Search This Blog

10.12.08

விடுதலைப்புலிகளை வீழ்த்த முடியாது முன்னாள் பிரதமர் ரனில் ஒப்புதல்




"விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் இலங்கை அரசின் பொருளாதாரம் அடியோடு சீரழிந்துவிட்டது.
இலங்கையில் இனி ஆட்சிக்கு வருபவர்கள் அரசை நடத்துவதற்காக
திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பதுதான் ஒரே வழி"


விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுவிட்டதாக இலங்கை அரசு கூறி வருவது நாடகம்தான் என்றும், விடுதலைப்புலிகளை வீழ்த்த சிங்களப் படையினரால் முடியாது என்றும் இலங்கை முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரனில் விக்ரம சிங்கே கூறியிருக்கிறார்.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற அய்க்கிய தேசிய கட்சியின் 53 ஆவது ஆண்டு விழாவில் பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் தலைநகரான கிளிநொச்சியைப் பிடித்துவிட்டோம் என்றும், விடுதலைப்புலிகள் விரைவில் எங்களின் கால்களில் மண்டியிடுவார்கள் என்றும் இலங்கை அரசு கூறி வருகிறது. சண்டை நடைபெறும் பகுதிக்கு ஊடகங்கள் சென்று உண்மையான செய்தி வெளியிட அனுமதியில்லை என்பதால்தான் இலங்கை அதிபர் இராசபக்சே இதுபோன்ற பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மை என்னவென்றால், கிளிநொச்சியை இலங்கைப் படையினரால் இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. வன்னிப் பகுதியில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளனர். அவர்களை இலங்கைப் படையினரால் வீழ்த்த முடியாது என்று இரனில் விக்ரமசிங்கே பேசினார்.

இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே சுயநலத் திட்டத்துடன்தான் போர் நடத்தி வருகிறார். இராசபக்சே மற்றும் அவரின் சகோதரர் கோத்தபாய இராசபக்சே ஆகியோரின் விருப்பப்படி இலங்கைப் போர்ப்படையினர் இங்கும், அங்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசை நடத்த பிச்சை எடுப்பதுதான் வழி

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை நடத்துகிறோம் என்று கூறி இலங்கையின் பொருளாதாரத்தை இராசபக்சே சீர்குலைத்துவிட்டார் என்று ரனில் விக்ரமசிங்கே குற்றம் சாற்றியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. அதற்குள் இலங்கை அரசின் பொருளாதாரம் அடியோடு சீரழிந்து விட்டது. இலங்கையில் இனி ஆட்சிக்கு வருபவர்கள் அரசை நடத்துவதற்காக திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பதுதான் ஒரே வழி என்றும் இரனில் விக்ரமசிங்கே கூறினார்.

-------------------நன்றி:- "விடுதலை" 10-12-2008

0 comments: