Search This Blog

12.12.08

ஆபாச அய்யப்பன் சீசன் அறிவுக்குக் கேடு அல்லவா?
வழக்கம் போலவே மக்களின் மூடநம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு திருவிழா, கோயில் பூஜை - புனஸ்காரங்கள் என்ற பெயரில் பணச்சுரண்டலும், அறிவுச்சுரண்டலும் தங்குதடையின்றி நடை பெறுகின்றன!

குருபெயர்ச்சி என்று அறிவியலுக்கு முரணான விஷயத்தை வைத்து நாளேடுகள், வார ஏடுகள் தங்கள் விற்பனையைப் பெருக்கிக் கொள்வதோடு, மக்களின் மூளைக்குப் போட்ட விலங்கினை உடைக்கும் பணிக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக ஆக்கி வருகின்றன. அடுத்து சனிப்பெயர்ச்சி, பிரதோஷம் என்றெல்லாம் ஆரியக் கற்பனைக் குப்பைகளைக் கொட்டும் தொட்டியாக நம் மக்களது மூளைகளை ஆக்கிக் கொண்டுள்ளனர்!

அய்யப்பா சரணம் என்று அய்யப்பன் மூடத்தனம் ஆரம்பித்து விட்டது! சுமார் 30, 40 ஆண்டுகளுக்கு முன் இப்படி கேரளத்தின் ஒரு மூலையில் இருந்த சபரிமலை சாஸ்தாவை யாருக்குமே தமிழ் நாட்டில் தெரியாது!

சர். பி.டி.ராஜன் செய்த இறக்குமதித் தீமைகளில் இதுவும் ஒன்று! இதேபோல் கர்நாடகாவில் கொல்லூர் அருகில் உள்ள மூகாம்பிகைக் கோயிலுக்கு எம்.ஜி.ஆர். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் சென்றார்; அதற்கு அவர் சொன்ன விளக்கம் பகுத்தறிவாளர்களுக்குப் பயந்து சொன்ன விளக்கமாகும். எனது தாயார் விருப்பம் அது; அவ்விருப்பம் நிறைவேறாமலேயே அவர் மறைந்துவிட்டார்; அதற்காகத்தான் மூகாம்பிகைக் கோயிலுக்குச் சென்றேன். நான் மூகாம்பிகையை வேண்டி அருள் பெறுவதற்காக அல்ல என்ற கருத்து தொனிக்கச் சொன்னார். உடனே எம்.ஜி.ஆர். பக்தர்கள் மூகாம்பிகை கோயிலுக்குப் படையெடுக்கத் துவங்கினர்; எப்படியோ அது சில காலங்களில் முடிந்துவிட்டது. இப்போது அந்த வியாதி அவ்வளவு அதிகமாகப் பரவவில்லை.

இந்த அய்யப்பன் கதையே ஆபாசம். ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் என்று அறிவைப் பயன் படுத்தாமலேயே - தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்களே பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பதற்கு அடையாளமாக, பக்தி வந்தவுடன் புத்திக்கு வேலை தராமலேயே - அரிஹர புத்திரா, அய்யப்பா என்று உரக்கக் கூச்சலிடுகின்றனர். அரி என்றால் மகாவிஷ்ணு, அரன் என்றால் சிவன். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்று கூறுகிறோமே, ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா? உடல் கூறு தத்துவத்திற்கே இது முற்றிலும் முரண் அல்லவா என்று எவராவது பக்தர்கள் சிந்திக்கிறார்களா?.

உயர்நீதிமன்ற, உச்ச நீதி மன்ற நீதிபதியாக இருந்தவர்கள் கூட அய்யப்ப பக்தர்களாகி மலைக்குப் மாலை போட்டுக் கொண்டு சபரிமலைக்குப் போகும் அருவருப்பான, அசிங்கமான காட்சியைக் காணும்போதே வெட்கம் நம்மைப் பிடுங்கித் தின்கிறது!

படிப்புக்கும் பதவிக்கும் பகுத்தறிவுக்கும் சிறிது கூட சம்பந்தமே இருப்பதில்லையே. 21- ஆவது நூற்றாண்டில், தமிழ் நாட்டிலிருந்தே நிலவுக்கு விண்கலம் செலுத்தும் அளவுக்கு முன்னேற்றம் - வளர்ச்சி ஒரு புறத்தில் - இன்னொரு புறம் இப்படி ஒரு கூத்து!

அங்கே மருத்துவமனைகள்; தீவிரவாதிகள் நுழையாமலிருக்க பலத்த பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை எவற்றை உணர்த்துகின்றன? அய்யப்பசாமிக்கு அவ்வளவுதான் சக்தி. எல்லாம் வல்லவன் அல்ல. சர்வசக்தி, சர்வ வியாபி, சர்வ தயாபரன் என்பதெல் லாம் வெறும் புருடா என்பது பச்சையாக விளங்கவில்லையா?


இன்றைய (12.12.2008) தினமணி ஏட்டின் 10 ஆம் பக்கத்தில் வந்த செய்தியே, கடவுள் சக்தியைத் தோலுரித்துக் காட்டும் வகையில் இருக்கிறது. படியுங்கள். கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பயணத்தைத் தொடங்குவ தெல்லாம் அந்தக் காலம். எதிர்பாராத நிகழ்வுகளை எதிர் நோக்கி முன்னெச்சரிக்கையாக செயல்படுவதே புத்திசாலித்தனம். பக்தி ஒரு புறம் இருந்தாலும் முன்னெச்சரிக்கை எண்ணம் வரும்போது அதிகம் விற்பனையாவது காப்பீட்டுத் திட்டங்கள்தான். அந்த வகையில் சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

கடவுள் சக்தியை நம்பாமல் பக்தர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதற்கு இந்தச் செய்தியே கூட சரியான எடுத்துக் காட்டாகும்.

பெரியவர்கள் விளையாடும் இந்த மோசடி விளையாட்டுக்கு கேரளாவில் எத்தனை கோடி பணவசூல்! எண்ணினால் வேதனையாக இல்லையா? அங்கே நடந்த ஆபாசக் கூத்துகள், பெண்களிடம் அங்குள்ள முக்கிய அர்ச்சகர்கள், தந்திரீகள், மேல்சாந்திகள் செய்த லீலா விநோதங்கள் ஆங்கில, தமிழ் ஏடுகளில் சந்தி சிரிக்கவில்லையா? இவ்வளவையும் ஒருக்கிவிட்டு, கன்னிசாமி, குருசாமி, பெரியசாமி வகையறாக்கள் சபரிமலைக்குப் படையெடுப்பதை விட மூளைச் சாவு (Brain Death) வேறு உண்டா?

மக்களுக்கு அறிவியல் மனப்பான்மையை, கேள்வி-கேட்கும் (ஏன், எதற்கு ) தன்மையை வளர்த்து, மனிதநேயம், சீர்திருத்தம் வளர்த்தல் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக்கடமை (Fundamental duty of a citizen) என்று இந்திய அரசியல் சட்டத்தின் 51-ஹ பிரிவு வற்புறுத்தியுள்ளது எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானா? இதில் இன்னும் கொடுமை - இதனை அமலாக்க வேண்டிய வர்களே, கறுப்பு வேட்டி, தாடி, மீசை வைத்து, சிரைக்காமல் அசல் காட்டுமிராண்டிகளாகி கூட்டங் கூட்டமாய் படையெடுப்பது, வேலியே பயிரை மேயும் கொடுமை அல்லவா?

கழகத் தோழர்கள்- தெருமுனைக் கூட்டங்கள், துண்டறிக்கைகளை விநியோகியுங்கள்; அடைமழைப் பிரச்சாரத்தினை ஆரம்பியுங்கள்.

மூடத்தனத்தின் முடைநாற்றம் போக்க உழைக்க முன்வருவீர்களாக!

------------------ கி . வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -"விடுதலை" தலையங்கம் 12-12-2008

8 comments:

Suddi said...

Dear Sir,

The so-called pagutharivu, ina mana unarvu, tamil, tamilian - all
are just money making mechanisms.

If you dont believe in god, it's upto you.

If you believe in god, it's again
upto you.

In the name of god, religion, caste, if extremism and terrorism does not happen, then we should be happy.

Can the so-called pagutharivu leaders of TN tell openly, "People whoever worship god, let them not vote for our party. People whoever worship god, they will be expelled from our party and also from our family."

Real pagutharivu is not about the existence of god, it's about differentiating between good and the bad, so that we do not fall prey to bad. That's the difference between human beings with 6 senses and the non-human beings.

Ithu ellam summa sir, don't fool people with this pagutharivu business.

Sudharsan

Suddi said...

Recently, a male couple from Israel came to Mumbai to deliver a baby.

Note that this is also common nowadays between female couples.

So, "technically" same sex based children have been made feasible now. If Ayyappan was born out of Shiva and Vishnu, then there is nothing special about it.

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும்
வருகைக்கும் நன்றி.

உங்கள் கருத்தில் இம்மியளவு கூட உண்மை இல்லை.

கடவுள் பெயரைச் சொல்லி காசுப்றிக்கும் கூட்டத்தையும், காசு கொடுப்போரையும் சிந்திக்க வைப்பது தான் எங்கள் பணி.

தமிழில் பின்னூட்டம் அளிக்கவும்.
நன்றி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மக்களுக்கு அறிவியல் மனப்பான்மையை, கேள்வி-கேட்கும் (ஏன், எதற்கு ) தன்மையை வளர்த்து, மனிதநேயம், சீர்திருத்தம் வளர்த்தல் இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக்கடமை (Fundamental duty of a citizen) என்று இந்திய அரசியல் சட்டத்தின் 51-ஹ பிரிவு வற்புறுத்தியுள்ளது//

இது போன்ற நுணுக்கமான செய்திகளை தணியே முகப்பிலேயே அட்டவணைப் படுத்தலாமே ஐயா..

தமிழ் ஓவியா said...

//இது போன்ற நுணுக்கமான செய்திகளை தணியே முகப்பிலேயே அட்டவணைப் படுத்தலாமே ஐயா..//

தங்களின் வருகைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி அய்யா

தமிழ் ஓவியா said...

சுதர்சன் அவர்களுக்கு பெரியாரின் கருத்து ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதோ

தந்தை பெரியார் அறிவுரை:-"அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்."

-------"விடுதலை", 3.7.1950

அது சரி(18185106603874041862) said...

//
அங்கே மருத்துவமனைகள்; தீவிரவாதிகள் நுழையாமலிருக்க பலத்த பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை எவற்றை உணர்த்துகின்றன? அய்யப்பசாமிக்கு அவ்வளவுதான் சக்தி. எல்லாம் வல்லவன் அல்ல. சர்வசக்தி, சர்வ வியாபி, சர்வ தயாபரன் என்பதெல் லாம் வெறும் புருடா என்பது பச்சையாக விளங்கவில்லையா?
//

மிகச்சரியான வாதம்...மருத்துவமனைக்கு மட்டுமல்ல, அய்யப்பனுக்கே அதி தீவிர பாதுகாப்பு தேவைப்படுகிறது...அக்ஷர்தாம் கோவிலில் தீவிரவாதிகள் தாக்கிய போது அங்கிருந்த சாமி எதுவும் செய்ததாக தெரியவில்லை!

அய்யப்பன் தான் சாமி, அதனால் நம்புகிறார்கள் என்றால் சாய்பாபா என்று ஒரு ஆசாமி...அவருக்கு முடியவில்லை என்றால் அவர் டாக்டரிடம் ஓடுகிறார்..ஆனால் அந்த ஆசாமி தங்களை குணப்படுத்துவார் என்று அவரிடம் ஓடுபவர்களும் இருக்கிறார்கள்..

ஆனால், அய்யப்பன் மேட்டரில் நீங்கள் அதிகம் கவலைப்படவேண்டாம். ஏனெனில், அங்கு போகிறவர்கள் பலர் ஒரு பிக்னிக் மாதிரி தான் போவதாக தெரிகிறது....

(எனக்கு வீரமணி மீது கடும் விமர்சனம் இருந்தாலும், எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...என்ற அய்யன் மொழிப்படி, அவர் சொல்வது நல்ல விஷயம் என்று ஒப்புக் கொள்கிறேன்!)

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி
அதுசரி.