Search This Blog

16.12.08

பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த நம் பங்காளி



எனக்கு கவிதையில் அவ்வளவு நாட்டம் இல்லை, புலவர்கள் கவிஞர்கள் எதையும் மிகைப்படுத்தி எழுதுவதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால் அடிப்படையில் நான் ஒரு யதார்த்தவாதி. எதையும் ஏன்?எதற்கு? எப்படி? என்ற ஆராய்ச்சி மனப்பான்மை உடையவன். அதனால் கவிதையில் அவ்வளவு ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தேன். விதிவிலக்காக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கவிதையை அதுவும் முழுமையாக படித்ததில்லையானாலும் அவருடைய, சமுதாய நோக்கில் எழுதப்பட்ட கவிதையின் ஒரு சிலவரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் (அஞ்சல் மூலம் சில நூல்கள் வாங்கினேன்.அதில் ஒன்றுதான் இந்த நூல்) எனக்கு திரு. துரை.சண்முகம் அவர்கள் எழுதிய “இந்து என்று சொல்லாதே ராமன் பின்னால் செல்லாதே” என்ற நூல் கிடைக்கப் பெற்றேன். கட்டுரை நூல் என்றுதான் பிரித்துப் பார்த்தேன். அது கவிதை நூல் என்று அப்புறம்தான் தெரிந்தது . உடனே அந்நூலைத் தூக்கிப் போட்டுவிட்டு மற்ற நூல்கள் அனைத்தையும் அதன் உள்ளடக்கம் பற்றிய தகவல்களையும் பார்த்து எதை உடனே படிப்பது என்று பிரித்து வைத்தேன் (முதலில் படிக்க வேண்டிய நூல் அடுத்து அடுத்த நூல் என்று வரிசைப்படுத்தி படிப்பது என்னோட பழக்கம்). இறுதியாக அந்த கவிதை நூலை எடுத்து ஒரு பக்கத்தைப் புரட்டி படித்தேன்.

அதில் கீழ்கண்ட வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது. அதை அப்படியே உங்கள் பார்வைக்கு தருகிறேன்.

“மசாஜ்பார்லர் வைத்து
ஆளைப்பிடித்து இழுத்தால்
அது விபச்சாரம்;

மனுதர்மத்தை வைத்து
ஆளைப்பிடித்து அமுக்கினால்
அது மகாபாரதம்.”


------மேற்படி நூல்: பக்கம் 23

மீண்டும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பித்து கடைசிப் பக்கம் வரை உடனே படித்துவிட்டேன். சிந்திக்கும் வகையில் சிறப்பான கருத்துக்களை பக்கத்துக்கு பக்கம் அள்ளித்தெளித்திருந்தார் கவிதை நடையில்..

நான் விரும்பிப் படித்த வரிகளை உங்கள் பார்வைக்கு சில.

சென்ற மாதம்தான் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி காசைக் கரியாக்கி புகையை சுவாசித்து முடித்தான் தமிழன். அந்தத் தீபாவளிப் பண்டிகையை இப்படி எடுத்துரைக்கிறார் துரை. சண்முகம்.


“பத்மாசுரன் நம் உறவாளி
நரகாசுரன் ஒரு போராளி
பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த
நம் பங்காளியை
பார்ப்பனியம் தீர்த்துக் கட்டியதே – தீபாவளி."


----------------மேற்படி நூல்:- பக்கம் 20

அடுத்து அசுரர், சுரர் பற்றி விளக்க வந்த கவிஞர்


“முதலில்
சாராயம் குடித்த ஜாதி – பார்ப்பன ஜாதி
முதலில்
சாராயம் காய்ச்சிய ஜாதியும் பார்ப்பன ஜாதியே”


------------------மேற்படி நூல்:- பக்கம்:-21

என்று அவாளின் அயோக்கித்தனதை சொல்லிவிட்டு கடைசியாக இப்படி முடிக்கிறார்.

“அவாள்
சாராயம் குடித்தால்
அது தீர்த்தம்;
நம்மாள் குடித்தால்
நாத்தம்”


----------------------மேற்படி நூல்:- பக்கம்:-22

இது போல் “நச் நச்” என்று மிகச் சிறப்பாக கவிதை பாடியுள்ளார் திரு. துரை. சண்முகம்.
ராமனை வைத்து அரசியல் செய்வதை கண்டித்து எழுதப்பட்டதுதான் இந்தக் கவிதை நூல், அதில் ராமாயனக்கதையை முடிப்பதற்கு ஒரு வழி சொல்கிறார். அது சுவையானது. அது இதோ;

“பேசாமல் சீதையை அழைத்துக் கொண்டு
ராமன்
காஞ்சிமடம் பக்கம் போயிருந்தால்
சிறீரங்கம் உஷாவைப் போல்
சீதை கதை போயிருக்கும்
அப்புவை வைத்து சங்கராச்சாரி
ராமனை அடித்துத் தூக்கியிருப்பான்
ராமாயனம்
அங்கேயே முடிந்திருக்கும்
நமக்கும் வேறு வேலை நடந்திருக்கும்”.


------------------ மேற்படி நூல்:- பக்கம்:- 44
சங்கராச்சாரியாரின் யோக்கியதையை அழகாகப் படம் பிடித்துக் காடியுள்ளார்.

கவிதையில் நாட்டமில்லாத என்னை கருத்துக்கள் மூலம் கவர்ந்துவிட்டார் .
நன் படித்த பிடித்ததைச் சொல்லியுள்ளேன். உங்களுக்கு இது பிடித்ததா?

0 comments: