Search This Blog

29.12.08

தோழர் தமிழச்சி அவர்களுக்கு மீண்டும் ஒரு திறந்த மடல்
25-12-2008 அன்று தமிழச்சி.காம் தளத்தில் “பெரியாரின் நினைவு தினமும்,போலிப் பாசாங்குகளும்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் பல கருத்துக்கள் சொல்லியிருந்தாலும்,பெரியாரியலை ஏற்றுக் கொண்டிருக்கும் தோழர்களை உளறிக் கொடிக்கொண்டிருக்கின்றனர் என்பது போன்ற தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். அது குறித்த பதிவு இது.

பார்ப்பனர்களும் பார்ப்பன அடிவருடிகளும்தான் தங்களின் ஆதிக்கம் பறிபோகிறேதே என்ற ஆத்திரத்தில் அப்படி விமசிப்பார்கள். ஆனால் தன்னை பெரியாரிஸ்டாக சொல்லிவரும் ஒருவரிடமிருந்து வரும் விமர்சனம் கூட இப்படி இருக்கிறதே என்று வருத்தமாக இருக்கிறது. அதற்காக விமர்சிக்கக்கூடாது என்பது பொருளல்ல.யாரும் யாரையும் விமர்சிக்கலாம். விதிவிலக்கெல்லாம் விமர்சனத்துக்கு இல்லை . ஆனால் விமர்சிக்கும் போது நாகரிகமாக சான்றுகளுடன் இருக்கும் போது தான் அந்த விமர்சனதிற்கு மதிப்பு இருக்கும். அதுவும் ஒத்த கொள்கையுடையவர்களை விமர்சிக்கும் போது இன்னும் சற்றுக் கூடுதல் கவனத்துடன் விமர்சிக்க வேண்டும்.

ஏனென்றால் நம்முடைய எதிரிகள் என்பது கண்ணுக்கு தெரியக்கூடியவர்கள் மட்டுமல்ல, கண்ணுக்குத்தெரியாத ஜாதி,மதம், கடவுள் போன்றவைகளும் அடக்கம். மக்களை மனரீதியாக அடிமைப்படுத்திவைத்துள்ள இவைகளை வைத்து ஆதாயம் தேடி ஆதிக்கம் செய்து கொண்டிருப்பவர்கள் நம்முடைய எதிரிகள். இப்படிப்பட்ட சூழலில் ஒத்த கருத்துடையவர்களை விமர்சிக்கும் போது எடுத்தேன், கவிழ்த்தேன் என்பதில்லாமல் மிகவும் நாகரிகமாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

தோழர் தமிழச்சி அவர்கள் அந்தக்கட்டுரையில் எழுதியுள்ளதை அப்படியே தருகிறேன். அது இதோ:

“தி.க.விலேயே ஏகப்பட்ட குளறுபடிகள். பெரியாரை பணம் பண்ணும் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள். என்னய்யா, பெரியார் மறைந்து இத்தனை காலமாகிவிட்டது. அவருடைய கொள்கைகள் இன்னும் அச்சுக்குள் வராமல் புழுத்துக் கொண்டிருக்கிறதே; நாங்களாவது ஏதாவது செய்கிறோம் என்றால், ஆயுள் காப்புரிமை எனக்கு மட்டும் தான் சொந்தம் என்பதும், சரி நீங்களாவது ஏதாவது செய்யுங்களேன் என்றால், எப்போ, என்ன, எப்படி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியுமென வக்கனையாக பேசுவதுமாக இருந்து கொண்டு, பெரியார் வாழ்கிறார், விழிக்கிறார், முழிக்கிறார் என்றால் உண்மைக் கருஞ்சட்டைகளுக்கு ஆவேசம் வருமா வராதா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே உளறிக் கொண்டிருப்பது.”

“பெரியாரின் எழுத்துக்கள் அச்சில் வராமல் புழுத்துக் கோண்டிருக்கிறதாம்.” இந்த எழுத்து நடையை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாம் இதை விட்டு விட்டு பெரியாரின் எழுத்துக்கள் அச்சில் வரவில்லையா? என்ற தமிழச்சியின் குற்றச்சாட்டை மட்டும் பார்ப்போம்.

எத்தனை நூல்கள் திராவிடர்கழகம் வெளியிட்டுள்ளது என்பது பற்றி திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தரும் தகவல் இதோ:

“விடுதலை பத்திரிகை - நண்பர் வீரமணி அவர்கள் ஏகபோக நிர்வாகத்தின் கீழ் நல்ல நிலையில் நஷ்டமில்லாத நிலையில் வாழ்ந்து வர வேண்டுமானால், இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்தது 2500 சந்தாதாரர்கள் இரண்டு மாதத்தில் சேர்க்கப்பட்டாகவேண்டும் (விடுதலை, 6.6.1964) என்று தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்திட்டு விடுதலை தலையங்கமாகவே எழுதினார்களே - அதனை இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டியது மிகவும் அவசியமாகும்.
எந்த நம்பிக்கையில் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களிடம் விடுதலையை ஏக போக நிர்வாகத்தில் ஒப்படைத்தார்களோ, அந்த நம்பிக்கை பொய்த்துப் போய் விடாமல், கம்பீரமாக வெற்றிகரமாக வீறுநடை போடச் செய்துவிட்டாரே - மனதில் மாசில்லாத மக்கள் அனைவரும் மனமொப்பி அதற்காக நன்றி பாராட்டுவார்கள்.தந்தை பெரியார் அவர்கள் தம் அறிக்கையில் சுட்டிக் காட்டியதுபோல, இந்த இயக்கத்தால் மனிதர்கள்ஆனவர்கள் இயக்கத்துக்கும், இயக்கத் தலைமைக்கும் எதிராகக் கத்தி தீட்டத்தான் செய்வார்கள்.ஆனால், நமக்கு தந்தை பெரியார் அவர்களின் அளவுகோல்தான் முக்கியம்.
தம்மிடம் ஏகபோகமாக தந்தை பெரியாரால் ஒப்படைக்கப்பட்ட அந்த விடுதலையை எந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்? நவீன அச்சுக்கூடம் உருவாக்கப்பட்டு, பல வண்ணத்தில் ஆறு பக்கங்களுடன் (முன்பு நான்கு பக்கங்களே!) திருச்சியில் இரண்டாம் பதிப்பு என்ற சாதனை மகுடத்துடன் உலகத் தமிழர்கள் மத்தியிலே ஜொலிக்கச் செய்துவிட்டாரே!உலகம் முழுவதும் உள்ள தமிழ் தெரிந்த அனைவரும் அடுத்த சில மணிநேரங்களிலேயே (நாம் படிப்பதற்கு முன்பே) இணைய தளத்தின் மூலம் படிக்கச் செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டாரே! இந்த வகையில், தமிழ்நாட்டில் முதன் முதலாக வெளிவந்த ஏடு விடுதலைதான் என்பது வைர வரிகளால் பொறிக்கத் தகுந்ததாகும்.
விடுதலையைப் படிப்பதற்கே ஒரு தனிப் பயிற்சி வேண்டும் என்ற நிலை மாறி, பல நாளேடுகளை நாம் அச்சிட்டுக் கொடுக்கிறோம் என்கிற அளவுக்குக் கொண்டு சென்றுள்ளது வளர்ச்சியா? - தேய்மானமா?உண்மை மாதமிருமுறை, பெரியார் பிஞ்சு (குழந்தைகள் இதழ்), தி மாடர்ன் ரேசனலிஸ்ட் என்பவை எல்லாம் எந்தத் தரத்தில் - காலத் துக்கேற்ற பொலிவோடு, வலிவோடு பூத்து மணம் கமழ்விக்கிறது என்பதை புலன்கள் கெட்டுப் போகாத அனைவரும் அறிவர் - பாராட்டுவர்!

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அடங்கிய நூல்கள் பகுத்தறிவு நூல்கள் அச்சிடும் பணி என்பது போர்க்கால வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே!

அதனை ஒரு தனி நிறுவனமாக்கி, ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அதிகாரியை நிர்வாகப் பொறுப்பாளராக்கி, நூல்கள் அச்சிடும் பணி எந்த நிலையிலும் தடங்கலில்லாமல் நடைபெறுவதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டு, ஓய்வு ஒழிச்சலில்லாமல் அப்பணி நடந்துகொண்டு இருக்கிறதே!

338 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் பொருள் வாரியாகத் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பின்கீழ் சராசரி 300 பக்கங்கள் என்ற அளவில் மக்கள் பதிப்பாக மலிவாக நன்கொடை அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகின்றன.கடவுள்-2 தொகுதிகள், மதம்-7 தொகுதிகள், பெண்ணுரிமை - 5 தொகுதிகள், ஜாதி - தீண்டாமை 17 தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன.
தலைப்பு வாரியாக வெளிவந்து கொண்டேயிருக்கும்.

ஆயிரம் ஆயிரம் பக்கங்களாக தொகுதிகளை வெளியிடுவதால் யாருக்குப் பயன்? பணம் கொடுத்து வாங்கும் சக்தி உள்ளவர்களின் அலமாரிகளில் அழகு செய்யும் - சாதாரண மக்களுக்குச் சென்றடையாது!மகாபாரத ஆராய்ச்சி - கீதையின் மறுபக்கம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) சந்திரசேகர பாவலரின் இராமாயண ஆராய்ச்சி (தொகுப்பு) இவையெல்லாம் வெளியிடப்பட்டுள்ளதே - பெரியார் கொள்கையைப் பரப்பும் பணியில் இவை மிக முக்கியத்துவம் பெறவில்லையா? உலகம் பூராவும் பார்ப்பனர்கள் கீதையைத்தானே அறக்கட்டளை வைத்துப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்? தமிழர் தலைவர் எழுதிய கீதையின் மறுபக்கம் நூலைத் தடை செய்யவேண்டும் என்று ராமகோபாலன்கள் முதலமைச்சரிடம் முறையிட்டனரே - அதற்குப் பிறகாவது நமது ஆசிரியரின் அரும்பணியைப் புரிந்துகொண்டிருக்க வேண்டாமா?ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையென்றால் அதற்காகவே பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட் டுள்ளதே! பழம்பெரும் இதழ்களும், ஏடுகளும் நவீன முறையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனவே! ஆய்வாளர்கள் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். 46267 நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. மாணவப் பருவந்தொட்டு அரிதிற் சேர்த்த தமது சொந்த 10,227 நூல்களை பெரியார் நூலகம் - ஆய்வகத்திற்குத் தந்துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.அய்யாவின் உரைகள் மட்டுமல்ல - குடிஅரசு இதழ்களும்கூட குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன (Digitalisation).’’


---------------- நன்றி: - http://files.periyar.org.in/viduthalai/20080824/news03.html

தற்போதுகூட திக.தலைவர் மீ.கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பகுத்தறிவு ஏன்?எதற்காக ? என்ற நூலை தி.க. இஞைரணித் தோழர்கள் மூலம் 10000 பிரதிகளுக்குமேல் மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புத்தச் சந்தை மூலம் பல ஆயிரம் ரூபாய்களுக்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெரியாரின் எழுத்துக்கள் அச்சில் வராமல் இல்லை மக்களிடம் பெரியாரின் கருத்தை கொண்டு சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை தி.க. பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் தகவல் வேண்டுவோர் கீழ்காணும் இணப்பைப் பயன்படுத்தி விவரமாகத் தெரிந்து கொள்ளலாம்.
1. http://files.periyar.org.in/viduthalai/20080825/news21.html
2. http://files.periyar.org.in/viduthalai/20080827/news39.html.

அடுத்ததாக தமிழச்சி அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு இதோ:

“பெரியாரை பணம் பண்ணும் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள்.” என்கிறார் தமிழச்சி.இந்தக் குற்றச்சாட்டு புதிதல்ல, இதற்கு முன்னும் இதே போல் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர். பெரியார் மீதே இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வந்ததுண்டு. இந்த்க்குற்றச்சாட்டைப் பற்றிய உண்மை என்ன?


" நீங்கள் சொல்லுகிற வாதப்படியே வைத்துக் கொண்டாலும், வீரமணி பெரியார் விட்டுச் சென்ற சொத்துகளை ஆயிரம் மடங்கு வளர்த்திருக்கிறார் என்பதை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா?
நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள்கூட அவர் கழுத்தில் சூட்டப்படும் புகழ் மாலையாக அல்லவா மாறுகிறது! வீரமணி - அவருக்குள்ள தனித் தன்மையான ஆற்றலே அதுதான்! “என்கிறார் தி.க.பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் அவர்கள்.

பணம் பண்ணி வீரமணி அவர்களோ மற்ற தி.க. தோழர்களோ அந்தப் பணத்தை வீட்டுக்கு எடுத்துக் கொண்டா செல்கிறார்? இயக்கத்திற்காக, இயக்க வளர்ச்சிக்காகத்தானே அதை பயன் படுத்துகிறார்.

தமிழச்சி அடுத்து வைக்கும் குற்றச்சாட்டு இருக்கிறதே அதை நினைத்து என்ன சொல்வதன்றே தெரியவில்லை.

அந்தக் குற்றச்சாட்டு இதோ:

“சென்ற மாதம் நவம்பர் 14- ஆம் தேதி பெரியார் நூல்கள் தேசியவுடமையாக்க வேண்டும் என்ற வழக்கு விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது, நீதிபதி சிவக்குமார் ஏன் பெரியார் எழுத்துக்களை தேசிய மயமாக்கப்படக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு, "பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் வெளிப்படையாக எதுவும் கூறமுடியாது" என்கிறார் பணம் பண்ணும் கூட்டத்திற்கு ஆதரவாக ஆஜரான வக்கீல் துரைசாமி சொல்லி இருக்கிறார் என்றால், எப்பேர்ப்பட்ட கள்ளத்தனமாக இருக்கும். இவையெல்லாம் பொறுப்பான பேச்சுக்களா?”

ஏற்கனவே நாம் பணம் பண்ணும் குற்றச்சாட்டுப் பற்றி பார்த்துவிட்டோம். மேற்கண்ட குற்றச்சாட்டில் பணம் பண்ணும் கூட்டத்திற்கு ஆஜராகும் வக்கீல் துரைச்சாமி என்றும் அவர் சொல்வது “கள்ளத்தனம்” என்றும் “இவையெல்லாம் பொறுப்பான பேச்சுக்களா?” என்றும் ஏசியுள்ளார் தமிழச்சி.

அய்யோ அம்மா தமிழச்சி உங்களின் இந்தக் குற்றச்சாட்டை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை. அனைத்து பெரியார் தொண்டர்களையும் சகட்டுமேனிக்கு கண்டபடி எழுதுவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.

நம்மிடையே கொள்கை வேறுபாடு இல்லை.பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் செல்வதில் கருத்து வேறுபாடு, அணுகுமுறை காரணமாக அவரவர்கள் அமைப்பு ரீதியாக நாம் பிரிந்து செயல்படலாம் அதில் ஒன்றும் தவறும் இல்லை. உள்ளுக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்காமல் தனித்தனியாக செயல்படுகிறோம். அவ்வளவே.அப்படிசெயல்படும்போது தவிர்க்க இயலாமல் சிலசிக்கல் தோன்றும் அதை நாகரிகத்துடன் போக்கிக் கொள்ளவேண்டும் அதை விடுத்து , ஒத்த கருத்துடைய பெரியாரியல் தோழர்களை விமர்சிக்கும் உங்கள் எழுத்தை பாருங்கள். “பொறுப்பான பேச்சுக்களா” என்று கவலைப்படும் நீங்கள் எழுதியுள்ள சொல்லாட்ச்சியைப் பாருங்கள்:-

ஜால்ராக்கள்
வஞ்சத்தை மறைத்து பணம் பண்ணும் வேலை
புழுத்துக் கொண்டிருக்கிறதே
வக்கனையாக பேசுவது
எப்பேர்ப்பட்ட கள்ளத்தனமாக இருக்கும்
பம்பாத்து பேச்சு
உளறிக் கொண்டிருப்பது.

பார்ப்பனர்களைக்கூட நாகரிகமாக விமர்சிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. நம்முடைய தோழர்களை இப்படி மரியாதைக்குறைவாக விமர்சிப்பது சரியா? விருப்பு வெறுப்பின்றி சிந்திக்க வேண்டுகிறேன்.

பிரச்சனைக்கு வருவோம்.

வழக்குரைஞர் துரைச்சாமி அவர்கள் திராவிடர்கழகத்தில் சட்டத்துறைச் செயலாளராக இருந்தவர். நம் கொள்கைத் தோழர்களுக்காக பல வழக்குகளில் ஆஜாராகி வெற்றி தேடித்தந்தவர். மூத்த பெரியார் தொண்டர். தற்போது பெரியார் திரவிடர் கழகத்தில் ஆட்சிமன்றக் குழுவில் ஒரு பொறுப்பாளராக இருக்கிறார். அவர் ஆஜரானதோ பெரியார் திராவிடர்கழகத்துக்காக ஆனால் நீங்கள் அவரையும் பணம் பண்னும் கூட்டதிற்காக ஆஜரன வக்கீல் என்கிறீர்கள்.

தி.க. தோழர்களையும் பணம் பண்னும் கூட்டம் என்கிறீகள். பெரியார் தி.க. வுக்காக ஆஜரான வழக்குரைஞரையும் ,பணம் பண்ணும் கூட்டத்திற்கு ஆஜரான வக்கீல் என்கிறீர்கள்.

25 ஆண்டுகளாக பெரியார் இயக்கத்தினர்களை ஊண்றிக் கவனித்து வருகிறேன்.என் அறிவுக்கு எட்டிய வரை பணம் பண்ணுவதற்காக யாரும் பெரியார் கொள்கைகள ஏற்றுக் கொள்ளவில்லை. அவரவர் சொந்தக் காசை செலவு செய்துதான் பிரச்சாரம் செய்துவருகிறோம். ஒரு கூட்டம் நடத்துவதற்கு ஒவ்வொரு பெரியார் தொண்டனும் எவ்வளவு சிரமப்படுகிறான் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த கஸ்டத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். ஒருகூட்டம் நடத்தி முடிப்பது என்பது ஒரு பெண்பிரசவத்திற்காக எவ்வளவு கஸ்டப்படுகிறாரோ ( இந்த உவமை மிகைபடுத்துவது போல் தெரியும் ,ஆனால் மிகையில்லை) அது போல் பெரியார் தொண்டர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை குறைந்தபட்சம் நாகரிகமாக விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த பதிவு பதிவு செய்யப்படுகிறது. தனிப்பட்ட முறையில் தமிழச்சி உட்பட யாரையும் காயப்படுத்துவதற்காக அல்ல.

22 comments:

Anonymous said...

அய்யா! மிக அருமையான பதில்.நான் புதுவையை சார்ந்தவன்.தற்போது துபாயில் வேலை செய்கிறேன்.ஆசிரியர் வீரமணி மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்துள்ளேன்.ஆனாலும் பெரியாரின் அத்தனை பேச்சுக்களையும் எழுத்துக்களையும் புத்தக-ஒலி வடிவில் கொண்டுவர 38 ஆண்டுகள்(பெரியார் மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன)வேண்டுமா?.(இன்னும் கூட முடியவில்லை).அதுவும் அவர் விட்டுச் சென்ற சொத்துக்களும் கையில் இருக்கும்போது,என்பதை நினைக்கும்போது நமது கழகம் இதில் இன்னும் வேகம் காட்டியிருக்க வே ண்டும் என்றே தோன்றுகிறது.மற்றபடி டில்லி பெரியார் மையம்,பெரியார் பன்னாட்டமைப்பு,புத்தக சந்தை,பெரியார் சிலை திறப்பு,விடுதலை-உண்மை-பெரியார் பிஞ்சு-The Modern Retionalist-போன்றவை திருப்திகரமாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.மற்றபடி தமிழச்சி போன்றோருக்குக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.காரணம்,இவர்கள் ஆசிரியரிடம் ஒட்டிக்கொண்டிருந்தபோது இப்போது சொல்லும குறைகள் அப்போது இல்லாதிருந்தனவா?.இவண்.சந்துரு.

கோவி.கண்ணன் said...

//தன்னை பெரியாரிஸ்டாக சொல்லிவரும் ஒருவரிடமிருந்து வரும் விமர்சனம் கூட இப்படி இருக்கிறதே என்று வருத்தமாக இருக்கிறது.//

அந்த அம்மா தெரியாததைக் கூட தெரிந்த மாதிரிக் காட்டிக் கொள்ளுபவர், என்னைப் பற்றி எதுவுமே தெரியாத நிலையில்...என்னைப் பற்றி ஓசை செல்லா மற்றும் அவருடைய நண்பர்கள் ஆவேசமாக எழுதியதெல்லாம்... அவர்கள் இவருடைய நண்பர்கள் என்பதால் தொடர்பே இல்லாத பிறரை அவமதிக்கிறோம் என்பதைப் பற்றி சிறிதும் நினைக்காமல் சிலாகித்துப் பாராட்டினார், இத்தனைக்கும் இவரை நான் விமர்சனம் செய்தது கூடக் கிடையாது.

பெரியார் பெயரை விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறார் என்றே பலரும் இவரைப் பற்றி பொதுவாக விமர்சனம் செய்கிறார்கள். மற்றபடி இவர் மீது எனக்கு தனிப்பட்ட விமர்சனம் எதுவும் கிடையாது.

ஆட்காட்டி said...

periyaarin padiappukaL pothuwaakkap pada weendum. oruwarukkum athilee urimai kidaiyaathu. ungkada kazakaththukum seerththu thaan. nallathu panna ninaiththaal athaip pannungkaL.

Osai Chella said...

அன்பு நண்பருக்கு, எனக்கு இருபுறமும் (திக, பெதிக) நண்பர்கள் இருப்பதால் இவ்விசயத்தில் ஒரு கருத்தை சொல்ல இயலவில்லை. ஆனால் இவ்விசயத்தால் தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் இருக்கிறார் ஆசிரியர் என்று இயக்க சார்பற்ற நடுநிலைமையாளர்கள், பெரியார் விரும்பிகள் பலரும் (நான் வசிப்பது கோவை!) முணுமுணுப்பதை தாங்கள் அறியாதவரா என்று என்னால் ஊகிக்கமுடியவில்லை. ஆனால் சில பல விசயங்களை பொதுவில் வைக்காமல் பேசித்தீர்த்துக்கொள்வது நலம் என்ற உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு. மற்றபடு தமிழச்சி அவர்களின் பெரியார் ஈடுபாட்டை குறைத்து மதிப்பிட நான் தயாரில்லை. ஆனால் என்னைப்போலவே வார்த்தைகள் அவருக்கும் இடறிவிழுவது கவலையளிக்கும் விசயம்தான். மற்றபடி திக எதுவும் வெளியிடவில்லை என்பதெல்லாம் மிகைப்படுத்தலே! குவெகி ஆசான், தென்மொழிஞானப்பண்டிதன் போன்றவர்களைப்பற்றி அறிந்தவன் என்ற முறையில் ஆசிரியர் பணம் எடுத்துக்கொண்டார் என்பது பற்றிய குற்றச்சாட்டெல்லாம் மிகைப்படுத்தலே. அதே சமயம் பெரியார் தமக்குமட்டுமே உரியார் என்ற எண்ணம் காலப்போக்கில் பெருந்தன்மையால் மாறவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, வேண்டுகோள்!

அன்புடன்,
ஓசை செல்லா, கோவை

தமிழ் ஓவியா said...

இது பற்றி விரிவாக பின்னர் விவாதிப்போம்.

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி சந்துரு.

வால்பையன் said...

//தற்போதுகூட திக.தலைவர் மீ.கி.வீரமணி அவர்களின் //


வெறும் கி.வீரமணியாக இருந்தது ஏன் மீ.கி.வீரமணியானது?

இது தான் பகுத்தறிவா?

இவையெல்லாம் யாரை முட்டாளாக்கும் முயற்சி

ரவி said...

///தோழர் தமிழச்சி அவர்களுக்கு மீண்டும் ஒரு திறந்த மடல்"//

மடலை யாராவது திறந்துவிட்டு பிறகு அனுப்புவார்களா கி கி கி

////வெறும் கி.வீரமணியாக இருந்தது ஏன் மீ.கி.வீரமணியானது?

இது தான் பகுத்தறிவா?

இவையெல்லாம் யாரை முட்டாளாக்கும் முயற்சி///

அய்யோ வால்பையா...

தினமலம் வாங்கிகட்டிக்கொண்டது போதாதா ?

அவர் தாயார் பெயரையும் சேர்த்து எழுதியுள்ளார்..இது புரியாம சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டீங்களே?

தலையில ரெண்டு கொட்டு (நான் வேற எதுவும் உங்களை திட்டவில்லை)

வால்பையன் said...

//அவர் தாயார் பெயரையும் சேர்த்து எழுதியுள்ளார்..இது புரியாம சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டீங்களே?//

சந்தோசமான விசயம் தான், ஆனால் தீடிரென தாயார் பாசம் எப்படி வந்தது?

பெரியார்தாசன் நேமாலாஜி ராஜராஜனுக்கு வருடி கொடுப்பது

எல்லாம் ஒரே குஷ்டமப்பா!!

தமிழ் ஓவியா said...

கி.வீரமணி மீ.கி.வீரமணி ஆனது ஏன்?என்று வால் பையன் கேள்வி கேட்டிருக்கிறார். எதையும் ஆராயாமல் இப்படி கேள்வி கேட்பது சரியா?


கி.வீரமணி மீ.கி.வீரமணி ஆனது எப்படி? தீடிரென தாயார் பாசம் எப்படி வந்தது? இதோ அதற்கான உண்மைக் காரணம்.

"தினமலர் ஏடு வீரமணி அவர்களைப்பற்றி எழுதிய விஷமச் செய்தி இதோ:

"இதுவரை கி.வீரமணி என இருந்த தன் பெயரை "நியூமராலஜி' அடிப்படையில் மீ.கி.வீரமணி என மாற்றிக் கொண்டுள்ள தி.க. தலைவர் வீரமணி"

இது குறித்து 26-12-2008 "விடுதலை" இதழ் எழுதியது இதோ:

"

அட, துப்புக்கெட்ட தினமலரே!

