Search This Blog
17.2.09
பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா? -1
ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.
தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.
இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.
--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்
இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)
தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்
------------------------------------------------------------------------------------
சிதம்பரம் கோயில் பற்றிய உயர்நீதிமன்றத்
தீர்ப்பும் பிரேமா நந்தகுமாரின் எரிச்சலும்!
'தினமணி'யில் (14.2.2009) பிரேமா நந்தகுமாரின் கடிதம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்தக் கடிதத்தை நீங்கள் தெரிந்து கொள்ளுவதற்கு முன் அவர் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?
பாரதியின் பொறுக்கி எடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தினமணி, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற உயர்ந்த ஏடுகளில் வியாசம் எழுதுகிற அப்பியாசம் உடையவர். திராவிட சிந்தனை நெறிகளுக்கு எதிராக வாழைப் பழத்தில் ஊசியைச் செருகுவது போல் எழுதக் கூடியவர். அம்மாள் பாரதியில் துறை போனவர்; ஆகையினாலே பாரதியைப் பற்றி நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா வெளியீடாக ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.
பிரேமா நந்தகுமாரின் எழுத்து எப்படி இருக்கும் என்பதற்கு உங்களுக்கு நாம் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்ல விரும்புகின்றோம். இவர் இந்து ஏட்டில் 24.5.1996இல் வரலாற்று ஆசிரியர் வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் பற்றி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். தீட்சிதர் திருக்குறளைப் பதிப்பித்ததை, (ஹ வசயளேடயவடி டிக கூசைரமமரசயட றயள யடளடி யீரடெளைநன லெ அ 1949) என்று எழுதி இருந்தார். வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர் என்னென்ன நூல் களைப் பதிப்பித்தாரோ அந்தப் பட்டியலில் திருக்குறளையும் இணைத்துவிட்டுப் போகாமல் (யடளடி) என்று எழுதி திராவிட சிந்தனை நெறிக்கு எதிரானவர் என்பதை வெளிப்படுத்திக் காட்டிக் கெண்டவர் இவர்.
இவர்தான் பிப். 14ஆம் தேதி தினமணியில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். இப்போது அந்தக் கடிதத்தைப் படியுங்கள்.
"தெய்வம் நின்று கொல்லும்
ஈஸ்வரோ ரக்ஷது என்று கூறும் தலையங்கம் (11.2.09) அன்றாடம் நாங்கள் காணும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் எனும் சொற்கோவை வெறும் வார்த்தையல்ல என்று நிரூபித்திருக்கிறது.
ரங்கநாதர் கோயிலை அரசாங்கம் எப்படி நடத்துகிறது என்பதைப் பார்த்தால் சிதம்பரம் எந்த வழி போகப்போகிறது என்று தெரியும். லட்சம், கோடி என்று பக்தர்கள் தரும் காணிக்கைகள் எங்கோ செல்கின்றன. பெரிய கோவிலில் எதற்கெடுத்தாலும் உபயதாரர்களைப் பிடித்துதான் திருநாட்களிலிருந்து அன்னதானம் வரை செலவு செய்தாகிறது.
புலவர் குழந்தையின் இராவண காவியத்தைப் புகழ்வதற்காக ராமனை விமர்சித்த அண்ணாவின் நூற்றாண்டுக்குக் கூட அரங்கர் கோவிலில் அன்னதானம் நடந்தது - ராம பக்தர்கள் கொடுத்த பணத்திலிருந்துதான்.
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்ணாவின் படம் இருக்கிறது. அரங்கன் திருவுருவம் இடம்பெறவில்லை. அண்ணா படம் ஏன் என்று கேட்டால் இது அண்ணா நூற்றாண்டு என்பதால் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பதில் கூறியதாகத் தெரிகிறது.
அரசாங்கத்தின் கையில் கோவில் அகப்பட்டால் இப்படிப் பல பரிபவங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சிவன் சொத்து குலநாசம் என்று சொல்வார்கள். தெய்வம் நின்று கொல்லும் என்று நாம் நம்புவதால், மவுனம் சாதிப்போம். காலம் இவர்களுக்குத் தக்க பதிலும் தண்டனையும் தரும் என்று எதிர்பார்ப்போமாக!
- பிரேமா நந்தகுமார், ஸ்ரீரங்கம்"
பிரேமா நந்தகுமாரின் கடிதத்தைப் பார்த்தீர்களா? தெய்வம் நின்று கொல்லுமாம் - இதுதான் திருவரங்கத்து அம்மாள் தினமணியில் எழுதிய லிகிதம்! இந்த அம்மாளின் கோபம் என்ன? அரசு கோவில்களை எடுத்துக் கொண்டால் நிர்வாகம் சரியில்லை. விக்டோரியா மகாராணி வழங்கிய சாசன உரிமையை யெல்லாம் மீண்டும் புதுப்பிக்கக் கோருகிறார் போலும்.
இவர் எழுதிய கடிதத்தில் உள்ள முதல் பாராவில் தினமணி பிப். 11ஆம் தேதி எழுதிய தலையங்கத்தை அப்படியே வழி மொழிகிறார். தினமணி தலையங்கம் சொல்லுவது என்ன? கோவில் நிர்வாகம் சரியில்லை என்றால் அரசு, அதிகாரியை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறது தினமணி. ஆனால் அரசியல் வாதிகளால் கோவில்களில் ஏற்படும் நிர்வாகச் சீர்கேடுகளை வரவேற்க முடியாது என்றது தினமணி. நாமும் சீர்கேடுகளை வரவேற்பவர்கள் அல்ல. அதற்காகப் பராசக்தி பட உரையாடல்; அதேபோல தலையங்கத்தில் மற்றொரு உரையாடல் என்று எழுதி திமுக அரசைத் தாக்குவதுபோல கூறுவது சரியல்லவே. நிர்வாகச் சீர்கேடுகள் உண்மையிலே இருப்பின் எடுத்துக் காட்டலாம். அதற்காக திருப்பதி தேவஸ்தானத்திற்குப் போய்விட்டுத் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அவசியமில்லை.
சிதம்பரம் கோவில் வழக்கு என்பது - திராவிட இயக்கம் அமைப்பாகத் தோன்றுவதற்கு முன்பாகவே நடைபெற்று வந்தது ஆகும். அதன் தொடர்ச்சி பல கட்டங்களாகி இன்று திமுக அரசின் காலத்தில் தீர்ப்பு வந்து இருக்கிறது. கோவில்கள் பொதுக் சொத்தாக இருக்கவேண்டும் - மக்கள் சொத்தாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு நிர்வாகம் செய்கிறது; தலையிடுகிறது; ஆக்கிரமிப்பு அதிகமாகிற போது அரசு எடுத்துக் கொள்கிறது. இதில் தவறு என்ன? எல்லாத் தட்டு மக்களும் வர்ண பேதமின்றி கோவிலில் அனுபவிக்க உரிமை அரசு எடுத்துக் கொள்வதால் இயல்பாகிவிடுகிறது.
ஆனால் கோவில்களை அரசு ஏற்கக் கூடாது என்று சொல்லுபவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அதனை மறைமுகமாகச் சொல்லுகிறது தினமணி; வழிமொழிகிறார் பிரேமா நந்தகுமார். திராவிட இயக்கத்தார் நிலத்தில் யார்க்கும் அஞ்ஞாத நெறிகளை அர்த்தமில்லாதவை என்று சொல்லுபவர்களா? இல்லையே, நாளுக்கு நாள் ஆரிய சிந்தனை நெறி ஏதாவது ஒரு விதத்தில் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. பல இடர்ப்பாடுகளுக் கிடையே திராவிட இயக்கம் முன்னோக்கிச் செல்லுகிறது. இப்படி முன்னேறுவது தினமணிக்கும் பிடிக்குமா? பிரேமா நந்தகுமார் போன்ற மேட்டுக் குடியினர் வரவேற்பார்களா?
ஆகவே அவர்கள் ஈஸ்வரோ ரக்ஷது என்று அலறுகிறார்கள், ஆண்டவனை அழைக்கிறார்கள். சிறுபான்மையினராக இருந்து துய்த்த அதிகாரம் பறிபோகிறபோது கூச்சல் இடுகிறார்கள். அத்தகைய கூச்சலின் ஒரு வகையைத்தான் பிரேமா நந்தகுமார் தமது சிறிய கடிதத்தின் வாயிலாக எழுப்பி இருக்கிறார்.
ரங்கநாதர் கோவில் அரசு நிர்வாகத்தில் இருக்கிறது. இலட்சம், கோடி என்று காணிக்கைகள் வருகின்றன. அவை எங்கோ செல்கின்றன. அதுபோல்தான் சிதம்பரம் கோவிலும் ஆகப் போகிறது என்கிறார் பிரேமா நந்தகுமார். இலட்சமும், கோடியுமாக திருவரங்கத்து கோவிலில் ஊழல் நடந்து இருந்தால் அதனை எழுத இந்துவும், தினமணியும் பிரேமா நந்தகுமார்க்கு நேசக் கரம் கொடுப்பார்களா? அது மட்டுமா? பாஜகவும் சங் பரிவாரங்களும் பெருமளவு காப்பாற்ற 11ஆவது அவதாரமல்லவா எடுப்பார்கள்? அப்படி ஊழல் நடைபெற்று இருந்தால் பிரேமா நந்தகுமார் மக்கள் மன்றத்திற்கு ஊழலைக் கொண்டு வந்து இருக்கலாமே! தெய்வத்தை அழைப்பானேன்?
ஸ்ரீவைஷ்ணவிக்கு சிவபக்தி முற்றிவிட்டது போலும்! ஆகவே சிதம்பரத்தை நாடி,
இன்னம் ஒருதலம் இன்னம் ஒரு கோயில்
இன்னம் ஒரு தெய்வம் இப்படியும் உண்டோ
எனச் சீர்காழி முத்துத்தாண்டவரின் கீர்த்தனையை இசைக்கிறது மாதிரியான நிலைக்கு அவர் ஆளாகி எழுதினால் கூட ரங்நாதர் செய்யாததை, இனி சிவபெருமான் பிரேமா நந்த குமாரைக் சிக்கெனப் பிடித்துக் கொள்வார் போலும் என்று நாமும் இருந்துவிடலாம். ஆனால் பிரேமா நந்தகுமாரின் பரந்த ஆன்மிகம் அதுவன்று, கடந்த பிப். 2ஆம் தேதி, சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர்களின் தனிச் சொத்தல்ல. அரசு நிர்வாக அலுவலர் பொறுப்பேற்றுப் பணியாற்றிட வேண்டும் என்று நமது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரசு அதிகாரிகளும் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். சிதம்பரம் கோவில், மக்கள் சொத்தாக ஆக்கப் பட்டுவிட்டது. இந்தத் தீர்ப்பைப் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீவைஷ்ணவி அங்கலாய்க்கிறார்.
கோவில்கள் பொதுச் சொத்து ஆக்கப்படவேண்டும் அவை மக்களுக்கு உரிமையாக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நோக்கமே தவிர, அங்கே ஊழல் நடைபெறவேண்டும் என்பது நமது நோக்கமல்ல. ஊழல் நடைபெற்றால் அதை அம்பலப் படுத்த வேண்டியது பொறுப்பானவர்களின் கடமை. ஒரு சிறந்த நடவடிக்கைக்கு குற்றம் சொல்லுவதும், அரசு மேற்கொள்ளும் முறைக்கு எதிராக எதையாவது எழுதுவதும் சரியானதாக இருக்க முடியாது.
நீதிக்கட்சி காலத்தில் பலத்த எதிர்ப்புக்கிடையில் வழக்கு வியாஜ்ஜியங்களுக்கு மத்தியில் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது, இதற்குப் பிறகு ஸ்ரீவைஷ்ண வரான ஸ்ரீமான் இராஜாஜி பிரதமராகவும், முதல்வராகவும் இம்மாகாணத்தை ஆண்டாரே, அப்போது ஏன் இந்த அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்ய ஏற்பாடு செய்யவில்லை? இதை பிரேமா நந்தகுமார் யோசித்துப் பார்க்க வேண்டும். கருவிலே திருவோடு பிறந்தவர்களுக்கு இது வெல்லாம் தெரியாமல் இருக்காது, தெரியும். அவர்களுடைய எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாக எவ்வளவு காலமானாலும் ஆரிய சிந்தனை நெறி வீழ்த்தப்படுகிறதே எனும்போது ஆத்திரப்படுகிறார்கள் பிரேமா நந்தகுமார் போன்ற அந்தப் பக்கத்து அறிவாளிகள்!
இரண்டாவதாக, பிரேமா நந்தகுமார்க்கு எவ்வளவு அறியாமை இருக்கிறது பாருங்கள். புலவர் குழந்தையின் இராவண காவியத்தைப் புகழ்வதற்காக இராமனை விமர்சித்த அண்ணாவுக்கு - அவர் நூற்றாண்டு விழாவின்போது அரங்கர் கோவிலில் அன்னதானம் நடந்தது - இராம பக்தர்கள் கொடுத்த பணத்திலிருந்து தான் என்று மனவேதனைப்பட்டு இருக்கிறார். புலவர் குழந்தையின் இராவண காவியத்தைப் புகழ்வதற்காக அண்ணா இராமனை விமர்சித்தார் என்று பிரேமா நந்தகுமார் சொல்லுவது நமது இயக்கத்தைப் பற்றி அரை குறையாகத் தெரிந்து வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறார் என்றுதான் நாம் அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
1927-28-லேயே மநுஸ்மிருதியை நமது இயக்கம் எரித்து இருக்கிறது. அப்போது இராஜாஜி, சில பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள இது உதவும் என்று எழுதினார். கம்பராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை எரிப்பதற்கான இயக்கத்தை நாம் 1942இல் தொடங்கினோம். அப்போது பெரியார்,
கம்பனைப் போல பழங்காலத்துப் புலவர்கள் ஆரியர்களின் புகழைப் பாடியிருக்கிறார்கள். ஆகவே தமிழனின் சுயமரியாதை மதிக்கப்படவில்லை. தமிழ்ப் புலவர்களுள் கம்பனைப் போல இருப்பவர்களுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?
எதிர்காலத்தில் தமிழகத்தில் ஓர் அரசு மலருமானால் கம்ப ராமாயணம் படிப்பதைத் தடை செய்ய வேண்டும். தமிழரின் பெருமையைச் சிதைத்த அப்புத்தகத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டும்
என்று பேசினார். இப்படிக் கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டையில் பெரியார் பேசினார். இக்காலகட்டத்தில் புலவர் குழந்தையின் இராவண காவியம் வெளிவரவில்லை. பெரியாரின் பேச்சையொட்டி இதே காலகட்டத்தில் அறிஞர் அண்ணா கம்ப ராமாயணத்தைக் கண்டனம் செய்து கூட்டங்களில் பேசினார். சொற்போர் நிகழ்த்தினார். அவரது திராவிட நாடு இதழில் டோஸ்-1, டோஸ்-2 என்று தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினார். அதுவே பின்னாளில் கம்பரசம் எனும் பெயரில் நூலாக வெளிவந்தது. அப்போதெல்லாம் இராவணகாவியம் வெளிவரவில்லை. இராவணகாவியம் 1948இல் தான் வெளிவந்தது. இதற்கு முன்பே நாம் இராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றிற்கு நமது கொள்கைப்படி பேசி இருக்கின்றோம். புலவர் குந்தையைப் புகழ்வதற்காக அண்ணா இராமனை விமர்சிக்கவில்லை. இராவண காவியம் வெளிவருவதற்கு முன்பே அண்ணா இராமனை விமர்சனம் செய்து இருக்கிறார். இராமன் கதாபாத்திரம் கடவுளுக்குரிய பாத்திரமல்ல அந்தத் தன்மை இராமனுக்கு இல்லை என்றே அவர் பேசினார்; எழுதினார்.
இயக்க நோக்கத்தை விளக்கி புலவர் குழந்தை காவியம் படைத்து வெளியிட்டபோது அக்காவியத்திற்கு முன்னுரையாக ஓர் ஆய்வுரையே எழுதி தந்து புகழ்ந்தார் அண்ணா! புலவர் குழந்தையை மட்டும் புகழ வேண்டும் என்பதற்காக அண்ணா இராமனை விமர்சிக்கவில்லை. இதை முதலில் பிரேமா நந்தகுமார் புரிந்துகொள்ளவேண்டும். ரங்கநாதர் கோவிலில் போடப்பட்ட அன்னதானம் அண்ணா பெயரால் நிகழ்த்தப்பட்டு இருக்கலாம். அது மக்களுக்குப் பயன்பட்டு இருக்கிறது. அது ஊழலோ, நிர்வாகச் சீர்கேடோ அல்ல. அண்ணா பெயரால் பசிக்கு உணவிடுவது - பஞ்சமா பாதகங்களில் ஒன்று அல்ல.
