Search This Blog

15.12.08

5.பூணூல் அணிவதின் நோக்கம் என்ன?





இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் "நக்கீரன்" இதழில் தொடர் கட்டுரையை திரு. அக்கினிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியதை 2005 ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் நூலக வெளியிட்டுள்ளது. அந்நூலில் இந்து மதம் பற்றியும், பார்ப்பனர்களின் அட்டூழியங்கள் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் உண்மையை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார்.நக்கீரனில் இத்தொடர் வரும்போதே பெரியாரின் "விடுதலை" ஏடு தொடர்ந்து இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு உண்மையை உணர்த்தியது.

மற்ற துறைகளில் உள்ள பார்ப்பன ஆதிக்கம் போல் இணைய உலகில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் நாகரிகம் சிறிதும் இன்றி கொச்சையாக விமர்சித்து கருத்துக்களையும், பின்னூட்டங்களைம் அளித்து அவர்களின் தராதரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பார்ப்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பும் ஏமாளித்தமிழர்களும் உண்டு. அவர்களின் கண்களை திறக்கவும், உண்மையை அறியவும் நக்கீரன் இதழில் ராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலிலுள்ளவைகளை அப்படியே இங்கு வழங்குகிறேன்.

படியுங்கள்! உண்மையை உணருங்கள்!


*************************************************

புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி.. சங்கம் சரணம் கச்சாமி.. என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம் இங்கே தமிழ் பண்பாடு.. நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.

பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது-

(i) கல்லை வழிபடுதல்- Fitish worship
(ii) விலங்குகளை வழிபடுதல்- Totomism worship
(iii) மனித- உரு செய்து வழிபடல்- shamnaism worship
(iv) விக்ரம், சிலை செய்து வழிபடுதல்- ldol worship


நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.
பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்தி வந்தனர்.

வழிபாடு என்றால்?

தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்.. அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.

பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல் நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும.; தீப வெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டதுதான் தமிழனின் முதல் வழிபாடு

பூ + செய் - பூவால் செய். இது இணைந்ததுதான் பூசெய்… பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது.

இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார். வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக இருந்திருக்கிறது.

நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு.. என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.

'நாயக நாயகி பாவம்" என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ் இனம்தான்".

இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும், வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்.. புத்தம் மற்றும் சமண கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல.. தெற்கே திருநெல்வேலிவரை சமணம் பரவிவிட்டது. நாகப்பட்டினம்வரை புத்தம் புகுந்து விட்டது.

வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு 'சம்மந்தி உறவு முறை வரை நெருங்கிவிட்ட நிலையில்..

பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர் புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின.

பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல்.. அதாவது பூண்டிருந்த நூல். அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா).. பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள் என்ன இது? என கேட்க.. அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள் 'சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப் பட்டிருக்கும் அந்தஸ்து’..

ஆனால்.. உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது.

வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளில் ஈடுபட்டிருக்கும்போது. வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி.

அதேபோல் அணிந்து பார்த்தார்கள் கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈடுபடும்போது அடிக்கடி அமர்ந்து எழுகின்றபோதும் வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால். இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள்.

இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும்போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.

இதை 'அந்தஸ்து" என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில்.. புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள் இருந்தன.

சமண கொள்கைப்படி.. உயிர்களை அதாவது எறும்பைக்கூட கொல்லக்கூடாது. நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது!

மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால். கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த பிறகு.. தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது. இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள "இவை வெறும் கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை தெய்வமாக்குகிறேன் என்றனர்.

பூசெய்.. என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள் பூ, நந்தாவிளக்கு என இருந்த தமிழர் வழிபாட்டில் மட்டுமா?.. கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?


-------------தொடரும்


-------------------நன்றி: - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நூல்: "இந்துமதம் எங்கே போகிறது?" பக்கம்:- 28-31

0 comments: