், அதற்கு அடுத்து அந்த ராமன் என்ற ஆசிரியர் சொல்லுகிறார் - அதாவது தெலுங்கில் ரொம்ப புனிதமாகப் பாட்டு எழுதுகிறார்கள் பாருங்கள், அந்த தியாகராயர் அல்ல, இந்தத் தியாகராயர் என்பதுமட்டும் எனக்குத் தெரியும். தெலுங்கு கீர்த்தனை தியாகராயர் மட்டும் இவர்களுக்குத் தெரிகிறது. ஆனால், இந்த சர் பிட்டி தியாகராயரைப்பற்றித் தெரியவில்லை. அதுவும் இவ்வளவு பெரிய பத்திரிகை ஆசிரியருக்கு.

பார்ப்பான் விஷமம் என்றால், எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும். நம்முடைய தோழர்கள் அந்தக் காலத்தில் சுயமரியாதை மேடைகளில் இதையெல்லாம் பாலபாடம் மாதிரி அன்றைக்கு எடுத்துச் சொல்வார்கள். பார்ப்பனர்களுடைய திண்ணைப் பிரச்சாரம், தெருமுனப் பிரச்சாரம், பத்திரிகைப் பிரச்சாரம் அப்புறம் இருக்கட்டும். என்னங்க, வரிசையாக கச்சேரி இன்றைக்கு இருக்கின்றதே ரயிலிலே, பஸ் ஸிலே பயணிகள் உட்கார்ந்திருக்கும்பொழுது - இன்றைக்கு யார் பாடுவது என்று கேட்பார்கள்.

இன்றைக்கு யார் பாடுகிறார் என்று கேட்டால்

இன்றைக்கு யார் பாடுகிறார் என்று எனக்கு தெரியலிங்க, நாளை மறுநாள் ஃபுளுட்டிஸ்ட் டி.ஆர். மகாலிங்கம் அய்யர் வரவிருக்கிறார் என்று சொல்லுவார்கள். இன்றைக்கு யார் பாடுவார்? என்பதுதான் மிக முக்கியம் (கை தட்டல்). அவர் வாயில் தியாகராயர் பாடுவார் என்று சொல்வதற்கு அவருடைய மனதும், வாயும் வருவதில்லை.

நாளை மறுநாள் ஃபுளூட் வாசிக்கப் போகி றார் டி.ஆர். மகாலிங்க அய்யர். இப்படி ஒவ் வொரு துறையிலும் அவர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுடைய பிரச்சாரம் இயல்பாக சன்னமாக இழையோடக்கூடிய அளவிலே இருக்கும். இல்லையென்றால் எவ்வளவு தூரம் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதற்கு அடையாளம் இரண்டு மூன்று வேடிக்கையான செய்திகளை உங்களுக்குச் சொல்லுகின்றோம். ஏனென்றால் நம்மாட்கள் இதைப் போய் அனலைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் தெரியும்.

கடந்த 27-10-2008 அன்று வந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இது.

ஆசிரியருக்குக் கடிதங்கள் என்ற ஒன்றை வைத்திருக்கின்றார்கள். அவர்களுடைய கொச் சைத்தனமே இந்த மாதிரி செயல்களில்தான் ஈடுபடுவார்கள்.

ஆசிரியருக்குக் கடிதமல்ல ஆசிரியரின் கடிதம்

அது ஆசிரியருக்கு கடிதங்கள் அல்ல. அது ஆசிரியரின் கடிதங்கள். letters to the editor அல்ல.letters by the editor. ரொம்பத் தெளிவாக சாமர்த்தியமாகப் பண்ணுவார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்னாலே எங்களுக்கு ஏற்பட்ட அனுபவம். ரொம்ப பேர் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டால் தான் புரிந்துகொள்ள முடியும். சாதாரண மாகப் பார்த்தால் சாலேஸ்திரம்தான் (கை தட்டல்).

பிற்படுத்தப்பட்டவர்களில் ஏழைப் பிரிவினர்களுக்கு உதவி செய்வோம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பைக் கொண்டு வந்தார்கள். இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எம்.ஜி.ஆர். கொண்டுவந்த வருமான வரம்பைக் கொண்டு வந்தது நியாயம் என்று ஒரு ஆசிரியருக்குக் கடிதம் வந்தது.

இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில்

அப்பொழுது இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் ஒரு டெக்னிக்கை கையாண்டார்கள். ஆசிரியர் கடிதத்தில் அவர்களுடைய முக வரியைக் கீழே போட்டார்கள். உண்மையை ஆராய்ந்து பார்த்து முழு முகவரியோடு கடிதம் போடுகிறார்கள் என்று காட்டுகிறார்கள். ராமசாமி, எண் 5, பெரிய தெரு, திருவல்லிக் கேணி என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

நிச்சயமாக அப்படி ஒரு ஆள் இல்லை என்று தெளிவாகத் தெரிந்துகொண்டோம். விசாரித்துப் பார்த்தால் அந்த மாதிரி ஆளே இல்லை. இவர் சொல்லுகிற முகவரியில் ஆளே கிடையாது. அதற்கு உதாரணம் நீங்கள் வேறு எங்கும் போகவேண்டாம். கருமாதி பத்திரிகையைப் பற்றிச் சொன்னார்கள் - பாருங்கள். அந்த கருமாதி பத்திரிகைக்கு ஸ்டேண்டர்டாக ஒரு பத்து பேரை வைத்திருக்கின்றார்க்ள்.

ஆவடி அசோகன் என்ற பெயரில்

அசோகன் - ஆவடியிலிருந்து எழுதுகிறார். அல்லது அறந்தாங்கியில் இருந்து எழுதுகிறார். செத்துப்போன சாம்ராட் அசோகன் இருக்கிறார்கள் பாருங்கள், அவரே எழுந்து வந்தால் கூட இந்த மாதிரி ஒரு ஆளை ஆவடியிலோ, அறந்தாங்கியிலோ கண்டு பிடிக்க முடியாது.

எல்லாம் அவாள்! ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருப் பார்கள். அதுமாதிரி நிலையில் ஒரு கடிதம் வந்தது. இப்படி ஒரு அய்யர் இருக்கிறாரா? பார்த்து விசாரித்து வர ஒரு ஆளை அனுப்பினோம். ஆனால், அந்த வீட்டில் பார்த்தீர்களே யானால், அந்த மாதிரி யாரும் இல்லை. தெளிவாகத் தெரிந்துவிட்டது எங்களுக்கு.

ஆசிரியருக்குக் கடிதத்தைப் பாராட்டி

இதை வெளிப்படுத்த வேண்டும். இந்த உண்மையைப் பொதுக்கூட்டத்தில் சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், நாங்கள் இப்படி விசாரித்தோம் என்று சொன்னால், யாரும் நம்பமாட்டார்கள் பாருங்கள். இதற்கு ஒரு ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக என்ன நினைத்தோம்.

அந்த ஆளுக்கு அவர் எழுதிய ஆசிரியருக்குக் கடிதத்தைப் பாராட்டி எழுதி ரிஜிஸ்தர் தபாலில் அனுப்பி அந்த முகவரியிலிருந்து நமக்கு அக்னாலஜ்மெண்ட் வரும்படி செய்தோம். அதே ராமசாமிக்கு அதே முகவரிக்கு அனுப்பினோம். தபால் இலாகாவிலிருந்து இப்படி ஒரு முகவரி அங்கு இல்லை என்று திரும்பி வந்தது. இந்த மாதிரி ஆசிரியருக்குக் கடிதம் வந்தால் நீங்கள் எழுதிப் பாருங்கள், ஏனய்யா அந்த அசோகன் எங்கே இருக்கிறார்? என்று தினமலர் அலுவலகத்திற்கு எழுதிக் கேளுங்கள்.

