Search This Blog
1.2.09
வேதகாலம் திரும்பவேண்டும் என்று எதிர்பார்க்கும் பார்ப்பனர்கள்
வேதகாலம் திரும்பவேண்டும் என்று எதிர்பார்க்கும் பார்ப்பனர்கள்
கேரவன் இதழ் படப்பிடிப்பு: (15.6.1980)
இவ்வாண்டு (1980) மே மாத மத்தியில் சண்டிகாரின் பார்ப்பனர்கள், தாழ்த்தப்பட்டோருக்கு அரசு அலுவல்களில் இட ஒதுக்கீடு கொடுப்பதை மனதிற்கொண்டு ஒரு கூட்டத்தினைக் கூட்டினார்கள். அது தங்களின் தெய்வீகத் தன்மையினையும், உயர் சாதித்தன்மை யினையும், குறிப்பாக தங்களின் பொருளாதார நிலையினையும் ஆராயவும் கூடியது.
விநோதமாய், பார்ப்பனர்கள் தங்களின் பிறப்புரிமைகள் என்றழைக்கப்பட்ட உயர்சாதித்தன்மை, பூசாரித்தனம் (புரோகிதத்தனம்), ஆச்சாரம், முழு உரிமைகள் (Monopoly) பொருளாதாரச்செழிப்பு, மற்றும் அனைத்துச் செல்வங்கட்கும், செழிப்பிற்கும் தெய்வீக உரிமைகள் (Divine Rights) இவைகள் யாவும் சிதைந்து அழிந்து ஒழிந்துவிடாமல் பாதுகாத்து வந்துள்ள இவர்கள் இன்னும் தங்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரியுள்ளனர்.
மண்ணின் அனைத்தையும் அசையும் - அசையா, உடலைச் சார்ந்த - சாராத அனைத்தையும் கோரி அல்லது பிடுங்கிக் கொண்ட பண்டைய பார்ப்பன மரபிற்கும், இன்றுள்ள பார்ப்பனர்கட்கும் இம்மியளவேனும் வித்தியாசம் இல்லாதிருக்கின்றனர்.
இந்த பார்ப்பனர்களும் மற்றும் உயர்சாதி இந்துக்களும் நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து அனுபவித்து வந்த பொருளாதார மற்றும் அனைத்து லாபங்களைப் பற்றியும் கருத்தறிய நாம் வரலாற்று ஏடுகளைச் சற்று சுருக்கமாய் ஆராய்வோம்.
வேதமுற்காலம் (Prevedic Period) பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி சிந்து சமவெளி நாகரிகம் என்பது கி.மு.6000க்கும் கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலமாகும்.
வேதகாலம் (Vedic Period) மிகப் பெரும்பாலான சரித்திர ஆசிரியர்கள் இக்காலத்தினை கி.மு. 2000 க்கும் கி.மு. 800 க்கும் இடைப்பட்டதாய் இருக்குமெனக் குறிப்பிடுகின்றனர்.
ஆரியம் இந்நாட்டினுள் புகுந்த பின்னர் கி.மு. 200இல் அதாவது சுமார் 4000 ஆண்டுகட்கு முன் சாதி முறைகள் ஒரு விரைப்பு நிலை பெற்றதுடன் பார்ப்பனர்கள்தாம் மிக உயர்ந்தவர்கள் என்ற நிலை ஏற்பட்டது. இப்படி இவர்கள் இருப்பதற்கான ஒப்புதலை அனேக ஸ்தோத்திரங்கள், விதிகள் உள்ளடங்கிய ரிக்வேதம் அளித்துள்ளது.
இந்த அகந்தை பிடித்த விரோதிகளான பார்ப்பனர்கள், இந்திய மண்ணின் மைந்தர்களை அடக்கி, அமுக்கிப் பிழிந்து, அடிமையாக்கி அவர்களை அசுரர்கள் என்றும், தாசர்கள் என்றும் பிரிவுபடுத்தி அதன் பின்னாலே சூத்திரர்கள் என்றும் புற சாதியினர் என்றும் எப்போதுமே அழைக்க அவர்கட்கு மேல் விலாசமிட்டனர்.
