Search This Blog

13.10.08

மனையடி சாத்திரத்திலும் வருண தர்மம்!

கட்டடம் கட்டும்போது பார்ப்பனர்கள் தர்ப்பையிலான முப்புரி கொள்ள வேண்டும். சூத்திரர்கள் (தமிழர்) ஆக்தி யினால் இருபுரி கொள்ள வேண்டும். மூங்கிலால் ஆன முழக்கோலும் பார்ப்பனர்க் காம். உத்திர வேங்கை மரத்தினாலான கோல் சூத்திரர்க் காம் - சங்கு செய் மரம் -

பார்ப்பனர்க்கு கருங்காலி மரம், சூத்திரர்க்கு (தமிழர்க்கு) புளியின்.. இன்னும் பாருங்கள்.

நிலத்தை அளக்க சூத்திரர்க்கு நூல் கயிற்றினாலும், பார்ப்பனர் திரிக்க தர்ப்பையினாலும் அளக்க வேண்டும்! இவை மட்டுமா? அதன் சார் பாய் வடக்கு பார்த்த வாசல் மனை பார்ப்பனர்க்காம். கீழ் சார்பாய் மேற்கு பார்த்த வாசல் மனை சூத்திரர்க்காம்; இன்னும் கேளுங்கள்.. இனிப்பானமண் பார்ப்பனர்க்காம். கசப்பான மண் சூத்திரர்க்காம்! இன்னும் பல உண்டு. பார்ப்பனரை உயர்த்தி தமிழர்களைத் தாழ்த்திக் கூறியவை.

நல்ல நாள் பார்த்து கூறுங்கோ சாமிவாள் என்று தங்களை கேட்க வேண்டும். அதனால் தம் ஆதிக்கத்தை நிலை நாட்டில் கொள்ள வேண்டும் என்பதற்காக, கீழ்க் காணும் பயத்தை ஏற்படுத்தக் கூறுவதைப் பாருங்கள்.

கூர்த்த நாண் முகூர்த்தந்தன்னை குறைவறப் பார்த்துக் கொண்டு வாஸ்துவின் இடையறிந்து மனைதனைக் கோணனாகில் சீர்த்தன பெருங்கேடாம்; செய்தவை அனைத்தும் பாழாம்; மூர்த்தமாய் நாசஞ் செய்து முனியையுந் தொடருமன்றே!

தமிழரை நடுங்க வைக்க வகுத்திட்ட பார்ப்பனரின் சூதினை பார்த்தீர்களா? பார்ப்பனர்கள் வகுத்த நாளில் வீடு கட்டத் தவறினால் வீடும் பொருளும் பாழாகும். தமிழர்களை எப்படியெல்லாம் கோழைகளாக்கி வைத்துள்ளார்கள் பார்ப்பனர்கள் என்பதை தமிழர்கள் உணரும் காலம் எப்போது?

-------------------ஆதாரம்: "சிற்ப நூல்" என்னும் மனையடி சாஸ்திரம்

2 comments:

Dr.Rudhran said...

good. write more. there are many more such things.

தமிழ் ஓவியா said...

நன்றி டாக்டர்.