Search This Blog

10.12.08

3. அசுவமேதயாகம் என்ற பெயரில் பார்ப்பனர்களின் அட்டூழியம்



இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் "நக்கீரன்" இதழில் தொடர் கட்டுரையை திரு. அக்கினிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியதை 2005 ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் நூலக வெளியிட்டுள்ளது. அந்நூலில் இந்து மதம் பற்றியும், பார்ப்பனர்களின் அட்டூழியங்கள் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் உண்மையை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார்.நக்கீரனில் இத்தொடர் வரும்போதே பெரியாரின் "விடுதலை" ஏடு தொடர்ந்து இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு உண்மையை உணர்த்தியது.

மற்ற துறைகளில் உள்ள பார்ப்பன ஆதிக்கம் போல் இணைய உலகில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அதுவும் நாகரிகம் சிறிதும் இன்றி கொச்சையாக விமர்சித்து கருத்துக்களையும், பின்னூட்டங்களைம் அளித்து அவர்களின் தராதரத்தை வெளிப்படுத்துகின்றனர்.

பார்ப்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நம்பும் ஏமாளித்தமிழர்களும் உண்டு. அவர்களின் கண்களை திறக்கவும், உண்மையை அறியவும் நக்கீரன் இதழில் ராமானுஜ தாத்தாச்சாரி எழுதிய இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூலிலுள்ளவைகளை அப்படியே இங்கு வழங்குகிறேன்.

படியுங்கள்! உண்மையை உணருங்கள்!


*************************************************

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.

குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பதுபற்றி இப்போது பார்க்கலாம்.

சகல சவுபாக்கியங்ளையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச்சிட்டது. இனிப் பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம் அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம் என மூளைக்குள் முடிவெடுத்தார்.

சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார்.

வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.

எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.

ஏன் அக்னிப் புகை...?

பிராமணர்கள் சொன்னார்கள், "ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகி றோம.; பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள் என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள்.

(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி எனப் பொருள். பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷ{க்காக இப்போது நாலு சக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூறலாம்).

அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.

புத்தர் இதைப் பார்த்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.

அப்போதுதான் அசுவமேதயாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாகக் கண்டார் புத்தர் .

அதென்ன அசுவமேதயாகம்?

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு.. அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம்.

ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும.; அப்போது ஓரிரவு முழுவதும் சம் பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி.. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும.; இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.

இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்)மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.

"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து

பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே..."


என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி 'வழிபட" வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்த கடமை முடிந்ததும்.. மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வமேதயாகம்.


மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள்.

யாகம் முடிந்ததும்.. "ஏ.. ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய.; அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்" என்றார்களாம்.

இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். "மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?"

என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள் "குதிரைக்கு மோட்சம் கிடைக்கும் லோகத்துக்கு சேமம் கிடைக்கும்" என்று புத்தர் திரும்ப கேட்டார்.

"ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகறீர்களே! எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?"


ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப.. திடுக் கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.


பிறகு...?

-------------------தொடரும்


-----------------------நன்றி: - அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்- நூல்: "இந்துமதம் எங்கே போகிறது?" பக்கம்:- 22-24

1 comments:

Thamizhan said...

அசுவமேத யாகம் பற்றியும் வால்மீஹி எழுதியுள்ளதை அப்படியே மொழி பெயர்ப்பை,மறைக்காமல் எழுத்ப் பட்டதை,படித்தால் தெரியும் ராமனின் பெருமை.
அருவரிப்பின் சிகரமாக விளங்குவதை நாம் சொன்னால் தான் எரிகிறது.