Search This Blog

13.10.08

ஒரிசா மாநிலக் கலவரங்களுக்குக் காரணம் யார்?


ஆர்.எஸ்.எஸ். - வி.எச்.பி. குழாயடிச் சண்டை

ஒரிசா மாநிலக் கலவரங்களுக்குக் காரணம் யார்?

சங் பரிவாரங்களின் சண்டை சந்திக்கு வந்தது


புதுடில்லி, அக். 10- ஒரிசா மாநிலத்தில் கந்தமால் பகுதி விசுவ இந்து பரிசத்துக்குப் பெரும் பலமுள்ளது என்றும், அது அப்பகுதியில் சிறந்த சமூகப் பணியாற்றி வருகிறது என்றும் பெருமை பொங்கக் கூறியுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

இதற்கு நேர்மாறாக விசுவ இந்து பரிசத்தின் மத்தியக் குழுவின் செயலாளர் மோகன்ஜோஷி என்பவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி தந்துள்ளார். கந்தமால் பகுதியில் விசுவ இந்து பரிசத்துக்கு பலம் ஒன்றும் இல்லை என்றும், ஒரு சில அமைப்பாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். கந்தமால் பகுதியில் அமைப்பு ரீதியாகச் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இந்துக்களும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 4000 பேர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறை கூறியுள்ளனர். கந்தமால் கலவரங்கள், தீ வைப்புகள், கொலை கொள்ளைகள் தொடர்பான வழக்குகளில் சிக்கியவர்கள் இந்து மத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றால், வி.எச்.பி. தவிர, வேறு எந்த அமைப்பு என்று அவர் கூறவில்லை.

ஒரிசாவில் நவீன் பட்நாயக் அரசைக் குறை கூறிக் கண்டித்த அவர், அக்கட்சியுடன் ஏன் கூட்டு வைத்திருக்கிறீர்கள் என்று பா.ஜ. கட்சியைக் கேட்க வேண்டும் எனக் கூறி பா.ஜ.க. மீது வி.எச்.பி.க்கு உள்ள கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரிசா அரசு இந்தப் பகுதியில் எந்த வித வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை. சாலைகள் கிடையாது, பள்ளிகள் கிடையாது, கல்லூரிகள் கிடையாது, மருத்துவமனைகள் கிடையாது என்று அடுக்கிக் கொண்டே போய் குறை கூறினார். இது பற்றி அரசுக்கு விசுவ இந்து பரிசத் தெரிவித்திருக்கிறதா என்று கேட்டதற்கு, மனுக்கள் கொடுத்து இருக்கிறோம். ஆனால் அவற்றின் நகல்கள் இல்லை என்று மழுப்பி விட்டார்.

இப்படி ஆட்சி நிலைமை இருக்கும் போது பா.ஜ.கட்சிக்கு அரசியல் ரீதியான ஆதரவை ஏன் விசுவ இந்து பரிசத் தந்தது எனச் செய்தியாளர்கள் கேட்ட போது, பா.ஜ.கட்சிக்கும் விசுவ இந்து பரிசத்திற்கும் தொடர்பு ஏதும் கிடையாது என்று உடனே கூறிவிட்டார்.

பேட்டி முழுவதையும் பார்த்தால், வி.எச்.பி. - சங் பரிவாரத்தைச் சேராதது போலவும், பா.ஜ.கட்சியுடன் தொடர்பு இல்லாததது போலவும், ஆர்.எஸ்.எசுக்குப் கட்டுப் பட்ட அமைப்பு அல்ல என்பது போலவும் வி.எச்.பி. செயலாளர் மோகன் ஜோஷி தெரிவித்துள்ளார். கட்டுப்பாடு மிகுந்த சங் பரிவார்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டு அம்பலத்துக்கு வந்துவிட்டது.

-------------------- நன்றி: "விடுதலை" 10-10-2008

3 comments:

Robin said...

எல்லாம் ஒரிசாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத்தை அடுத்து காவிகளின் பயங்கரவாத முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்ட நிலையில் அதிலிருந்து தப்பிப்பதற்கான முயற்சி.

Robin said...

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே காவி இயக்கத்தை சேர்ந்தவன் அல்ல என்று புளுகுவதுபோல செய்வதைஎல்லாம் செய்துவிட்டு தப்பித்துக்கொள்வது காவி பயங்கரவாதிகளின் வாடிக்கை.

Robin said...

சமீபத்தில் விழுப்புரத்தில் ஒரு கிறிஸ்தவர் அடக்கம்பண்ணபட்ட கல்லறையைகூட இந்த காவிகள் அடித்து உடைத்துள்ளனர்.