Search This Blog

13.7.08

நரித்தனமாக நடந்து கொள்ளும் "சோ'




அடிப்பதுபோல பாசாங்கு!

பார்ப்பனர்களின் ஏகபோக பிரதிநிதியாக நின்று பேசுபவர் இன்றைக்கு `துக்ளக் சோ இராமசாமி தான்.

நடுநிலை வேடம் போட்டு நரித்தனமாக நடந்து கொள்வதில் அவருக்கு நிகர் அவர்தான்
தி.மு.க.வைக் கண்டிப்பதற்கும் அதிமுகவை (ஜெயலலிதாவை)க் கண்டிப்பதற்கும் இடையே உள்ள சன்னமான விசயங்களைக் கூர்மையாகக் கவனித்தால் அவரின் கவட்டுத்தனம் புரிந்துவிடும்.


எடுத்துக்காட்டு:

கேள்வி: ஆளும் கட்சியின் பாதகமான அம்சங்களை ஜெயலலிதா நன்கு பயன்படுத்திக் கொண்டு வருவதாக நினைக் கிறீர்களா?

பதில்: ஆளும் கட்சியின் தவறுகளை மற்ற எல்லோரைக் காட்டிலும் ஜெயலலிதா தான் மிகவும் கவனத்துடன் சுட்டிக்காட்டி வருகிறார் என்பது அவருடைய அறிக்கைகளைப் பார்த்தாலே தெரியும். ஆனால் பெருவாரியான மக்களிடையே, இதை எடுத்துச் சொல்ல, தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தி, தானே முன்னின்று, இந்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
(`துக்ளக் 2.7.2008)

ஆளும் கட்சியின் பாதகமான அம்சங்களை ஜெயலலிதா நன்கு பயன்படுத்திக் கொண்டு வருவதாக நினைக்கிறீர்களா? என்பது கேள்வி. நடுநிலைவாதியாக அவர் இருந்திருந்தால் ஆம் அல்லது இல்லை என்பதோடு நிறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

அதையும்தாண்டி ஜெயலலிதா என்ன செய்ய வேண்டும்? எந்த வழி முறையைப் பின்பற்ற வேண்டும் என்று வழிகாட்டும் அளவுக்கு மூளையைக் கசக்கி புட்டிப் பால் ஊட்டுவதுபோல ஊட்டுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?

கலைஞரை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்ற ஆத்திரமும், அதற்கு ஜெயலலிதா உரிய வகையில் செயல்படவில்லையே என்ற ஆதங்கமும் வெளியாகவில்லையா? வழி காட்ட வேண்டியது நமது கடமை. அதற்குமேல் அவர் விருப்பம் என்ற தோரணை இதில் வெளிப்படுகிறதா இல்லையா? இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் பாசம் - நேசம் என்பது.
ஆமையைக் குப்புறப் போட்டு அடித்தால் சாகுமா? மல்லாக்கப் போட்டு அடித்தால் அல்லவா சாகும் என்று சிறுவர்களின் காதில் விழும் அளவுக்கு உரக்கக் கூச்சல் போட்டு சொல்லி விட்டு, அதற்குப் பின் முணுமுணுக்கும் தன்மையில் `நமக்கு ஏன் ஊர்வம்பு என்று சொன்ன சாமியாரின் ஜாடை இந்த `சோ ராமசாமி அவர்களிடமும் தெரிகிறதா இல்லையா
! அதேபோல இன்னொரு கேள்வி பதில்

கேள்வி: கூட்டணி விவகாரத்தில் அதிமுக மந்தமாகச் செயல்படுவ தாக நினைக்கிறீர்களா?

பதில்: இவ்விஷயத்தில் அதிமுக செயல்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்கள் போலிருக்கிறது. அதனால்தான் இப்படிக் கேட்கிறீர்கள் கூட்டணி விஷயத்தில், அக்கட்சி செயல்படுவதாக, நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. (`துக்ளக் 2.7.2008).
முந்தைய பதிலில் காணப்படும் அதே பாணி இந்தப் பதிலிலிலும் தொனிப்பதை அறிந்து கொள்ளலாம்.

கூட்டணி விவகாரத்தில் அதிமுக மந்தமாக இருக்கக் கூடாது. தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் அக்கறையை இதில் காண முடியும்.
கேலி செய்வது போல ஆரம்பித்து கடைசியில் காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலில் போய் முடிக்கும் சாமர்த்தியம் அவாளுக்கே உரிய ஒன்றாயிற்றே!
அதிமுக., ஜெயலலிதாபற்றி இப்படியெல்லாம் பதில் என்றால், கலைஞர் பற்றிக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில் எப்படியிருக்கும்? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

கேள்வி: தமிழகத்தில் நாளும் தொழிற்சாலைகள் தொடங்கப் படுவது கருணாநிதி ஆட்சியின் சாதனை என்று சொல்லலாமா?

பதில்: அறிவிப்புகள் எல்லாம் சாதனைகள் என்று எடுத்துக் கொண்டால் இந்த அரசின் தொழில் துறை சாதனைகளை உங்களுடன் சேர்ந்து நானும் பாராட்ட வேண்டியதுதான்.
(`துக்ளக் 28.5.2008)

ஜெயலலிதாபற்றிய கேள்விக்கான பதில், கலைஞர் பற்றிய கேள்விக்கான பதில் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது வேதியக்குலத்தாருக்கே உரித்தான விஷமத்தனத்துடன் இருக்கிறது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

வெறும் அறிவிப்புகளோடு முதல்அமைச்சர் கலைஞர் நின்று விட்டாரா? புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்வரை போடப்பட்டுள்ளனவே! தொடக்க நிகழ்ச்சிகளும் அரங்கேறி விட்டனவே.
நாளும் ஏடுகளைப் படிப்பவர்களுக்கும், நாட்டு நடப்பை அறிந்த கடைக்கோடி மனிதனுக்கும் தெரிந்த இந்த உண்மைகள் இந்த அக்கிரகாரத்து `அறிவாளிக்குத் தெரியாதா?

தெரிந்திருந்தும் உண்மையைச் சொல்ல மனம் வர வில்லையே!

ஜெயலலிதா விஷயம் என்றால் ஆக்கபூர்வமான வழிகாட்டுதல் இருக்கும். கலைஞர்பற்றி என்றால் அவரைக் கொச்சைப்படுத்தும் விஷமம் இருக்கும் - புரிந்து கொள்க!
அவாளுக்கு உள்ள இந்த இனப்பற்று நம்மவாளுக்கு இன்னும் வரவில்லையே - என்ன செய்ய?


--------------------13-7-2008 "விடுதலை" இதழில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

8 comments:

Thamizhan said...

தேர்தலில் அம்மையார் வெற்றி பெற நரிகள் மாநாடு, காஞ்சி சுப்புணியைக் கூட ஏதும் அம்மாவை எதிர்த்து அறிக்கை விடாதீர்கள் என்ற வேண்டுகோள், எல்லாம் தாண்டி பார்ப்பன பத்திரிக்கை பலம் என்ற மாயை எல்லாம் சோமாரியால் தாங்கிக் கொள்ள முடியாதவை.
அவரை நடு நிலையாளர் என்று நம்பும் இளிச்ச வாய்த் தமிழர்கள் தான் ஏமாளிகள்.அவருடைய கார்ட்டூன்களை
,இணையத்தில் போடுபவர்களும் நரிகளாகத்தான் செயல் படுகிறார்கள்.

ஜோசப் பால்ராஜ் said...

யாருக்கு இவரது அறிவுரைத்தேவையோ அவர்களுக்கு மட்டும் அறிவுரை சொல்கின்றார். கலைஞருக்கு இவர் அறிவுரை தேவையுமில்லை. அவர் அதை மதிக்கப்போவதுமில்லை. ஏனென்றால், தற்போது தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய பழுத்த அரசியல்வாதி கருணாநிதிதான்.

Bleachingpowder said...

இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

எப்படி கலைஞர் சிறுபாண்மை மக்களுக்கு Support பண்ணி பேசுகிறாறோ அதே மாதிரி தான் சோவும் எப்போதுமே ஜெயலலித்தாவிற்கு Support பண்ணி பேசுவார்.

மற்றபடி எனக்கு தெரிந்து எந்த பத்திரிக்கையும் நடுநிலையோடு எழுதுவதில்லை. இதில் சோவை மட்டும் குற்றம் சொல்வது சரியல்ல.

bala said...

