Search This Blog

7.11.08

மனிதச் சங்கிலியில் பார்ப்பனர்கள் கலந்துகொண்டார்களா?




தமிழர் தலைவர் எழுப்பிய வினாக் கணைகள்

நேற்று (6.11.2008) மாலை சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில், பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுப்பிய வினாக்கணைகள்.

1. பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கமாட்டார்களா?

2. பார்ப்பன ஏடுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வகையில் கொச்சைப்படுத்தி எழுதுவது - ஏன்?

3. வரலாறு காணாத வகையில் வட சென்னையிலிருந்து செங்கற்பட்டுவரை 60 கி.மீட்டர் தூரம் - கொட்டும் மழையில் தமிழர்கள் மனிதச் சங்கிலி - தமிழர் சங்கிலி - சங்கற்பச் சங்கிலி பேரணி நடத்தினார்களே - அதில் பார்ப்பனர்கள் கலந்துகொண்டார்களா?

கலந்துகொள்ளா விட்டாலும் பரவாயில்லை; கலந்துகொண்டதைக் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுகிறார்களே! அதன் பொருள் என்ன?

போக்குவரத்து ஸ்தம்பித்தது என்று எழுதுகிறார்களே - அதன் நோக்கம் என்ன? பிரச்சினையின் நோக்கத்தை மூடி மறைத்து பாமர மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை செய்வது ஏன்?

இரண்டரை இலட்சம் மக்கள் ஈழத்தீவில் வீடுகளை விட்டு ஓடி காடுகளிலும், வனாந்தரங்களிலும் விலங்குகள், பாம்புகள் ஆகியவற்றிற்கு மத்தியில் ஒவ்வொரு நொடியும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, மரண பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே - அந்த மக்களின் வாழ்வில் விடிவெள்ளி முளைக்காதா? என்ற கவலையில் கைகோத்து நின்றவர்களைக் கொச்சைப்படுத்துவது - பார்ப்பன ஏடுகளின் வன்மத்தைத் தமிழர் வெறுப்பு என்னும் துவேஷத்தைத் தானே காட்டுகிறது.

மயிலை அறுபத்துமூவர் திருவிழாவின்போது போக்குவரத்து ஸ்தம்பிக்கவில்லையா? குடந்தை மகாமகத்தின்போது மக்கள் அவதிப்படவில்லையா?

மதுரை அழகர் கோயில் விழாவின்போது பத்து லட்சம் மக்கள் திரண்டனர் என்று இதே பார்ப்பன ஏடுகள் எட்டுக்கலம் தலைப்பு கொடுத்து வண்ண வண்ணமாகப் படங்களைப் போடுகிறார்களே, அப்பொழுது மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லையா?

பக்தி என்றால் அதற்கொரு பார்வை! தமிழன் உரிமை என்றால், இன்னொரு பார்வையா? இதுதானே மனுதர்மப் புத்தி என்பது!


4. ஈழத்தமிழர்களுக்காக நிவாரண நிதி கூடாது என்று சிலர் கூறுகிறார்களே - இந்த நிதி விடுதலைப்புலிகளுக்குத்தான் போகப் போகிறது என்று நாக் கூசாமல் பேசுகிறார்களே, அப்படி பேசுகிற ஆசாமிகள் நிதி கொடுத்தார்களா?

ஒரு அரசாங்கம் திரட்டுகிற நிதி - மத்திய அரசாங்கத்தின்மூலம் நிவாரணப் பொருள்களாக அனுப்பப்படும் பொருள்கள், விடுதலைப்புலிகளுக்குத்தான் போகும் என்று சொல்கிறார்கள் என்றால், இவர்களின் புத்திசாலித்தனத்தை எதைக்கொண்டு சாற்றுவது?

ஈழத்தமிழர்கள்மீது உண்மையான அக்கறை இருந்தால், இதுபோல கோணல் புத்தியில் உளறுவார்களா?