கோயபல்ஸ் கூட தோற்றுப் போய்விடுவான்

அவர்களால் உரிய பதிலைத் தர முடியாது. அதாவது ஈனத்தனமாக செத்துப்போன கோயபல்ஸ் வந்தால்கூட இவர்களிடம் தோற்றுப் போய்விடுவான். அதுமாதிரியானப் பிரச் சாரம். அவர்கள் அதை எல்லாம் செய்வார்கள். ஆங்கிலப் பத்திரிகை என்றவுடன் அரசாங் கத்தில் இருக்கிற அதிகாரிகள் படித்துவிட்டு ஓகோ அந்தப் பத்திரிகையில் இப்படி வந்து விட்டது என்று இதைத் தான் பெரியதாகச் சொல்வார்கள். நாம் அதைவிட மிக முக்கிய மான கருத்தை குறைப்பாட்டை எழுதியிருப்போம். இவர்கள் அதை எடுத்து வைக்க மாட்டார்கள்.

அய்.ஏ.எஸ். அதிகாரிகள் - ஆகா! அந்த பத்திரிகையில் வந்துவிட்டது. உடனே பதில் சொல்லுங்கள் என்று கேட்கக் கூடிய அளவுக்கு அவர்கள் இருப்பார்கள். எல்லாம் ஆங்கிலம் படித்த மேல் தட்டு வர்க்கம் அதைத்தான் படிக்கும். எத்தனை பேர் இந்த நாட்டிலே இன்னமும் ஆங்கிலம் படித்து, இந்து பத்திரி கையை படித்து, எக்ஸ்பிரஸ் பத்திரிகையைப் படித்து விட்டு சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.

பெரியார் தயவினாலே

பெரியார் தயவினாலே நீதிக்கட்சி தயவினாலே காமராஜர் காலம், அண்ணா காலம் இவர்களுடைய சாதனையால் நம்முடைய பிள்ளைகளைப் படிக்க வைத்தவுடனே, நம்மாள் எல்லாம் இந்த மாதிரிபத்திரிக்கைகளைத்தான் வாங்கிப் படிக்கின்றான்.wanted காலம் இதில்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வாங்குகின்றார்கள்.

இதோ பாருங்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கோயங்காவினுடைய ஏடு. ஆனால், அந்தப் பத்திரிகையில் வடநாட்டுப் பார்ப்பனர்கள், இந்த மாநிலத்தைச் சார்ந்த பார்ப்பனர்கள் முழுக்க முழுக்க இருப்பார்கள்.

திருச்செங்கோடு - ஷியாம்லன்

இதிலே ஒரு செய்தி வந்திருக்கிறது. ஷியாம் லன் திருச்செங்கோடு. திருச்செங்கோட்டிலே கந்தசாமி கவுண்டர் வேண்டுமானால், இருப் பாரே தவிர ஷியாம்லன் அவ்வளவு தூரம் போக மாட்டார். ஷியாமலன் அமெரிக்காவுக்கு படம் எடுக்கப் போனவர்.

பத்திரிகைகளில் இவர்கள் என்ன செய்கிறார்கள். ஷியாமல்லன் - திருச்செங்கோடு என்று போட்டான். அதில் என்ன எழுதுகிறான் என்றால் tamilnadu is a vast intustrial estate with vast infrastructure கலைஞர் இவ்வளவை யும் செய்திருக்கிறார் - மறந்துவிடாதீர்கள்.

தமிழகத்தையும், இலங்கையையும் ஒப்பிட்டு


எதற்காக சொல்லப்போகிறான். அடுத்த விசயத்தை கவனியுங்கள். இதைப் பாராட்டுவ தற்காகவோ, புகழ்வதற்காகவோ, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்காக அவர்கள் இதை எழுத வில்லை. இதை நினைத்தால் கதாகாலட்சேபம் மாதிரி பண்ணலாம். 1,2,3 என்று பாரதம் படிக்கிற மாதிரி 18 நாட்கள் படிக்கலாம். அவ்வளவு செய்திகள் இருக்கின்றன. மேலும் எழுது கிறார்., when compered to srilanka . இது யாருக்கும் தெரியாது பாருங்கள். தமிழ்நாட் டையும் சிறீலங்காவையும் ஒப்பிட்டுவிட்டு எழுதியிருக்கின்றான். நமது மீனவ மக்களைச் சுடுகின்றான், நமது மீனவர்களை கைது பண்ணுகின்றான். நமது மீனவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆறாவது தீர்மான மாகப் போட்டு இந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்துகிறோம் என்று வெளி விவகாரத்துறை அமைச்சர் சொல்லி, இப்பொழுது அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடத்திருக்கின்றன.

இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில்


ஆனால், இந்த இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதுகின்றான். இலங்கை கடற்பகுதிக்குள் நமது மீனவர்கள் எல்லாம் சென்று எல்லா மீனையும் சுரண்டிக் கொண்டு வந்து விடுகிறார்களாம். it is a shame to steal frpm beggers இலங்கைக்காரர்கள் பிச்சைக்காரர்களாம்!

இலங்கைக்காரர்கள் பிச்சைக்காரர் மாதிரி இருக்கிறார்களாம். அங்கே நம்மாள் போய் சுரண்டிக் கொண்டு வந்து விடுகின்றானாம். அதாவது பிச்சைக்காரனிடம் திருடலாமா? இதை இவ்வளவு பெரிய கொட்டை எழுத்தில் போட்டு, இப்படி எழுதுகிறார்கள் என்று சொன்னால், மீனவர்கள் எத்தனைபேர் இந்த மண்ணுக்கு உரியவர்கள். மீன் வளத்தை தங்களுடைய வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நம்மக்கள். அந்த சமுதாயக்காரர்களைப்பற்றிக் கவலை இல்லை. பார்ப்பான் மீன் பிடித்திருந்தால் இதை எழுதுவானா? இந்தப் பார்ப்பனப் பத்திரிகைகாரன். நீங்கள் நன்றாக நினைத்துப் பாருங்கள். இப்பொழுது நிறையபேர் சாப்பிடு கின்றான் - அது வேறு.

வங்காளப் பார்ப்பான் மீன் சாப்பிடுவான்


இன்னும் கேட்டால் வங்காளத்திலிருந்து வந்து விடுவேன் என்று சொல்லிவிடுவான். வங்காளத்தில் எல்லா பார்ப்பானும் மீன் சாப்பிடுகின்ற பார்ப்பான்தான்.. ஆக எதற்காக இதை சொல்லுகிறோம், அவர்களுடைய எண்ணங்கள் சிந்தனைகள் எப்படியிருக்கின்றன? அவன் ஏதோ சொல்லுகின்றான். நம் மாட்கள் சுரண்டிக் கொண்டு வருகின்ற மாதிரி.

பிரணாப் முகர்ஜி சொன்னாரே கடலில் மீன் பிடிக்கச் சென்றால் காற்று அடிக்கிறது படகு இழுத்துக் கொண்டு போகும். அவரே சொன்னார் - நிலத்தில் கோடு போடுகிற மாதிரி கடலில் கோடு போட முடியாது. நமது எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அந்த சகோதரர் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது திடீர் என்று காற்று அடித்தால் அது எந்த இடத்திற்குப் போகும்? இதை மறந்து அவர்களாலே செல்ல முடியாது. உடனே தமிழக மீனவர்களை சிங்கள மீனவர்கள் பிடித்து சிறைச்சாலைக்குள் போடுவதா?

கடலிலே அங்கே நம் தமிழர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதா? சிங்கள இராணுவம் தமிழர்களை சுட்டுக் கொல்வதா?

-------------------நன்றி: "விடுத்லை" 13-11-2008

1 comments:

tamilan said...

பார்ப்பனப் பத்திரிகைகாரன்? அது என்ன? "இந்து" பார்ப்பனப் பத்திர்கையா? எது? சரி திரு மு.க., வைகோ, ராமதாஸ் ஆகியோர் "தமிழனா?" தெலுங்கு தானே பேசுகிறார்கள்...

தமிழ் நாடு OBC பட்டியல்களை பார்த்தால் "தமிழ்" நாடு என இன்னமும் கூப்பிடுவீர்களா?