இந்தியாவினுட் புகுந்த ஆரியக்கும்பலின் தலைவனான இந்திரன் பிற்காலத்தில் கடவுளாக உயர்த்தப் பட்டு அவன் மூலம் சூத்திரர்களின் செல்வங்களைக் கவர்ந்தனர் என்பதுதான் ரிக்வேதத்தின் (1-12) சுருக்கமாகும்.
சாதிமுறைமை என்ற பெரும் சைன்யத்துடன், வேதங்களின் சமூக, மத மற்றும் அரசியல் போராதரவுடன் பார்ப்பனர்கள் பூமியின் அனைத்து நல்ல செல்வங்களையும் சொந்தம் கொண்டாடியும், அனுபவித்தும் வந்தனர். இவ்வாறாக அவர்கள் வெகு ஆடம்பர (affluent) வாழ்க்கையினை நடத்தினர்.
நான்கு வேதங்கட்குப் பின்னரும், வேத இலக்கியங்கள் சாதி முறையினையும், பார்ப்பன உயர்ச்சியினையும் ஏற்படுத்தியது மட்டு மன்றி இந்த பார்ப்பனர்கள் எசமானர்கள் என்றும், கடவுளர்களையும், மூவுலகினையும் போஷிப்பவர்கள் என்றும் பறை சாற்றிக் கொண்டனர்.
(அதர்வண வேதம் 5-4-19)
ஓ இந்திரா சோமரசம் உன்னைக் களிப்பூட்டக் கடவது. ஓ! கடவுளே செல்வந்தராக்க எங்களை வாழ்த்து. பார்ப்பன எதிரிகளை அழித்துவிடு.
(சாமவேதம் 3-1-1)
ஓ அக்கினியே! செல்வத்தை எங்கட்கு தா . . . எங்களின் விரோதிகளின் அத்தனை தான்யங்களையும் தா.
ஓ அக்கினி, வாயு, சூரியன்! . . . எல்லோரினும் நாங்களே செல்வந் தர்கள் என்றழைக்கப்பட எங்கட்டு அனைத்து செல்வங்களையும் கொடு.
(யஜுர் வேதம் 1-7 மற்றும் 1- 8)
இதிகாச காலம் (Epic age) வேத காலத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாச காலத்தினை பொற்காலம் என்று பல இந்துக்களினால் போற்றப்படு கிறது. ஆனால் கீழ்ச் சாதியினர்க்கு ஒரு இருண்ட காலமாய் (Dark age) பார்ப்பன ஏகாதிபத்தியத்தின் காலமாய் கருதப்படுகிறது.
ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் (Events) நடந்த காலத்தின் மீது வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கள் வெகுவாய் வேறுபடுகின்றன.
ஆனால் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் கி.மு.2500 வாக்கில் நடந்திருக்கலாம். இந்த ராமாயணத்தின் எழுத்துப் பிரதிகளின் தோற்றம் கி.மு. 500 க்கும் கி.மு. 200 க்கும் இடைப்பட்ட காலமாய் இருக்கலாம்.
மகாபாரதத்தைப் பொருத்த மட்டில், இப்படி ஒரு கதை நிகழ்ந்திருக்குமேயானால் அது கி.மு. 2000 இல் இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இதனுடைய எழுத்துப் பிரதிகள் கி.மு. 400 - கி.பி. 400 இலும், கீதையின் ஒரு பாகம் கி.மு. 2-இல் தோன்றியிருக்கலாம் என எண்ணப்படுகிறது.
ராமாயணம், மகாபாரதம், மற்றும் கீதை இவைகளின் நிகழ்ச்சிகள் நடந்ததாய் கருதப்படும் காலத்திற்கும், அந் நிகழ்ச்சிகள் எழுத்து களாய் வெளியானதற்கும் இடையில் பல நூற்றாண்டுகள் கால இடைவெளியிருப்பதை வைத்து ஆராய்ந்தால் என்ன உறுதி அல்லது உண்மை அந்த எழுத்துகளின் மீது தரப்படுகிறது என்பது தனி நபரின் பார்வையைப் பொறுத்தது.
அனைத்து இந்து மத நுல்களிலும், இந்து இலக்கியங்களிலும், சமூக - பொருளாதார - மற்றும் மதச்சார்புடையவைகள் அனைத்துமே பார்ப்பனர்களால்தான் நிறைவு செய்யப்படுவதாய் கூறப்பட்டுள்ளது.
சாதிமுறைமைக்கு ஒரு தெய்வீகத் தொடர்பினைக் கொடுத்தது கீதை. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் கீதையின் ஒரு பகுதி கண்டு பிடிக்கப்பட்டு சூத்திரர்கட்கும், புறச்சாதியினர்க்கும் ஒரு இறுதி மரண அடியினைக் கொடுத்தது. கிருஷ்ணன் என்பவன் கடவுளாய் கற்பிக்கப் பட்டு, சாதிகளையும் சூத்திரர்களையும் கற்பித்து, அந்த சூத்திரர்களே மற்றைய மூன்று சாதியினர்க்கும் கேள்வி முறையற்ற சேவகம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்றும் கற்பிக்கப்பட்டது. கர்மம், மறுபிறவி போன்ற பயமுறுத்தல்களால் கீதை சூத்திரர்களை அமுக்கியது.
இந்த நெடிய வேத - இதிகாச இருட்காலத்தில் சூத்திரர்கள் மிகவும் பராரிகளாய் வைக்கப்பட்டனர். இவர்களின் உடமைகள் எல்லாம் மட்பாண்டங்களும், தூக்கி யெறியப்பட்ட கந்தல்களும், சவப்பெட்டியில் இருந்த சீலைகளில் கால் உடம்பு உடுப்புகளும்தான். இவர்கள் குடிசைகளிலும், குகைகளிலும், பொந்துகளிலும், கீழ்மட்ட, நாற்றமடிக்கும் குக்கிராம மூலைகளிலும், உயர்சாதியினரின் பார்வைக்கும் செவிக்கும் எட்டாத தூரத்தில் வாசம் பண்ணினர். புத்த காலம் (Buddhist period) கி.மு.600க்கும் கி.மு. 200 க்கும் இடையிலான காலத்தினை புத்தகாலமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கி.மு. 800 முதல் கி.பி. 700 வரையிலான இடைப்பட்ட காலந்தான் புத்தம், ஜைனத்தின் சாதியெ திர்ப்பு, பகுத்தறிவு செல்வாக்குப் பெற்றிருந்த காலமாகும். இக்காலக் கட்டத்தில் தான் சூத்திரர்கட்கான விடுதலை (Eamnicipation) நம்பிக்கைக் கதிர்கள் வெளிப்பட்டன.
ஆனால் எப்போதுமே தம் சாதியுணர்விலும், மதவெறியிலும், கண் ணாய், வெகு விழிப்புடனிருக்கும் பார்ப்பனக் கும்பல், சாதி விலங்கி னையும், கட்டுப் பாடுகளையும், விதிகளையும், பலப்படுத்தவும், உயிர்ப் பிக்கவும் மிக, மிக பழிவாங்கும் நோக்குடன் செயல்படத் தொடங்கியது. மனிதகுல வரலாற்றிலேயே கண்டிராத அளவுக்கு சூத்திரர்கள் மிகப் பெரிய இருண்ட காலத்தினையும், பயங்கரத்தினையும் சந்திக்க வேண்டியிருந்தது.
சாதி வேறுபாடுகளற்ற பார்ப்பனரல்லாத சமுதாயக் கொள்கையினை யுடைய புத்தம், ஜைனம் ஆகிய இரண்டும் மறுக்கப்பட்டதோடன்றி, வல்லமை பொருந்திய மனுவின் அவன் குலத்தின் தந்திரத்தால், வஞ்சகத்தால், சுக்கல் நூறாகத் தகர்க்கப்பட்டது.
