Search This Blog

1.11.08

பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள் சிந்திப்பார்களா?




பார்ப்பானாவது தமிழனாவது?

துக்ளக் (20.8.2008 பக்கம் 11) இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் கீழ்க்கண்ட பதிலைத் தந்துள்ளார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள்.

லட்சக்கணக்கான ஹிந்துக்கள், காஷ்மீரிலிருந்து வெளியேறி, அகதிகளாக டெல்லியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததும், அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ் நிலைகளை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை? என்று மிகவும் மனம் நொந்து போய் எழுதும் இந்த சோதான். இலங்கைத் தீவிலே, சொந்த நாட்டிலே மூன்று லட்சம் தமிழர்கள் அகதிகளாக அல்லாடிக் கொண்டு இருக்கிறார்களே - அதுபற்றி மூச்சு விடுவதில்லை - அந்நிலைக்கு ஆளாக்கிய ஆளும் ராஜபக்சேக்களுக்கு வெண் சாமரம் வீசுகிறார்.

காஷ்மீரிலிருந்து வெளியேறும் ஹிந்துக்கள் என்று பூடகமாகச் சொல்லுகிறார் அல்லவா - அவர்கள் யாரும் அல்லர் - பண்டிட்கள் என்று கூறப்படும் பார்ப்பனர்கள்தாம்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆகும் நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை மாற்றுகிறது ஏதும் நடக்க வில்லையே என்று கண்ணீர் விடுகிறார். பாதிப்புக்கு ஆளானவர்கள் பார்ப்பனர் என்றால் பாசம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.


ஈழத் தமிழர்கள் உள்நாட்டிலேயே லட்சக்கணக்கில் அகதிகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர் என்றால் - அதற்குக் காரணமான - அந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் பற்றி எழுத அவருடைய எழுதுகோல் மறுக்கிறது. இதற்குக் காரணம் என்ன? பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள் சிந்திப்பார்களா?

---------------- நன்றி: "விடுதலை" ஞாயிறுமலர் 1-11-2008

0 comments: