Search This Blog

10.10.08

பாரதி கண்டது புதுமைப் பெண் என்றால் பெரியார் கண்டது புரட்சிப் பெண்



சந்தையில் மாட்டைப் பணம் கொடுத்து வாங்குகிறார்கள் திருமணம் என்ற பெயரால் பெண்ணை பணம் கொடுத்து விற்கின்றனரே
சமூகத்தில் நிலவும் அவலங்களைப் படம் பிடித்துக்காட்டி கோவை பாரதியார் பல்கலையில் தமிழர் தலைவர் அறிவார்ந்த உரை



கோவை பாதியார் பல்கலைக் கழகத்தில் செப். 22 அன்று பெண்ணடிமையைப் போக்குவோம் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் மீ.கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய வகையில் இங்கே சிறப்பான தலைமையை பாரதியார் பல்கலைக் கழகம் ஏற்று இருக்கிறது என்ற அருமையான சான்றினை நேரில் கண்டு மகிழ்ந்து, சென்ற பிறகும் இந்த மகிழ்ச்சியை அசைபோட்டு அசை போட்டுச் சிந்திக்கின்ற வகை யில் பெண்ணடிமையைப் போக்குவோம் என்ற கருத்தரங்கம் மூலமாக மகளிரியல் துறையின் மூலம் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிக்கு அருமையான தலைமை ஏற்ற ஆற்றல் மிகு பாரதியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர், எங்களுக்கெல்லாம் தோன்றாத் துணையாய் இருக்கக்கூடிய அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய அருமைச் சகோதரர் திருவாசகம் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே பெண்ணடிமையைப் போக்குவதற்கு சிறப்பான கருத்துகளை கூறி அமர்ந்திருக்கிற தமிழ் திரு தவத்திரு மகா சந்நிதானம் அடிகளார் அவர்களே, மகளிரியல் துறையை ஆளுமை செய்துவரும் திருமதி ஜெயரத்தினம் அவர்களே, பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் திருமால்வளவன் அவர்களே, பேராசிரிப் பெருமக்களே, மாணவ செல்வங்களே, ஆசிரியர்களே, சான்றோர்களே!

25 ஆண்டுகள் கழித்து அழைப்பு

25 ஆண்டுகள் ஓடி இருக்கின்றன. வெள்ளி விழா தாண்டி இருக்கிறது. எங்களைப்போன்றவர்கள் அழைக்கப்படிருக்கிறார்கள். நம்முடைய துணைவேந்தர் அவர்கள் அவருக்கே உரிய பாங்கில் ஒன்றைச் சொன்னார்கள். இங்கே நாங்கள் புகுந்த வீட்டில் சென்ற சகோதரி எப்படி எல்லாம் குடித்தனம் செய்கிறாள், அவர்களிடம் எப்படிப்பட்ட நல் உறவுகள் அங்கே நிலவுகின்றன என்பதைப் பற்றி பார்ப்பதற்காகத்தான் இவ்வளவு நாளைக்குப் பிறகு என்னுடைய அண்ணன் வந்து இருக்கிறார் என்று புகுந்தவர் சென்னார். உங்களுக்கெல்லாம் தெரியும். இனிமேல் வாழ்க்கைக்குள் புக இருக்கிற உங்களுக்கும் தெரியும். பிறந்த வீட்டில் இருந்து அடிக்கடி புகுந்த வீட்டிற்கு அண்ணன்கள் செல்லக்கூடாது. சென்றால், அது மிகவும் சங்கடத்துக்குரியதாய் கருதப்படக்கூடிய சமுதாயம் நம் சமுதாயம். ஆகவே தான் 25 ஆண்டுகள் கழித்து அது வரையிலே வரவில்லையென்றாலே சிறப்பான வகையிலே அவர்கள் இருக்கிறார்கள். அதனைப் பார்த்து மகிழவேண்டிய காலம் வந்து இருக்கிறது.

திருவாசகத்தைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை...

அந்த வகையில் இங்கு அவர்கள் நாளும் நிகழ்த்திக் கொண்டிருக்கிற சாதனைகளைப் பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.திருவாசகம் அவர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. மற்றவர்களை ஆங்காங்கே அடையாளம் காணுவதிலே தமிழகத்தின் தனிப் பெரும் தலைவர் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள், இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்ற குறளுக்கேற்ப யாரை எப்படி எங்கே அடையாளம் காண வேண்டுமோ. அப்படிக் காணத் தவறாதவர்கள்.
அப்படி அவர்களாலே வெறும் வார்த்தைகளினால் பின்னாமல், வெறும் சொல் ஓவியங்களால் பேசாமல் ஒவ்வொரு முறையும் அதை எப்படி செய்வது என்று புள்ளி விவரங்களை தந்தார்கள். சாதனைகளை எதிரேயிருந்து பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. மிகப் பெரும்பாலோர் நம்முடைய மகளிராய் இருக்கிறார்கள். மூன்றில் ஒரு பாகம் ஆண்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மூன்றில் இரண்டு பாகத்தை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அது பெரியார் சொன்னதற்கு மேலாக உள்ளது.

பெரியார் விடுதிக்கு பெயரை அறிவித்திருக்கிறார்கள்

தந்தை பெரியார் 50 விழுக்காடுதான் சொன்னார். அதனால் காலங்காலமாக அது கட்டிலேயே இருந்த காரணத்தினாலே, கட்டு அவிழ்க்கப்பட்டு, கட்டு பிரிக்கப்பட்ட நிலையிலே உரிமைகள் என்பவைகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு பாராட்டுகள். அதுபோல் இந்த அரங்கத்திற்கு பெரியார் பெயர், விடுதிக்கு பெரியார் பெயரை அறிவித்திருக்கிறீர்கள்! உலகமெங்கும் இருக்கும் பெரியார் தொண்டர்கள் சார்பாக எங்களது தலைதாழ்ந்த நன்றி பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தருக்கு, ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு! பேராசிரியர் பெருமக்களுக்கு! மாணவச் செல்வங்களுக்கு தலை தாழ்ந்த நன்றி! நன்றியுணர்ச்சியைக் காட்டுவது தமிழனிடத்தில் அரிதாகப்போய்க் கொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்திலே மிக அருமையாகச் செய்திருக்கிறீர்கள்.