மனுஸ்மிருதி
மிகப் பெரிய, பயங்கரமான சமுதாயக் குற்றம் என்பது, மனிதனை மனிதனே சுரண்டும் கொடுமைதான். இந்து அறநூல்களின் ஒருங்கிணைப்புத் தொகுதியென சொல்லப்படும் மனுஸ்மிருதியில் இது சட்டமாக்கப்பட்டிருக்கிறது.
. . . பார்ப்பனப் புரோகிதர்களின் நோக்கமெல்லாம், மத, ஆன்மிக, இயற்கையினைக் கருதி தங்களைத் தனியான உயர்சாதியாக்கிக் கொள்ளவில்லை. ஆனால் பணம், மது, மாது, ஆகியவற்றின் மீது இவர்கட்குள்ள அடங்கா பேராசையினால்தான் . . . என்று சுவாமி டி.தீர்த்தாஜி மகராஜ் கூறுகிறார்.
உயர்சாதி இந்து பொருளாதார முழுவுரிமை (Hindu economic monopoly) பற்றி மனுவும் அவன் கோத்திரமும் என்னென்ன சட்டங் களை வைத்திருந்தது என்பதை இடப் பற்றாக்குறையின் காரணமாய் சிலவற்றைக் கீழே தரப்படுகிறது.
ஒரு பார்ப்பனன் தர்மத்தை நிறைவேற்றவே பிறந்ததினால், உலகின் அனைத்தும் அவன் சொத்தே. அவன் பிறப்பின் மகிமையினால் அவன் அனைத்துக்கும் உரிமையுடையோனாகிறான் . . .எல்லா இறந்துபோகும் உயிரினங்களும் பார்ப்பனர்களால்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. (மனுஸ்மிருதியிலிருந்து -சுவாமி டி. தீர்த்தாஜி மகராஜ், 1969)
பார்ப்பனர்கள் மீது வரி விதிக்கக்கூடாது. அரசாங்கமே அவர்களை நிர்வகிக்கவேண்டும்
(மனு: 7-133)
சூத்திரர்கள் செல்வம் சேர்க்கக்கூடாது. . . அப்படி ஒரு சூத்திரன் பொருட் சேர்த்தலால் அவன் பார்ப்பனனுக்கு துன்பம் தருகிறான்.
(மனு : 11-129)
ஒரு பார்ப்பான் புதையல் எங்கேனும் கண்டால் அதை அவனே எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் அனைத்துக்கும் அவனே எஜமானன்.
(மனு : 8-37-39)
பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகியோர்கட்கு ஊழியம் செய்ய வேண்டும் என்கின்ற ஒரே கட்டளையைத் தான் கடவுள் சூத்திரர்களுக்கு இட்டிருக்கிறார்.
(மனு: 1-91)
பிர்மா சூத்திரர்களை பார்ப்பன சேவகத்திற்கென்றே படைத்தார்.
(மனு : 10-125)
தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தோரின் உடைகளையே அணிய வேண்டும். உடைந்த மட்பாண்டங்களில் உண்ணவேண்டும். இரும்பி லான ஆபரணங்களையே அணிய வேண்டும். இவர்கள் எப்போதுமே நாடோடிகளாய் வாழ்தல் வேண்டும் தேவையானபோது பார்ப்பனன் சூத்திரர்களின் சொத்தினை தயக்கம் ஏதுமின்றி எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சூத்திரர் கட்கு செல்வம் ஏதுமில்லை. அவர்களுடைய சொத்தெல்லாம் அவர் களுடைய எஜமானர்களுடையதே.
(மனு : 8-417)
ஒரு சூத்திரன் உயர் சாதியினர்க்கு உழைக்க மறுத்தால், அரசன் அவனுடைய பொருட்களை பறிமுதல் செய்து அவனை நாடு கடத்த வேண்டும்.
( மனு: 10-96)
சூத்திரர்களின் கடன்கட்கு உயர்வட்டிகள் குறிக்கக்கூட மனு மறந்துவிடவில்லை.
முகமதியர் காலம்(Muslim period)
முகமதியர்களின் காலம் கி.பி. 700. அரேபிய முகமதியர்கள் இந் தியாவில் கி.பி. 761 இல் படையெடுத்தது. இக்காலத்தில்தான் பார்ப் பன ஆதிக்கம் சற்றுக் குறைய ஆரம்பித்தது. ஆனால், இவர்களின் ஆட்சியிலும் கூட சூத்திரர்கள் கொடுமையினை அனுபவித்தனர். ஏழ்மையும், அடிமைத் தனமும் இவர்களின் தொடர் கதைகளாயின.
இஸ்லாம் ஒரு சாதியற்ற மதமாய் இருந்ததனால் இது சூத்திர, புறச்சாதியினரின் கடும் சாதிக் கொடுமையினைக் குறைக்க மறைமுகமாக உதவியது. சூத்திரர்கள் பலர் முசல்மானாய் மதமாற்றம் செய்து கொண்டு விடுதலைப் பெருமூச்சு விட்டனர்.
ஆங்கிலேயர் காலம் (English period)
மொகலாயப் பேரரசுகள் தளர்வு கண்டு அதன் தொடர்பாய் கி.பி. 1600 ஆம் ஆண்டுவாக்கில் வீழ்ச்சி அடைந்த நேரத்தில் பார்ப்பனியம் சாதி முன்னணியில் நின்று கொண்டு அரசோச்சுதலைத் தொடர்ந்தது. மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் சாதியற்ற மதத் தினையுடைய ஒரு அன்னியர் கூட்டம் இந்தியாவில் பொறுப்பேற்றது.
ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் சமூக - மதநிலையங்களில் குறிப்பாக சாதி முறைமைகளில் தலையிடாக் கொள்கை கொண் டோராய் இருந்திடினும், பின்னாட்களில் இவர்கள் சூத்திரர்களை உயர்விக்க நினைக்கவும், திட்டமிடவும், செயலாற்றவும் தொடங்கினர். இந்தியக் குடிமகன் எவருக்கும் அரசுப் பணிகளில் சாதி, சாத்திர நம்பிக்கை, நிறம் என்ற அடிப்படையில் தள்ளி வைப்பு (Debarred) கிடையாது என வில்லியம் பென்ட்டிங் பிரபு (Lord William Bentink) முதன் முதலாய் சூத்திரர்களின் உயர்வுக்குக் கால்கோளிட்டார். இக் காலக் கட்டத்தில்தான் சூத்திரர்கள் மனிதப் பிறவிகளாய் மதிக்கப் படத் தொடங்கியது. கல்வி நிலையங்கள் இவர்கட்கும் திறந்து விடப்பட்டன.
இவர்கள் வாழவும், பயிரிடவும், நிலம் கிடைக்கப்பட்டு பொருளா தாரத்திலும் கால் வைக்கத் தலைப்பட்டனர். எப்போதாகிலும் அரசுப் பணிகளிலும் இடம் பெற்றனர்.
ஆங்கிலேயர்கள் குறிப்பாக மிஷனரிகள் (Missionaries) சாதிக் கொடுமைகளைக் குறைக்க நேர்முகமாயும், மறைமுகமாயும் உதவி னர். பல தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கிறித்துவத்தினைத் தழுவி அதன் மூலம் சாதித் தளையிலிருந்து விடுபெற்று விடுதலை பெற்றனர்.
ஆனால், இந்த முன்னேற்றம் மிக மிகக் குறைவாய் இருந்தது. 1947 ல் இந்தியா விடுதலை பெற்றபோது பின்னுக்குத் தள்ளப்பட்டு அமுக்கப்பட்டோருக்கு அவர்களை சீர்படுத்தத் திட்டமிட்ட முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பிந்தின காலம் (Past Independance period) முடை நாற்றமடிக்கும் இந்துச் சமுதாயம் என்கின்ற மிகப் பெரிய சமுத்திரத்தில், மொத்த மக்கட்தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினராக இந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கி.மு. 1000 முதல் உழன்று வருகின்றனர். இந்தியச் சுதந்திரம் அனைத்து முன்னேற்றத்தையும் அறிமுகமாக்கும் ஒரு சகாப்த மாயிற்று. இவர்கள் சொத்துரிமை, அரசுப் பணிகளில் மற்றும் ஆட்சி மன்றங்களில் இட ஒதுக்கீடு பெற்றனர். சிலர் பசியிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் மீட்சியடைந்தனர்.
1973 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களின் ஆணையரின் ஆண்டறிக்கையை இங்கே தருவது மிகப் பொருத்த மாயிருக்கும். 1973 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மலையின மக்கள் வகித்த பதவிகள்:
முதன் நிலை (ClassI) SC: 2.58% S.T. 0.41% ; இரண்டாம் நிலை (ClassII) SC: 4.06% S.T. 0.43% ; மூன்றாம் நிலை (ClassIII) SC: 9.59% S.T. 1.70%.
இந்த குறிப்பிடத்தக்க புள்ளி விவரம் S.C. க்கு 15 சதவீதமும், S.T. க்கு 7.5 சதவீதமும் முறையே கொடுக்கப்பட வேண்டியவைகட்கு மொத் எதிரானதாகும்.
உயர்சாதியினரின் அனைத்துச் செல்வங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அவைகள் கடந்த 6000 ஆண்டுகளாய் சூத்திரர்களிட மிருந்து கொள்ளையடித்த, பிடுங்கிய (Robbed and Grabbed) சொத்துக்கள்தான்.
அரசு வேலைகளில் அமுக்கப்பட்டோருக்கும், பின் தங்கியோருக் கும் இட ஒதுக்கீடுகள் என்பது பெருங்கடலில் ஒரு சிறு துளியாகும். (A drop in the ocean).
பார்ப்பனர்களும் பிற உயர்சாதியினரும் ஏறக்குறைய 8000 ஆண்டு காலமாய் அடித்த கொள்ளையில் திருப்தியுறாமல், தாம் இன்னமும் ஏழ்மையிலும், ஒதுக்கப்பட்டும், பின்னணியிலும் இருப்பதாயும், பேதங் காட்டப்படுவதாகவும் நினைத்தால் சூத்திரர்களும், புறச் சாதியினரும் ஒரு 30 ஆண்டுகட்குள் எங்ஙகனம் வளமடைய, வாழ்வு பெற இயலும்? புறச்சாதியினர், சூத்திரர்கள் இதுகாறும் ரிசர்வேஷன் மூலம் பெற்று வந்தது மிகச் சிறிய கூறுதான். இதற்காக பார்ப்பனர்கள் குய்யோ முறையோ வெனக் கத்துவது பிரயோசனமற்றது; அருவறுப்பானதும் கூட.
கடந்த முப்பதாண்டு காலத்தில் சூத்திரர்களும் புறச் சாதியினரும் அடைந்த இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார விபத்தினையும், அதற்கு முந்தி 8000 ஆண்டுகாலமும் அதற்குப் பிறகும் பார்ப்பனர் அடித்த கொள்ளையினையும் புள்ளி விவரத்துடன் ஆராய்ந்தால், தாழ்த்தப்பட்டோரின் பரிதாப நிலை - நிலை குலைந்த நிலையின் ஒரு பெருந் தொடர்கதை நன்கு விளங்கும்.
இந்தப் பார்ப்பனர்கள் வேதகால, மனுகால பொருளாதார வரலாறு மீண்டும் திரும்பவேண்டுமென விரும்புகின்றனரோ.
(“Now Reservation for Brahmins” - by S.R.Shabam from ‘Caravan’ 2-6-1980- Tamil Translation by S. Devadoss B.Sc., Manalmedu)
---------------நன்றி: "விடுதலை" 1-2-2009
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பார்ப்பனர்களின் செயல்களைப் படிக்கும் போது மனது பதறது.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்
Post a Comment