//எப்படி கலைஞர் சிறுபாண்மை மக்களுக்கு Support பண்ணி பேசுகிறாறோ அதே மாதிரி தான் சோவும் எப்போதுமே ஜெயலலித்தாவிற்கு Support பண்ணி பேசுவார்//

பிளீச்சிங் பவுடர் அய்யா,

நீங்க சொல்வது சரி தான்.மஞ்ச துண்டு என்றைக்கும் தீவிரவாதிகளின் ஆதரவாளர் தான்.அதனால்தான் அவரை தாடிக்காரரின் உண்மையான சிஷ்யராக நாம் ஏற்றுக்கொள்ள முடிகிறது.நம்ம மானமிகு கருப்பு சட்டை வீரமணியோ சரியான சந்தர்ப்பவாதி.ஆட்சியில் மஞ்ச துண்டு இருந்தா தீவிரவாதத்துக்கு ஆதரவாகவும்,ஆட்சியில புரட்சி தலைவி இருந்தா எம்ஜியாரிசத்துக்கும்,அண்ணாயிசத்துக்கும் ஆதரவாக ,ஜே போட்டு காசு பார்க்கும் கொளகையில் உறுதியாக இருப்பவர்.காசு ஒன்றே கொளகையாக இவர் வைத்திருப்பதால் இவரையும் நாம் ஒரு உண்மையான தாடிக்காரரின் சிஷ்யராக பார்க்கமுடிகிறது.ஏனென்றால் தீவிரவாதமும்,பணமும் நம் தாடிக்கார சகுனி மாமாவின் இரு கண்கள்.

பாலா

தமிழ் ஓவியா said...

பாலாவின் முட்டாள்தனத்துக்கு அளவில்லாமல் போச்சு. எடுத்து வைக்கும் வாதங்களில் ஒருதுளியேனும் உண்மை என்பது மருந்துக்குகூட இல்லை. "சோ: வையும் விஞ்சிவிடுவார் போல் இருக்கிறார் இந்த "பாலா".

bala said...

//எடுத்து வைக்கும் வாதங்களில் ஒருதுளியேனும் உண்மை என்பது மருந்துக்குகூட இல்லை. //

தமிழ் ஓவியா அய்யா,

எதில் உண்மை இல்லை என்பதை விளக்குவீர்களா?மானமிகு கருப்பு சட்டை ஒரு காலத்தில்,புரட்சி தலைவியை வானளாவ புகழ்ந்து ஜல்லி அடித்தார் என்பதிலா, அல்லது தாடிக்கார சகுனி மாமா ஒரு தீவிரவாதி என்பதிலா,அல்லது மஞ்ச துண்டு தாடிக்காரரின் உண்மையான சிஷ்யன் என்பதிலா அல்லது மானமிகு தமிழர் தலைவர் தாடிக்கார அய்யாவின் உண்மையான சீடர் என்பதிலா அல்லது இவை அனைத்துமே பொய்களா?

பாலா

தமிழ் ஓவியா said...

அரைவேக்காடு பாலா,
ஜெயலைதாவை எந்த ஒரு இடத்திலும் புரட்சித்தலைவி என்று விளித்ததில்லை. அவரின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்களை சரியாகப் படித்திருந்தால் விளங்கியிருக்கும். நீங்க தான் எதையும் சரியாக புரிந்து கொள்ளாத, அறிந்து கொள்ள மறுக்கும் மர மண்டையா இருக்கீங்களே! ஒரு முதலமைச்சர் என்ற முறையில் அவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை எப்போதும் கொடுப்பதில் கருஞ்சட்டைகள் தயங்கியது இல்லை. கொள்கை ரீதியாக தவறு செய்யும்போது கண்டிக்கவும் தயங்கியதில்லை. உங்களின் மூளைக்கு (இருக்கா) எட்டவில்லை என்றால் என்ன செய்வது?

bala said...

//கொள்கை ரீதியாக தவறு செய்யும்போது கண்டிக்கவும் தயங்கியதில்லை//

தமிழ் ஓவியா அய்யா,

அது எப்படி அய்யா,மஞ்ச துண்டு,புரட்சி தலைவி போன்றவர்கள்,ஆட்சியில் இருக்கும் போது கொள்கை ரீதியா தவறே செய்யாமாட்டேங்கறாங்க? பதவியில் இல்லாது போது மட்டும் தவறைத் தவிர வேற எதையும் செய்யமாட்டேங்கறாங்க?

பாலா

அது சரி,நீங்க அரசுப் பள்ளி வாத்தியாரா?தமிழ் நாட்டில், அரசுப் பள்ளி வாத்தியார்களைவிட கேவலமான,சுய மரியாதையை இழந்த,கிணற்றுத் தவளை ஜல்லி கும்பலை பார்க்க முடியாது.