Search This Blog

30.11.08

மரண சாசனம் தயாரித்துவிட்டு, இந்த மகத்தான போராட்டத்தில், ஈடுபட்டுவிட்டோம்!


மரண சாசனம்

திராவிடர் கழகத்திலுள்ள தோழர்கள் ஒவ்வொருவரும், தயாரித்துக் கொள்ள வேண்டிய மரண சாசனம் இது. வீழ்ச்சியுற்ற இனத்தை எழுச்சி பெறச் செய்துவிட்டோம்; எந்த விலை கொடுத்தேனும், விடுதலையைப் பெற்றுத் தீர வேண்டிய கட்டத்தில் வந்துவிட்டோம்.

வெட்டும் குத்தும், இனி நம்மை விரைந்து தேடிவரும்; வாழ்வுக்கும், சாவுக்கும், இடையே அமைந்துள்ள ஊஞ்சலிலேயே நாம் உலாவ வேண்டியவர்களாக இருப்போம். வைகைக் கரையிலே - சென்ற கிழமை நடந்த அமளி, நமக்கு அறிவுறுத்தும் பாடம் அதுதான்; நாம் இருக்கு மட்டும் நமது ஆதிக்கத்துக்கு ஆபத்துதான் என்பதை அய்யந்திரிபற அறிந்து கொண்ட வர்ணாஸ்ரமம், நாம் செத்தால் மட்டுமே, தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கேனும் ஜீவித்திருக்க முடியும் என்று நன்கு தெரிந்து கொண்டு, நம்மைக் கொல்லக் கோர நாட்டியம் செய்தது. நமது இரத்தத்தையும் கொஞ்சம் குடித்து ருசி பார்த்தது. நமது வளர்ச்சியின் அறிகுறி நமக்கு மட்டுமல்ல, பிராமண சேவா சங்கத்தாருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்களின் மகஜர், நமது வளர்ச்சிக்கு ஆரியம் தரும் நற்சாட்சிப் பத்திரம்.

எல்லாம் சரி, ஆனால், இத்தகைய அறப்போரில் சேதம் நேரிடுகிறதே. இரத்தம் வீணாக்கப்படுகிறதே என்று எண்ணுகிறார்கள் சிலர். அவர்களுக்கு ஒரு வார்த்தை! நாம் எடுத்துக் கொண்டுள்ள மகத்தான காரியத்தின் தன்மையை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.

யுகயுகமாக இருந்து வருவதாகக் கூறப்படும் ஏற்பாடுகளை நாம், திருத்தி அமைக்க விரும்புகிறோம். மமதை மலைக்கு வேட்டு வைக்கிறோம். நம்மீது சிறுசிறு துண்டுகள் சிதறி விழுந்து, மண்டையைப் பிளக்கின்றன என்றால், நாம் வைத்த வேட்டு மலையைப் பிளந்து வருகிறது என்று பொருள். மலையைப் பிளக்கும் காரியத்தில் இறங்கிவிட்டு, மலர் தலை மீது விழும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா? நம்மை நாமாகவே இந்தக் காரியத்துக்கு ஒப்படைத்து விட்டோம். உலகில் பல பாகங்களிலே, இதற்கு ஒப்பான காரியம் செய்யப் புகுந்தவர்கள் பட்டபாடுகள், இன்று பல்கலைக் கழகங்களின் பாடப் புத்தகங்களாகிவிட்டன. அன்று சாக்ரடீஸ் குடித்த விஷம், இன்று வரை, சாகா நிலையைச் சாக்ரடீசுக்குத் தந்து விட்டது. பழியையும் இழிவையும், எதிர்ப்பையும், ஆபத்தையும் தலை மீது ஏற்றுக் கொண்டு, பணி புரிந்து சென்று, அந்தப் பணியின் பலனைப் பின் சந்ததியார் அநுபவிக்கச் செய்யும் பரம்பரையில், நாம் சேர்ந்திருக்கிறோம். நமக்கு, இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும். ஆனால் நமது உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது!

கடு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டோர், காரிருட் சிறையில் ஆயுட்காலம் முழுதும் தள்ளப்பட்டோர், கல்லால் அடித்துத் துரத்தப்பட்டோர், கழுத்து நெரிக்கப்பட்டோர், கனலில் தள்ளப்பட்டோர், கண்ட துண்டமாக்கப்பட்டோர் நாட்டு மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டோர், நாதியற்றுப் போனோர் என்று இவ்விதமாகத்தான் இருக்கும் - சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள். நாம் அந்த இனம். அவர்களெல்லாம் இன்று, அறிஞர் உலகின் அணிமணிகளாயினர். நம்மையும், பின் சந்ததி மறவாது.


காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிய காலம், கட்டிப் போட்டு விட்டு வீட்டுக்குத் தீயிட்ட காலம், கிணற்றில் தள்ளிக் கல்லிட்ட காலம், கண்களைத் தோண்டி எடுத்த காலம், தலையைக் கொய்த காலம், தணலில் தள்ளிய காலம் - இவையெல்லாம் இருந்தன. சீர்திருத்தம் பேசியோர் இவைகளிலேதான் உழன்றனர். பெரும்பாலானவர்கள் சாகவில்லை; கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதாலேயே அவர்கள் இன்று சாகாதவராக உள்ளனர். எனவேதான், மரணசாசனம் தயாரித்துக் கொண்டு இந்த மகத்தான போராட்டத்திலே இறங்கவேண்டும் என்று கூறுகிறோம்.

சமூகத்தில் அடிப்படை மாறுதலை விரும்பும் நாம் கொல்லப்படக்கூடும் என்ற எண்ணத்திற்காக நாம் இப்பணி நமக்கேன் என்றிருந்துவிடினும் சாவு ஓய்வு எடுத்துக் கொள்ளாது. சாந்தம் பேசினாலும், இன்றைக்கிருப்பாரை நாளைக்கு இருப்பர் என்று எண்ணவோ திடமில்லை, அய்யோ! என்று தான் பதிகம் செவியில் ஒலிக்கும். செத்தால், செத்ததுதான்! ஆனால் கடமையைச் செய்கையில் கொல்லப்பட்டால், அது சாகா வரம் பெற்றதாகும்! நாம் வாழ்வோம், நமது உழைப்பின் பலனால் புது வாழ்வு பெறும் நமது பின் சந்ததியாரின் பேச்சில், பாட்டில், தொட்டிலருகே, பூந்தோட்டத்தருகே, கட்டிலருகே, பட்டி மண்டபத்திலே நாம் பேசப்படும். நமக்காகப் பணி புரிந்தனர் கொல்லப்பட்டனர் என்று அப்போது நாம் வாழ்ந்திருப்பதாகத்தான் பொருள். நமக்கென்ன, மரணம் நேரிடுகையில் மாளிகை என்னாகுமோ, மனோஹரிகள் என்ன ஆவரோ, தோட்டம் துரவு என்ன கதியோ, தோடு தொங்கட்டம் யாருக்குப் போகுமோ, வாணிபம் குறையுமோ, வட்டித் தொகை கெடுமோ என்ற எண்ணம் குறையப் போகிறதோ? இல்லை! ஆரியமே! என்னைக் கொன்றுவிட்டாய்! நான் உயிருடன் இருந்தால் உனக்கு ஆபத்து என்று தெரிந்து இதனைச் செய்தாய். திருப்தி அடையாதே! திரும்பிப்பார்! பிணமாகாது வேறு பலர் உளர் என்று கூறிக் கொண்டேதான் இறப்போம். எனவே, மரண சாசனம் தயாரித்துவிடுங்கள்!

மதுரைக்கு மறுகிழமை, குடந்தையில் கூடினர் நமது தோழர்கள், பல ஆயிரக்கணக்கிலே. மதுரையை விட இங்கு தாய்மார்கள் எராளம். இரு நாள் மாநாடுகள். இரு இரவும் நாடகங்கள்;எழுச்சியின் அளவும் தன்மையும், மதுரைச் சம்பவம், கனவில் கண்ட காட்சியோ என்று எண்ணக்கூடிய வகையினதாக இருந்தது. இதன் பொருள் என்ன? மதுரைச் சம்பவத்தால், மகத்தான நமது இயக்கம் மங்காது என்பதை நமது தோழர்கள் காட்டிவிட்டனர் என்றே பொருள். ஆர்வமும், ஆவேச உணர்ச்சியும் கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிலர் மதுரைத் தழும்புகளுடன் அங்கு கூடினர் - பணிபுரியத் தயார் என்று முழக்கமிட்டனர். மதுரை ஓய்ந்துவிட்டது. நமது தோழர்கள் மீது கல் வீசியர்களின் கரத்தின் வலி இன்னும் குறைந்திராது. ஆனால், கல்லடியும் கத்திக்குத்தும் பெற்ற நமது தோழர்கள், புண் ஆறா முன்பே என்றும் போலவே பணிபுரியக் குடந்தையில் கூடினர். ஆம்! மரணசாசனம் தயாரித்து விட்டே இந்த மகத்தான காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வீரத்தை, தியாக உணர்ச்சியை, உறுதியை நாம் பாராட்டுகிறோம்! அவர்களின் வீரத்துக்குத் தலை வணங்குகிறோம். மணலிலே இரத்தம் சிந்திய தோழர்களே! உங்கள் இரத்தம் வீணுக்குச் சிந்தப்படவில்லை. அந்தச் சேதி எண்ணற்ற தமிழரின் இரத்தத்தில் கொதிப்பேற்றி இருக்கிறது. வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம் காணமுடியாத மனப்பான்மையைத் தந்துவிட்டது. நாம் கொல்லப்படக்கூடும், ஆகையினால் இருக்கும் இன்றே இன்னும் கொஞ்சம் இன எழுச்சிப் பணிபுரிவோம் என்ற எண்ணத்தை ஊட்டிவிட்டது. கொஞ்சநஞ்சம் நம்மவருக்கு இருந்துவந்த குடும்பப்பாசம் பந்தம் ஆகியவைகளையும் நாட்டு மொழிக் கலாச்சாரத்தைக் காக்க ஏற்பட்டுள்ள அறப்போர் போக்கடித்து விட்டது. இனி இருப்பது நாம் நமது தொண்டு, அதைக் கண்டு துடி துடிக்கும் ஆரியம். அது ஏவும் அஸ்திரம், அது பாயுமுன் பணிபுரிய வேண்டிய அவசரமான நிலைமை - இவ்வளவே! நாம், மரண சாசனம் தயாரித்துவிட்டு, இந்த மகத்தான போராட்டத்தில், ஈடுபட்டுவிட்டோம்! எனவே, நமது இலட்சியம் - குறிக்கோள் எப்படியும் வெற்றி பெற்றே தீருமென்பது உறுதி!

--------------பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி-1

6 comments:

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொரிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

என்ன,மரண சாசனம் தயாரித்து விட்டு தான் இந்த ஜாதி வெறி பிடித்த முண்டம் பாசறையை விட்டு வெளியேறி ஓட்டு பொறிக்கியதா?பகுத்தறிவில்லாமல் எட்டப்பன் வேலை செய்த இந்த முண்டத்தையா பாசறை நாய்கள் போற்றி குரைக்கின்றன.நல்லா குரைங்கய்யா.

பாலா

தமிழ் ஓவியா said...

அட முட்டாளே உனக்கு என்ன உன் பார்ப்பன பரம்பரைக்கே முன்புத்தியும் கிடையாது பின் புத்தியும் கிடையாது .

அண்னா அவ்ர்கள் ஆட்சிக்கு வந்தாலும் பெரியாரை மிகவும் மத்திது வந்தார். பெரியர்ன் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கே ஆட்சிக்கு வந்தோம் என்று பேசியுள்ளார். இது குறித்து கி.வீரமணி அவர்கள் தரும் தகவல் இதோ:

"திண்டுக்கல்லில் திராவிடர் தொழிலாளர் கழக போக்குவரத்து பேரவை சார்பில் 15-11-2008 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி:



உங்கள் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காகத் தான் நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். முடியாவிட்டால் நாளைக்கே இந்தப் பதவியைத் துறந்துவிட்டு உங்கள் பின்னாலே வருவதற்குத் தயார். நீங்கள் சொல்லுங்கள் உங்களுடன் வருவதற்கு நாங்கள் தயார் என்று அண்ணா அவர்கள் அய்யா அவர்களை மேடையிலே வைத்துக்கொண்டு தருமபுரியிலே - முதலமைச்சராக இருக்கின்ற பொழுது கேட்கின்றார்.

அதற்கடுத்து தந்தை பெரியார் பேச வருகிறார். தந்தை பெரியார் சொன்னார்.



ஒரு தந்தைக்குரிய கண்டிப்போடு பெரியார் சொன்னார். ஒரு தலைவருக்குரிய கட்டுப்பாட்டோடு சொன்னார் - ரொம்பத் தெளிவாக.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் என்று மரியாதையோடு சொல்லி விட்டு அய்யா அவர்கள் சொன்னார்.

மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா அவர்கள் ரொம்பச்சிறப்பாகச் சொல்லி என்னுடைய இலட்சியத்தை நிறைவேற்ற என் பின்னாலே வருவதா?



அல்லது இந்த ஆட்சியிலே இருப்பதா? என்பதை நீங்களே சொல்லுங்கள் என்று இங்கு அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

நான் சொல்லுகிறேன். உங்களுடைய எல்லை - அதிகாரம் எந்த அளவுக்கு மாநில ஆட்சியிலே உள்ளது என்பதை புரியாதவன் அல்ல. நான் இப்பொழுது சொல்லுகின்றேன்.

உங்களை மக்கள் அய்ந்தாண்டுகளுக்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்று சொன்னால் அதிலே ஒரு நாள் ஒரு மணி நேரம் கூட நீங்கள் குறைவாக ஆட்சியை விட்டு விடக் கூடாது.

அண்ணா பேசிய உரை இருக்கிறது

ஆட்சியில் இருந்து செயல்பட வேண்டும் என்று அண்ணா அவர்களை வைத்துக் கொண்டு அய்யா அவர்கள் சொன்னார். இது இரகசியமல்ல. பொதுக் கூட்ட உரை.

அண்ணா அவர்களுடைய உரை இன்னமும் ஒலி நாடாவாக இருக்கிறது.

அண்னா சொன்னது போல் பெரியாரின் கொள்கைகளை சட்டமாக ஆக்கினார்.

பார்ப்பனக்கூட்டத்திற்கு வேண்டுமானானால் காட்டிக் கொடுத்து கூட்டிக்கொடுத்துப் பிழைக்கும் செயல் உவப்பாக இருக்கும்.

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொரிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,


பூ இது என்ன பெரிய விஷயம்?முண்டம் ஓவியா, உன் தலைவன் மானமிகு, புரட்சி தலைவியின் காலில் விழுந்து பிழைப்பை நடத்தியவன் தானே?ஒரு சில ஆயிரம் ரூபாய்காக பெற்ற தாயையே அடகு வைக்கத் தயங்காத பொறிக்கி நாய் தானே அவன்.பிரியாணிக்காக தன் மானத்தை விற்று,மானமிகுவிற்கு விளக்கு பிடிக்கும் கேவலமான இழி பிறவிகள் தானே உன்னைப் போன்ற பாசறை கருப்பு சட்டை ஜாதி வெறி பிடித்த நாய்கள்.இன்னும் வெறியோடு குரைங்க.உறங்கிக் கொண்டிருக்கும் எம் தமிழ் மக்கள் எழும் காலம் நெருங்கி விட்டது;உன்னை சோமாலியாவிற்கு துரத்தும் நாள் சீக்கிரம் வரத் தான் போகிறது.அது வரை ஆடு.