தெருவாசகத்தைப் பார்த்த எங்களுக்கே இந்தத் திருவாசகங்கள்!

குறிப்பாக எங்களைப் போன்றவர்களை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள் என்று சொன்னாலே, அது ஒரு தனித்திருப்பமாகும். தெரு வாசகத்தை மட்டும் நாங்கள் படித்துப் பார்க்கிறவர்கள். அதிலே எங்களைத் தாக்கித் தான் பல செய்திகள் இருக்குமே, தவிர, பாராட்டி உற்சாகப்படுத்த வில்லை. அதற்கு மாறாக, தெருவாசகத்தை பார்த்து பழக்கப்பட்ட எங்களுக்கு இந்த திருவாசகங்கள் இனிமையாக காதிலே தேன் வந்து பாய்ந்தது என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னது போல அந்த சிறப்பான வாய்ப்புகள் ஏற்பட்டது. அதற்காகவும் நான் நன்றி செலுத்த கடமைப் பட்டிருக்கின்றேன்.


இந்தக் கோணத்தில் யாரும் சிந்தித்தில்லை

பெண்ணடிமையைப் போக்குவோம் என்ற உறுதியோடு, நீங்கள் தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்! பெண்ணடிமையைப் போக்கியே ஆகவேண்டும். அப்போதுதான் ஆண்கள் சிறப்பாக வாழமுடியும்! இந்தக் கோணத்தில் யாரும் சிந்திந்ததில்லை - தந்தை பெரியாரைத் தவிர! ஆண்கள் சிறப்பாக வாழவேண்டுமானால், பெண்கள் அடிமைகளாய் இருக்கக் கூடாது. ஆண்களுடைய சுயநலத்தைக் கருதியே பெண்கள் சுதந்திரமாக இருக்கவேண்டும். சமத்துவமாக இருக்கவேண்டும். நல்ல வாய்ப்போடு அவர்களுக்கு எல்லாக் கதவுகளும் திறக்கப்பட வேண்டும் என்பதை அற்புதமாக தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, பெரியார் அவர்கள் பெண்ணுரிமையை சிந்தித்த அளவுக்கு வேறு யாரும் சிந்தித்ததே கிடையாது. பெட்ரண்டுரசல் உட்பட இது பல பேருக்கு தெரியாது. அவர்களுடைய ஆங்கிலக் கருத்துகள் இன்னமும் கூட தந்தை பெரியார் அவர்கள் பெண்ணுரிமையைப்பற்றி சிந்தித்தக் கருத்துகள் செரிமானம் செய்து கொள்வதற்கு 21-ஆவது நூற்றாண்டில் இன்னமும் பக்குவப்பட முடியாத அளவுக்கு அவர்கள் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவுக்கு எல்லை வகுத்துக் கொண்டவர்கள் அல்ல

அவர்கள் புரட்சியின் எல்லையைத் தாண்டி சென்றவர்கள், அறிவுக்கு எல்லை வகுத்துக் கொண்டவர்கள் அல்ல. மனிதநேயத்தோடு தந்தை பெரியார் பெண்களைப் பார்க்கிறார். அப்படிப் பார்க்கிற நேரத்திலே அவர்களுக்கு வேறுபாடு ஏன் என்று நினைக்கிறார் கள். பெரியார் சுய மரியாதை இயக்கம் தொடங்கியதன் அடிப்படையே பேதம் இருக்கக் கூடாது! பிறவியின் அடிப்படையில் பேதம் என்ற சொல் லிலே, ஜாதி மட்டும் வருவதில்லை. ஜாதியை மட்டும் நினைத்துக் கொண்டார்கள் ஆண்கள். பெரியார் அதே ஆண்களைப் பார்த்து சொன்னார்கள். அடிப்படையிலே பேதம் இருக்கக்கூடாது என்று சொன்னதற்கு உண்மையான பொருள் என்னவென்று சொன்னால் பிறப்பினால் பேதம், ஆணாகப் பிறந்தக் காரணத்தால், அவன் எஜமான், பெண்ணாகப் பிறந்தக் காரணத்தால் அவள் அடிமை என்ற கருத்து இருக்கக் கூடாது என்பதை ஆழமாக தெளிவாகச் சொன்னாககள்.

62 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் சொன்னக் கருத்து

ஒரே ஒரு சிறப்பை இந்த ஆண்டு நாங்கள் வெளியிட்டிருக்கிற விடுதலை 130-ஆம் ஆண்டிலே வெளியிடப்பட்ட பெரியார் பிறந்தநாள் மலரில் கூட நான் எடுத்துக் கையாண்டிருக்கின்றேன். எப்படிப்பட்ட உரிமைகளால் பெண்களுக்கு விடுதலை கிடைத்திருக்கின்றன? காலங்கள் வேகமாக சுழன்று, இந்த சமுதாயப் புரட்சி சரித்திரத்திலே நிலைநாட்டப்பட்டிருக்கின்றது என்பதை விளக்குகின்ற அந்த நேரத்தில் தந்தை பெரியார் 1946-ல் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இங்கே இருக்கின்ற பலர் பிறக்காத காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் 62 ஆண்டு களுக்கு முன்சொன்ன ஒரு கருத்து எவ்வளவு மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டவை! நம்முடைய மாணவச் செல்வங்கள் அறிந்து கொள்ளவேண்டும்! பெண்களைப்பற்றி, பாலியல் நீதியைபற்றி சொல்லுகிற நேரத்திலே சமூக நீதியும், பாலியல் நீதியும் பிரிக்கப்பட முடியாதவை! பிரித்துப் பார்க்கக்கூடாதவை! அந்த வகையில் மனித சமுதாயத்தில் பெண்கள் - ஆண்களுக்கு ஒப்புவமை கொண்டவை என்பேன், குழந்தைப் பருவம் முதல், ஓடிவிளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்து முற்றும் பேத உணர்ச்சியேயற்று கருதி நடத்துகிறோம். பழகுகிறோம். தம்முடைய வீட்டுக் குழந்தைகளை அது ஆண் குழந்யை பெண் குழந்தையா என்பதை வேறுபடுத்திக் கொள்வதில்லை.

அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள்

முத்தம் கொடுத்துக் கொஞ்சுகிறோம். இப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும், பக்குவமும் அடைந்தவுடன் இந்த மனித ஜீவிகள் குழந்தைகள் என்ற கட்டத்தைத் தாண்டி அடுத்தக் கட்டத்திற்கு சொல்லுகிறார்கள். சொல்லுகிற நேரத்திலே அவர்கள் மனித ஜீவன்கள், அறிவும், பக்குவமும் அடைந்தவுடன் அவர் களைப்பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொஞ்சுகிறார்கள்! இந்தப் பெண்ணைப் பற்றி! பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள்! அய்யோ உனக்கு திருமணமாக வேண்டுமே! உனக்கு நல்ல வகையில் அமைய வேண்டுமே! நீ கல்லூரி படிக்கும்போது உனக்கு சங்கடம் வந்தவிடக் கூடாது என்றெல்லாம் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறார்கள்.

பொம்மை வாங்குவது போல

ஒரு பையனைப்பற்றி அவ்வளவு கவலைப்படுவதில்லை எந்தப் பெற்றோரும். ஆனால், ஒரு பெண்ணாய் அமைந்துவிட்டால் எப்படிக் கவலைப்படுகிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் ஓர் அற்புதமான சொல்லாட்சியை கையாளுகிறார்கள். அந்தப் பெண்ணைப்பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, சமுதாயத்தில் வேறாக்கி அதை ஒரு பொம்மையாக்கி எண்ணிப் பாருங்கள். மனித ஜீவன்களாய் இருந்தவர்களை உயர்த்த வேண்டும். பிறகு பக்குவப்பட்டு வந்த பிறகு பொம்மை! ஒரு பொம்மைக் கடைக்குப் போய் அந்த பொம்யை வாங்குவது போல அங்கேயாவது பொம்மையை வாங்குவதற்கு விலை கொடுக்கிறார்கள்! ஆனால், வாங்குகிறவனுக்கு விலை கொடுக்கின்ற கொடுமை அவல நிலை இந்த சமூகத்தில் இருக்கிறதே.

பெண்ணைக் கொடுக்கின்றவன் கண்ணைக் கொடுப்பதுபோலக் கொடுத்தும்!
எனது அருமை மாணவச் செல்வங்களே, எதிர்காலத்தில் திருமணச் சந்தைக்கு உங்களை அழைத்துப் போகிற நேரத்திலே நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டிய மிக அற்புதமான செய்தி! மாட்டை விட கேவலம். மாட்டுச் சந்தைக்கு அழைத்து போகிற நேரத்திலே மாட்டை விற்று பணம் பெறுகிறான்! இன்னொருவனுக்குக் கொடுக்கின்றான்! ஆனால், இங்கே பெண்ணைக் கொடுக்கிறவன் கண்ணைக் கொடுத்ததுபோல அதையும் கொடுத்துவிட்டு, பெண் கேட்கிறவன் கேட்கிறான் ஒரு பட்டியல்! நீண்ட பட்டியல் அய்.ஏ.எஸ். ஆக இருந்தால் இவ் வளவு? நீதிபதியாக இருந்தால் இவ்வளவு! வகைவகையாய் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதுபோல வரதட்சணை என்ற சொல் இருக்கிறதே இது தமிழனுக்குரிய பண்பாடா? எண்ணிப் பார்க்கவேண்டும். அவர்களை பொம்மையாக்குவதை விட்டுவிடுங்கள். அருள்கூர்ந்து நீங்கள் மன்னிக்கவேண்டும். இது ஒரு சமுதாய விஞ்ஞான பிரச்சினை. எனவே மகளிரியல் துறையிலே இருப்பவர்கள் ஆழமாகச் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள்.


ஆண்களுக்கு அழகு போட்டி நடத்தியிருக்கின்றார்களா?

என்னவென்று சொன்னால், பெண்கள் அலங்காரப் பொம்மைகளா? என்று தந்தை பெரியார் கேட்டு அந்த முறை வந்திருக்கிறது. தன்னை அலங்கரித்துக் கொள்வதற்காக செய்யப்படும் நேரம் செலவு எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள்! எப்படி எப்படி அலங்கரித்துக் கொள்கிறார்களோ அதுபோல் உங்களுக்கு நல்ல துணிக்கடையில் அலங்கரித்தது போல இதுவரை அழகிப்போட்டி நடத்தியிருக்கின்றார்களே தவிர, ஆண்களுக்கு அழகன் போட்டி நடத்தியிருக்கிறார்களா? அருள்கூர்ந்து அருமைச் செல்வங்களே, எண்ணிப் பாருங்கள்.
அழகு மாறக்கூடியது அறிவு வளரக்கூடியது
அழகு மாறக்கூடியது. அறிவு வளரக்கூடியது. மாறக்கூடிய அழகு 22 வயதிலே இருந்த அழகு 42 வயதிலே இருக்குமா? அழகு என்பது ஒருவர் கண்ணுக்கு இருப்பது இன்னொருவர் கண்ணுக்கு இருக்க முடியுமா? அழகு என்பது இருக்கிறதே, அதை ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமானால், ஐவ ளை ய சநடயவஎந வநசஅ - ஐவ ளை ய ளரதெநஉவஎந யளயீநஉவ இதைத்தான் எண்ணிப் பார்க்க வேண்டும். எனவே அந்தக் கறுப்பு எனக்கு கலராக இருக்கிறது. கறுப்பு ஒருவருக்கு சிறப்பு. ஆனால், இன்னொருவருக்கு கறுப்பு வெறுப்பாக இருக்கும்.

பாரதி கண்டது புதுமைப்பெண்
பெரியார் கண்டது புரட்சிப்பெண்


சிவப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றவர்கள் உண்டு. மற்ற நேரங்களில் வெறுக்கின்றவர்கள் கூட தலையிலே வெள்ளை வந்துவிட்டால் அதற்காக படாதபாடுபட்டு சாயங்களை துவைத்து, துவைத்து பலமணி நேரத்தை அவர்கள் செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இப்படியெல்லாம் உண்டு என்று சொல்லும் போது பெற்றோர்கள் கடைசியாக பொம்மைக்கு, பயனற்ற ஜீவனாக்கி எவ்வளவு மனித நேயத் தோடு அவர்கள் சிந்தித்திருக்கின்றார்கள், மனித நேயத்தோடு கவலைப்பட்டிருக்கின்றார்கள்? இவ்வளவு கவலைப்பட்டவர் இந்த சமுதாயத்தில் தந்தை பெரியாரைத் தவிர வேறு கிடையாது. நம்முடைய நாட்டிலே இதுவரையிலே பலபேருக்கு எளிதாக நாங்கள் கேள்விப்பட்ட சொற்கள் என்னவென்றால், பாரதி கண்ட புதுமைப்பெண், இந்த சொல்லாட்சிதான் கேள்விப் பட்டிருக்கிறோமே தவிர, அதற்குமேல் பெரியார் கண்ட புதுமைப்பெண் இதுவரையில் யாரும் பார்த்ததில்லை. பெரியார் அவர்கள் கண்ட பெண் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். பாரதி கண்டது புதுமைப்பெண். பெரியார் கண்டது புரட்சிப் பெண் என்பதை நீங்கள் தெளிவாக நினைத்துப் பார்க்க வேண்டும் (பலத்த கைதட்டல்).

எனக்கு போடப்பட்ட விலங்கை நானே உடைப்பேன்

எனக்கு எதற்கு தடைகள்? எனக்கு எதற்கு சங்கிலிகள்? எனக்கு எதற்கு விலங்குகள்? அந்த விலங்கை உடைப்பதற்கு எந்த ஆணும் துணை வரமாட்டான். நானே உடைப்பேன். நானே உடைத்தாக வேண்டும். இந்த உணர்வை பெண்கள் பெற்றாகவேண்டும் - அதைத்தான் சொல்கிறார்கள்.

சம்பளத்தை மனைவியிடமிருந்து வாங்குகின்றான்

பயனற்ற ஜீவனாக மாத்திரமல்லாமல், ஒரு தொல்லையான பண்டமாக்கிக் கொண்டு பெற்றோருக்கு ஒரு தொல்லை, தன்னுடைய பெற்றோர்களை நினைத்து நினைத்து சங்கடப் படுகிறீர்கள். அதுவரையிலே படிக்க வைத்து கணினிப் பொறி யாளராக்கி, அவர்களுக்கு சம்பளத்தைப் பெற வைத்து அதற்காக கடன் பெற்று அதற்கு ஏராளமான பணமும் கொடுத்து ஆடம்பரமான திருமணம் செய்த பிற்பாடு இந்தக் கடனை அடைக்கின்ற அடுத்த நிமிடத்திலிருந்து, புதிய ஏஜமான் ஆகிவிடுகிறான். வாங்குகிற சம்பளத்தை அப்படியே என்னி டத்தில் கொண்டுவந்து கொடு. உனக்கு உரிமை இல்லை என்று சொல்கிறானே.
வேலை செய்கின்ற அருமைச் செல்வங்களே, பேராசிரியப் பெருமக்களே, என்னுடைய தாய் தந்தையருக்குத்தான் முன் னுரிமை, உனக்கு அன்பால், வாழ்க்கைத் துணைவராக வந்தனே தவிர, வாழ்விணையராக வந்தவனே தவிர மற்றபடி முழு ஆதிக்கம் செலுத்த உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்றுகேட்கக்கூடிய துணிச்சல் உண்டா? இன்னமும் வரவில்லை.

பெரியார் பேனாவில் கசிந்த ரத்தம்!


21-ஆம் நூற்றாண்டிலும் நம்முடைய நாட்டிலே பெற் றோர்களுக்கு ஒரு தொல்லையான பண்டமாக்கிக் கொண்டு, அவர் அந்தத் தொல்லையினால் எவ்வளவு ஆழமாக, கவலை யோடு, கண்ணீர் வடிக்கின்ற நிலையிலே, பெரியாருடைய பேனாவிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது. அப்படிப் பட்ட உணர்வை அவர்கள் உண்டாக்க எழுதுகிறார். அவர்களை, அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் கவலைப்படத்தக்க சாதனமாக செய்துகொண்டு காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும், பெரு மையடையச் செய் யவும் வேண்டியதான ஒரு அஃறிணைப் பொருளாகவே ஆக்கி விடுகிறோம். இது என்ன நியாயம்? என்று கேட்டார். தயவு செய்து இந்தக் கருத்தை அருள்கூர்ந்து முக்கியமான இடத்தில் இந்தப் பல்கலைக் கழ கத்தில் எழுதிவையுங் கள். துணிச்சல்வரும். அப்போதுதான் அவர் களுக்கு ஆழமான சிந்தனைவரும். 29 ஆண்டுகளுக்கு முன் பெண்களுக்காக நாங்கள் தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியை தஞ்சை வல்லத்திலே தொடங்கினோம்.

பெரியார் பாலிடெக்னிக் சிறந்த பாலிடெக்னிக்

தனியார் துறையில் இன்றைக்கு 29-ஆவது ஆண்டிலே கூந நௌவ ஞடிடலவநஉஉ கூயஅடையேனர என்று அண்மையிலே அதற்கு பரிசு கிடைத்தது. முதல் அவார்டு என்ற முறையிலே. நம்முடைய முதல்வர் அவர்கள் தலைமையிலே 2000-த்திலே - கனடா நாடு சர்வதேச அளவிலே அது உலக அளவிலே கூந க்ஷநளவ ஞடிடலவநஉஉ என்ற அதன் சிறப்பை 2000-த்திலேயே அந்தப் பாலிடெக்னிக் மகளிர் கல்லூரிக்கு வழங்கியது.

மலரில் ஒரு கவிதையைப் படித்தேன்

முதன் முதறையாக நாங்கள் பாலிடெக்னிக் தொடங்கினோம் - பெரியாருடைய நூற்றாண்டை வைத்து, பெண்கள் படிக்க வேண்டும், சுதந்தரமாக அவர்கள் எழுச்சி பெறவேண்டுமானால், எழுந்து நிற்கவேண்டுமானால், ஆண் ஆதிக்கச் சமுதாயத்தி லிருந்து விடுபட வேண்டுமானால், அவர்கள் என்ன செய்ய வேண்டும், தொழில்நுட்பப் படிப்பைக் கொடுங்கள் என்று தந்தை பெரியார் அறிவுறுத்தினார்கள். அதை அவர் வெளிச்சம் போட்டு மேடையில் பேசிவிட்டுப் போகாமல், ஒரு கல்வியைக் கொடுப்போம். ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பமே படித்த தாகப் பொருள் என்று அவர்கள் சொன்ன காரணத்தினாலே நாங்கள் தனியார் துறையிலே எத்தனையோ சங்கடத்திலே அதை நாங்கள் நடத்திய நேரத்திலே மலர் வெளியிடுவது கல்லூரிகளில் வழமை. மலர் வெளியிட்ட நேரத்திலே ஒருமுறை மாணவிகள் கவிதை எழுதி அதிலே அச்சிட்டிருக்கிறார்கள். வெளியிடக் கூடிய அந்த வாய்ப்பை ஆண்டுவிழாவில் கொடுத்தார்கள். மலரைப் புரட்டிப் பார்த்தபோது ஒரு கவிதையைப் படித்தேன்.


அய்ந்து கணவனை எவ்வளவு சுலபமாகப்
பெற்றுவிட்டாய்..!


அப்போது பரவாயில்லை. பெரியாருடைய தத்துவத்தை நம்முடைய மாணவர்கள் - மாணவிகள் அற்புதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் மகிழ்ந்தேன். நாலே வரியில் தான் அந்த புதுக்கவிதை அமைந்திருந்தது. பாஞ்சாலியின் சபதம் - பாரதியார் கவிதைகளை நீங்கள் அடிக்கடி படித்திருப்பீர்கள். எங்கள் பாலிடெக்னிக்கில் இருந்து இரண்டு மாணவிகள் புதுக்கவிதை எழுதி அதிலே அவர்கள் அச்சிட்ட நாலு வரி ஓ பாஞ்சாலியே! ஒரு கணவனைப் பெறுவதற்கே நாங்கள் திண் டாடிக் கொண்டிருக்கிறோம். அய்ந்து கணவர்களை எவ்வளவு சுலபமாகப் பெற்று விட்டாய், ஓ, பாஞ்சாலியே, என்று கவி தையை முடித்தார்கள். அது கிண்டல் செய்வதற்காக அல்ல. அவர்கள் மனதிலே எவ்வளவு ஆழமான கவலை உணர்வுகள் உள்ளே பதிந்து கொண்டிருக்கின்றன. அங்கே உள்ளக் கிடக்கையின் உணர்வுகளுக்கு வெளிப்பாடு என்று அவர்கள் சொல்லக்கூடிய வகையில் இதை வெளியிட்டார்கள் என்று சொன்னார்கள்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

புத்தகத்திலே இருக்கும். ஆனால், நடைமுறைக்கு வருமா? பெரிதாக நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிடும். அப்போதுதான் அவர் செயலாற்ற வந்தார். எல்லோரும் சட்டத்திற்கு முன் சமம் என்று சட்டம் போட்டார்கள். Equality before Law, Equal opportunity for all என்று அவர்கள் போட் டார்கள். சட்டத்தின் முன்னாலே அனைவரும் சமம். எல்லோ ருக்கும் சம வாய்ப்பு. தந்தை பெரியார் அவர்களின் சுய மரியாதை இயக்கத்திற்கு தத்துவமே, அவர்கள் துவக்கிய தத்துவமே, இரண்டு சொற்களிலே அவர்கள் அடக்கினார்கள். அனை வருக்கும் அனைத்தும், எல்லார்க்கும் எல்லாமும், சமூக நீதி, சமதர்மம், எல்லோர்க்கும் எல்லாமும் என்ற வகையிலே வரும் போது நன்றாக ஆழ மாகச் சிந்திக்க வேண் டும். அம்பேத்கர் அவர் களுடைய அந்தச் சிந்தனை சட்ட அமைச்சராக இருந்தபோது, அரசியல் சட்டத்தை திருத்திக் கொடுத்து பயன்பெற்றார் என்று மேலெழுந்த வாரியாக உங்களுக்கு சொல்லுகிறார்களே.

அம்பேத்கர் எதிர்நீச்சல்


அவர்கள் எப்படி எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்கள். Hindu Code Bill என்ற இந்துச் சட்ட திருத்த மசோதா என்று பண்டிதர் நேரு அவர்களின் ஒப்புதலோடு கொண்டுவந்தார். சமாதானத்துக்கு பெயர் பெற்று பழமை சிந்தனைக்கு ஆளாவார்கள் காலைப்பிடித்து இழுத்தார்கள் அந்தக் காலத்தில். அதுதான். சிந்திக்க வேண்டிய ஒரு செய்தி. நீங்கள் நினைவிலே வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு குறிப்பான செய்தி. அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பதவியை விட பலருக்கு மனம் வருவதில்லை
எந்தப் பிரச்சினையிலே அவர் வெளியேறினார்? அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருக்கிறார். பல பேருக்கு பதவி என்றால் அதை விட மனம் வருவதில்லை. ஆனால், அம்பேத்கர் உலகம் பாராட்டக்கூடிய பெரியாரின் மறுபதிப்பு. பெரியாரும் அம்பேத்கரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயத்திலே எப்படி இரண்டு பக்கங்கள் இருக்கிறதோ, அதைப்போல அந்த இரண்டு தலைவர்களும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அப்படிப்பட்ட நிலையிலே நான் இனிமேல் இருக்க முடியாது என்று சொல்லுகிறார்கள். எந்த அடிப்படையிலே தெரியுமா?
பல பேருக்கு தெரியாது. பெண்களுக்கு சொத்துரிமை என்பதை Hindu Code Bill - “Hindu Law” என்று சொல்வதிலே Successon என்ற அந்த சொத்துரிமை வருவதற்குரிய - ஆண் ஒரு குடும்பத்தில் எப்படி சமமாக சொத்துக்களை பிரிக்க வேண்டுமோ அதேபோல பெண்களுக்கும் சொத்துக்கள் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்தார்கள். சட்டம் படித்த வர்களுக்குத் தெளிவாக தெரியும். அதை அவர்கள் வலியுறுத்தி னார்கள். ஆனால், இந்து தர்மப்படி இதற்கு அனுமதி கிடையாது. பெண்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

விட மனமில்லை எனக்கு

நெருக்கடியான நேரத்திலே நான் நின்று கொண்டிருக் கின்றேன். அடுத்த நிகழ்ச்சி இருக்கிறது வேறொரு ஊரிலே. இருந்தாலும் நீங்கள் அருமைச் செல்வங்கள். அற்புதமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்; விடமனமில்லை எனக்கு. ஆகவேதான் உங்களுக்கு சொல்லுகின்றேன், பெண்கள் என்று சொன்னால், உங்களுடைய நிலை என்ன? பெண் அடிமையைப் போக்குவோம் என்ற தலைப்பு பொதுவான தலைப்பு. பெண்ணடிமையைப் போக்குகிற முயற்சியை எடுத்தார் அம்பேத்கர். பெண்களுக்கு ஆண்களைப்போல் சொத்துரிமை வந்துவிட்டால் சுதந்திரம் வரும். அக்கருத்தை அவர்கள் வைத்து Hindu Code Bill இந்து சட்டத் திருத்த மசோதா கொண்டுவந்து திருத்தம் சொன்னார். ஏற்க மறுத்தார்கள். எனவே வெளியேறினார்.

கெயில் ஆம்வெட் என்ற அம்மையார்

யாருக்காவது நான் சொல்லுவதில் அய்யம் இருக்குமே யானால், அம்பேத்கர் அவர்களைப் பற்றி ஓர் அற்புதமான, அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் அம்மையார் கெயில் ஆம்வெட் என்பது அவரது பெயர். இந்து பத்திரிகையிலே நடுப் பக்கத்திலே அடிக்கடி கட்டுரை எழுதுவார். Social Justice என்று சொல்லக் கூடிய அந்த அம்சங்களிலே. மராத்தியரை திருமணம் செய்து கொண்டு புனேவுக்கு பக்கத்திலே, கிராமத்திலே இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னமும் பெரிய ஆராய்ச்சி யாளராக அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். அந்த அம்மையார் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் - டாக்டர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி. நூலகத்திலே இல்லாவிட்டால், அருள்கூர்ந்து வாங்கிவையுங்கள்.

அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் சொன்ன செய்தி!

அற்புதமான பகுதியை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நாடாளுமன்றத்திலே எழுதி, ராஜினாமா கடிதத்திலே முக்கிய மான பகுதியை எடுத்துக் கையாண்டு சொல்லுகிறார். பெண் களுக்கு ஆண்களைப் போல சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்ற கருத்தை நம்முடைய முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் ஏற்க மறுத்தார்.

நேரு கை விரித்துவிட்டார்

நேரு அதற்கு ஒன்றும் செய்யமுடியாது என்று கைவிரித்து விட்டார் கடைசியிலே. நான் இந்தப் பணியை செய்ய ஆரம் பித்ததே நேரு அவர்கள் துணையோடுதான் செய்ய ஆரம்பித் தேன். எதிர்ப்புகள் வளர ஆரம்பித்தவுடனே அவரால் அந்த எதிர்ப்புகளை சமாளிக்க முடியவில்லை. நீங்கள் விட்டுவிடுங்கள் என்று சொன்னபோது நான் விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை, வேண்டுமானால், பதவியை விட்டுப் போவேனே தவிர கொள்கையை விட்டுப் போவதற்குத் தயாராக இல்லை. ஆனால், அன்றைக்கு இந்தக் கொள்கையிலே அதைத்தான் மையப்படுத்தி வெளியே வந்தார்.. உங்களுக்குச் சொல்லுகிறோம்.

கலைஞர் அவர்கள் எடுத்த வியூகத்தால்

அருமை தோழியர்களே, 2005-லே கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தினாலே மத்தியில் மதவெறி ஆட்சி ஏற்படாமல் ஓர் அற்புதமான ஆட்சி கலைஞர் அவர்களுடைய வழிகாட்டு தலிலே, பிரதமர் மன்மோகன்சிங் தலைமை அமைச்சராக அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட அந்த நேரத்தில் சோனியா காந்தி அவர்கள் வழிகாட்டுதலினால், இந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்று வெற்றிகரமாக, வேகமாக நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்த கட்டங்களில் ஒன்று, எந்த உணர்ச்சியை சொன்னாரோ, அதேபோல இப்போது ஆண்களுக்கு சமமாக, என்ன உரிமையோ, அதே உரிமை பெண்களுக்கு சொத்துரிமை நிறைவேற்றப்பட்டுவிட்டது - பெரியார் வெற்றிபெற்றார்.

நகை உண்டா? நட்டு உண்டா?

