Search This Blog

27.2.09

பெரியாரியக்கத்தின் முக்கிய வேலை


நமது வேலை

"மதச் சம்பந்தமான கடவுள், புராணம், இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி, அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை."

-------------------- தந்தைபெரியார் - "விடுதலை", 2.4.1973

4 comments:

Anonymous said...

இது தான் உங்களது கொள்கை என்றால் கேவலமாக இல்லையா? முடிந்தால் பெரியாரைத் தொடர்பு கொண்டு ஏதாவது புதுசாத் தரச் சொல்லிக் கேளுங்கள். அவரின் எழுத்துகள் எல்லாவற்றையும் பதிவேற்றிவிட்டு உங்களது கழகத்தை கலைத்து விடுங்கள். உங்களால் எதையுமே பண்ண முடியாது. அப்படித் தான் போலிருக்குது.

தமிழ் ஓவியா said...

புகழினியின் விமர்சனங்கள் காழ்ப்புணர்வுடன்கூடியதாகவே இருக்கிறது.

அய்ந்து விழீழந்தோர் இதுதான் யானை என்று உருவகபபடுத்துவர்களோ அது போல் இருக்கிறது.


பெரியாரின் எழுத்துக்களை பதிவேற்றி விட்டால் எல்லாம் முடிந்து விட்டதா?

பெரியாரியக்கக் கூட்டங்கள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதன் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

இணையம் மூலமும் பெரியார் இயக்கக் கொள்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

எங்களால் எதையும் பண்ன முடியாது என்று சொல்லும் நீங்கள் பண்ணியதை பட்டியலிடுங்கள்?

ஆரோக்கியமான விவாதத்தை தொடர்வோம்.

கழகத்தை எப்போது கலைப்பது ,கட்டுவது என்பது பற்றியெல்லாம் ஆலோசனை சொல்லுவது பற்றி அப்புறம் விவாதிப்போம்.

Thamizhan said...

சிலர் முட்டாள்களாகவே இருக்க விரும்பினால் அது அவர்கள் விருப்பம்.
முதலில் அவர்கள் எது கேவலம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
உடுப்பில் அடைந்துள்ள நாகரீகம் உள்ளத்தில் வராமல் தடுப்பது எது?
மூளையில் இடப்பட்ட விலங்கு என்றார் பெரியார்.
இந்த மூளையுள்ள உடன் பிறப்புக்கள் அந்த விலங்குகளை உடைத்தெரிய தயங்குவதுதான் கேவலம்!
பிள்ளையார் போல ஒரு குழந்தை பிறந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.கோபம் வேண்டாம்,பதில் தான் வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழன் அய்யா