Search This Blog

27.12.08

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே இராமாயணம் !



இராமாயண மகோத்சவமா?

நாளைய தினம் (28.12.2008) கிழக்கு தாம்பரம் இரயில்வே மைதானத்தில் ஸ்ரீராமாயண மகோத்சவம் - மாபெரும் பக்தி சங்கமம் நடைபெறும் என்று பெரிய அளவு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கொலை வழக்குக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள திருவாளர் ஜெயேந்திர சரஸ்வதியும் சிறப்புரையாற்றுகிறாராம். இந்து முன்னணி பிரமுகர் இராமகோபாலய்யர் சிறப்புரையாம் - மலர் வெளியீடாம், இராமாயண ஓவியக் காட்சியாம் - குழந்தைகள் அலங்கார அணிவகுப்பாம் - வேள்வியாம் - கூட்டுப் பிரார்த்தனையாம்.

பார்ப்பனர்களுக்கு இப்பொழுது என்ன வந்தது? எதற்காக இந்தத் தடபுடல்கள்? இராமாயணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டிய அவசியம் என்ன?

ஒருமுறை சர்.சி.பி. இராமசாமி அய்யர் கூறினார், பார்ப்பனர் களுக்கு ஆபத்து வந்தால் உடனே இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். காரணம், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த இராமாயணம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டி நூலாகும்.

இன்றைக்குப் பார்ப்பனர்களுக்கு அப்படி என்ன ஆபத்து வந்துவிட்டதாம்? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தந்தை பெரியார் அவர்கள் தம் சீடரான மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது.

மத்தியிலே உள்ள ஆட்சி இராமாயணத்துக்கு எதிரான ஆட்சியில்லை என்றாலும், இராமன் பாலம் பிரச்சினையில் இராமாயணம் என்பது வரலாற்று நூல் அல்ல - அது ஒரு கற்பனைக் காவியம் என்று மத்திய தொல்துறை உச்சநீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை- பார்ப்பனர்கள் கற்பனையாகக் கூறும் ராமன் பாலத்தை இடித்துக் கட்டலாம் என்று மத்திய அரசு கூறுகிறது.

மத்தியில் பா.ஜ.க. சார்பில் அத்வானியைப் பிரதமராக உட்கார வைத்திட வேண்டும் என்ற திட்டமும் அவர்களிடத்தில் இருக்கிறது. இதில் மிக முக்கியமாக முட்டுக்கட்டையாக இருக்கக் கூடியது - தந்தை பெரியார் பிறந்த - இயக்கம் நடத்திய - தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகும் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற மாநிலம் தமிழ்நாடுதான்.

கடந்த மக்களவைத் தேர்தலில்கூட இராம பக்தர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்குக் காரணமே - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதுதான்.

இத்தகு சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இராமாயணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு முட்டு முட்டிப் பார்க்கலாம்; பக்தியின் பெயரால் இராமனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி ஏமாற்றி இடங்களைக் கைப்பற்றிவிடலாம் என்கிற சூழ்ச்சியும் - திட்டமும் இதன் திரைமறைவில் இருக்கிறது என்று நிச்சயமாக நம்பலாம்.

அத்தகைய நம்பிக்கையாளர்களுக்கு ஒன்றை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம். 1971 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில், திராவிடர் கழகத்துக்காரர்கள் சேலத்தில் ராமனை செருப்பாலடித்து விட்டார்கள். அந்தத் திராவிடர் கழகம் தி.மு.க.வை தேர்தலில் ஆதரிக்கிறது என்ற நிலையில், தி.மு.க.வுக்கு வாக்களிக்காதீர் என்று கூப்பாடு போட்டுப் பார்த்தனர். கோயில் கதவு அளவுக்குச் சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினர். தேர்தல் பிரச்சாரத்தின் போக்கே முற்றிலும் திசை திரும்பியது. அந்தப் பிரச்சினையை ஆஸ்திகம் - நாஸ்திகம் என்ற வகையில் பிரச்சாரம் செய்தனர்.

முடிவு என்ன? 1967 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க., 1971 தேர்தலில் 183 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று, தமிழ் மண் தந்தை பெரியார் மண் - திராவிட இயக்கத்தால் பக்குவப்பட்ட மண் என்பதை அய்யத்திற்கு இடமின்றி நிரூபித்துக் காட்டியது.

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்துவிட்டது என்று சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் (ராஜாஜி) அவர்களே கையொப்ப மிட்டு அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டது.

இந்த அனுபவத்திற்குப் பிறகும், இராமாயணத்தைக் கையில் எதிர் கொண்டு எதிரிகள் புறப்படுவார்களேயானால், அதனை வரவேற்கத் தயாராகவே இருக்கிறோம்.

இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று பிரபல வரலாற்று ஆசிரியர் எல்லாம் அறுதியிட்டுக் கூறியிருக்கின்றனர். பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர்கூட இதே கருத்தைத் தான் கூறியிருக்கிறார்!

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டமாக நடக்க இருக்கும் தேர்தலை பாரதீய ஜனதா வகையறாக்கள், சங்கராச்சாரியார் கூட்டத்தினர் உருமாற்ற முயலுவார்களேயானால், அந்த நிலை தமிழ் உணர்வாளர்களுக்கும், தமிழின உணர்வாளர்களுக்கும் பாயாசம் சாப்பிட்டதுபோல் ஆகிவிடும்.

தெருத்தெருவாக வீடுவீடாக இராமாயணத்தின் யோக்கியதையை சூத்திரன் என்கிற காரணத்தால் சம்பூகன் என்னும் துறவி இராமனால் படுகொலை செய்யப்பட்ட சங்கதிகளையெல்லாம் விலாவாரியாக எடுத்துரைக்கும் நல்ல வாய்ப்பு நமக்குக் கிட்டிற்று என்றே மகிழ்வோம்.


நாளை தாம்பரத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் - அதனைப் பொறுத்து திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளும், எதிர்வினைகளும் தொடரும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.]

----------------------- நன்றி: "விடுதலை" தலையங்கம் 27-12-2008

3 comments:

Unknown said...

//இத்தகு சூழ்நிலையில் தமிழ்நாட்டில் இராமாயணத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஒரு முட்டு முட்டிப் பார்க்கலாம்; பக்தியின் பெயரால் இராமனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி ஏமாற்றி இடங்களைக் கைப்பற்றிவிடலாம் என்கிற சூழ்ச்சியும் - திட்டமும் இதன் திரைமறைவில் இருக்கிறது என்று நிச்சயமாக நம்பலாம்.//

பார்ப்பனர்களுடன் சேர்ந்து மட்டி மண்டூகங்களாம் சன் டி.வி யும் இராமாயணப் பிரச்சாரம் செய்கிறதே. அதுசரி நாய் விற்ற காசு குரைக்காவா போகிறது?

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்.

anbarasan said...

READ

வீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.

http://idhuthanunmai.blogspot.com/2008/12/blog-post_29.html

ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான பார்ப்பனீய பயங்கரவாதம்.

எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.

வாசகர்களே தயவு செய்து விடியோ முழுவதையும் காணுங்கள்.

தாங்க‌ளறிந்த அனைவருக்கும் இதை காணும்படி தெரியப்படுத்துங்கள்.