Search This Blog

18.12.08

கொள்கை என்பது "வேட்டி"; பதவி என்பது "மேல்துண்டு"


முதல்வரின் முக்கிய அறிவுரை-

இயக்கத்தவர்களுக்குச் சரியான இடித்துரை!


நேற்று (17.12.2008) காலை சென்னையில், மாநில திட்டக்கமிஷனின் உறுப்பினரான பேராசிரியர் டாக்டர் மானமிகு பெ. ஜெகதீசன் அவர்களது இல்ல சுயமரியாதைத் திருமணத்தினை நடத்தி வைத்த முதல்வர் கலைஞர் அவர்கள், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் என்ற முறையில், தமது வாழ்த்துரையில் சுட்டிக் காட்டியுள்ள ஒரு முக்கியச் செய்தி மிகவும் தேவையான நேரத்தில், தேவைப்படுவோருக்குத் தரப்பட்ட முக்கியமான அறிவுரையாகும்:

"...எத்தனை ஆண்டுக்கால உழைப்பு, எத்தனை ஆண்டுக் கால சுயமரியாதைப் பிரச்சாரம், எத்தனை ஆண்டுக்கால அனுபவம் - இதுபோன்ற திருமணங்கள் நடத்திக் கொண்டவர்கள் யாரும் கெட்டுப்போகவில்லை. நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்கின்ற அந்தச் சான்றுகள் கிடைத்த பிறகும்கூட, அந்த உத்தரவாதங்கள் கிடைத்த பிறகும்கூட, இன்னும் சந்தேகத்தோடு - என்ன ஆகுமோ - ஏதாகுமோ - இது கடவுளுக்கு ஆகுமோ, ஆகாதோ - நம்முடைய குலதெய்வம் கோபித்துக் கொள்ளுமோ என்றெல்லாம் எண்ணி இந்தத் திருமண முறையைத் தவிர்ப்பவர்கள் இன்னும் இருக்கின்றார்கள். அதனால்தான், இதுபோன்ற திருமணங்களில் மணமக்களை வாழ்த்துகிற நாங்கள் வாழ்த்துவதோடு அமையாமல், வேறு சில கருத்துகளையும் - பழங்காலத்திலே தமிழகத்திலே தமிழர்கள் எவ்வாறு தங்களுடைய திருமண விழாக்களை நடத்திக் கொண்டார்கள் என்பதையும், புராணிக முறைப்படி திருமணம் நடந்தால்தான் மணமக்கள் வாழ்வார்கள் - இல்லாவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையிலே சங்கடங்கள் ஏற்படும் என்பது எவ்வளவு தவறான வாதம் என்பதையும் எடுத்துக்கூறுகின்ற வகையில் பிரச்சாரம் நடைபெறுவதற்குக் காரணமே, இங்கு வந்திருக்கிற உங்களிலே ஒரு நூறு பேரை பொறுக்கி எடுத்தால் அவர்கள்தான் பழுத்த பகுத்தறிவுவாதி களாக - சுத்த சுயமரியாதைக்காரர்களாக - நம்முடைய இல்லத்திலும், நம்முடைய பிள்ளைகளுக்கு, பெண்களுக்கு இதைப்போலத்தான் திருமணம் செய்யவேண்டும் என்று எண்ணி, அதை நிறைவேற்றுபவர்களாக இருக்க முடியும். மற்றவர்கள் - நான் உண்மையிலேயே சொல்லுகின்றேன் - ஏன் நமக்கு வம்பு? நம்முடைய முன்னோர்கள் செய்ததையே நாமும் செய்துவிட்டுப் போவோம் என்று கருதுகிற நிலையிலே இருப்பவர்களை நான் நன்றாக அறிவேன். இன்னும்கூட ஒன்று சொல்லுகின்றேன் - வெளிப்படையாகவே சொல்லுகின்றேன் - சுயமரியாதை இயக்கத்திலே ஊறித் திளைத்து - திராவிட இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக்கொண்டு, உழைத்து, பணியாற்றி, பதவிகளைக்கூட, பெற்று - திராவிட இயக்கத்தால் கிடைத்த பதவி, கிடைத்த ஆதாயம் இது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள், சொல்லிக் கொண்டிருப்பவர்கள்கூட தங்களுடைய வீட்டிலே திருமணங்கள் என்றால், எனக்கே கொண்டு வந்து திருமணப் பத்திரிகை கொடுக்கிறார்கள் - பிள்ளையார் படம் போட்ட திருமணப் பத்திரிகை - திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட திருமணப் பத்திரிகை இவைகளைக் கொடுத்துவிட்டு, பெண் வீட்டார் கேட்கவில்லை, மறுக்கிறார்கள், நான் என்ன செய்வது? மன்னித்துக் கொள்ளுங்கள் என்று என்னிடத்திலே மன்னிப்பு கேட்பவர்கள் பலர் உண்டு. இவையெல்லாம் தேவையில்லாத பயம்; புரிந்துகொள்ளாத நிலை. இந்த நிலையிலே இருந்து திராவிட இயக்கத்தார் என்று தங்களைச் சொல்லிக் கொள்கின்றவர்கள் - பெரியாருடைய பகுத்தறிவுப் பாதையிலே நடைபோடத் துணிந்து, அந்தப் பாதையிலே நடந்து கொண்டிருப்பவர்கள், அண்ணாவினு டைய அறிவு வழியைப் பின்பற்றியவர்கள் - அவர்களே தங்களைச் சில நேரங்களிலே இதுபோல இழந்துவிடுகிறார்கள் என்றால் - எதிர்காலத்திலே இளைய சமுதாயம் எப்படித் திருந்த முடியும்? எப்படி முன்போல பகுத்தறிவு பெற்றவர்களாக, அறிவு தழைப்பவர்களாக விளங்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்."

- முதல்வர் கலைஞர் அவர்களது ஆதங்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். திராவிடர் இயக்கத் தோழர்கள் - குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள்.

திராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்த பிறகு ஒரு அரசியல் கட்சியாக அண்ணா அவர்களது தலைமையில் அமைந்தது என்றாலும், அடிப்படையில் தி.மு.க.வுக்கும் மற்ற பல அரசியல் கட்சிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, அதன் (தொடக்கம்முதலே) சட்ட திட்டங்கள், முக்கிய நோக்கங்களிலேயே இது ஒரு பகுத்தறிவு இயக்கம் - சுயமரியாதை இயக்கம் என்ற அடி நீரோட்டத்தை வலியுறுத்திய இயக்கம்.

1950-லிருந்து 1967 வரை தி.மு.க.வினர் என்றால் அவர்கள் பகுத்தறிவாளர்கள், சுயமரியாதை வீரர்கள் - அரசியல் கட்சியாகி அண்ணா தலைமையேற்றாலும், சமுதாய லட்சியங்களில் மாறுபடாதவர்கள் என்ற நிலைதான் தொடர்ந்து இருந்து வந்தது; இன்றும்கூட பழைய தி.மு.க. முதியவர்கள் குடும்பத்தில் அதே உணர்வு எவ்வித சமரசத்திற்கும் ஆளாகமல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலை கண்கூடு.

ஆட்சிக்கு வந்த பிறகும் அரசியல் கட்சியாகப் பார்த்து, தி.மு.க.வில் சேர்ந்த இளைய தலைமுறையினர் கொள்கைபற்றிக் கவலைப்படாமல், பதவிகளைப் பெறுவது எப்படி என்று கருதி - ஜாதி, பணச் செல்வாக்கு இவைகளுக்கு முக்கியத்துவம் காட்டி நுழைந்து கொண்டு, கட்சியின் முக்கியக் கொள்கை விளக்கம்பற்றிப் பேசினாலே வாக்கு வங்கி மாறிவிடும் என்று அச்சப்படும் ஒரு தவறான நிலை ஏற்பட்டுவிட்டது!

முன்பு, அறிஞர் அண்ணா அவர்கள் - தி.மு.க.வின் மாநாடுகளை நடத்தும்போது - முதல் நாள் சமுதாய சீர்திருத்த மாநாடு, இரண்டாம் நாள் அரசியல் மாநாடு என்று தான் நடத்தி, அதில் உலக சமூகப்புரட்சியாளர்கள், தலைசிறந்த பகுத்தறிவாளர்கள், நமது இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள் இவைகள்பற்றிப் பேசி இளைஞர்கள், மாணவர்களுக்குத் தக்கதோர் பயிற்சிப் பாசறையாக அதனை ஆக்கிடுவார்!

தி.மு.க. வேர் பிடிப்பதற்குக் காரணமாக ஏராளமான வார ஏடுகள், தெருவுக்குத் தெரு படிப்பகங்கள் - நூலகங்கள் - இந்நிலை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, அரசியல் கண்ணோட்டம், பதவிச்சண்டைகள் இவைகளுக்கு முக்கியத்துவம் வந்தன!

அறிஞர் அண்ணாவின் ஓர் ஆண்டுக்கால முப்பெரும் சாதனைகளான சுயமரியாதைத் திருமணச் சட்ட வடிவம், தமிழ்நாடு பெயர் மாற்றம், இந்தியைத் தவிர்த்த இரு மொழிக் கொள்கைகள், ஜாதி ஒழிப்புத் திருமணத்திற்கு தங்கப் பதக்கம் வழங்குதல் எல்லாம் கொள்கை லட்சியச் சாதனைகள் அல்லவா?

சமூகநீதிக்கு - கலைஞர் அவர்கள் முதல்வராகி செய்த மாற்றங்கள் இட ஒதுக்கீடு அளவு உயர்வு, பிறகு அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம், ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்புக்கு அனைத்து ஜாதியினருக்கு சட்டமும், தேர்வும், ஏற்பாடும் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுதல், தமிழ் செம்மொழி, மகளிருக்கு சொத்துரிமை, வேலை வாய்ப்பு, தமிழர்தம் புத்தாண்டு தைமுதல்தான் - சித்திரை அல்ல! என்ற துணிச்சலான சட்ட மாற்றம் - இப்படி அத்துணையும் லட்சிய கொள்கை ரீதியானவை அல்லவா!

இதை மாணவர்கள், இளைஞர்கள், இயக்கத்தில் உள்ள அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

சுயமரியாதைத் திருமணங்களையே - அனைத்து இந்திய அளவிலும் சட்டமாக்க முதல்வர் எடுத்துவரும் முயற்சி - இந்தப் பண்பாட்டுப் புரட்சி மேலும் பல மாநிலங்களிலும் பரவ வேண்டும் என்பதற்காகத்தானே!

அரசியல் வெற்றி தோல்விகள் நிரந்தரமல்ல; கொள்கை லட்சியங்கள்தான் நம்மை உயர்த்தி வைப்பவை. அதனால்தான் நூற்றாண்டு விழா நாயகர் அறிஞர் அண்ணா அவர்கள், கொள்கை என்பது வேட்டி; பதவி என்பது மேல்துண்டுபோல என்று பொருத்தமாகச் சொன்னார்கள்!

தலைவர் கலைஞர் அவர்களது இந்த அறிவுரையை, இடித்துரையாக எடுத்துக்கொள்ளவேண்டும்; சமீப காலமாக அவரது மனதில் உறுத்திக் கொண்டிருந்த செய்தியைத்தான் அந்த உரையில் குறித்துள்ளார்கள்.

பதவியால் பெறும் பெருமையைவிட கொள்கையால், லட்சியத்தால் பெறும் பெருமையே நிரந்தரமானது
- நீடித்தது!

இதைப் பேசும் அத்தலைவரின் வாழ்விணையர் திருமணம் நடந்து 60 ஆண்டுகள் மண வாழ்க்கை. இதை எழுதும் எனது மண வாழ்க்கை 50 ஆண்டு. பின் ஏன் பயம்? சுபயோக சுப தினங்கள் பார்த்தவைகளில் இந்த அளவு வருவதுகூட அரிதுதானே!

தேவையில்லாத பயம் என்பதை அவர்கள் சுட்டியுள்ளார்கள்; அத்தோடு மற்றொரு முக்கிய அறிவுரையையும் முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

இப்போதுகூட, வருத்தத்தோடு நானும் பேராசிரியரும் பேசிக்கொள்வதுண்டு - இந்த இயக்கம் தொடங்கிய பிறகு, தமிழ் வாழ, தமிழ் பரவிட, தமிழ் மொழிக்கு ஆக்கம் கொழிக்க, இந்த இயக்கத்தின் சார்பாக எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகள் சாதாரணமானவைகள் அல்ல. நம்முடைய வீட்டிலே பிறக்கின்ற குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்கவேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு, அத்தகைய பெயர்களைச் சூட்டுகிறோம்.

இப்படி சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தால் - பகுத்தறிவு இயக்கத்தின் தாக்கத்தால் - தமிழ் இயக்கத்தின் தாக்கத்தால் உரு வான இந்தப் பெயர்கள், நம்முடைய காலத்திலேயே, நம்முடைய கண்ணுக்கு நேராகவே மாறுகின்றன, மாற்றப்படுகின்றன என்றால், எதிர்காலம் என்ன ஆகுமோ? என்ற கவலை எங்களுக்கு எல்லாம் இருக்கின்றது.

இந்தக் கவலை - பொறுப்பானவரின் பொறுப்பான கவலை; போக்கப்படவேண்டிய கவலை. தமிழன் இல்லத்துக் குழந்தை களுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டாவிட்டால், தமிழன் அடிமைத் தளையிலிருந்து எப்படி மீள முடியும்?

எனவே, இந்த இரண்டு அறிவுரைகளையும் உண்மையான திராவிடர் இயக்கத்தவர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். கட்சியும் கொள்கையும் தான் அடித்தளம்.

------------------------- கி . வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -"விடுதலை" தலையங்கம் 18-12-2008

7 comments:

Boopathy said...

Everything is right and welcomung facts. But who will tell to this leaders family, who did the pathapooja for the Saibaba. All explanations are for the foolish foolowers and not to be followed by their own family, who are enjoing the benefits of these Anna's movements!!!!
Wonderful.

தமிழ் ஓவியா said...

தவறு யார் செய்தாலும் தவறுதான்.
தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி.

அவிச்ச கடலை‌‌ said...

...//அறிஞர் அண்ணா அவர்கள், கொள்கை என்பது வேட்டி; பதவி என்பது மேல்துண்டுபோல என்று பொருத்தமாகச் சொன்னார்கள்!//..

இப்போதெல்லாம் வேட்டியையே காணோம்.மேல்துண்டையே வேட்டியாகக் கட்டிக் கொண்டு தமிழ்நாட்டை நாசமாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை.திமுக மோசம் என்றால் அதிமுக அதைவிட மோசம்.எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

தமிழ் ஓவியா said...

அவிச்ச கடலை கடலையை அவிச்சது போல் கட்சிகளையும் அவிச்சு மன்னிக்கவும் ஆராய்ச்சி செய்துள்ளார்.
தங்களின் ஆதங்கத்தில் நியாயம் உள்ளது.

முன்பிருந்த தி.மு.க. விற்கு இப்போதைய தி.மு.க. பரவாயில்லை என்பது எனது கருத்து.

என்ன சரிதானே?

bala said...

//அண்ணா அவர்கள், கொள்கை என்பது வேட்டி; பதவி என்பது மேல்துண்டுபோல//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

என்னது, கொள்கை என்பது வேட்டியா?பதவி என்பது மேல் துண்டா?அப்ப நாகரிகம்,பண்பாடு,நியாயம் என்பன கோமணமா?அதனால் தான் இவற்றை கழட்டி எறிந்து விட்டனரோ இந்த திராவிட வெங்காய ஜாதி வெறி பாசறை நாய்கள்?தமிழா தமிழா, திராவிட வெங்காய மோகினியின் கருப்பு சட்டை ஆட்டத்தில் இன்னும் மயங்கி இருக்கிறாயே, விழித்துக் கொள்ளடா விழித்துக் கொள்.

