Search This Blog

17.12.08

சுதந்திரப் போரா? சிப்பாய் கலவரமா?



பார்ப்பனர்களால் விளைந்த கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. பார்ப்பனர்கள் அனைத்து துறைகளிலும் சாம,தான, பேத, தண்ட முறையைப் பயன்படுத்தி ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதில் அவர்களுக்கு ஈடு இணையாக யாரையும் காட்டமுடியாது.

சமுதாயம், அரசியல், அரசுத் துறைகளில் இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதுபோல் நீதித்துறையில் அவாளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அந்த வகையில் வரலாற்றுத்துறையில் சிந்து சமவெளி பிரச்சனையிலிருந்து, தற்போது நடக்கும் சேதுசமுத்திர பிரச்சனை வரை அவர்கள் ஆதிக்கம் தான் . அந்த வகையில் வரலாற்றைத்திரித்து எழுதுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.


நம்முடைய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் , “முஸ்லீம்படையெடுப்பும், ஆரியர் வருகையும்” என்றுதான் எழுதுவார்கள். முஸ்லீம்களை எதிரிகளாகவும், ஆரியர்களை வேண்டியவர்களாகவும் மனரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் “நயவஞ்சக” முயற்சிதான் வரலாற்றை இப்படி எழுதுவதற்கு காரணம்,
“அதுபோல் அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி” என்று அய்ந்து பேருடன் குடும்பம் நடத்திய பெண்ணைக்கூட பத்தினியாக்கும் வித்தை தெரிந்தவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்.


இதுபோல் சொல்லிக் கொண்டே போகலாம் இந்த பார்ப்பனர்களின் பித்தலாட்டத்தை.
இந்த வகையில் பார்ப்பனர் செய்த பித்தலாட்டம் ஒன்றை இங்கு பார்ப்போம்.
1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் என்று நம்முடைய வரலாற்றுப் பாடத்திட்டத்தில் உண்டு. அதைப் பற்றி நம்முடைய நண்பர்கள் இன்னும் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று நம்பிக் கோண்டிருக்கிறார்கள். அது சரியா? அங்கு நடந்தது என்ன? கலவரமா? போரா?

இதுகுறித்து பெரியார் தரும் தகவல் இதோ:


”அன்றைக்கு இராணுவத்தில் மிகுதியாகப் பார்ப்பனர்கள் இருந்தார்கள். பார்ப்பான் தன் நச்சுக் கருத்துகளை புகுத்துவதற்கு மிகவும் சல்லிசாக ஆகிவிட்டது. வெள்ளைக்காரன் கடல் கடந்து சென்று சண்டை போட இராணுவத்தைக் கப்பலில் ஏற்ற முற்பட்ட போது கடத்தல் இந்து மத சம்பிரதாயத்துக்கு விரோதம் என்று கூறி மறுத்து விட்டார்கள்.( மாலேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இராணுவத்தில் உள்ள பார்ப்பனர்களும் அடங்குவர் ----தமிழ் ஓவியா)

பார்ப்பனர்கள் சிப்பாய்களுக்குக் கொடுத்துள்ள துப்பாக்கியில் பசுவின் கொழுப்புத் தடவப்பட்டு உள்ளது. அது இந்து தருமத்துக்கு விரோதம் என்று இந்துக்களையும் பன்றிக் கொழுப்புத் தடவப்பட்டு இருக்கின்றது அது முஸ்லிம் தருமத்துக்கு விரோதம் என்று முஸ்லிம்களையும் தூண்டி விட்டுக் கலகம் செய்யச் செய்தார்கள்.

மக்கள் கலகம் பண்ணினால் வேண்டுமானால் பட்டாளத்துக்காரனைவிட்டு அடக்கலாம். பட்டாளத்துக்காரனே கலகம் பண்ணினால் யாரைக் கொண்டு அடக்க முடியும்? எனவே வெள்ளைக்காரனுக்கு மிகவும் சிரமமாகப் போய்விட்டது.

கலகத்தை அடக்க வெள்ளைக்காரன் பார்ப்பனர்களை அழைத்து யோசனை கேட்டான். பார்ப்பனர்கள் நீங்கள் மத விஷயத்திலும் பழக்க வழக்கத்திலும் தலையிடுவதால் தான் மக்களும், இராணுவத்தினரும் ஆத்திரப்பட்டு விட்டார்கள்.

இனி இப்படி மத விஷயத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஈடுபடுவதில்லை என்று உறுதிமொழி கொடுப்பீர்களானால் இப்படி எல்லாம் நடக்காது என்று கூறினார்கள். அதன்படியே விக்டோரியா மகாராணி எழுதிக் கொடுத்தார். அதன்பிறகுதான் கலகத்தை நிறுத்தினார்கள். சமூதாயச் சீர்த்திருத்தக் காரியங்களை எதிர்த்த இந்த முட்டாள்தனமான கிளர்ச்சியைத்தான் சில சரித்திர ஆசிரியர்களும், பார்ப்பனர்களும் உண்மைக்கு மாறாக சுதந்திரக் கிளர்ச்சி என்று திரித்துக் கூறுகின்றார்கள்


-----------------"விடுதலை" 26-04-1963.


பெரியார் கருத்திலிருந்து பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள செய்த கலவரமே இந்த சிப்பய் கலவரம். சிப்பாய் கலவரத்தையே முதல் இந்திய சுதந்திரப் போராக சித்தரித்து வரலாற்றில் பதிவு செய்தது பார்ப்பனர்களின் தந்திரமே.

எனவே 1857 –ல் நடந்தது சிப்பாய்கலவரம்தானே தவிர முதல் இந்திய சுதந்திரப் போர் அல்ல. பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் வராற்றை மாற்றி எழுதியுள்ளார்கள் என்பதே உண்மை..

-------------பார்ப்பன சூழ்ச்சிகள் அம்பலப்படுத்துதல்.. தொடரும்

0 comments: