பார்ப்பனர்களை பகிஷ்கரிக்கும் நிலை!
தமிழ்நாட்டின் கலை உலகினர், திரைப்பட உலகினர் அனைவரும் ஒன்று திரண்டு, இலங்கையில் ஈழத் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகத் தம் கண்டனத்தை வெளிப்படுத்தி யிருக்கின்றனர். இராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் என்றால், தலைநகரில் பட்டினிப் போராட்டம் நடத்தியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசு திரட்டும் - ஈழத் தமிழர்களுக் கான நிவாரண நிதியும் கணிசமான அளவுக்கு அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அநேகமாக அனைத்துத் தமிழர்களும், சிங்களப் பேரினவாத அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தும் போரை நிறுத்தவேண்டும் என்பதில் ஒரே கருத்து உடையவர்களாக இருக்கிறார்கள். இந்திய அரசு இதனைப் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் என்பதுதான் தமிழர்களின் ஏகமனதான எதிர்பார்ப்பாகும்.
இதில் சுருதி பேதம் செய்வது என்பது - என்றென்றும் தமிழர்களுக்கு எதிராகவே இருந்துவரும் பார்ப்பனர்களும், அவர்களின் முப்படைகளான ஊடகங்களுமேதான்.
மாலினி பார்த்தசாரதி போன்ற கட்டுரையாளர்கள் மட்டுமல்ல - தமிழர்கள்மீது சேற்றைவாரி இறைப்பதற்கென்றே தயார்படுத்தி வைத்துள்ள சேற்றுக் குட்டையான ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் தங்களின் சித்து வேலைகளைச் செய்து காட்டிக்கொண்டே இருக்கின்றன பார்ப்பன ஏடுகள்.
1. தமிழர்கள் மனிதச் சங்கிலி பேரணி நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது, பட்டினிப் போராட்டங்களை நடத்துவது எல்லாம் இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிடுவது என்பது அவர்கள் வைக்கும் குற்றச்சாற்று.
அப்படியானால் உலகில் எந்த நாட்டிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களை எதிர்த்துக் குரல் கொடுப்பது குற்றம்தானா? இது குற்றம் என்றால், இதனை இந்தியா செய்ததில்லையா?
பாலஸ்தீனப் பிரச்சினைபற்றி இந்தியா பேசலாமா? ஈராக் பிரச்சினைபற்றி கருத்துக் கூறலாமா? ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதுபற்றி உதட்டை அசைக்கலாமா?
ஒரிசாவில் கிறித்துவர்கள் பாதிக்கப்பட்டது குறித்து வாடிகன் போப் பதறிப் போய் வேண்டுகோள் விடுப்பதுகூட குற்றமாகி விடுமே!
இலங்கையில் ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இதற்குமுன் இந்தியா தலையிட்டது கிடையாதா? அப்படியானால், இந்தியப் படைகள் (IPKF) எதற்காக ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டன? ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏன் ஏற்பட்டது?
ஈழத் தமிழர்களைப் பாதிக்கச் செய்யும் செயல்பாடுகளில் (இராணுவ உதவி உள்பட) இந்தியா இலங்கைக்கு உதவிகரமாக இருந்தால், அது இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட்டது ஆகாது.
இலங்கையில் தமிழர்களைப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற வகையில் குரல் கொடுத்தாலோ, போராட்டம் நடத்தினாலோ அது இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட்டதாகிவிடும்.
மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்று மனோன்மணியம் ஆசிரியர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை சொன்ன கருத்துதான் நம் முன் புன்னகைக்கிறது.
2. பாதிப்புக்கு ஆளாகும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது என்பது குறுகியவாதம் (Chauvinism) என்பது எவ்வளவு பெரிய தலைகீழ் புரட்டு.
இலங்கையில் சிறுபான்மை மக்களை ஒரு அரசே முன்னின்று முப்படைகளைக் கொண்டு தாக்கி அழிப்பது குறுமதியல்லவாம்!
மக்களை அழிக்காதே என்று மனிதாபிமான அடிப்படையில் குரல் கொடுப்பது என்பதுதான் குறுகிய புத்தியாம். பார்ப்பனர்களின் அகராதி எவ்வளவு அருவருப்பானது - மனிதத்தன்மை யற்றது என்பதற்கு இது ஒன்று போதாதா?
3. புலிகளோடுதான் சண்டை போடுகிறார்கள் - தமிழர்களுக்கு எதிராக அல்ல என்ற ஒரு பிரச்சாரத்தையும் பார்ப்பனர்கள் செய்து வருகின்றனர்.
அப்படியானால், மருத்துவமனைகள்மீதும், பள்ளிகள்மீதும், சரணடைந்த வழிபாட்டுத் தலங்கள்மீதும் குண்டுமாரி பொழிந்து வருகின்றனரே - அதுகூட புலிகள் எதிர்ப்பு நடவடிக்கைகள்தானா?
4. இலங்கையோ ஏழை நாடு; அப்படியிருக்கும்போது தமிழக மீனவர்கள் அவர்களின் பகுதிக்குப் போய் மீன் பிடிப்பது - பிச்சைக்காரர்கள் குடிசைக்குள் நுழைந்து திருடுவது போன்றது என்று ஒரு பார்ப்பன ஏட்டில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் ஒருவர் எழுதியது இடம் பெற்றுள்ளது என்றால், இந்தப் பார்ப்பனர்களின் எட்டப்பன் வேலையைத் தெரிந்துகொள்ளலாமே!
இந்த நிலை நீடித்தால், தமிழர்களே பார்ப்பனர்களைப் பகிஷ்காரம் செய்யுங்கள்! என்று கூறும் நிலைதானே ஏற்படும்?
-------------------------"விடுதலை" தலையங்கம் - 3-11-2008
Search This Blog
3.11.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment