Search This Blog

15.10.08

தி.க. - தி.மு.க. வை ஆதரிப்பது ஏன்?




பார்ப்பனர் தம் இனத்தைக் காக்கச் செய்யும் காரியங்களையே நாமும் நம் இழிவை நீக்கச் செய்தாக வேண்டும்.

தந்தை பெரியாரவர்கள் அறிவுரை ஆற்றுகையில் குறிப்பிடடதாவது :

நான் முன்னேற்றக் கழகத்தை ஆதரித்க்கின்றேன் என்கின்ற பிரச்சனைக்குப் பதில் சொல்ல வேண்டும்; ஆதரிக்கின்றேன் என்பதற்கு பதில் சொல்வதைவிட நான் தி.மு. கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதனை எதிர்த்துப் போராடி வந்திருக்கின்றேன். தி.மு.கழகம் என்பது சமூதாய முன்னேற்றக் கொள்கை உடையதாகும்.

திராவிடர் கழகமும் கடவுள் பற்று, மதப்பற்று, ஆட்சிப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, சாதிப்பற்று, இலக்கியப்பற்று இன்றி சமூதாய முன்னேற்றத்திற்காகத் தொண்டாற்றிக் கொண்டு வருகின்ற இயக்கமாகும். இதன் காரணமாகத் தேர்தலில் திராவிடர் கழகம் ஈடுபடாததோடு தானாகப் பதவி வந்தாலும் அதைஏற்பதில்லை என்பதை கொள்கையாகக் கொண்டு பாடுபட்டு வருகின்றது.


மதப்பற்று, இலக்கியப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்கின்ற எந்தப் பற்று இருந்தாலும் உண்மையான சமூதாயத் தொண்டு செய்ய முடியாது. மக்களிடையே எடுத்துச் சொல்ல முடியாது என்பதால் எந்தப் பற்றும் இன்றி திராவிடர் கழகம் தொண்டாற்றிக் கொண்டு வருவதாகும். இதிலிருந்து தொண்டாற்றி வந்து மக்களிடம் உணர்ச்சியை நல்ல அளவுக்கு ஏற்படுத்தியவர்கள் கொஞ்சம் செல்வாக்கு வந்ததும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்றார்கள். சென்றவர்கள் தி.மு.கழகம் என்கின்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு தாங்களும் சமூதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதாகச் சொன்னாலும் நான் அவர்களை எதிர்த்தேன்.

அடுத்து அவர்கள் தேசியத்தின் மேல் பற்றுக் கொண்டு அரசியலில் ஈடுபட ஆரம்பித்ததும் எனது சந்தேகம் உறுதியாகிவிட்டதால் மிகக் கடுமையாக அவர்களை எதிர்த்தேன். அவர்கள் தேர்தலில் ஈடுபடுவது என்று ஆரம்பித்ததும் பார்ப்பனர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். எந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்றால் திராவிட முன்னேற்றக்கழகத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் வெற்றி பெற்றால் இராஜாஜி சொற்படி நடந்து கொள்வோம் என்று சொல்லும் அளவிற்கு பார்ப்பனருடைய ஆதரவு அவர்களுக்கு இருந்தது.

இராஜாஜி அவர்களும் நான் சொல்லுகிறபடி பார்ப்பனரின் ஆதரவைத் திரட்டினார். இதைக் கண்டதும் தி.மு.கழகத்தைச் சார்ந்தவர்கள் பார்ப்பனர்களின் கையாளிவிட்டார்கள் என்பதால் மேலும் எனது சந்தேகம் உறுதியாகி தி.மு.கழகதத்தை எதிர்த்தேன். 1967 தேர்தல் முவுடி தெரிகிறவரை அவர்களை எதிர்த்துக் கொண்டு தான் இருந்தேன்.


1952 தேர்தலில் காங்கிரசை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தும் தேர்தலில் காங்கிரஸ் தோற்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மெஜாரிட்டியாக வந்தும், எதிர்க்கட்சிகாரர்கள் பல கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து மந்திரிசபை அமைக்க முன் வராததால் காங்கிரசின் பெயரால் இராஜாஜி அவர்கள் ஆட்சிக்கு வந்தார்.

ஆட்சிக்கு வந்ததும் முதல் காரிமாக 1938 இல் அவர் ஆட்சியிலிருந்த போது செய்தது போல் 6000 பள்ளிக்கூடங்களை மூடி மாணவர்கள் அரைமணி நேரம் தங்களின் ஜாதித் தொழிலைக் கற்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். இந்தச் சுப்பிரமணியமும், பக்தவத்சலமும் அவருக்கு ஆதரவாக இருந்து உதவி செய்தனர். இந்தத்திட்டத்தை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. திராவிடர் கழகம் தான் முன்வந்து இன்னும் ஒரு மாதத்தில் இத்திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் பார்ப்பனர்களைக் கண்ட இடத்தில் கத்தியால் குத்துவோம், பார்ப்பன சேரிகளுக்கு நெருப்பு வைப்போம் என்று ஆத்தூரில் நடைப்பெற்ற திராவிடர் கழகமாநாட்டில் தீர்மானம் போட்டு அதன்படித் திராவிடர் கழகத் தோழர்கள் ஆளுக்கொரு கத்தியும், பெட்ரோலும், நெருப்புப் பெட்டியும் வைத்துக் கொள்ள ஆரம்பித்த பின் இராஜாஜி அவர்கள் தம் பதவியை இராஜினாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.அவர் போனதும் அந்த அந்த இடத்திற்கு வேறு எவரும் வரத் துணியவில்லை.


காமராசர் முதலில் மறுத்துவிட்டார் நாம் ஆதரவு கொடுப்பதாகச் சொன்னதும் பிறகு ஒப்புக் கொண்டார். அவருக்கு எதிராக இராஜாஜி சுப்பிரமணியத்தை நிறுத்தினார் என்றாலும் நம் உணர்ச்சியின் காரணமாக காமராசர் வெற்றி பெற்றார் வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்ததும் முதல் காரியமாக - இராஜாஜி அவர்கள் மூடிய 6000 பள்ளிக்கூடங்களையும் திறந்தார். இனி மாணவர்கள் தங்கள் ஜாதித் தொழிலைச் செய்ய வேண்டியதில்லை என்று சட்டம் கொண்டு வந்ததோடு பல ஆயிரங்கணககான பள்ளிக்கூடங்களைத் திறந்து சம்பளம் இல்லாமல் நம் மக்கள் படிப்பதற்கு வசதி செய்து கொடுத்தார். அதன் பயனாக நம்மக்கள் 100க்கு 50 பேர்கள் படித்தவர்களானர்கள். தமிழர்களுக்குப் பெரும் உத்தியோகம் - பதவி ஆகியவை கொடுத்தார். இதனால் நாம் காமராசாரை ஆதரித்தோம்.

காமராசரின் புகழைப் பார்த்து நேரு அவர்கள் அகில இந்தியக் காங்கிரசின் தலைவராக்கியதும் அவர் பதவியைப் பக்தவத்சலத்திடம் கொடுத்துவிட்டு டில்லிக்குப் போய் விட்டார். பக்தவத்சலம் பதவிக்கு வந்ததும் பார்ப்பானாகப் பார்த்து உத்தியோகம் கொடுக்க ஆரம்பித்தார். காமராசர் தமிழர்களுக்குச் செய்த நன்மைளுக்கு நேர்மாறாக் காரியங்கள் செய்ய முற்பட்டதால் மக்களிடையே காங்கிரசின் மேல் வெறுப்பு ஏற்படலாயிற்று.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பார்ப்பனர்கள் ஆதரித்து வந்ததோடு அண்ணா நாங்கள் வெற்றிபெற்றால் இராஜாஜி சொல்கிறபடி தான் ஆட்சி செய்வோம் என்றதால் தி.மு.கழகத்தார் வெற்றிபெற்றால் பார்ப்பான் சொல்படி தான் ஆட்சி நடக்கும். அதைவிட காங்கிரஸ்காரன் வருவதே மேல் என்பதால் தேர்தலில் காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தோம் என்றாலும் மக்கள் காங்கிரசை வெற்றி பெறச் செய்யாமல் தி.மு.கழகத்தை வெற்றி பெறும்படிச் செய்து விட்டனர். அதுவும் அவர்களே தனியாக மந்திரிசபை அமைக்கும்படியான அளவிற்கு வெற்றி பெற்றதும் அவர்கள் என்னை வந்து திருச்சியில் பார்த்து நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லுங்கள் அதன்படி நடந்து கொள்கின்றோம் என்று என்னிடம் சொன்னார்கள்.

நான் அதை முதலில் நம்பவில்லை பிறகு அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்ததும் எனக்கு அவர்கள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது. உடனே நான் தி.மு.கழகத்தாரை ஆதரிக்க வேண்டியது நம் கடமை என்று அறிக்கை விட்டேன். சில தோழர்களுக்கு அது பிடிக்கவில்லை. எனது போக்கு சரியில்லை என்றுகடிதம் கூட எழுதினார்கள். நான் அது பற்றி இலட்சியம் செய்யவில்லை.


அதன் பின் தி.மு.கவினர் பதவி ஏற்கும் போது எங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொன்னார்கள் மந்திரிசபையில் ஒரு பார்ப்பானுக்குக் கூட இடம் கொடுக்கவில்லை. பார்ப்பனர்கள் கேட்டதற்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டியவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே இன்னும் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் திருப்தி செய்யவே எங்களால் முடியவில்லை. எனவே முடியாது என்று மறுத்துவிட்டார்கள். தங்களுக்குப் பதவி இல்லை என்றதும் பார்ப்பனர்கள் அடுத்து நடைப்பெற்ற சட்டசபைத் தலைவர் தேர்தலில் தி.மு.க வினருக்கு எதிராக ஒரு பார்ப்பனரை நிறுத்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டனர் என்றாலும் அவர்கள் இதுபற்றி இலட்சியம் செய்யவில்லை.

பார்ப்பனர்கள் இராஜாஜியிடம் போய்ப் புககார் செய்தார்கள். அதற்கு அவர் காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அவர்களை ஆதரித்தேன். பதவிக்குப் போக வேண்டும் என்பது அவர்கள் இலட்சியம் இரண்டு பேர்களின் இலட்சியங்களும் நிறைவேறிவிட்டன. இனி அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை. தேனிலவு முடிந்துவிட்டது என்று கூறிவிட்டார்.

இவர்களும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் தமிழர் நலனுக்கான காரியங்களை மளமளவென்று செய்ய ஆரம்பித்தவிட்டனர். இதுவரை எந்த ஆட்சியும் சமூதாயத் துறையில் செய்யாததை இவர்கள் செய்திருக்கின்றனர். தமிழர் நலத்தில் பற்று கொண்டவன் எவனாக இருந்தாலும் அவனுக்குத் தி.மு.கழகத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. வந்த உடனேயே தி.மு.க அரசு சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்றாக்கியது. காங்கிரசை நான் ஆதரித்த போது சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வமாக்க மறுத்துவிட்டது. நாங்களோ பதவிக்குப் போகிறேதில்லை. நம் கொள்கையை நிறைவேற்றுகிற ஆட்சியையும் எதிர்த்தால் எப்படி நம் கொள்கையை நிறைவேற்ற முடீயும்?
காமராசர் எஸ்.எஸ்.எல்.சி வரை சம்பளம் இல்லை என்று ஆக்கினார். இவர்கள் வந்ததும் (பி.யூ.சி.வரை) கல்லூரி படிப்பு வரை சம்பளம் இல்லை என்றாக்கிவிட்டார்கள்.

நாம் பயந்து கொண்டு இவர்களை ஆதரிக்கின்றோமா? நம் நன்மையைக் கருதி ஆதரிக்கின்றோமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

காங்கிரஸ்காரன் இருந்த வரை பார்ப்பானாகப் பார்த்துத் தான் உத்தியோகம் கொடுத்தான். அய்கோர்ட் ஜட்ஜ் பதவி எல்லாம் பார்ப்பானாகப் பார்த்துக் கொடுத்தான். இவர்கள் தமிழனாகப் பார்த்து உத்தியோகம் கொடுக்கிறார்கள் இப்போது அய்க்கோர்ட் ஜட்ஜ் 14 பேர்களில் 10 பேர்கள் தமிழர்கள் அய்கோர்ட் தோன்றிய காலம் முதல் இது வரை இது போன்ற நிலை ஏற்பட்டது கிடையாது இன்றைக்கு சீப் ஜஸ்டிஸ் ஒரு தமிழர் ஆவார். இது போன்ற நிலை ஏற்பட்டது கிடையாது. இதை விட நமக்கு வேறு என்ன நம்மை செய்ய வேண்டும்? வேறு எந்த ஆட்சியாலும் இந்தக் காரிங்களைச் செய்ய முடியாதே.