"தினமலர்" (26.12.2008) என்ற பார்ப்பன நஞ்சு கக்கும் ஏடு வழக்கம்போல தனது துப்புக்கெட்ட தனத்தை அரங்கேற்றி யுள்ளது.

சென்னை - பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி - திராவிடர் கழக மகளிரணி மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் குழந்தைகளின் பெயர்களுக்குமுன் முன்னெழுத்து (Initial) தந்தையார் பெயரோடு, அம்மாவின் பெயரின் முன்னெழுத்தும் குறிக்கப்படவேண்டும் என்ற பெண்ணுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் - அதற்கு நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி, தமது தாயார் பெயரான மீனாட்சி அம்மையார் என்னும் பெயரில் உள்ள முதல் எழுத்தையும், ஏற்கெனவே உள்ள "கி"யுடன் இணைத்து "மீ.கி. வீரமணி" என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

அந்த நேரத்திலேயே ஒரு விளக்கத்தையும் தெரிவித்தார். விஷமிகள் இது ஏதோ எண் சாஸ்திரம் (Numerology) என்று விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எச்சரித்திருந்தார்.

"தினமலர்" போன்ற பார்ப்பன நச்சரவங்கள் தனது உச்சிக் குடுமித் தனத்தைச் செய்யும் என்று தந்தை பெரியாரின் சீடரான அவருக்குத் தெரியாதா?

அவர் எதிர்பார்த்தபடியே பார்ப்பன விஷப்பாம்பு தனது பாஞ்சாலி வேலையைச் செய்திருக்கிறது.

பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடிக்கும் தமிழர் தலை வரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற கொழுப்பு "தினமலர்" கூட்டத்தின் தலையில் ஏறியிருப்பதாகத் தெரிகிறது.

நல்ல மாட்டுக்கு ஒரு "சூடு!" இன்னும் எத்தனைச் சூடு களைத்தான் தமிழர்கள் கொடுப்பார்களோ தெரியவில்லை."


இப்போது உங்களின் அய்யம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி வால்பையன்.

வால்பையன் said...

சந்தேகம் தீர்ந்தது.
நான் தினமலர் படிப்பதில்லை
ஆனால் இது பற்றி ஒரு ப்ளாக்கில் படித்தேன்.

நீங்கள் கூறிய விளக்கம் எதுவும் அதில் சொல்லபடவில்லை.

விளக்கதிற்கு நன்றி

தமிழ் ஓவியா said...

//வால்பையன் கூறியது...

சந்தேகம் தீர்ந்தது.//

நன்றி வால்பையன்.
தொடர்ந்து பார்த்து படித்து கருத்து தெரிவிக்கவும்.
மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி. கண்ணன்

sathiri said...

அந்த அம்மணிக்கு நீங்கள் திறந்த மடல் எழுனாலென்ன மூடிய மடல் எழுதினாலென்ன அவர் வாணலேடிக்கை காட்டிக்கொண்டுதானிருப்பார் காரணம் அதுதான் நம்ம கொழுவி சொன்ன மாதிரி அவர் பெரியாரிஸ்ற் அல்ல பெரீய ரைப்பிஸ்ற் அவ்வளவுதான்

nagoreismail said...

தமிழச்சி அவர்களுக்கு "இன்னும் நிறைய பணியாற்ற வேண்டும்.." என்ற வேட்கையில் எழுதிய வார்த்தைகளாகத் தான் எனக்கு தெரிகிறது.

பதில் அளிக்கிறேன் என்று மல்லுக்கு நிற்காமல் பெரியார் சொன்னது போல், எந்த காரியத்தில் ஒன்று பட முடியுமோ அதை பற்றி பேசி ஒற்றுமையாக செயல் பட வேண்டும் என்பதே விருப்பம்

"நம்மிடையே கொள்கை வேறுபாடு இல்லை.பெரியாரின் கொள்கைகளை எடுத்துச் செல்வதில் கருத்து வேறுபாடு, அணுகுமுறை காரணமாக அவரவர்கள் அமைப்பு ரீதியாக நாம் பிரிந்து செயல்படலாம் அதில் ஒன்றும் தவறும் இல்லை. உள்ளுக்குள் முரண்பட்டுக் கண்டிருக்காமல் தனித்தனியாக செயல்படுகிறோம்."

