Search This Blog
3.2.09
பார்ப்பன ஆதிக்கத்திற்கு மரண அடி
சிதம்பரம் நடராசன் கோயிலைத் தமிழ்நாடு அரசு ஏற்றது!
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க முரண்டு பிடித்த
தீட்சதர்ப் பார்ப்பனர்கள் இறுதியில் பணிந்தனர்
தமிழ்நாட்டில் நடந்துள்ளது அமைதிப் புரட்சி!
தமிழ்நாடு அரசைப் பாராட்டுகிறோம்!
சிதம்பரத்தில் வரலாற்றுக் கல்வெட்டை கழகம் நிறுவும்
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
சிதம்பரம் நடராசன் கோயில் தங்கள் சொந்த உடைமையென்று கூறி, அதன் சொத்துகளை அனுபவித்துக் கொழுத்த தீட்சதர்ப் பார்ப்பனர்களின் பிடியிலிருந்து, கோயில் மீட்கப்பட்டு, இந்து அறநிலையத் துறையின் நிருவாகத்தின்கீழ் வந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி அவர்களின் தீர்ப்பே இதற்குக் காரணம்.
மிக நீண்ட காலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை வரவேற்று, தமிழ்நாட்டில் நடந்துள்ள அமைதிப் புரட்சி இது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
தீட்சதர்கள் அடித்த கொள்ளை
சிதம்பரம் நடராசன் கோயில் தீட்சதர்ப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. அதன் திரண்ட சொத்துகளை அவர்களே அனுபவித்து வந்தனர்.
1925 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியில் இந்து அறநிலையத் துறையின்கீழ் கோயில்கள் கொண்டு வரப்பட்டன.
ஆனால், அதனை ஏற்க தில்லைவாழ் கோயில் தீட்சதர்கள் மறுத்துவிட்டனர். அதுமுதல் இந்தப் பிரச்சினை நீதிமன்றங்களுக்குச் சென்று பல வகையான தீர்ப்புகளால் அரசுக் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வராமல் தடுக்கப்பட்டது.
முத்துசாமி அய்யர் அளித்த தீர்ப்பு
1888 ஆம் ஆண்டிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்குச் சென்றது (ஏ.எஸ். அப்பீல் 108, 159/1888).
இந்த வழக்கினை முதல் இந்திய நீதிபதி என்று பெருமையாகக் கூறப்படும் சர்.டி. முத்துசாமி அய்யர் மற்றும் ஷெப்பர்டு ஆகிய இரு நீதிபதிகளும் விசாரித்தனர்.
முற்காலந்தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாகப் பயன்பட்டு வந்திருக்கிறது என்பதை மறுக்கவில்லை. மேலும், இக்கோயிலானது தீட்சதர்களுக்குச் சொந்த சொத்து என்று சொல்வதற்கு சிறு துளியளவுகூட ஆதாரம் கிடையாது என்று ஆணி அடித்தாற்போல தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகும்கூட தீட்சதர்ப் பார்ப்பனர்கள் அடாவடித்தனமாக தங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிட்டதே - ஏகபோக அனுபவக் கொள்ளை பறிபோகிறதே என்கிற தன்மையில் தொடர்ந்து நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி தடைகளை வாங்கிக்கொண்டு காலம் தள்ளி வந்தனர்.
தமிழ்நாடு அரசின் உத்தரவும் - நீதிமன்ற தடையும்!
1987 ஆம் ஆண்டில் பொது தீட்சதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கோயிலை, இந்து அறநிலையத் துறைக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வரவும், நிருவாக அதிகாரியை நியமிக்கவும் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
அதன்பின், சென்னை உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கிவிட்டனர். நீதிமன்றத்தின் தடையை நீக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலைகளுக்கு பிறகு தி.மு.க. ஆட்சியில் - கலைஞர் ஆட்சியில் நிர்வாக அதிகாரியை நியமித்தனர். அது கூடாது என்று வழக்குப் போட்டனர்.
நீதிபதி பானுமதி அவர்களின் மகத்தான தீர்ப்பு
அதன் தீர்ப்பு நேற்று வெளிவந்தது (2.2.2009). நீதியரசர் பானுமதி அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பினை வழங்கினார். அத்தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கோவிலை நிர்வகிப்பது, காணிக்கைகள் மற்றும் கட்டளைகள் நிர்வகிப்பது போன்றவை ஒரு மதத்துடனும், மதத்தின் நடை முறைகளுடனும் தொடர்பு கொண்டதல்ல.
அரசியல் சாசனத்தின்படி கோவிலின் நிருவாகம், பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில், பொது தீட்சதர்கள் எந்தப் பாதுகாப்பும் கோர முடியாது. ஆகவே, தனி அதிகாரி நியமித்து, பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானதல்ல.
அறநிலையத்துறை ஆணையர், தனது அதிகாரத்தைப் பயன் படுத்த முடியாது எனக் கூற முடியாது. கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்தவே ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு மத வழிபாட்டுத் தலத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு என்பது முழுக்க முழுக்க மதச்சார்பற்ற விஷயம். இதில் தலையிட அரசுக்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் கூறியுள்ளது.
பெருமளவு சொத்துகள் கொண்டுள்ள இந்தக் கோவிலின் சொத்துக்கள் இனிமேலாவது முறையாகப் பராமரிக்கப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. அதேபோல, தனி அதிகாரிக்குப் பொது தீட்சதர்கள் ஒத்துழைப்பு வழங்குவர் எனவும் நம்புகிறது. மேலும், கோவில் நிர்வாகத்தை நிர்வகிப்பது குறித்து, தனி அதிகாரிக்கு ஆணையர், சட்டப்படி தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கவேண்டும்.
- இவ்வாறு நீதிபதி சிறப்பாகத் தீர்ப்பளித்துள்ளார்.
சட்டம் என்ன கூறுகிறது?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்ற பகுதியின் பிரிவு 25, 26 ஆகியவை மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக இருந்தாலும்,
25 ஆவது பிரிவு, மத நிறு வனங்களில் சமூக சீர்திருத்தம் பயன்படுத்துவதை அங்கீகரிக் கவே செய்துள்ளது என்பதும், அதன்படி தவறுகள், ஊழல்கள் எந்த மத நிறுவனங்களில் நடை பெற்றாலும், அதனை அரசுத் துறையின்கீழ் (இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் அதிகார வரம்புக்குட்பட்ட நிர்வாகத்தின்கீழ்) கொண்டு வர அதிகாரம் உண்டு என்பதை உணர்ந்து நீதியரசர் ஜஸ்டீஸ் திரு. பானுமதி அவர்கள் துணிவுடனும், சட்டத் தெளிவுடனும், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி புரிந்து, சுமார் 150 ஆண்டுகால வழக்குப் பிரச்சினைக்குச் சரியான தீர்ப்பை வழங்கி வரலாறு படைத்துள்ளார்.
தில்லையம்பலத்துப் பக்தர்களும் இதனைப் பாராட்டி வரவேற்கவே செய்வர் என்பது உறுதியாகும்!
தீர்ப்பின் அடிப்படையில் அரசுத் தரப்பில் அதிகாரிகள் கோயிலுக்குச் சென்றபோது, நீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்பட மறுத்தனர் கோயில் தீட்சதர்கள்; கடைசியில் வேறு வழியின்றிப் பணிந்தனர். நேற்று இரவே நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்மூலம் மிக நீண்டகால பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது.
பார்ப்பன ஆதிக்கக் கோட்டையைச் சிதறடித்த நியாயமான- சட்ட ரீதியான நிலைப்பாடு இது என்பதில் அய்யமில்லை.
அன்று ஆறுமுகசாமி
தில்லை சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் ஓதப்படக் கூடாது என்பதில் தீட்சதர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். தேவாரம், திருவாசகம் பாடல்களை ஓதச் சென்ற ஆறுமுகசாமி என்பவரை தீட்சதர்கள் கடுமையாகத் தாக்கினர். ஏன் காவல்துறை அதிகாரியைக்கூடத் தாக்கினர்.
கடைசியில் அதிலும் தீட்சதர்கள் தோற்றுப் போகும் நிலையை இந்து அறநிலையத்துறை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து, அதற்கு மேலான மரண அடி பார்ப்பன ஆதிக்கத்திற்கு இப்பொழுது கொடுக்கப்பட்டுவிட்டது.
நமது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது
சிதம்பரம் நடராஜன் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கையும் வலியுறுத்தலுமாகும். சிதம்பரத்திலேயே பேரணி, மனு கொடுத்து, விளக்கிப் பேசி, அது சிதம்பர ரகசியம் என்ற தலைப்பில் நூலாகவும் வந்துள்ளது!
முட்டுக்கட்டை போட்டவர்கள்
இப்படிப்பட்ட ஓர் அருமையான அமைதிப் புரட்சியினை சட்ட ரீதியாக, மற்றவர்கள் அஞ்சியும் அல்லது விலை பேசப்பட்டும் இதற்குமுன் இருந்த அரசுகள் அல்லது சில பெரிய மனிதர்கள் முன்வந்து முந்தைய அரசுகள், அதிகாரிகள் துணிந்து நடவடிக்கை எடுக்க ஒட்டாமல் முட்டுக்கட்டை போட்ட நிலை இருந்தது!
அமைதிப் புரட்சி
துணிச்சலுக்குப் பெயர் பெற்ற முதலமைச்சர் கலைஞர் அவர்கள் இத்தகைய சிறந்த செயலைச் செய்ததுடன், உயர்நீதிமன்றத் தீர்ப்பு என்ற முத்திரையையும், ஒப்புதலையும் பெற்று, தமது ஆட்சியின் அறநிலையத் துறையின் ஆணை அதிகாரம் சரியே என்று உலகுக்கு உணர்த்தியும் விட்டார்கள் - ஓர் அமைதிப் புரட்சி இதன்மூலம் நடைபெற்றுள்ளது.
அவர்களுக்கு உறுதுணையாக முதல்வர் - ஆட்சியின் கொள்கை அறிந்து செயல்படும் அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர். பெரிய கருப்பன், அறநிலையத் துறை ஆணையர் அமைதியான ஆற்றலாளர் திரு. பிச்சாண்டி அய்.ஏ.எஸ்., இதற்கு உறுதுணையாக, தொடக்கமுதலே சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை எடுக்கத் தூண்டி வந்த முன்னாள் அமைச்சர்கள் வி.வி. சாமிநாதன், இராம. வீரப்பன் மற்றும் ஊர் மக்கள் குழு ஆகியோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.
கழகத்தின் சார்பில் கல்வெட்டு
இந்த வரலாற்று நிகழ்வை வருங்காலம் அறிந்துகொள்ள சிதம்பரத்தில் முதலமைச்சர் கலைஞர் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நகரின் முக்கிய பகுதியில் ஒரு கல்வெட்டுத் திறப்பு விழாவும் விரைவில் இம்மாத இறுதிக்குள் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தி, மேலும் ஊர் மக்களாதரவு இந்த அரசுக்கு உண்டு என்று காட்டும் முயற்சிகளைக் கழகம் உருவாக்கும்.
சீறுவார்கள் - ஜாக்கிரதை!
அடிபட்ட பாம்பாக தீட்சதர்ப் பார்ப்பனர்கள் சீறுவார்கள்; மேலும், உச்சநீதிமன்றம்வரை சென்று ஒரு கை பார்ப்போம் என்று முனைப்பாகச் செயல்படுவார்கள். தீட்சிதர்களுக்குப் பல மேல்மட்டங்களிலும் பார்ப்பன உணர்வோடு உதவி செய்யக் கூடியவர்கள் இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. இந்து அறநிலையத்துறை அதிலும் கண்ணும் கருத்துமாகவிருந்து அதனை முறியடிப்பதிலும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
--------------------- "விடுதலை" 3.2.2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
This judgement is not a CONCLUSIVE judgement. It is only an endorsement on the previous verdict given in Ramalingam case of 1983. This can be challenged further in apex court.
Moreover, the verdict underlines the rights of Dikshithar hereditory in worship related items. This means that it still belongs to them for setting and directing the way that rituals are conducted. The board’s rights are limited to just admin and maintenance (clerical)
By the way, all these socialist, forward, rational party guys must act to free lot of churches and mosques in Tamilnadu which are used for family welfare of limited group. Example is Eruvadi Dharga Haqdar Committtee, Kilavasal CSI Nemudi Family Church, etc. There are lot of complaints of anti-social actions like prostitutions, drinking, happening in these places in the disguise of religious properties
PARAMS
பத்திரிக்கை தருமத்தை பற்றி பேச விடுதலைக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
சிதம்பரம் வழக்கை பற்றி பேச வீரமணிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
சிதம்பரம் போராட்டத்தை பற்றி விடுதலையில் வந்த செய்தியை ஒருவர் வினவில் பின்னூட்டம் இட்டிருந்தார். அதற்கு நானும் வேறொரு நண்பரும் பதிலளித்த்து
தொடர்புடைய சுட்டி
http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/
***************
அர டிக்கெட்டு சொன்னது
வீரமணி எனும் மாமாவின் அறிக்கையை வெளியிட்டதற்கு வன்மையாக கண்டிக்கிறேன். சிதம்பரம் போராட்டமும் அதன் வெற்றியும் முழுவதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் முயற்சியால் நடந்த்து, துளியளவாவது நேர்மையிருந்தால் வீரமணி அவரது அறிக்கையில் இதை எழுதியிருக்கவேண்டும். ஆனால் உண்மையை தவிர அனைத்தும் எழுதப்பட்ட ஒரு குப்பை இது.
