Search This Blog

23.12.08

இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.கலைஞர் அவர்கள் சொன்னது போல் பெரியார் தனது 95 ஆம் வய்தில் தனது சுற்றுப் பயணத்தை நிறுத்திக் கொண்ட நாள்( 24-12-1973).நாளை தந்தை பெரியார் நினைவு நாள் (24-12-2008). பெரியார் தனது சுற்றுப்பயணத்தைத்தான் நிறித்திக் கொண்டாரே தவிர ,சுற்றுப் பயணத்தில் அவர் விதைத்த விதைகள் இன்று வேரும் விழுதுகளாக வளர்ச்சி பெற்று யாராலும் அசைக்க முடியாதவைகளாக விளங்கி வருகின்றன. தனது கருத்துக்களை புறக்கணித்துவிட்டு இயங்க முடியாத சூழலை உருவாக்கி விட்டுத்தான் பெரியார் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார். அப்படிப்பட்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் கருத்து ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். படியுங்கள்!சிந்தியுங்கள்!! தெளிவு பெறுங்கள்!!!.


----------------------------------------------------------------------------------------


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"


என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

-------------------------------------------------------------------------------------

பகுத்தறிவுவாதியின் கொள்கை

பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும்.

தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும்.

மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும்.

ஏனெனில், இந்த உலகத்திலிருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகி விட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர, எந்த உலகமும் தென்படவில்லை.

புராணம் தவிர வேறு என்ன ஆதாரம்?

இராட்சதர் என்பது சுத்தம்பொய்; ஏனென்றால், “இராட்சதர்” “அசுரர்” என்பவர்கள் இந்தப் பூமியில் இருந்ததாகத்தான்

சொல்லப்படுகிறது. இதற்கும் பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர, எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை.

இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளாக இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால், கடவுளுக்கு எதிரி இருக்கமுடியுமா?

பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய்யே

ஜோசியம் என்பதும் பெரும் பொய்; வெறும் ஏமாற்றுதலே ஆகும். சகுனம் பொய்.

இராகுகாலம், குளிகை, எமகண்டம், நல்லநேரம், கெட்டநேரம், எல்லாம் பொய்; பட்சி சாஸ்திரமும் பச்சை பொய்; நட்சத்திரப் பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப் பலன், வருடப் பலன் என்பவை யாவும் பொய்யே.

மந்திரம் எல்லாம் பித்தலாட்டமே


பல்லி விழும்பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய்; கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல்; காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய்.

மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டம், பொய்.

எண்ணிக்கையில் மூன்று, பதின்மூன்று, எட்டு, பதினெட்டு எண்ணிக்கைகள் கெட்டவை என்பவை சுத்தம்பொய், இன்னும் இவை போன்ற அநேக காரியங்கம் மூடநம்பிக்கையின் பாற்பட்டதேயாம்.

“கடவுள்” நம்பிக்கையே காரணம்

“தெரியாத, புரியாத கடவுளை மனிதன் நம்பித் தான் ஆகவேண்டும்” என்பதான கட்டாயம் ஏற்பட்டு மனிதன் நம்ப ஆரம்பித்ததின் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்பவேண்டியவனாகி விட்டான்.

நம்பினதின் பலனாக, பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவைகளுக்குத் தன்னை சரிபடுத்திக் கொள்ளுகிறான்.


பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டும்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய்.
இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.-------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 8-9

8 comments:

Anonymous said...

படித்தேன் தெழிந்தேன்

Anonymous said...

பெரியார் சொன்ன பகுத்த்றிவு கருத்துகள் அத்தனையும் வாழ்வின் யதார்த்தங்கள்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி
கவின்

Thamira said...

பெரியார் கொள்கை பரப்புதல் அருஞ்சேவை. உங்கள் பணியை புகழ்கிறேன், பாராட்டுகிறேன். வாழ்த்துகள் தமிழ் ஓவியா.!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி
தாமிரா.
தொடர்ந்து பார்த்து, படித்துவிட்டு கருத்து தெரிவிக்கவும்.

Thamizhan said...

செல்வத்தை உதறிய சீமான்
புகழைத் தேடாத புத்தர்
படிப்பும்,எழுத்தும் பேச்சுமே மூச்சாய்
பட்டிகள் ,தொட்டிகள் பல சென்றே
மிருகமாய் வாழ்ந்தோரை மனிதராக்கிய
மனித நேயப் பண்பின் சிகரம்.

தமிழ் ஓவியா said...

தமிழன் அய்யா வின்
வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.

தமிழ் ஓவியா said...

தமிழன் அய்யா வின்
வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.