பெண்ணடிமை அழிந்தது - உங்களில் பல பேருக்கு சாதரண மாகத்தான் உங்களுடைய உரிமைகளுக்கு போராடுகிறீர்கள். இவ்வளவு நாள் வாழ்ந்தோமே என்று பட்டுப்புடவைக்கு போராடுகிறீர்கள், ஒரு நகை நட்டு உண்டா? நகை வாங்கிக் கொடுத்து நட்டும் வாங்கிக் கொடுக்க வேண்டும், ஆகவே இது உண்டா? எத்தனை பேருக்கு அந்த உணர்வுகள் வந்திருக்கின்றன? அதுமட்டுமல்ல, வாடி போடி என்றழைத்து கணவன் என்னை கொடுமையாக நடத்தினார், சிறுமையாக நடத்தினார் என்று ஒரு சிறு மனு கொடுத்துவிட்டீர்களானால், அடுத்த நிமிடம் அவர் போலீஸ் ஸ்டேசனுக்கு போய் நிற்கக் கூடிய அளவுக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதென்றால், பெரியர் வெற்றி பெற்றார், அம்பேத்கர் வெற்றிபெற்றார். மனிதநேயம் வெற்றி பெற்றது என்று அதற்குப் பொருள் (கைதட்டல்). ஆகவேதான் இந்தச் சமுதாயத்தினுடைய அடித்தளத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். வர்ணாசிரம தர்மம் பற்றி நம்முடைய அடிகளார் சொன்னார்கள் அல்லவா? தலையிலே பிறந்தவன், தோளிலே பிறந்தவன், தொடையிலே பிறந்தவன், சூத்திரர்களாகவே பிறந்தார்கள், பஞ்சமர்கள் எங்கே பிறந்தார்கள் என்று சொன்னார்களல்லவா? அதோடு பட்டியல் முடிந்துவிடவில்லை நண்பர்களே, அருள்கூர்ந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இந்த செய்திகளை இங்குதான் தெரிந்துகொள்ள முடியும். இன்னமும் அது இருக்கிறது, அதுதான் மனுதர்மம்.

அய்ந்தாவது ஜாதிக்குக் கீழே பெண்களின் நிலை

வர்ணாசிரம தர்மத்திலே பெண்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அய்ந்தாவது ஜாதிக்குக் கீழே என்று சொன்னால்கூட அது Out of Caste ஜாதி இந்துகள், மீதி இந்துகள் Out of Caste. ஜாதி இல்லாதவன் மீதி. ஆனால், அதற்கும் கீழே இருக்கிறார்கள் என்று சொன்னால், பெண்கள் பிறந்தால் அவர்கள் உயர் ஜாதியில் பிறந்த பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த நிலை! அடுத்து சொத்துரிமை, படிப்புரிமை, வாழ்வுரிமை, இவற்றையெல்லாம் கூடிய வாழ்க்கை இருக்கிறதா? அதை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள்! மகளிரியல் துறையிலே இதைப்பற்றிதான் நீங்கள் ஆய்வு செய்யவேண்டும். பழையவர்கள் எப்படியோ போகட்டும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்பது பழைய கதை. கல்லானால் கட்டடம் கட்டு, புல்லானால் மாட்டுக்குப் போடு என்று சொல்லக்கூடிய துணிச்சல் இந்த சமுதாயத்திற்கு, இந்த தலைமுறைக்கு வந்தாக வேண்டும். வந்துகொண்டி ருக்கின்றதென்பதிலே அடையாளம் நிறைய உண்டு. சாதாரண மனிதத் தன்மைக்கு மாறான கருத்துகளை எடுத்துச் சொல்ல வாழ்வு உண்டா?

தாய்ப்பாலுக்குப் பதிலாக கள்ளிப்பால்

தாய்ப்பாலுக்கு பதிலாக கள்ளிப்பால் தருகிற தாயாக இருக்கிற கொடுமைகள் இருக்கிறதே, இது என்ன நியாயம்? மனிதத் தன்மைக்கே இடம் இல்லை. பின்னர் வாழ்வதற்கு உரிமை, பிறப்பதற்கு உரிமை இல்லை. இருப்பது, பின்னர் என்ன வாழ்கிறது? இதையெல்லாம் மாற்றியமைத்துதான் தந்தை பெரியாருடைய இயக்கம். தந்தை பெரியார் படமாக அல்ல, பாடமாக அமைந்திருக்கிறார் என்பதை நீங்கள் அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள், எவ்வளவு கொடுமைகள்?

கலைஞர் ஆட்சியில் கேஸ் அடுப்பு

பழைய சமுதாயத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? நல்ல வாய்ப்பாக இப்போது ஊதுகிற அடுப்பே இல்லை! அதுவும் இலவசமாக கேஸ் அடுப்பு அரசாங்கமே கொடுத்துவிடக் கூடிய அளவுக்கு நமது கலைஞர் ஆட்சியில் வந்துவிட்டது. அந்த சங்கடமும் இல்லை. அடுத்த கட்டம் என்ன? எண்ணிப் பாருங்கள். மனிதனுக்கு ரொம்ப சிறப்பு பகுத்தறிவுச் சிறப்பு. சிரிக்கத் தெரியணும். பலபேருக்கு சிரிக்கிறதுக்கே பணம் கேட்பான். சிரிக்கவே மாட்டார்கள்.

பெண்கள் சிரித்தால் போச்சு...!

கிராமத்திலே கூட வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். நான் பாதியைச் சொன்னவுடனே மீதியை சொல்லிவிட்டீங்க, ஆனால் அருமைச் சகோதரிகளே, தோழியர்களே, உங்களை கேட்கிறோம், சிரிக்கிறதுக்கு உரிமை உண்டா? உரிமை வந்திருக்கிறது. பெரியார் பிறந்த காரணத்தால் திராவிட இயக்கம் ஆளுகின்ற, ஆண்ட காரணத்தால் பெண்ணு சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சா போச்சு! புகையிலை ஏன் விரிச்சாப் போச்சு? அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால், பெண்கள் சிரிக்கவே கூடாதுன்னு சொல்லிவிட்டான்யா? இப்படிப்பட்ட சமுதாயத்திலே தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்.

அது பக்கவாதம் இல்லையா?