5. போர் நிறுத்தம் செய்யப்படவில்லையே என்று கேட்கப்படுகிறது. நியாயமான கேள்விதான். ஆனால், இதுவரை இந்தப் பிரச்சினையில் இப்பொழுது ஏற்பட்டுள்ள சில நடவடிக்கைகள், முயற்சிகள், ஏற்பாடுகள் புதுத் திருப்பம்தானே? இதுவரை மாநில அரசு இந்தப் பிரச்சினையை எழுப்பியபோதெல்லாம் மத்திய அரசு என்ன செய்தது? கவலையைத் தெரிவிப்பதாக மட்டும்தானே சொல்லி வந்தது. இப்பொழுது அதில் பெரும் அளவுக்கு மாற்றம் வரவில்லையா?

மத்திய அமைச்சர் முதலமைச்சரைப் பார்க்க வந்தது எப்படி? இலங்கைத் தூதுவரை அனுப்பி இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தியது இதற்குமுன் நடந்திருக்கிறதா?

போர் அல்ல - பேச்சுவார்த்தைமூலம்தான் தீர்வு என்று பிரதமரே தெரிவிக்கவில்லையா?

நிவாரணப் பொருள்களை இதற்குமுன் - அனுப்ப முடிந்ததா? இப்பொழுது அனுப்ப முடிந்தது என்பது ஒரு முக்கிய திருப்பம் அல்லவா?

நம்மில் சுருதி பேதம் இல்லாமல், பிசிறு இல்லாமல் ஒரே குரலில் உரிமைக் குரல் கொடுத்தால், முதலமைச்சரும் மேலும் அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உண்டா - இல்லையா?

மத்திய அரசும் அதன்படி செயல்பட வாய்ப்பு உண்டே!

அங்குப் போர் நிறுத்தம் ஏற்படுவதற்குமுன் தமிழ்நாட்டில் நமக்குள் போடும் போரை முதலில் நிறுத்தவேண்டாமா? வீணான விமர்சனங்கள் பிரச்சினைக்குத் தீர்வாகுமா?

முதலமைச்சரின் நல்லெண்ணத்தைப் புரிந்துகொள்ள வேண்டாமா? எல்லாவற்றிலும் அரசியல் என்பது வேண்டாத வேலையல்லவா?

6. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுக, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்க, சிங்கள இராணுவப் போரை நிறுத்துக! என்று முதலமைச்சர் தந்தி கொடுக்கச் சொன்னால், முதலமைச்சர் கருணாநிதி பதவி விலகிடுக என்று தந்தி கொடுக்கச் சொல்கிறாரே முன்னாள் முதலமைச்சர். அதன் பொருள் என்ன?

ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்றுதானே அர்த்தம்!

7. காஷ்மீரில் பண்டிட்டுகள் என்று சொல்லப்படும் பார்ப்பனர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக ஆகிவிட்டார்கள் - அதுபற்றி கவலைப்படாத அரசு என்று திருவாளர் சோ ராமசாமி எழுதுகிறாரே! காஷ்மீர் பண்டிட்களுக்கு அளிக்கப்படும் தங்கும் இடம், உணவு ஏற்பாடுகள் என்று எவ்வளவோ சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீர் பண்டிட்டுகள் ஈழத்தமிழர்கள்போல காடுகளுக்கா விரட்டப்பட்டனர்!

காஷ்மீர்ப் பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்கும் இந்தப் பார்ப்பன்க் கூட்டம் -இரண்டரை லட்சம் பேர்கள் சொந்த நாட்டிலே ஈழத்திலே அகதிகளாக்கப்பட்டுள்ளார்களே? அது பற்றி வாய் திறக்காதது ஏன்? அதற்கு காரணமான அரசைக் கண்டிக்காதது ஏன்? கண்டிக்காமல் போனால்கூடப் பரவாயில்லை.அவர்களக்குகாக வக்காலத்து வாங்கி எழுதுவானேன்?

8.விடுதலைப் புலிகளுக்காக இங்கு யாரும் வக்காலத்துவில்லை. அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களைக் காப்பாற்ரிக் கொள்ள அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.
சிங்கள ராணுவத்திலிருந்து ஓடுகின்றவர்கள் யார்? கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அப்படித் தப்பித்தேன் – பிழைத்தேன் என்று ஓடிய சிங்கள ராணுவத்தினர் 16000 பேர்கள் என்பது எதைக் காட்டுகிறது.
இப்பொழுது இராணுவ அதிகாரிகளுக்கு முக்கிய வேலை என்ன தெரியுமா?
ஒவ்வொரு பேருந்தாக நிறுத்தி அதில் வாட்டசாட்டமாக இருக்கும் ஆட்களைசட்டையைப் பிடித்து”நீஇராணுவத்தைச் சேர்ந்தவனா? தப்பித்துச் செல்கிறாயா? என்று கேட்க ஆரம்பித்து விட்டனரே! விடுதலைப் புலிகள் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பது இதன் மூலம் விளங்க வில்லையா?

இந்த நிலையில் விடுதலைப்புலிகளுக்காக யாரும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிய வில்லையா?

9. தமிழின விரோதம் என்ற ஒன்றையே உயிர் மூச்சாகக் கொண்டு செயல்படும் தமிழர்களிடம் விற்று தமிழர்கள் மூலம் வயிறு பிழைக்கும் பார்ப்பன ஏடுகளை தமிழர்கள் வாங்கலாமா? புறக்கணிக்க வேண்டாமா?(“புறக்கணிப்போம் , “புறக்கணிப்போம்” என்று பார்வையாளர்கள் குரல் கொடுத்தனர்).

“தமிழா இன உணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!”
------தமிழர்தலைவர் கி.வீரமணி

-------------நன்றி: “விடுதலை” 7-11-2008

4 comments:

குப்பன்.யாஹூ said...

மனித சங்கிலியில் கலந்து கொண்ட வரதராஜன் சூத்திரர் ஆகி விட்டாரா.

உண்ணா விரதத்தில் கலந்து கொண்ட கமலகாச அயன்கார், ரஜினிகாந்த் அய்யர், த்ரிஷா அய்யர், தாரிகா அய்யர் எல்லாரும் சூத்திரர்கள் ஆகிவிட்டனரா.


வீரமணிக்கு சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா அம்மா தான் பின்னூட்டம் இட வேண்டும் போல.

குப்பன்_யாஹூ

Thamizhan said...

காந்தி: அப்போ நல்ல பார்ப்பன்ரே இல்லையென்று சொல்கிறீர்களா?
பெரியார்:எனக்கு யாரையும் தெரிய வில்லையே.
காந்தி:எனக்கு ஒருவரைத் தெரியும்,அவர் பேர் கோபாலகிருஷ்ண கோகலே.
பெரியார்:நீங்க மகாத்மா.உங்கள் கண்ணுக்கே ஒருத்தர் தான் தெரிகிறார்.

பார்ப்பனீயத்தில் முழுகியுள்ள பல பார்ப்பனரல்லாதார் உள்ளனர்.பார்ப்பனீயத்தைத் தாண்டி வந்துள்ள பார்ப்பனர்கள் எத்துனை பேர்?

தமிழ் ஓவியா said...

மனிதச் சங்கிலியில் கலந்து கொண்ட பார்ப்பானைப்பற்றித்தான் கேள்வியே தவிர, உண்னாவிரதம் பற்றி அல்ல.

ரஜினிக்காந்தை பார்ப்பான் ஆக்கி பெருமைப் படும் பர்ப்பனக் கும்பலை எதைக் கொண்டு அடிப்பது?

தமிழ் ஓவியா said...

வரதராஜன் கட்சிக்கட்டுப்பாட்டுக்காக கலந்து கொண்டிருக்கலாம்.

பார்ப்பான் திருந்திவிட்டான் என்று நம்பும் ஏமாளிகளே உங்களைக் கண்டு வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

பார்ப்பான் அன்றும் இன்றும்( பார்ப்பனர் நலன் மட்டுமே முக்கியம்) மனித குல துரோகியாகத் தான் இருக்கிறான்.