Search This Blog

8.12.08

2. இந்தியாவில் இருந்த 45 மதங்களில் எது இந்து மதம்? படிப்படியாகப் பார்ப்போம்.




இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் "நக்கீரன்" இதழில் தொடர் கட்டுரையை திரு. அக்கினிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியதை 2005 ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் நூலக வெளியிட்டுள்ளது. அந்நூலில் இந்து மதம் பற்றியும், பார்ப்பனர்களின் அட்டூழியங்கள் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் உண்மையை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார்.நக்கீரனில் இத்தொடர் வரும்போதே பெரியாரின் "விடுதலை" ஏடு தொடர்ந்து இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு உண்மையை உணர்த்தியது.

மற்ற துறைகளில் உள்ள பார்ப்பன ஆதிக்கம் போல் இணைய உலகில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் நாகரிகம் சிறிதும் இன்றி கொச்சையாக விமர்சித்து கருத்துக்களையும், பின்னூட்டங்களைம் அளித்து அவர்களின் தராதரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பார்ப்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பும் ஏமாளித்தமிழர்களும் உண்டு. அவர்களின் கண்களை திறக்கவும், உண்மையை அறியவும் நக்கீரன் இதழில் ராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலிலுள்ளவைகளை அப்படியே இங்கு வழங்குகிறேன்.

படியுங்கள்! உண்மையை உணருங்கள்!


*************************************************







ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள.; வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து 'சகதி" அந்தஸ்தோடு கிடக்கிறது.

புருஷன் பார்த்தான.; ஒரே தாண்டு இந்தப் பக்கம் வந்துவிட்டான.; திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள்.

'கொஞ்சம் கை குடுங்கோ.. வந்துடறேன்" என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.

இதேபோலத்தான் அன்று.. ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் நமமூர் மழைச்சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரியப் பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

'வரும் பெண்கள் வரலாம் வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்."

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்தபோது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான். ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள்.( ஆரியர்கள் வந்தேறிகள் என்ற கூற்று உண்மை என்பது உறுதியாகிறது --- தமிழ் ஓவியா) ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மனு?

வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது.

அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், சத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை 'மனு" பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி 'சூத்திரர்கள்" என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது. மனு பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.

"சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே! சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை..." இப்படிப் போகிறது மனு.( மனுதர்மத்தை தி.க. எரித்தது சரி தானே? ---தமிழ் ஓவியா)

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் 'நன்றாகவே" வேலை செய்தது .ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

'அடே.. குழந்தாய் இந்தா பால் இதைக் குடித்து மகிழ்வாய் வாழு" என்ற வேதத்தை மனு திரித்து.. "இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்.. இவன் குடிக்கக் கூடாது இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்க வேண்டும் என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றைப் பாருங்கள்.

பால்யே பிதிர்வஸே விஷ்டேது

பாணிக்ரஹா யௌவ் வனே

புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது

நபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்


"பெண்ணே.. நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்.. வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலை யெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி, நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்."

இப்படி 'பெண்ணுரிமை" பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது "பெண்கள் அசுத்தமானவர்கள் உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோபதேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே... பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு "பூம் பபூம்" மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான.; இதுபடி கேள்.; இல்லையேல் நீ பாபியாவாய்... என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.

பல நூறு வருடங்கள் ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், சத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.


இப்படிப்பட்ட ஒரு 'சாஸ்திர ஏகாதிபத்ய" சூழ்நிலையில்தான்.. இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.

"கடவுள் பெயரை சொல்லியும்.. கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?"

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன் படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள் கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம் மனு வேண்டாம் கடவுள் வேண்டாம் கர்மாக்கள் வேண்டாம் மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்..."

என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.

இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே 'புத்தர் சிரித்தார்" என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?


----------------------தொடரும் ....

* ( ) - அடைப்புக்குறிக்குள் இருக்கும் கருத்து என்னுடையது
--------------------நன்றி: - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நூல்: "இந்துமதம் எங்கே போகிறது?" பக்கம் 19 -22

4 comments:

அக்னி பார்வை said...

ஓவியா,

உங்களிடம் சில கேள்வி.

மதம் என்பதே ஒழிக்க பட வேண்டியது என்று கொண்டால் அது ஹிந்து, இசுலாம், கிரிஸ்த்து என் அனைத்து மதங்களையும் தானே?

ஹிந்து மதத்தை போன்றே, மக்களை அடிமை படுத்தும் பெண்ணுரிமையை பரிக்கும், மற்ற மதங்களை பற்றி ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்...

அதாவது உங்களை போன்றவர்கள் தீர்கமாக அனனிது மத நிறுவனங்களையும் எதிர்க்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

//மதம் என்பதே ஒழிக்க பட வேண்டியது என்று கொண்டால் அது ஹிந்து, இசுலாம், கிரிஸ்த்து என் அனைத்து மதங்களையும் தானே?//

அனைத்து மதங்களும் கண்டிப்பாக ஒழிக்கப்படவேண்டும். ஏனென்றால் எந்த மதமும் மக்களை நல்வழிப்படுத்தவில்லை. எல்லாமதங்களும் மக்களை மடையர்களாக ஆக்கத்தான் ஆக்கித்தான் இருக்கிறது.

எனது வலைப்பக்கத்தில் இஸ்லாம் கிறித்துவ பௌத்த மதங்களைப் பற்ரி விமர்சித்து பெரியார் பேசிய எழுதிய கருத்துக்களை பதித்துள்ளேன். படியுங்கள்.

எனது வலைப்பதிவிலிருந்து இந்து, இஸ்லாம் மதங்களை சேர்ந்தவர்கள் அது தொடர்பானா பெரியாரின் கருத்துக்களை எடுத்துப் போட்டு நன்றி தெரிவித்துள்ளார்ர்கள்.

அருள்கூர்ந்து எனது வலைப்பதிவை ஒரு தரம் முழுமையாக படித்து விடவும்.
என்னைபொறுத்தவரை மனிதம் மிக மிக்கியம், அந்த மனிதம் காக்க எது குறுக்கே வந்தாலும் அழிக்கப்பட வேண்டியதுதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

தங்களின் வருகைக்கும்,
கருத்துக்கும் மிக்க நன்றி அக்னிபார்வை.
மிக்க மகிழ்சி.

அக்னி பார்வை said...

அடட மன்னிக்கவும்,

உங்கள் பதிவை நேரம் கிடைக்கும் போதேல்லம் படித்துக் கொண்டிருக்கிறேன்.

//ஹிந்து மதத்தை போன்றே, மக்களை அடிமை படுத்தும் பெண்ணுரிமையை பரிக்கும், மற்ற மதங்களை பற்றி ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள்...
///

இந்த கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்... மற்றபடி உங்கள் பதிவு பயனத்தை தொடரவும்.
வழ்த்துக்கள்

//மனிதம் மிக மிக்கியம், அந்த மனிதம் காக்க எது குறுக்கே வந்தாலும் அழிக்கப்பட வேண்டியதுதான். ///

வழிமொழிகிறேன்...

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.

மதவெறி மாய்ப்போம்!
மனிதநேயம் காப்போம்!!