சிரிக்கிறதுக்கு பெண்ணென்ன? ஆணென்ன? மனிதத் தன்மையா - இல்லையா? என்ன அழுது கொண்டேயிருப்பதா? உடனே சொல்றான், எந்த இடத்திலே திரும்பினாலும், தொலைக்காட்சி பெட்டியை திருகினால்கூட பெண்கள் என்றாலே கண்ணீர் விடுவதற்காகவே பிறந்தவர்கள்! ஒரு சரி பகுதியை வீணாக்கிவிட்டீர்கள்! முடமாக்கிவிட்டீர்கள்! இரண்டு காதுகளும் இயங்கவேண்டாமா? இரண்டு கண்களும் தெரிய வேண்டாமா, இரண்டு கால்களும் ஒரே மாதிரி இருக்கிறது என்று தெரிய வேண்டாமா? ஒரு பகுதி இயங்கி, இன்னொரு பகுதி இயங்காமல் இருந்தால் அதற்கு பெயர் பக்கவாதமல்லவா! அது மனித சமுதாயத்தில் கொடுமையல்லவா? என்று கேட்டார்களே. அந்த சிந்தனையை எண்ணிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்குப் பிறக்கக் கூட உரிமை இல்லை
ஆகவே ஒவ்வொரு பழமொழியும் போட்டுக் கொண்டே வாருங்கள். வாயிலே ஒரு பிளாஸ்திரி!, உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு சிரிக்க கூடாதுன்னு, சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிவிட்டான். அடுத்தப்படியாக எவ்வளவுக்கெவ்வளவு சுருக்கமாக எல்லோரும் எடையை குறைக்க நல்ல அளவுக்கு இருந்தால் நல்லதுதானே. ரொம்ப ஹெல்தியா, ரொம்ப சுகாதாரமாக இருந்தா நல்லதுதானே! உண்டி பெருக்குதல் ஆணுக்கழகா? ஏன் பெண்ணிற்கு மட்டும் உண்டி சுருங்குதல், பெண்ணிர்க்கழகுன்னான்? பொம்மை வேணும் விளையாடுவதற்கு! உங்கள் உடலின்மீது உரிமையில்லை! உங்கள் மனத்தின்மீது உரிமையில்லை! உங்களுக்கு சிரிக்க பிறக்க உரிமையில்லை! இத்தனை உரிமைகளையும் நீங்கள் போராடிப் போராடிப் பெறவேண்டுமானால், இதோ அந்த இரண்டு தலைவர்கள் வழிகாட்டியிருக்கிறார்களே, அந்த வெளிச்சத்தை கலங்கரை விளக்கமாகக் கொண்டு இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறுகிற நீங்கள் புதுமைப் பெண்ணாக இல்லாமல் புரட்சிப் பெண்ணாக ஆகுங்கள், புரட்சியை உருவாக்குங்கள்.

வாழ்வியல் சிந்தனையை அற்புதமாக ஆங்கிலத்தில்

என்னுடைய பொன்னகையை பற்றிப் பேசுகிறவரை கிட்டே நெருங்கவிடமாட்டேன். புன்னகயைப்பற்றி கவலைப்படுபவன் மட்டும்தான் எனக்குத் தேவை என்ற சூளுரையைக் கொள்ளுங்கள்! வாழ்வியல் சிந்தனைகளை அற்புதமாக ஆங்கிலத்தில் அமைத்துக்கொடுத்து, அதை வெளியிட்டு சிறப்பான ஓர் சாதனையை செய்திருக்கும் துணைவேந்தர் திருவாசகம் அவர்களுக்கும் , பாரதியார் பல்கலைக் கழகத்துக்கும், எங்களுடைய இயக்கத்தின் சார்பாக, என்னுடைய சார்பாக நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்து முடித்துக் கொள்கிறேன். வணக்கம், வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! வளர்க பெண்ணினம்! வளர்க புரட்சி! நன்றி.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------“விடுதலை” 8-10-2008

2 comments:

bala said...

திராவிட முண்டம் கருப்பு சட்டை பொறிக்கி அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

தமிழ்த் தாய் #2 மணியம்மை பெரியார் கண்ட புரட்சி பெண்ணா?மணியம்மை கல்யாணம் பண்ணிக் கொள்ளும் போது முதலில் பெண்ணே அல்ல,சிறுமி.இப்படி கேவலமாக கல்யாணம் செய்து கொண்ட தாடிக்காரன் புரட்சி பெண்னைப் பார்த்தாராம்,அசிங்கமாக இல்லை உங்களுக்கு இப்படி கீழ்த்தரமாக ஜல்லி அடிப்பதற்கு?

பாலா

நாடோடி said...

எல்லாமே பெரியார் சொன்னார் அண்ணா, அம்பேத்கார் சொன்னார் என்றே சொல்லும் உங்கள் தமிழர் தலைவர் (கீ.வீரமணி) இவர் என்ன சொன்னார் செய்தார், ஒருகாலத்தில் தி.க இருந்த நிலைமை என்ன? இன்றைக்கு இருக்கும் நிலைமை என்ன?. பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் போராட்டங்களையும் வாரிசு என்றார்.ஆனால் இவரோ தனக்குதானே பட்டம் கொடுத்து கூத்தாடிகளின் கைத்தடி ஆனார். காங்கிரஸ் கட்சியை அழிக்க பாடுபட்ட இயக்கம் இன்று அதனுடையே கூட்டணி, சிலை வழிபாடு கூடாது (உருவ) என்ற சொன்ன பெரியாருக்கே சிலை..போங்கையா உங்களுக்கும் காவிகளுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை. இன்னைக்கும் உத்தமபுரம் கலவரம். பெரியாரின் கருத்துககளை ஏன் பொதுவுடைமை ஆக்கமாட்டேன்கிறார்.

உங்களுடைய கறுப்புச் சட்டை வெளுத்து நாளாகிப் போச்சு..ஆனால் பகுத்தறிவு பகலவனின் சட்டை இன்னும் கருப்பாகவே உள்ளதால்தான் இந்த மஞ்சள் துண்டுகாரர் மீண்டும் மீண்டும் முதல்வர் ஆகிறார்..

நன்றி

முகமது பாருக்