Search This Blog
12.11.08
தமிழின உணர்வுகளுக்கு எதிராக எழுதிவரும் பார்ப்பனப் பத்திரிகைகளை இனி வாங்காதீர்!
தமிழின உணர்வுகளுக்கு எதிராக எழுதிவரும்
பார்ப்பனப் பத்திரிகைகளை இனி வாங்காதீர்!
எரிவதை இழுத்தால் கொதிப்பது
அடங்கும் சென்னை பொதுக்கூட்டத்தில்
தமிழர் தலைவர் பகிரங்க வேண்டுகோள்!
தமிழர்களுக்கு, தமிழின உணர்வுக்கு எதிராக எழுதிவரும் அதே வேளையில் பார்ப்பன உணர்ச்சியைப் பரப்பிடும் பார்ப்பனப் பத்திரிகைகளை இனிமேல் வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள் சிறு பொறிதான் பெரும் தீயாக மாறும். எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சென்னை - பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும்! என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் 6-11-2008 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இனி ஒரு முடிவெடுக்க வேண்டும்
எனவே தெளிவாக கட்சிக்கு அப்பாற்பட்டு, ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, யார் யாருக்கெல்லாம் தமிழன் என்ற உணர்வு இருக்கின்றதோ, யார் யார் யாருக்கெல்லாம் சமூக நீதியில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கின்றதோ, யார் யாரெல்லாம் அனைவருக்கும் அனைத்தும், எல்லார்க்கும் எல்லாமும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கின்றதோ அவர்கள், இனி ஒரு விதி செய்வோம் என்று முடிவெடுக்க வேண்டும். இந்தக் கூட்டத்திற்கு வந்து திரும்புகின்ற உங்களை நாங்கள் அன்போடு கேட்டுக் கொள்வது, நாம் சிறியவர்களாகப் பத்துப் பேர் இதைப் செய்தால் போதுமா? என்று நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். கடந்த ஒரு மாதமாக இரண்டு மாதமாக நடந்து கொள்கின்ற இந்த முறையைப் பார்த்தால், தங்களுடைய இன உணர்வு என்று பேசினால் அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கின் றனர் எதிரிகள்.
இறந்து போனவர்களுக்கு அனுதாபம் சொல்வது குற்றமா?
ஆட்சியில் இருக்கின்றவர்கள் இறந்து போனவர்களுக்கு ஒரு அனுதாபம் சொன்னால்கூட, தமிழன் என்று சொன்னால் அதைக் கூட மிகப் பெரிய குற்றமாகக் காட்டி, ஆகவே அந்த ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று நம் இனத்தவர்கள் அல்லாதவர்கள் சொல்வது, அவர்களுக்குப் பின்னாலே மற்றவர்கள் செல்வது, சொல்வது இந்த இரண்டும் நடக்கின்றதென்று சொன்னால் (கைதட்டல்) எவ்வளவு காலத்திற்கு நாம் இதைப் பொறுத்துக் கொண்டிருப்பது?
பார்ப்பனப் பத்திரிகைகளைப் புறக்கணியுங்கள்!
எனவே முதலாவதாக, வந்திருக்கின்ற நண்பர்கள் ஒரு முடிவோடு திரும்புங்கள். குறைந்த பட்சம் நான் நேற்று வரையிலே வாங்கிக் கொண்டிருந்த பார்ப்பனப் பத்திரிகை எதையையும் இனிமேல் வாங்கமாட்டேன், புறக்கணிப்பேன் என்று சொல்லக்கூடிய உணர்வை முதலில் தொடங்குங்கள் (பலத்த கைதட்டல்) நாம் கொஞ்சம்பேர் பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்குவதை நிறுத்தி விட்டால் அவர்கள் இறங்கி வந்து விடுவார்களா? என்று தயவு செய்து நினைக்காதீர்கள்.
சிறு பொறிதான் பெரும் தீயாக மாறும்
சிறு பொறிதான் பெரும் தீயாக மாறும். நம் இன உணர்ச்சி பெருக வேண்டும். அதுமட் டுமல்ல, சிறு துளி பெரு வெள்ளமாக ஆகும். அது மட்டுமல்ல, எத்தனை பேருக்கு இந்த உணர்ச்சி வந்திருக்கிறது என்று காட்டக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.
எங்கு பார்த்தாலும் பார்ப்பனப்பத்திரி கைகளைப் புறக்கணிபோம்! என்ற ஒலி முழக்கங்களை நாடெங்கும் அதிர்வு அலைகளாக ஒலிக்கவேண்டும்.
கலைஞர் கொடுத்த டி.வி.யிலே பார்க்க வேண்டியதுதானே
என்ன பெரிய செய்தியை காலையில் அவர்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்? பாரக் ஒபாமா எத்தனை ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பதற்குப் பார்ப்பனப் பத்திரிகைகளைத் தான் பார்த்தாக வேண்டும் என்கிற அவசியம் என்ன இருக்கிறது! உங்களுக்குத்தான் கலைஞர் அவர்கள் இலவசமாகவே டி.வி. கொடுத்தி ருக்கின்றாரே அதைக் கொஞ்சம் திருப்பினாலே பார்த்துக்கொள்ளலாமே.
ஒரு பெரிய வரலாற்றுப் பேராசிரியர் சொன்ன செய்தி
அண்மையிலே ஒரு பெரிய வரலாற்றுப் பேராசிரியர். இன்னமும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அந்த வரலாற்றுப் பேராசிரியரை நான் பார்த்தேன். என்னங்க, நீங்கள் இவ்வளவு நீண்ட காலமாக 94 வயது வரையிலே வாழுகிறீர்களே அதன் சிறப்பு என்ன என்று கேள்வி கேட்டபொழுது அதற்கு அவர் பதில் சொன்னார். நான் கொஞ்ச நாட்களுக்கு முன்னாலேயே கூட இறந்திருப்பேன்.
நான் நீண்டகாலமாக வாழ்வதற்கு ஒரேஒரு இரகசியம்
ஆனால், நான் நீண்ட காலமாக வாழ்வதற்குரிய ஒரே ஒரு இரகசியத்தை சொல்லட்டுமா? என்று கேட்டார். அந்த வரலாற்றுப் பேராசிரியர், பத்திரிகைகளைப் படிப்பதை நிறுத்தி விட்டேன் என்று சொன்னார் (பலத்த கைதட்டல் - சிரிப்பு).
போர்க்களத்தில் முதல் களப்பலி உண்மைதான்
இது ஒன்றும் கற்பனை அல்ல. எதற்காக இதைச் சொல்லுகின்றோம் என்றால் பொதுவாக என்ன சொல்லுவார்கள்? in times of war tha first casuality is truth என்று சொல்லுவார் கள். போர்க்காலங்களில் முதலில் களப்பலியாவது உண்மைதான் என்று சொல்லுவார்கள்.
நூற்றுக்கு நூறு அனுபவிக்கவேண்டும்
ஆனால், நம்முடைய நாட்டிலே என்ன செய்கிறார்கள்? போர்க் காலமே தேவையில்லை இங்கு. அவனுக்குப் பிடிக்காத இந்த இலட்சியத்தில் இருந்து கொஞ்சம் மாறுபட்டிருக்கின்ற அவர்கள் நூற்றுக்கு நூறு அனுப விக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் - அதை எதிர்த்து சொல்லக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். திராவிடன் இதழில் மேலும் எழுதப்பட்டிருப்பதாவது:
பிராமணரல்லாத இந்துக்கள் வர வர...
பிராமணரல்லாத இந்துக்கள் வர, வர அவர்கள் செல்வாக்கு இழந்து, ஈனஸ்திதிக்கு இறங்கி வருவது நாளுக்கு நாள் பொறுக்க முடியாததாகி விட்டது. இந்தக் கொடிய நிலைமையினின்றும் தங்களை தப்புவித்துக் கொள்ளவும் (திராவிடன் பத்திரிகை ஏன் தொடங்கப்பட்டது. எதற்காகத் தொடங்கப் பட்டது? என்று சொல்லும்பொழுது தெளிவாகச் சொல்கிறார்கள்.)
அபிவிருத்தி அடையக்கூடிய வழிகளை..,
இனிமேலாயினும் தங்களை அபிவிருத்தி அடையக் கூடிய வழிகளைத் தேடிக் கொள்ளவும் வேண்டிய பிரயத்தனங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணமாவது மெல்ல மெல்ல அவர்களது உள்ளந்தன்னில் உதய மாய்க் கொண்டிருப்பது தம்மைத்தாம் காத்துக் கொள்வது தம்முடைய விடா முயற்சியினாலும், தளரா உழைப்பினாலும், தம்மைத்தாம் முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற நியாயான கோரிக்கையை பிராமணரல்லாத இந்துக்களின் மனதில் திடமாக வேரூன்றி பலமான நோக்கமாய் விளங்க ஆரம்பித்து விட்டது.
நீர்க்குமிழி - மின்னல் போல்
இவ்விதமான எண்ணம் கண் மூடித்தனமான ஆத்திரத்திலாவது, யோசனை இல்லாத, ஆவேச சக்தியினாலாவது உண்டான தன்று. நீர்க்குமிழி போலும், மின்னல் போலும், க்ஷணத்தில் தோன்றி க்ஷணத்தில் மறைந்து போகும் ஏற்றமில்லாத தோற்றமென்று இதனைக் கொள்ள எவ்வளவும் முடியாது. ஆர தீர யோசித்து
மிக நிதானமாகவும், வெகு சாவதான மாகவும் ஆரதீர யோசித்து (எவ்வளவு அழகாக எழுதுகிறார்கள் பாருங்கள். ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதுகின்றார்கள்) தென்னிந்தியர்கள் பெரும்ாலோர் கொண்ட ஆலோசனையின் முதிர்ச்சியினாலேயே, இவ் வகையான எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் உண்டாயிருக்க வேண்டுமென்று உறுதியாய் கொள்ளலாம்.
தென்னிந்திய தேசிய மகாஜனசபை
மேற்கூறியவைகள் காரணமாகத்தான் தென்னிந்திய தேசிய மகாஜன சபை என்ற ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்பதையும், அந்த சங்கத்தாராலேயே ஜஸ்டிஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகை நடத்தப்பட்டு வருகிறது என்பதையும், நம்மவர்கள் அநேகமாக அறிந்திருக்கலாம்.
எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்
பார்ப்பன பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்று கல் எறியுங்கள் என்று நாங்கள் சொல்ல வரவில்லை. அல்லது வன்முறையைத் தூண்டுகள் என்று நாம் சொல்ல வரவில்லை. அதற்குப் பதிலாக எரிவதை இழுத்தால் கொதிப்பது தானே அடங்கும் என்று தாய்மார்கள் சொல்லுகின்ற பதில். ஆகவேதான் ரொம்பத் தெளிவாக நாம் தீர்மானத்தை முன்னாலே வைத்துவிட்டு, விளக்கத்தை பின்னாலே வைக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.
----------------6-11-2008 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து...
---------------'விடுதலை" 12-11-2008
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உண்மையான தமிழ் ரத்தம் உடலில் ஓடுபவர்கள் எது நமக்குப் பெருமை எது நமக்கு இழிவு என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
ஓடிப்போன,பெண் குற்றம்,பொன் குற்றம்,கொலைக் குற்றம் என்ற பஞ்ச மஹா பாதகங்களில் பல் செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டுள்ளவர் சங்க்ராச்சார்ய சுவாமிகள்,ஜெகத்குரு என்றேல்லாம் எழுதப் படுகிறார்.
தமிழினத் தலைவர்கள் ஈ.வெ.ராமசாமி,காமராஜ்,அண்ணாதுரை
இவர்களுக்கு மட்டுமல்ல,தமிழர்களே இவ்வாறு பேசும் படி மூளைச் சாயம் பூசப்பட்டு விட்டார்கள்.
உங்கள் தாத்தாவையே உங்கள் கண்ணுக் கெதிரே"டேய் ராமா இதத் தூக்குடா" என்று சொன்ன சின்னப்
பொடியன் யார் என்று ஞாபகம் இல்லையா?இன்றும் அது இந்தப் பார்ப்பன் அடிமைத் தன்ம் பத்திரிக்கைகளில் தொடர அனுமதிக்கலாமா?
மானமும்,அறிவும் உள்ளவர்களாக
என் மக்கள் ஆகவேண்டும் என்று பாடு பட்டாரே அது தான் முக்கியம்,உங்கள் படிப்பும் பட்டங்களும் அல்ல.
தன் மானமும்,சுய மரியாதையும்,
பகுத்தறிவும் இருந்தால் கழுதை மலம்
துக்ளக்,தின மலம்,சிங்கள்க் கைக்கூலி
இந்து இவற்றைத் தொடாதீர்கள்.
தொட நேர்ந்தால் டெட்டால் போட்டுக் கழுவுங்கள்.
சரியாகச் சொன்னீர்கள் அய்யா.
பார்ப்பானுக்கு வக்காலது வாங்கும் சூத்திர முண்டங்கள் திருந்துமா?
நன்றி.
Post a Comment