பாலா

தமிழ் ஓவியா said...

மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்ட்ரரைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறார்:-

“கல்வியறிவுள்ள பிராமணர்களை வணங்குவது தான் மன்னனுடைய முதற் கடமை. ஒருவன் தன் உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றுவது போலவே பிராமணர்களைக் காப்பாற்ற வேண்டும். தன் பெற்றோர்களை வணங்கி மரியாதை செய்வது போலவே பிராமணர்களை வணங்கி மரியாதை செய்ய வேண்டும். பிராமணர்கள் திருப்தியோடிருந்தால் நாடு முழுவதுமே செழிப்போடிருக்கும்; பிராமணர்கள் கோபங் கொண்டாலோ, அதிருப்திப்பட்டாலோ, நாட்டிலுள்ள யாவுமே அழிந்து போய்விடும். பிராமணர்கள் நினைத்தால் கடவுளை கடவுளற்றதாகச் செய்து விடலாம்; கடவுளற்றதைக் கடவுளாக ஆக்கி விடலாம். அவர்களால் புகழப்படுகிறவர்கள் சிறந்து வாழ்வார்கள்; இகழப்படுகிறவர்கள் துன்பத்துக்காளாவார்கள்.”

என்ன அருமையான உண்மை, பார்த்தீர்களா? மகாபாரதம் ஓர் முழுக் கற்பனை. இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுவது ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்! ஆதலால் தான் கற்பனை! இதை முதன்முதல் வடமொழியில் எழுதியவர் வியாசர். இந்நூல் எழுதப்பட்டே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். ஆனால், மேலே கண்ட வாக்கியங்கள் இன்றைக்கும் உண்மை. 100-க்கு 100 பங்கு உண்மை! உலகில் நிலைத்துவிட்ட அனுபவ உண்மைகளில் ‘பீஷ்மர்’ என்பவர் பெயரால் கூறப்படுகின்ற இந்தப் பொன்மொழியும் ஒன்றாகும். பார்ப்பனர் நினைத்தால், தங்களுக்குப் பயன்படும் மனிதனாகத் தோன்றினால் ஒரு சாதாரண நாலாந்தரப் போக்கிரியை ‘கிருஷ்ண பரமாத்மா’வாக ஆக்கியது போல், ஒரு சாதாரண மனிதனை ‘மகாத்மா’ ஆக்கி விடுவார்கள்; அதே ஆள் தங்களுக்கு இனிப் பயன்பட மாட்டான் என்று கருதினால் உடனே அதே ‘மகாத்மாவை’ சுட்டுக் கொன்று விடுவார்கள்! செத்த மகிழ்ச்சிக்காக மிட்டாய் வழங்கிக் குதூகலப்படுவார்கள்! திராவிட நரகாசூரனைக் கொலை செய்து அந்த நாளைக் கொண்டாட்ட (தீபாவளி) நாளாகச் செய்துவிட வில்லையா? அதுபோலத் தான். இப்போது இதைப் படியுங்கள்; இது காந்தியார் கொள்கை!

“நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மட்டும் அதைப் போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமையிருந்தது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக (வைசியனான) எனக்குத் தோன்றவில்லை... இந்து மதமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில் ஆன்மீகப் புனர் வாழ்வுக்குச் சின்னமான இந்தப் பூணூலை அணிந்து கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டு என்று இந்தக்களால் காட்ட முடியுமா என்று சந்தேகப்படுகிறேன். இந்து மதத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு-தாழ்வு என்ற வேற்றுமைகளெல்லாம் நீங்கி, அதில் இப்போது மலிந்து கிடக்கின்ற பல்வேறு தீமைகளும் வேஷங்களும் ஒழிந்த பிறகு தான் இந்துக்களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும். ஆதலால் பூணூல் அணிந்து கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது” (பக்கம் 397 - சத்திய சோதனை-காந்தியார் சுயசரிதை-மொழிபெயர்ப்பு ரா.வெங்கட்ராஜலு).