பாலா

தமிழ் ஓவியா said...

கோவனத்தை கழட்டி குச்சியில் சுத்திக்கிட்டு அலைவது ஊத்தைவாயன் சங்கராச்சாரிகள் தான்.

பார்ப்பனர்கள் ஒழுக்கத்தைப் பற்றி பேசுவதுதான் 2008 லும் வேடிக்கை.

பார்ப்பனர்களின் வண்டவாளத்தைத்தான் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரி என்னும் பார்ப்பனரே தண்டவாளத்தில் ஏற்றி உங்களை நாறடித்துவிட்டாரே.

நெய்யைத் தடவிக்கிட்டு யாருகூட வேண்டுமானாலும் பிள்ளை பெத்துக்கலாம் என்பது தானே உங்கள் ஒழுக்கம்.

தெம்பு இல்லாத பார்ப்பானுக்கெல்லாம் சேர்ந்து கடைபிடித்த வழிதானே இது.

ஒழுக்கத்திற்கும், பார்ப்பானுக்கும் சம்பந்தமே இல்லைங்கறத ஊத்தைவாயன்கள் உங்க லோக குரு (அமைந்தகரயைக்கூட தாண்ட யோக்கியதை இல்லை,பார்ப்பனர்கள் கடல்தாண்டி போகக்கூடாதுன்னு இந்து(திருடன்)மத விதி என்று சொல்றானுங்க. அப்புறம் எப்படி லோக குரு?.) நிருபிச்சுக் காட்டி இப்ப ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைஞ்ச்சுகிட்டு இருக்கிற கதை எல்லோருக்கும் தெரியும்.

பார்ப்பனர்கள் கதைதான் சிரிப்பாச் சிரிச்சுக் கிடக்கு.

இதிலே என்ன விளக்கெண்ணை நியாயம்?

தமிழ் ஓவியா said...

//என்னது, கொள்கை என்பது வேட்டியா?பதவி என்பது மேல் துண்டா?அப்ப நாகரிகம்,பண்பாடு,நியாயம் என்பன கோமணமா?//

ஒழுக்கத்தைப் பற்றியும் நியாயத்தைப் பற்ரியும் பார்ப்பனர்கள் வாய் திறக்கலாமா?

பார்ப்பன்ர்களின் நியாயம் என்ன தெரியுமா?


1.பிராமணனுக்கு மங்களத்தையும், சத்திரியனுக்குப் பலத் தையும், வைசியனுக்குப் பொருளையும் , சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது. சூத்திரனுக்குத் தாஸன் என்ற தொடர் பெயராக இட வேண்டியது. (அத் 2. சு.31-32)

2.பன்றியின் மோத்தலினாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது. (அத்3.சு,241)

3.பிராமணன் உண்டு மிகுந்த உணவு(எச்சில்) உடுத்திக் கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம்(பதர்) இவைகளைப் பிராமணன், சூத்திரன் ஜீவனத்திற்குக் கொடுக்க வேண்டும். (அத்.10.சு.,125)

4.சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடாமலோ பிராமணர் வேலை வாங்கலாம், பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார். (அத்.8. சு 413)

5. சூத்திரன் பிராமணனுடன் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்தால், இடுப்பில் சூடுபோட வேண்டும்; அல்லது ஊரைவிட்டுத் துரத்த
வேண்டும். (அத்.8.சு.281)

மேலே கண்டுள்ளவைகள் பார்ப்பனர்களின் மனுதர்மத்தில் சொல்லப்பட்டவைகள். இது ஒரு சிறு துளிதான்.

பார்ப்பனரல்லாதார்களே, பார்ப்பானின் நியாயத்தை தெரிந்து கொண்டபின்னும் பார்ப்பன வெறிநாய்களுக்கு வக்காலாத்து வாங்கப் போகிறீர்களா?.