Search This Blog

13.12.08

"தீவிரவாதத்தை ஒடுக்க இன்னும் கடுமையான சட்டங்கள் தேவையா?"







கேள்வி:-


`தீவிரவாதத்தை ஒடுக்க இன்னும் கடுமையான சட்டங்கள் தேவை' என்கிறாரே ஜெயலலிதா?

பதில்:-

பொடா, தடா போன்ற சட்டங்கள் இருந்த காலத்தில் மட்டும் தீவிரவாதச் செயல்கள் கட்டுப்பாட்டில் இருந்ததா என்ன? தீவிரவாதிகளை விட, பழிவாங்கும் விதத்தில் பல அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளியதுதான் நடந்தது. கடுமையான சட்டங்களால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. மதத்தீவிரவாதம் என்கிற ஆணி வேரை முதலில் வெட்ட வேண்டும்.


கேள்வி:-


இலங்கையில் தமிழன் செத்து மடிவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாததற்குக் காரணம்?

பதில்:-

இந்தியாவை ஒப்பிடும் போது 69 மடங்கு சிறிய தீவான இலங்கையின் சிங்கள ராஜ தந்திரத்தின் முன்னால் இந்தியா காலம் காலமாகத் தோற்று வருவதுதான். இலங்கையின் முதல் பிரதமரான சேனநாயகா முதல் இன்றைய ராஜபக்ஷே வரை நம் முகத்தில் கரி பூசுவதில் எல்லோருமே கை தேர்ந்தவர்கள். நம் தரப்பில் சுதாரிப்பாய் இருந்த ஒரே பிரதமர் இந்திராதான்.


-------------நன்றி:- "குமுதம்" அரசுபதில்கள் 10-12-2008

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

பொருப்பற்ற அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இருக்கும் வரை எந்த சட்டத்தாலும் தீவிரவாதத்தையும், வன்முறையும் தடுக்க முடியாது... ஒவ்வொரு குடிமகனும் தன் பற்றையும், பொறுப்பையும் உணரும்வரை.. தீவிரவாதம் தடுக்க வாய்பே இல்லை.... இப்படிப்பட்ட சூழல்கள் தனியார் வசம் உள்ள கல்விகூடமும் வெலைக்காக படிக்கும் எண்ணமும் ஒரு காரணமாக இருக்கின்றது..

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும்
வருகைக்கும்
நன்றி ஆ.ஞானசேகரன்.