படித்தீர்களா? இப்போது சொல்லுங்கள். பூணூல் அணிவதை வெறுத்த காந்தியார் மராத்திப் பார்ப்பான் (கோட்சே) கையினால் சுட்டுக் கொல்லப்பட்டதில் தவறென்ன? வியப்பென்ன? அதிர்ச்சி என்ன? பீஷ்மரின் போதனையை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்! ஆம்! பார்ப்பனரை எதிரிகளாக்கிக் கொள்கிறவனுக்கு இராவணன் மரணம் தான்; இரணியன் முடிவுதான்; நரகாசுரன் சாவுதான்; காந்தியார் கதி தான்! சிவாஜியின் அரசாங்கம் அழிந்தது யாரால்? மராட்டியர் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும்.

சிவாஜி பார்ப்பன சூழ்நிலையிலேயே வளர்ந்தார். அரசாங்கத்திலும் ராஜ்யத்திலும் பார்ப்பனரே பெருகிக் கிடந்தனர். அவர் மன்னர் பதவி ஏற்றபோது இராணுவத்தளபதியைத் தவிர்த்து அவரது மந்திரிகள் அனைவரும் போர் வீரனான சிவாஜியை ‘க்ஷத்திரியன்’ ஆக்கினால் தான் அரசனாக முடியும் என்று கூறி, கற்பனைப் பரம்பரைக் கதை ஒன்றைத் திரித்து, அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். நாடு முழுவதிலிருந்தும் 50,000 பார்ப்பனர் மனைவி மக்களோடு தருவிக்கப்பட்டு பவுனாகவும் உணவாகவும் வழங்கப்பட்டனர். தலைமைப் புரோகிதனான கங்குபட்டனுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபா பரிசு! பட்டஞ்சூட்டு விழாவின் மொத்தச் செலவு ஏழு கோடி ரூபாவாம்! இவ்வளவு பச்சைப் பார்ப்பன சிவாஜியின் அரசாங்கம்கூட நிலைத்திருக்க முடியவில்லை. அது ஒரு ‘இராமாயணம்’.

மதத் துறையைத்தான் எடுத்துக் கொள்வோம். புத்தர் நெறி (பவுத்தம்) இந்து மதத்தை ஒழித்து விடும் என்பதைக் கண்ட பார்ப்பனர் பவுத்த சங்கத்திற்குள்ளேயே நுழைந்தனர். புத்தர் ஏமாந்தார். என்ன ஆயிற்று? அவர் வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பு அவரது குழந்தையை (புத்த நெறியை)க் கடித்து நஞ்சை ஏற்றிக் கொன்றுவிட்டது. இன்று உலகத்திலுள்ள பவுத்தர் எண்ணிக்கை 15 கோடி! இதில் புத்தர் பிறந்த (இந்தியா) நாட்டிலுள்ளவர்கள் 2 (இரண்டே) லட்சம்! அதாவது 750-இல் ஒரு பங்குதான், இந்தியாவில்! போதுமா? இன்னும் வேண்டுமா?

நாகசாகித் தீவில் விழுந்த அணுகுண்டின் நச்சுக் காற்று இருபதாண்டுகளுக்குப் பிறகுகூட இன்றும் அங்குள்ள மக்களுள் ஆபத்தான நோய்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறதாம்! இந்தியாவில் 2,000 ஆண்டுகட்கு முன்பு விழுந்த ஆரிய அணுகுண்டின் நச்சுக் காற்றுத்தான் இன்றுள்ள சாதி! இன்றுள்ள நெற்றிக்கோடு! இன்றுள்ள சமஸ்கிருதம்! இன்றுள்ள கோவில்! இன்றுள்ள புராண-இதிகாசம்! இன்றுள்ள ‘பிராமண பக்தி!’ 'இந்து சமுதாயம்' என்பது அக்கிரகாரத்தின் கைப்பிடிக்குள் அடங்கியிருக்கின்ற மிளகாய்ப்பொடி! எதிர்த்தால் கண் போச்சு! எந்த அரசாங்கம் ஆரியக் கலாச்சாரத்தை - அதாவது ஆதிக்கத்தை - ஏற்றுக் கொள்கிறதோ, அந்த அரசாங்கத்தைத் தான் பார்ப்பன (நச்சுக்காற்று) சக்தி வாழவிடும்! இல்லையேல், அரசாங்க நிர்வாகத்துக்குள் புகுந்தே அழிந்துவிடும்! மூவேந்தர் ஆட்சி அழிந்ததும் இவ்வாறே.

மந்திரிகள், உயர்தர அதிகாரிகள் போன்ற ஆதிக்க நாற்காலிகளில் அக்கிரகார சக்திக்கு இடமில்லையானால் வெளிநாட்டானை அழைத்து வந்தாவது அந்த ஆட்சியை அழித்தே தீரும். 31 ஆண்டுகள் இந்நாட்டில் பாதிரியாக இருந்து, நாடு முழுதும் சுற்றிய ‘அபேடுபாய்’ என்ற பிரெஞ்சுப் பாதிரியார் 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தம் நூலில், “பார்ப்பனர் வடிகட்டிய அயோக்கியர்கள்; இரட்டை நாக்குப் படைத்தவர்கள்; எந்த ஈனச் செயலுக்கும் துணிந்தவர்கள்” என்றெல்லாம் அக்கிரகாரத்தின் மீது ‘லட்சார்ச்சனை’ செய்தாரே! அவருக்கு அன்றிருந்த துணிச்சலில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய ‘வீரத் தமிழனுக்கு’ இல்லையே!

இப்போது கூறுங்கள், பார்ப்பனரை வெறுப்பது சரியா? தப்பா?


----"சுயமரியாதை" இதழ் 1961-ல் வெளியிட்ட பொங்கல் மலரில் குத்தூசி குருசாமி எழுதிய கட்டுரை"

பார்ப்பன பாலாக்களின் சுயரூபம் இப்போது தெரிகிறதா?.

நாகர்கம் என்னவென்று தெரியாத இவர்களை வெறுத்து ஒதுக்க வேண்டும்

Thamizhan said...

கூழைக் கும்பிடு வெளியே சொல்லிக் கொல்(ள்)கிறது.மற்ற சோமாரி,பொய்மலம் மறைத்து நாகரீகமாக எழுதுகிறது,அவ்வளவுதான் வித்தியாசம் என்பதைத் தமிழ் உடன் பிறப்புக்கள் உணர்தல் நல்லது!

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்கள்,திராவிட முண்டங்கள்,அரை டிக்கட்டுக்கள் தமிழ் ஓவியா அய்யா மற்றும் தமிழன் அய்யாமார்களே,

ஏண்டா பொறிக்கிகளா,உங்களுக்கு நாகரிகமாக பின்னூட்டம் போடத் தெரியாதா? ஏன்,உங்கள் தலைவன் மானமிகு,மஞ்ச துண்டு,தாடிக்காரன்,அண்ணாதுரை போல கீழ்த்தரமாக,காட்டுமிராண்டித்தனமாக,ஜாதி வெறியோட தமிழ் நாட்டையே அழிக்கறீங்க?உங்களைப் போன்றவர்களை பெத்துப் போட்ட முண்டங்கள் மனித ஜன்மங்களாக இருக்க முடியாது.வெறி ஓநாய்களாகத் தான் இருக்க வேண்டும்.ஆடுங்கடா ஆடுங்க.பாக்காலாம் இன்னும் எவ்வளவு நாள் தமிழனை ஏமற்றி பிழைப்பு நடத்துவீர்கள் என்று?தமிழன் இளிச்ச வாயன் தான் உங்களிடம் ஆண்டாண்டு காலமாக ஏமாறுவதற்கு ஆனாலும் அவ்வளவு இளிச்சவாயன் அல்ல இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஏமாறுவதற்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பாலா