- பொறுமையான பதில்கள், மரியாதையான வார்த்தைகள், தேவைக்கேற்ப விளக்கங்கள் - எழுத்தோவியங்களை வியக்கிறேன் தமிழ்ஓவியா அவர்களே

pulliraj said...

நானுந்தான் எப்படியாவது சுய விளம்பரம் தேடலாம் என யோசிக்கிறன். முடியல. தி.க தாக்கி எழுதனும் என எனக்கு முதல்ல தோணல. தெரிஞ்சிருந்தா உங்க கையால என்னைப்பற்றி நாலு வரியாவது எழுதியிருப்பீங்க.

ம். கொடுத்து வைக்கல.

புள்ளிராஜா.

Thamizhan said...

திராவிடர் கழகத்தைக் குறை கூறுபவர்கள் சென்னை பெரியார் திடல்,வல்லம்,திருச்சி நிறுவனங்களைச் சென்று பார்த்து விட்டுக் கூறவேண்டுகிறேன்.விடுதலையையாவது் தொடர்ந்து படிக்க வேண்டும்.
ஆசிரியர் மீ.கி.வீரமணி அவர்களைக் குறை சொல்பவர்கள் அவருடன் இரண்டு நாட்கள் பயணம் செய்து பார்க்க வேண்டும்.
அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுவது
உங்கள் பயணங்களை,உழைப்பைக்
குறைத்துக் கொள்ளுங்கள் என்பது தான்.
இயக்கத்துக்கு வரும் பணம் விடுதலையில் அறிவிக்கப் பட்டு கருப்பு மெழுகு வர்த்திகளின் வியர்வையும்,உழைப்பும் என்பதை நன்கு உணர்ந்துதான் செலவழிக்கப் படுகிறது.பெரிய செல்வந்தர்களின் நன்கொடைகள் மிக மிகக் குறைவு.அனைத்தும் விடுதலையில் வெளியிடப் பட்டுதான் வருகிறது.
கட்டுப்பாடில்லாதவர்களுக்கும்,
துரோகிகளுக்கும் கழகத்தில் இடமில்லை என்பது தந்தை பெரியார் காலத்திலிருந்து கடைப் பிடிக்கப் பட்டு வரும் கொள்கை.யாரையும் நாகரீகமற்ற வார்த்தைகளில் திராவிடக் கழகத்தினர் தாக்குவதில்லை.
கருத்திலே காட்டமிருக்கும்,வார்த்தைகளில் அசிங்கமிருக்காது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஓசை செல்லா.

விரிவாக பின்னர் விவாதிப்போம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி pulliraj

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழன் அய்யா

தமிழ் ஓவியா said...

//பொறுமையான பதில்கள், மரியாதையான வார்த்தைகள், தேவைக்கேற்ப விளக்கங்கள் - எழுத்தோவியங்களை வியக்கிறேன் தமிழ்ஓவியா அவர்களே//

ஒருவரை பெரியார்தொண்டராக உருவாக்குவது எவ்வளவு சிரமம் என்பதை நான் நன்கு உணர்ந்தவன். தோழர் தமிழச்சி அவர்களுக்கும் எனக்கும் எந்த அறிமுகமுமில்லை. அவருடைய உழைப்பை இணைய வழியாகப் பார்த்து மகிழ்சி யடைந்தவர்களில் நானும் ஒருவன்.
அவர் இன்னும் சிறப்பாக செயல் படவேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதியதே இந்த பதிவு. அவர் மட்டுமல்ல பெரியார்தொண்டர்கள் அனைவருமே எனது தோழர்கள், சொந்தங்கள் என்று எண்ணுபவன் நான்.

//பதில் அளிக்கிறேன் என்று மல்லுக்கு நிற்காமல் பெரியார் சொன்னது போல், எந்த காரியத்தில் ஒன்று பட முடியுமோ அதை பற்றி பேசி ஒற்றுமையாக செயல் பட வேண்டும் என்பதே விருப்பம்//

எனது வேண்டுகோளும் அதுவே.தங்களின் கருத்துக்கும் வருகைக்கும்
நன்றி நாகூர் இஸ்மாயில்

ARIVUMANI, LISBON said...

தமிழச்சி வெளிப்படுத்தியது ஆதங்கம்...
அதற்க்கான உங்கள் பதிலும், அனுகுமுறையும் அற்புதம்!! தொடரட்டும் உங்கள் பணி...

வாழ்த்துக்கள்!!

தமிழ் ஓவியா said...

நன்றி அறிவுமணி