எனவே தான் திராவிடர் கழகம் இதைக் கொண்டு நம் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டி இருப்பதால் இந்த ஆட்சியை நாம் ஆதரிக்கின்றோமே தவிர சொந்த சுயநலத்திற்காகவோ, லாபத்திற்காகவோ அல்ல என்பதை நம் மக்கள் நன்கு உணர வேண்டும். இந்த ஆட்சி போனால் அடுத்து வருவது பார்ப்பானுடைய - பார்ப்பானின் அடிமை உடைய ஆட்சியே வரும் என்பதை நன்கு உணர்ந்து இந்த ஆட்சியை ஆதிரிக்க வேண்டியது நம்மக்களின் கடமையாகும்.

அடுத்து திராவிடர் கழகம் என்பது சமூதாய முன்னேற்ற சீர்த்திருத்த இயக்கமாகும். நம் சமூதாயத்திலிருக்கிற இழிவு சூத்திரத்தன்மை, தீண்டாமை ஒழிய வேண்டும் என்பதற்காகப் பாடுபடக்கூடிய இயக்கமாகும். நம் சமூதாய இழிவுற்கும், சூத்திரத் தன்மைக்கும் காரணம் நம் மக்கள் வழிபட்டுப் பின்பற்றி வருகின்ற கடவுள், மதம், சாஸ்திரம், புராணம், தருமம், இலக்கியம் ஆகியவை ஆனதால் இவையாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றோம். இவையாவும் ஒழிக்கப்படாத வரை நம் இழிவும், சூத்திரத்தன்மையும் நீங்கவே நீங்காது.

பார்ப்பான் தன் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவிதமான பாதகத்தையும் செய்யலாம். அதர்மமான காரித்தையும் செய்யலாம் என்பது பார்ப்பானின் தருமமாகும். அதுபோல நம் இழிவைப் போக்கிக் கொள்ள சூத்திரத்தன்னைமயைப் போக்கிக் கொள்ள நாம் எந்த அதர்மத்தையும் பாதகத்தையும் செய்யத் தயாராக வேண்டும்.


-------------------26-05-1969 அன்று நரசிங்கமங்கலத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 14-06-1969 - "பெரியார் களஞ்சியம்" :- "ஜாதி - தீண்டாமை" பாகம் -12: தொகுதி - 18, பக்கம் 277 - 282

4 comments:

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி,திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

மானமிகு முண்டம் தி மு க விற்கு ஏன் ஜல்லி அடிக்கிறதோ அதே காரணம் தானே தாடிக்காரன் தி மு க வுக்கு ஜல்லி அடித்தது.இது ஒரு பெரிய விஷயம்.இதை போய் சொல்றீங்களே.இந்த விஷயம் கொளத்தூர் பாசறை முண்டங்களான அதி அசுரன்,ஆழிக்கரை முத்து,பாரீஸ் யோனியம்மா போன்ற குஞ்சுகளுக்கு கூட தெரிந்தது தானே.முண்டம்,முண்டம்.

பாலா

bala said...

பாரிஸ் யோனியம்மா பெயரை எடுத்தாலே மானமிகு முண்டத்தின் பாசறையின் ஆஸ்தான வெறி நாய் தமிழ் ஓவியா கப்சிப் என்று ஆகிவிடுவது ஏன்?

பாலா

தமிழ் ஓவியா said...

பைத்தியகாரப் பார்ப்பன பொறுக்கி பாலாவின் உளறல் உச்சகட்டத்தை எட்டிவிட்டது. வெறி நாயை விட மோசமாக அலைந்து கொண்டிருக்கிறது.

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி,திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,


பாரிஸ் யோனியம்மா பெயரை சொன்னாலே மானமிகு முண்டத்தின் பாசறையின் வெறி பிடித்த சொறி நாய்கள், குரைப்பதை ஏன் நிறுத்தி விடுகின்றன என்ற கேள்விக்கு பகுத்தறிவோடு பதில் குரைங்க பார்க்கலாம்.

பாலா