திருவரங்கம் கோவில் ஒப்பந்த புள்ளி விளம்பரம் பற்றி பிரேமா நந்தகுமார் குறிப்பிட்டு இருக்கிறார். கோவில் விளம்பரத்தில் எல்லாம் அண்ணாவின் படம் போடுங்கள் என்று திமுக அரசு ஆணையிட்டு இருக்க முடியாது. கட்சியும் தெரிவிக்காது. அப்படிப்பட்ட விளரம்பரத்தின் மூலம்தான் அண்ணா இனி உலகினர்க்குத் தெரிய வேண்டும் என்கிற நிலையில் அவரைத் திராவிட இயக்கம் விட்டு வைக்கவில்லை என்பதை பிரேமா நந்தகுமார் அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றோம். அண்ணா நூற்றாண்டு என்று ஆட்சியர் பதில் அளித்து இருப்பதாகத் தெரிகிறது என்றுதான் பிரேமா நந்தகுமார் சொல்லுகிறார். அதில்கூட அவர்க்குத் தெளிவு இல்லை.
தினமணி கடிதத்தின் கடைசி பாராவில் பிரேமா நந்தகுமார் சாபம் கொடுக்கிறார். நம்மை வீழ்த்துவதற்கு யாகம் செய்து பார்த்தார்கள். போட்டிக் கட்சியை நடத்திப் பார்த்தார்கள். அன்னிபெசண்டே ஆடிப்போனார். ஏடுகளை நடத்தி ஏசிப் பார்த்தார்கள். கூட்டம் போட்டு நம்மைப் போலவே பேசிப் பார்த்தார்கள். சங்கம் அமைத்து சதி செய்து பார்த்தார்கள். பாட்டுப் பாடினார்கள். நாடகம் போட்டார்கள். சினிமா படம் எடுத்தார்கள். இயக்கத்தையே உடைத்து ஸ்ரீவைஷ்ணவி ஒருவரைத் தலைவியாக்கியும் இருக்கிறார்கள். இதற்குப் பிறகும் திராவிட இயக்கம் காரம், மணம், குணம் கெடாமல் இருந்து வருகிறது. ஆகவே பிரேமா நந்தகுமாரின் சாபம் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
சிவன் சொத்து குல நாசம்தான் என்று பழமொழி சொல்லுவார்கள். அது எங்களுக்கு அல்ல; எடுத்து அனுபவித்தவர்களுக்கு! தெய்வம் நின்று கொன்று இருக்குமானால் உயர்நீதிமன்றத் திற்கோ, உச்சநீதிமன்றத்திற்கோ ஸ்கீம் சூட்டுகளுக்கோ எங்கள் வாழ்க்கைக்கு எதிராக பிரேமா நந்தகுமார்கள் சென்ற போதெல்லாம் அவர்களைத்தானே அந்த தெய்வம் கொன்று இருக்கவேண்டும்? அப்படிச் செய்யாமல் இருப்பதிலிருந்தே பிரேமா நந்தகுமார்கள் இன்னும் இருக்கிறார்களே, அது எப்படி?
ஆம்; கடவுள் இல்லை; இல்லை; இல்லவே இல்லை.
--------------- க. திருநாவுக்கரசு அவர்கள் 16-2-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அரசாங்கம் கோவில் நிர்வாகத்தை கையில் எடுத்ததிற்கு எதிராக தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கும் பிரேமா நந்தகுமார் என்பவரின் கட்டுரைக்கு எதிர்கருத்துகளை வைத்திருக்க்கும் திரு.நாவுக்கரசு அவர்கள் கருத்துகளிலும் குறையிருக்கிறது. கடவுள் உண்டோ, இல்லையோ, கோவில் என்பது பொது சொத்து. மக்கள் சொத்து. க்லாசாரத்தின் சின்னங்க்ள்; கோவிலாகட்டும், மசூதியாகட்டும், தேவாலயங்க்கள் ஆகட்டும்; கல்வி கூடங்கள் ஆகட்டும், கல்லூரிகள் ஆகட்டும், சாலையாகட்டும், பொது கழிப்பறைகளாகட்டும் (இவைகள் எல்லாம் தனியார் வசம் இருப்பினும்), இவ்விடங்களில் எல்லாரும் சமம். வேற்றுமை பார்க்ககூடாது; சாதி மதம், ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை பேதங்களுக்கு இடம் இருக்க கூடாது; வியாபாரத்தனம் இருக்ககூடாது; அப்படி இருப்பின் அரசாங்க்கம் நிர்வாகத்தில் தலையிட்டு அந்த வேற்றுமைகளை தவிர்க்கும் விதத்தில் சட்டங்கள் கொண்டு வர வேண்டும். இது எல்லா மத்திதினருக்கும் பொருந்தும்; ஆனால், தினமணி இதழ் குறிப்பிட்டுருப்பது போல, அரசாங்கத்தின் நிர்வாகத்தில் ஊழல் தலிவிரித்தாடுகிறது. கோவில்களின் நடுமையம் வரை கரைவேட்டிகளின் (காங்க்கிரஸ், பா.ஜ.க, முதல் திமுக வரை; திகவினர் கூட தேங்க்காய் வியாபாரமும், வீபுதி வியாபாரமும் செய்வதாக கேள்வி) குத்தகை வியாபாரம்தான் அனல் பறக்கிறது. அப்புறம் என்ன சொல்ல?
