Search This Blog
22.2.09
பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்காததற்குக் காரணம் என்ன?
தமிழின் தலைசிறந்த அரசியல் விமர்சகரும், அறிஞர் பெருமகனுமான எஸ்.வி.ராஜதுரை அவர்கள் நாட்டுடைமையாக்கும் பட்டியலில் பெரியாருக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.
பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா என்பது பற்றிய வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆகவே அதுபற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு உதாரணத்தை மட்டும் சுட்டிக்காட்டலாம்:-
நாட்டுடைமை ஆக்கப்படும் நூல்களின் பட்டியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் நூல்களும் அறிவிக்கப்பட்டபோது -
அவரது பெயரால் நூலகமும் - அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வரும் அவரது மரபுரிமையினர்,
"உ.வே.சா. நூல்களை எங்களது அறக்கட்டளையே வெளியிட்டு வருகிறது. மற்றவர்கள் வெளியிட்டால் அதிலே பிழைகள் மலியக்கூடும். ஆகவே உ.வே.சா. நூல்களை பிழையின்றி - திரிபுகள் திருத்தமின்றி - அவர் சொன்னது சொன்னபடி வெளியிட பதிப்புரிமை எங்களிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே செயல்படும் அறக்கட்டளை இது. எனவே நாட்டுடைமை ஆக்கவேண்டாம்" என்று மறுப்புத் தெரிவித்தார்.
அதனால் உ.வே.சா.வின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படாமல் கைவிடப்பட்டது.
அதுபோலத்தான் பெரியார் உயிரோடிருந்த காலத்தில் அவரது நூல்களையும் - இயக்கப் பிரச்சார நூல்களையும் வெளியிடுவதற்காக ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை அவர் தொடங்கினார். அவரது நூல்கள் அனைத்தும் 1920களிலிருந்து அவர் ஆற்றிய பேருரைகள் - எழுதிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான நூல்களை அது வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல; அவரது நூல்களையும் அவர் கண்ட இயக்கத்தின் பகுத்தறிவு நூல்களையும் நகர்வுப் பத்தகக் காட்சி அமைத்து - ஆண்டு முழுவதும் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பித்து வருகிறோம்’ என்கிறார்கள் பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் கறுஞ்சட்டைப் படையினர்!
--------------- நன்றி:- "முரசொலி"
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
என்ன ஆனாலும் நம்மள மீறி பெரியார் கருத்து மக்கள் கிட்ட போய்ட கூடாது.
சிறையில் கூட போட்டு பெரியார் நூல்களை அடைக்கலாம். ஆன நம்மள மீறி என்ன ஆனாலும் பெரியார் நூல் வரக்கூடாது.
வேண்டுமென்றால் வீரமணி எழுதிய நூல்களை நாட்டுடைமை ஆக்குங்கள் வெளியிடுங்கள்.
//பெரியார் உயிரோடிருந்த காலத்தில் அவரது நூல்களையும் - இயக்கப் பிரச்சார நூல்களையும் வெளியிடுவதற்காக ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை அவர் தொடங்கினார். அவரது நூல்கள் அனைத்தும் 1920களிலிருந்து அவர் ஆற்றிய பேருரைகள் - எழுதிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான நூல்களை அது வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல; அவரது நூல்களையும் அவர் கண்ட இயக்கத்தின் பகுத்தறிவு நூல்களையும் நகர்வுப் பத்தகக் காட்சி அமைத்து - ஆண்டு முழுவதும் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பித்து வருகிறோம்’ என்கிறார்கள் பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் கறுஞ்சட்டைப் படையினர்!//
நாட்டுடைமை ஆக்க சில விதி முறைகள் உள்ளது. அதன் படி செயல்பட்டால் சிக்கல் எழ வாய்ப்பில்லை.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நூல்களை வெளியிடலாமே?
அப்ப கண்ணதாசன் வீட்டுக் காரங்க மட்டும் விடுவாங்களா? பேசாம நீங்களும் பொழைப்ப பாருங்க. நீங்க உருப்படியா எதாச்சும் பண்ணுறதாத் தெரியல. வீரமணி சார் மட்டும் மடிப்புக் கலங்காத வேட்டியோட போஸ் குடுக்கிறாரு, முடிஞ்சா பண்ணுங்க. இல்லாட்டி? இதை வைச்சுத் தான் பிழைப்ப ஓட்டணுமா? எல்லாப் பெரியார் பதிப்புகளையும் இணையத்தில் ஏற்றுங்கள். அப்புறமா பிழை வருதா இல்லையா எனப் பார்க்கலாம். புதுக் கருத்துகள் சொல்ல யாருமே உங்களிடம் இலையா? நான் பெரியாரைப் படித்து பல காலமச்சு. அதை இப்பதான் இங்கே போடுறீங்க. எப்பதான் புதுசாப் பண்ணப் போறீங்க? உங்க அடுத்த கட்ட நடவைக்கை என்னவென்று வெளிப்படையாக் கூறுங்கள். முடியலயா நீங்களும் மூட்டையைக் கட்டுங்கள். சும்மா அந்த மனுசனை வைச்சு காலத்தை ஓட்டாதீங்க..
//பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நூல்களை வெளியிடலாமே?//
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கே முறையான அனுமதி இல்லையே? திருட்டுப் பொருளுக்கு உரிமைகோரும் பக்காத் திருடராக மாறிவிட்டீர்களே?
//பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கே முறையான அனுமதி இல்லையே?//
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட அனைத்துநூல்களிலும் பதிப்புரிமை பெற்றது என்றே அச்சிடப்பட்டுள்ளது.
பதிப்புரிமை என்று வந்து விட்ட பிறகு முறையான அனுமதி பெறுவதுதான் நாகரிகம்.
நீங்களோ பெ.சு.பி. நிறுவனத்திற்கே அனுமதியில்லை என்றும் பக்காத் திருடர் என்றும் சொல்லுகிறீர்கள்.
எப்படி? என்று விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.
//உங்க அடுத்த கட்ட நடவைக்கை என்னவென்று வெளிப்படையாக் கூறுங்கள். முடியலயா நீங்களும் மூட்டையைக் கட்டுங்கள். சும்மா அந்த மனுசனை வைச்சு காலத்தை ஓட்டாதீங்க..//
எனக்கும் இந்த கேள்விகள் உண்டு?
பதில் தான் யாரும் சொல்ல மாட்டிங்கிறாங்க!
பாரதியாரின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டன.அது போல் புதுமைப்பித்தனின் படைப்புகளும்.
இன்னும் பலர் எழுத்துக்களும்,
அறிஞர் அண்ணாவினது உட்பட.
அதனால் இவர்கள் எழுதியவை மக்களுக்கு பரவலாக கிடைக்கின்றன.குடும்பங்களுக்கு ராயல்டி தொகை குறைய வாய்ப்புண்டு என்பது உண்மை.ஆனால்
பிழைகள் ஏற்படலாம்
என்ற காரணத்தினால் நாட்டுடமையை
எதிர்ப்பது சரியல்ல.
உ.வே.சாமிநாதய்யர் வாரிசுகள் கூறிய காரணம் ஏற்புடையதில்லை.
பெரியார் பெயரைக் கொண்டு பிழைப்பு
நடத்துபவர்களுக்கு அவர்கள் வெறுக்கும் பிரிவினரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
கூறும் காரணத்தைக் காட்டி பெரியாரின் படைப்புகளை
நாட்டுடமையாக்கக் கூடாது
என்று வாதிட முடிகிறது என்பது
வேடிக்கையாக இருக்கிறது.
அதற்கு கூட
சொந்தமாக காரணம் கூட
சொல்லமுடியாமல், இரவல்
காரணம் கூறுபவர்கள்
இந்த ‘பகுத்தறிவுவாதி'கள்.
‘எல்லாப் பெரியார் பதிப்புகளையும் இணையத்தில் ஏற்றுங்கள். அப்புறமா பிழை வருதா இல்லையா எனப் பார்க்கலாம்.‘
சட்டியில் இல்லாத போது ஆப்பையில் எப்படி வரும்.
எங்களிடம் பெரியார் நடத்திய/எழுதிய இந்தப் பத்திரிகைகளின் இந்த இதழ்கள் இல்லை,கொடுத்துதவுங்கள் என்று அறிவிப்பினை விடுதலையில் கொடுக்கிறார்கள்.அவர்களிடமே பெரியார் எழுதியது அத்தனையும்
இல்லை. அப்புறம் எப்படி பெரியார்
களஞ்சியம் தொகுப்புகள் வெளியிடுகிறார்கள் என்று கேட்பது
பெரியாரிய-வீரமணி பகுத்தறிவிற்கு
எதிரானது. பெரியார் தி.கவினர்
தி.கவிடம் பெரியாரின் எழுத்துக்கள்
முழுமையாக இல்லை என்று சொல்கிறார்கள். அதை மெய்ப்பிக்கும்
வகையில்தான் விடுதலையில் வெளியான அறிவிப்பு உள்ளது.
பெரியார் படைப்புகளை நாட்டுடமையாக்கினால்
வழக்கே தேவையில்லையே.
வழக்கினை தொடுத்திருப்பது யார்,
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
சார்பாக, வீரமணி அல்லவா. பெரியார்
தி.க நாட்டுடமையாக்க வேண்டும் என்றுதானே சொல்கிறது. கூடாது
என்பது யார்.? வீரமணிதானே.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட அனைத்துநூல்களிலும் பதிப்புரிமை பெற்றது என்றே அச்சிடப்பட்டுள்ளது.
இது தான் ஒரிஜினல் திருநெல்வேலி அல்வாக் கடை என விளம்பரங்கள் அனைத்து ஊர்களிலும் பார்க்கலாம். அதுபோலத்தான் பெ.சு.பி நிறுவன விளம்பரமும். பெ.ச.பி நிறுவனத்துக்கோ ஓனர் வீரமணிக்கோ உண்மையில் உரிமை உள்ளது என்பதற்கு நீதிமன்றம் நம்பும் ஆதாரம் வேண்டும். உங்கள் புத்தகத்தில் நீங்களே அச்சிட்டுக்கொள்வதெல்லாம் ஆதாரமென்றால்????
நன் நிலாவின் வாதம் விதண்டவாதமாக இருக்கிறது.
பெ.சு.பி. நிறுவனம் என்று ஒன்று மட்டுமே உள்ளது.
அப்புறம் அதில் ஒரிஜினல் ,போலி என்று வாதம் வைப்பது எந்த வகை அறிவு நாணயமோ?.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வழக்கு நாட்டுடமை ஆக்குவது பற்றியல்ல. குடிஅரசு தொகுப்பு வெளியிடுவது பற்றி. இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது அறிவு நாணயமற்ற செயல்.
----பெ.சு.பி. நிறுவனம் என்று ஒன்று மட்டுமே உள்ளது.
அப்புறம் அதில் ஒரிஜினல் ,போலி என்று வாதம் வைப்பது எந்த வகை அறிவு நாணயமோ?----
எங்களிடம்தான் உரிமை இருக்கிறது, எங்களிடம்தான் அனுமதி வாங்க வேண்டும் என அரசியல்மாமா வீரமணி லேகியம் விற்பவரைப் போல அலறுகிறாரே? அதைத் தான் சொல்கிறேன். அவருக்கே உரிமை இல்லாத பொருளுக்கு அவர்தான் உரிமையாளர் என அவரே அலறுவதைத் தான் சொல்கிறேன். அல்வாக்கடை விளம்பரம் போல இருக்கிறது என்று.
எந்த ஆதாரமும் இல்லாமல் பதிப்புரிமை பெற்றது என தாமே அச்சிட்டுக்கொண்டு எல்லோரும் என்னிடம்தான் அனுமதி பெற வேண்டும் என அடம்பிடிப்பதுதான் அறிவு நாணயமோ?
அறிவுநாணயம் என்ற சொல்லை பயன்படுத்த யோக்கியதை இல்லாத கூட்டத்தில் இருந்து கொண்டு அடுத்தவரை அறிவு நாணயமா? என்று கொச்சைப்படுத்துவதுதான் நாகரீகமா?
முடிந்தால், அறிவுநாணயம் இருந்தால் அரசியல்மாமாவுக்கு உரிமை இருக்கிறது என ஆதாரத்தைக் காட்டுங்கள்.
பெரியார் கருத்தை விற்பனை செய்வதே அயோக்கியத்தனம். அப்படி விற்கும்போது உங்களுக்குத் தான் உரிமை உள்ளது என ஆதாரத்தைக் கொடுக்க வேண்டாமா? அந்த அடிப்படை நாணயம் மற்றும் வியாபார ஒழுக்கமாவது வேண்டாமா?
நீதிமன்றத்திலேயே வெறும் 15 இலட்சத்துக்கு பெரியார் கருத்துக்களை விலைபேசும் வீரமணி, நாளை 25 இலட்சம் தந்தால் பெரியார் கருத்துக்கள் அனைத்தையும் அழித்துவிடமாட்டாரா?
எனவே வியாபாரத்திலும் மோசமான பித்தலாட்டமான ஒரு வியாபாரியான வீரமணியிடமிருந்து பெரியாரின் பழைய இதழ்களைக் காப்பாற்ற வேண்டும்.
வீரமணியே வாழும் பெரியார் என புகழும் கருணாநிதியிடமே கூட அவற்றை உரிமையாக்கலாம். ஏனென்றால் அவர் ஒரு நல்ல வியாபாரி. நாணயமான வியாபாரி.
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வழக்கு நாட்டுடமை ஆக்குவது பற்றியல்ல. குடிஅரசு தொகுப்பு வெளியிடுவது பற்றி. இதெல்லாம் தெரிந்து கொள்ளாமல் விமர்சிப்பது அறிவு நாணயமற்ற செயல்----
அதை முதலில் அந்த மொன்ன வெத்து ஊசியிடம் சொல்லுங்கள்.அததான் அப்படி உளறியிருக்கிறது.
Post a Comment