Search This Blog
17.2.09
கோயில்களைக் கட்டியதே சாதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்.!
இந்த நாட்டில் மனிதன் தாழ்ந்தவனாக, சூத்திரனாக, பார்ப்பானுக்கு எதனால் இருக்கிறான் என்றால் கடவுளால் மதத்தால் தான். மத ஆதாரங்களைப் பார்த்தால் கடவுள் தான் சூத்திரனை உண்டாக்கி இருக்கின்றான். தீண்டத்தகாதவனை உண்டாக்கி இருக்கிறான். பார்ப்பானை உண்டாக்கி இருக்கிறான். அதோடு மட்டுமல்ல. பின்பற்றுகின்ற மதப்படியும் நீ பறையன், சூத்திரன் பார்ப்பானாக்கி இருக்கின்றான்.
கிருஸ்துவன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது. நீ வணங்குகின்ற கடவுளை வணங்குவது கிடையாது. துலுக்கன் உன் மதத்தைப் பின்பற்றுவது கிடையாது. நீ வணங்கும் கடவுளை வணங்குவது கிடையாது. ஆனதால் அவனிடம் பறையன் சூத்திரன் பார்ப்பான் இல்லை.
இந்து மதத்தைப் பின்பற்றுவதால் தான் இந்துக் கடவுள்களை வழிபடுவதால் தான் நீ சூத்திரனாகின்றாய். அவற்றை விட்டுவிட்டு என்று நீ வெளியேறுகின்றாயோ அன்று தான் மனிதாக முடியும். மதிப்பிற்குரிய கணேசன் அவர்கள் சாதி ஒழிய சில வழிகளைச் சொன்னார். அவர் சொன்ன அதுமட்டும் போதாது அது சாதியை ஒழிக்காது. வேண்டுமானால் சமூதாயத்தை ஒன்றாக்கலாம். முதலியார் ரெட்டியார், கவுண்டர் அகமுடையார் கள்ளர் என்பதில் கலப்பு மணம் செய்து கொள்வதால் நம் சூத்திரத்தன்மை நீங்கிவிடாது. நாம் முதலியாரை செட்டியாரைப் பார்த்தால் குளிப்பது கிடையாது. அவர்கள் ஒருவர் வீட்டில் ஒருவர் சாப்பிடாமல் இருப்பது கிடையாது. அந்தஸ்தில் பேதம் பாராட்டப்படுவது கிடையாது. சமமாகவே பாவித்துப் பழகி வருகின்றனர்.
சிலர் சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டு சாதி ஒழிய வேண்டும் என்றால் எப்படி ஒழியும்? இந்தக் கோயில்களைக் கட்டியதே சாதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். சட்டத்திலே மாற வேண்டும். தீண்டாமை கிடையாது. கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம் யார் வேண்டுமானாலும் சாமி சிலையைத் தொடலாம் பூசை செய்யலாம் என்றாக வேண்டும். அப்போது தான் சாதி ஒழியும் - தீண்டாமை ஒழியும்.நாம் பல ஆண்டுகாலம் மக்களிடையே இருக்கிற இழிவு மானமற்றத் தன்மை ஆகியவற்றை எடுத்துச் சொல்லிப் பிரச்சாரம் செய்து பார்த்தாகிவிட்டது. இன்னமும் மனிதன் மாறவில்லை. நம் பிரச்சாரத்திற்கு இருக்கிற விளம்பரத்தை விட சாதியைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற பிரச்சாரத்திற்கு விளம்பரமும், பணக்காரர், பத்திரிக்கைக்காரர் ஆதரவும் இருப்பதால் நம் பிரசாரம் பரவ முடியாமல் - மக்களிடையே சொல்ல முடியாமல் இருக்கின்றது. இனிக் காரியத்தில் இறங்க வேண்டும். கிளர்ச்சியில் ஈடுபட வேண்டும். அப்போது தான் நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கு நம் மக்கள் தயாராக இருக்க வேண்டும். நம்மைத் தவிர இதை எடுத்துச் சொல்லவோ, இதற்காக கிளர்ச்சியில் ஈடுபடவோ வேறு எவருமே கிடையாது. நம் இழிவைப் பற்றிச் கவலை காங்கிரசுக்கு இல்லை ஜனசங்கத்துக்கு இல்லை சுதந்திராவுக்கு இல்லை. இங்கிருக்கிற கம்யூனிஸ்ட்டுக்கும் இல்லை. நம் இயக்கம் ஒன்று தான் இதற்காக உயிருக்குத் துணிந்து எதிர்ப்புகளுக்கிடையே தொண்டாற்றிக் கொண்டு வருகின்றது.
------------- தந்தைபெரியார் - "விடுதலை" 18-06-1969
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
//சிலர் சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டு சாதி ஒழிய வேண்டும் என்றால் எப்படி ஒழியும்? இந்தக் கோயில்களைக் கட்டியதே சாதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான். சட்டத்திலே மாற வேண்டும். தீண்டாமை கிடையாது. கோயிலுக்குள் யார் வேண்டுமானாலும் போகலாம் யார் வேண்டுமானாலும் சாமி சிலையைத் தொடலாம் பூசை செய்யலாம் என்றாக வேண்டும். அப்போது தான் சாதி ஒழியும் - தீண்டாமை ஒழியும்.//
பெரியாரின் பெரும்பணியை பாத்து வியப்பு ஏற்படுகிறது
//இந்து மதத்தைப் பின்பற்றுவதால் தான் இந்துக் கடவுள்களை வழிபடுவதால் தான் நீ சூத்திரனாகின்றாய். அவற்றை விட்டுவிட்டு என்று நீ வெளியேறுகின்றாயோ அன்று தான் மனிதாக முடியும்.//
மதம் மாய்ப்போம்! மனிதம் காப்போம்!
Some of these arguments of EVR are plain wrong and just angry statements without any substance. Christianitty and Islam too had their share of evil practices (These religions too had blessed and supported slavery and all sorts of ridiculous superstitious practices in other parts of the globe before coming to India). It is certainly not true that temples were constructed to promote casteism. Temples existed even before the arrival of caste based disriminations. Almost all the tribes in the world have (have had) temples of their own.
If you have guts, talk boldly about Islam and Christainity in public or blog. Be bold enough to criticize them.. Cant do it right ?? coz., they will cut your "Ding"... So, Hinduism is the religion like bean bag that every dog like you can punch?? Better close this blog and start writing something educational for kids and future generation..
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தமிழ்
திருநாவு
செந்தில்,
வெங்கடேஸ்
தமிழில் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
Post a Comment