செந்தில்
//இவ்விடங்களில் எல்லாரும் சமம். வேற்றுமை பார்க்ககூடாது; சாதி மதம், ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை பேதங்களுக்கு இடம் இருக்க கூடாது; வியாபாரத்தனம் இருக்ககூடாது; அப்படி இருப்பின் அரசாங்க்கம் நிர்வாகத்தில் தலையிட்டு அந்த வேற்றுமைகளை தவிர்க்கும் விதத்தில் சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.//
நாங்கள் விரும்புவதும் அதுதான். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்(1971) என்று சட்டம் கொண்டு வந்தால் இன்று வரை அதை அமுல்படுத்த முடியாமல் கோர்ட்டுக்குப் போய் தடை வாங்குபர்கள் யார்? நாமா? பார்ப்பனர்களா?
சிதம்பரம் கோயிலையே அரசு எடுக்கக் கூடாது என்று த்டை வாங்கியவர்கள் நாமா? பார்ப்பனர்களா?
இது போல் இன்னும் பல
அதையெல்லாம்கூட விடுங்கள் ஆறுமுகசாமி கோயிலில் பாடக்கூடாது என்று அவரை அடித்து உதைத்தவர்கள் பார்ப்பனர்கள் தானே.
ஊழலை ஒழிக்க வேண்டியது அரசின் கடமை, அது எந்த நாட்டு அரசாங்கமாக இருந்தாலும், அதைக் காரணம் காட்டி நியாயமான உரிமைகளை யாரும் தடுக்கக்கூடாது என்பது தான் எங்கள்து நிலை.
தீட்சிதர்களின் கையில் இருந்த போது ஊழல் இல்லாத நிர்வாகம் இருந்துதா செந்தில்.
ஊழல் இல்லாத நிர்வாகம் அமைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
பார்ப்பனர்களின் கொட்டம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. கொட்டத்தை அடிக்கியாகவேண்டும் அதில் ஒன்றும் அய்யமில்லை.
பார்ப்பானின் சுயரூபத்தை எடுத்துச் சொல்லுபவர்கள் மீது பார்ப்பனர்கள் பாய்ந்து பிராண்டுகிறார்களோ இல்லையோ சில பார்ப்பனரல்லாத அதிமேதாவிகள் பாய்ந்து பிரண்டுகிறார்கள். என்ன செய்வது பார்ப்பன விசுவாசம் அப்படி.
//இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.
--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்//
பார்ப்பானைத் தொழுது கொண்டே இருந்த பயன் என்ன தெரியுமா?
இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் வரை நின்று கொண்டே தொழுத காஞ்சி சங்கராச்சாரிகள் கொலை பொம்பளை என்று வழக்குகளில் மாட்டி கோர்ட்டுக்கு போய் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் பார்ப்பானை தொழுது என்னன அசிங்கப்படமுடியுமோ அதெல்லாம் அசிங்கப்படுங்கள்.
பார்ப்பனர்களின் உண்மை முகத்தை தோலுரித்தால், பார்ப்பனர்கள் கோபப்படுகிறார்களோ இல்லையோ,பார்ப்பனரல்லாத பார்ப்பன அடிவருடிகள் கோபப்ப்ட்டு பிய்த்து பிராண்டுகிறார்கள். பார்ப்பனப் பாசம் அவர்களை அப்படி செய்ய வைக்கிறது.
பார்ப்பனர்களின் சுயரூபத்தை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து விட்டேன். மற்றவர்கள் உணர்வது எப்போது?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தமிழ்
திருநாவு
Post a Comment