#
சுந்தர் சொன்னது
மாமா வீரமணியின் அறிக்கை, அவரின் மோசடித்தனத்தைக் காட்டுகிறது..
இதனை சும்மா விடக்கூடாது.. கஷ்டப்பட்டு மக்களுடன் வேலை செய்து வெற்றி பெறுவது ஒரு இயக்கம். அந்த வெற்றியை அப்படியே திருடிக் குளிர்காய்ந்து கொள்வதோ இந்த வெண்ண வெட்டி சிப்பாய். நோகாம நொங்கெடுக்கிற இந்த ஜால்ரா மணியைத் தோலுரிக்கணும்..
மானமுள்ள தமிழர்கள் பெரியார் திடலுக்கு போன் செய்து அவர்களிடம் இதனை விமர்சிக்கனும்.. மன்னிப்புக் கேட்க வைக்கனும்..
போன் நம்பர்: 044- 26618163..
இந்த நம்பருக்கு பேசினா ‘வணக்கம்..பெரியார் திடல்’ அப்படிம்பாங்க.. அங்கிருந்து ‘விடுதலை செய்திப் பிரிவு’க்கு இணைப்புக் கேட்டு வீரமணியாரின் அடிப்பொடிகளுக்கு பூசை வைப்போம்…வாருங்கள் தமிழர்களே..
சுந்தர்
"சிதம்பரம் நடராஜன் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கையும் வலியுறுத்தலுமாகும். சிதம்பரத்திலேயே பேரணி, மனு கொடுத்து, விளக்கிப் பேசி, அது சிதம்பர ரகசியம் என்ற தலைப்பில் நூலாகவும் வந்துள்ளது!" என்ற விபரத்தை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் வீரமணி.
அந்த நூல் வெளிவந்த ஆண்டு 1982 அதாவது 15-4-1982 அன்று சிதம்பரம் கீழவீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவே "சிதம்பர ரகசியம்" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் ஆகிவிட்டது .அந்நூலிலே நீதிமன்ற வழக்கு உட்பட அத்தனை விவரங்களும் ஆதாரத்துடன் அலசப்பட்டுள்ளது.
அன்ரிலிருந்து தொடர்ச்சியாக தி.க. இப்பிரச்சினையில் குரல் கொடுத்து வருகிறது.
மற்ற அமைப்பினரும் குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்த் அறிக்கையில் அதற்காக குரல் கொடுத்தவர்களுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அறிக்கையில் அத்துனை பேரையும் பாராட்டுவது என்பது முடியாத காரியம்.
அதையெல்லாம் பொருட் படுத்தாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ரீதியில் கருத்துச் சொல்லியது, அதுவும் உங்கள் பாணியில் சொல்வது என்றால் அரடிக்கெட்டு என்பதை உங்களி நீங்களே நிரூபித்துவிட்டீர்கள்.
முழுமையாக ஒரு செய்தியை அரிந்து கொள்ளாமல் கருத்துச் சொல்லுகிறவர்கள் அரடிக்கட்டுத்தான்.
எழுதும் போது குறைந்த பட்சம் நாகரிகத்தை கடைபிடித்திருக்கிறீகளா? என்றால் அதுவும் இல்லை.
தீண்டாமை- இடஒதுக்கீடு தொடர்பாக உங்களின் நிலைப்பாடுகள் பற்றி யெல்லாம் அம்பலப்படுத்தி எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளது.
புரட்சி செய்வதாக நினைத்துக் கொண்டு அநாகரிகமாக எழுதுவது அழகல்ல.
.
Post a Comment