Search This Blog
4.2.09
தேர்தல் ஆணையத்தில் நடப்பது என்ன?
பா.ஜ. கட்சி, தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மீது புகார்கூறி மனு ஒன்றைத் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி அய்யங்காரிடம் கொடுத்திருந்தது. ஆறு மாதகாலம் அதனைக் கட்டி வைத்திருந்த அய்யங்கார் 21-7-2008-இல் நவீன் சாவ்லாவுக்கு அனுப்பி அறிக்கை கேட்டார். 10 நாள்களில் இக்கடிதம் கிடைத்தது என்று ஒப்புதல் அனுப்பியுள்ளார் நவீன் சாவ்லா.
12-9-2008 இல் நவீன் சாவ்லா தமது அறிக்கையை அனுப்பிவிட்டார்; தலை மைத் தேர்தல் ஆணையருக்கு இதுபற்றி என்ன அதிகாரம் உள்ளது என்பதுபற்றிக் கேள்வி எழுப்பி அரசமைப்புக் கூறு 324 (5)-க்கு அவருடைய பதில் என்ன என்றும் கேட்டிருந்தார்.
முன்னெச்சரிக்கையாக, சட்டத்துறைச் செயலாளருக்குக் கடிதம் எழுதி இதுபற்றித் தகவல் ஏதும் கோபாலசாமியால் மய்ய அரசுக்கோ, குடியரசுத் தலைவருக்கோ அளிக்கப்பட்டதா என்ற விவரத்தைக் கேட்டார்.
பா.ஜ. கட்சியின் புகார் மனுவுக்குத் தாம் மறுப்பும் விளக்கமும் அளித்து உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனு, அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி..தாண்டன், தேர்தல் ஆணையச் செயலா ளர் வில்ஃபிரட், சட்ட நிபுணர் அசோக் தேசாயின் சட்டக் கருத்து ஆகியவற்றின் அறிக்கையுடன் அறிக்கையை நவீன் சாவ்லா தந்திருக்கிறார். 17-9-2008-இல் இந்த அறிக்கையை ஏற்க மறுதலித்து கோபாலசாமி, புகார்கள் மீதான குறிப்பான தன்மையிலான அறிக்கை அளிக்குமாறு நவீன் சாவ்லாவைக் கேட்டுள் ளார். அத்வானியின் புகார் மனுவை அத் வானியோ, கோபாலசாமி அய்யங்காரோ குடியரசுத் தலைவருக்கோ, சட்ட நீதித்துறை அமைச்சருக்கோ அனுப்பவில்லை என்று தெளிவாகவே சட்டத்துறைச் செயலாளர் கூறியிருக்கிறார். நவீன் சாவ்லாவிடம் விளக்கம் கேட்பதற்கு முன் ஆலோசனை கலக்க வில்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அரசியல் சட்டப்படி, தேர்தல் ஆணையர்மீதான நடவடிக்கையே கூட எடுக்கப்பட முடியாது என்பதை சட்டத்துறைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனைக்கும் பிறகும் கோபாலசாமி அய்யங்கார் பிடிவாதமாக பதில் அறிக்கையைக் கேட்டுள்ளார். 10-12-2008-இல் நவீன் சாவ்லா தம் பதிலறிக்கையைத் தந்து விட்டார். புகார்கள் ஆதாரமற்றவை எனக் கூறி, நடவடிக்கையைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டப்படி எடுக்க முடியாது என் பதையும் சுட்டிக்காட்டி பதில் அளித்திருக் கிறார்.
இந்த நிலையிலும் கூடத் தேர்தல் ஆணையம் ஆறு மாநிலங்களின் தேர்தலை நடத்தி முடித்துள்ளது.
ஏப்ரல் 20-இல் ஓய்வுபெறும் கோபாலசாமி அவருக்குப் பின் தலைமைத் தேர்தல் ஆணையராக வரக்கூடிய பணி மூப்புபெற்ற நவீன் சாவ்லாவை அகற்றுவதற்கு பிரம் மாஸ்திரம் என்று கருதித் தொடுத்தார். அது அவரையே திருப்பித்தாக்கும் பூமராங் ஆகிவிட்டதை நடப்பும், சேதிகளும் தெரிவிக்கின்றன.
கோபாலசாமி எழுதியதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ. கட்சி கூறுகிறது. அறிக்கை அனுப்ப கோபாலசாமி அய்யங்காருக்கு அதிகாரம் இருக்கிறது என்கிறது இக்கட்சி! தனது புகார் மனு ஏற்கப்பட வேண்டும் என்று விரும்பி எதையெதையோ கூறிக் கொண்டிருக்கின்றனர் - அருண் ஜெட்லியும் ரவிசங்கர பிரசாத்தும்!
---------------நன்றி:- "விடுதலை" 4-2-2009
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
ஊடகங்கள் கோபால்சாமி என்று எழுதும் போது தி.க ஊடகங்கள் எதற்காக அங்கே ஐயங்கார் என்பதை
சேர்க்கின்றன?.அவரே பெயரில் சாதிப் பெயரைச் சேர்த்துக்கொள்ளாத போது வீரணியார் ஏன் அவர் பெயரை இப்படி எழுதுகிறார். வீரமணியின்
பெயரை சாரங்கபாணி யாதவ் என்று
எழுதினால்தான் அவருக்கு இது
புரியுமா?
Post a Comment