Search This Blog

25.12.08

இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!


இந்துமதத்தைக் கண்டிக்கும், விமர்சிக்கும் பெரியார் தொண்டர்கள் கிறித்துவ இஸ்லாமிய மதங்களை விமர்சிப்பதில்லை என்று தொடர்ந்து திரும்ப திரும்ப பெரியார் இயக்கத்தினரைப் பார்த்து அடிக்கடி கேள்வி கேட்பார்கள். நாமும் அந்தக் கேள்விக்கு பதில் சொல்லி அலுத்துவிட்டது. பெரியாரும் சரி பெரியாரின் தொண்டர்களும் சரி எந்த மதத்தையும் விமர்சிக்க தயங்கியது இல்லை. ஒவ்வொரு கூட்டங்களிலும் விமர்சித்தே வருகின்றனர். அதோடு பெரியார் சுயமரியாதைபிரச்சார நிறுவனத்தின் சார்பாகவும், மற்ற மற்ற பெரியார் தொண்டர்களும் கீழ்கண்ட நூல்களை வெளியிட்டு மதமூடநம்பிக்கைகளை தோலுரித்துவந்துள்ளனர். வருகின்றனர்.

1.கிருத்துவர்கள் சிந்தனைக்கு -ஜ்யார்ஜ்

2.கத்தோலிக்க மதகுரு ஜீன் மெஸ்லியரின் மரணசாசணம்(மூன்று பாகங்கள்)

3. பைபிளோ பைபிள் – புவனன்

4.குரானோ குரான் –புவனன்

5.இயேசு அழைக்கிறார் –நாத்திகம் இராமசாமி

6. வேதமும் விஞ்ஞானமும் – எஸ்.டி.விவேகி

7.நான் ஏன் கிறித்துவனல்ல –பெட்ரண்ட் ரஸ்ஸல்


இன்னும் இதுபோன்ற நூல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன வாய்ப்புள்ளவர்கள் வாங்கிப் படித்து உண்மையை உணர வேண்டுகிறேன்.

“தமிழ் ஓவியா” வலைப்பூவிலே கிறித்து இஸ்லாம் மதங்களை விமர்சித்து கட்டுரைகள் வெளியாகியுள்ளதை, தொடர்ந்து வாசித்து வரும் தோழர்கள் அறிவார்கள்.
எம்மதமும் சம்மதம் என்று பலரும் சொல்வார்கள். ஏன் என்றால் எல்லா மதத்திலும் மூடநம்பிக்கைகள் நிறைந்து காணப்படுவதால் அப்படிச் சொல்லியிருக்கலாம்? ஆனால் எங்களைப் போன்ற பெரியாரின் தொண்டர்களைப் பொருத்தவரையில் எம்மதமும் தேவையில்லை என்றே சொல்லி வருகிறோம்.

மக்களுக்கு நல்ல பண்புகளையும் ஒழுக்கத்தையும் போதிக்கத்தான் மதம் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் மதங்கள் மனிதனுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா? ஒவ்வொருவரும் அவரவர்கள் நிலையில் நின்று நடு நிலையுடன் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் “இயேசு தான் என்னை ஈராக் மீது போர் தொடுக்கச் சொன்னார்; இயேசுவின் அனுமதியுடன் தான் நான் போர் தொடுத்தேன்” என்று பகிங்கராமாக அறிக்கை விடுகிறார் .
அல்லா சொன்னால் என் தாய் இருக்கும் இடத்தில்கூட குண்டு வைப்பேன் என்கிறான் ஒரு இஸ்லாம் பயங்கரவாதி.
முஸ்லீம்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் நீ வண்டியை நிறுத்தாததால் முஸ்லீம்கள் குறைந்த எண்ணிகையிலேயே இறந்துள்ளனர் என்று குறைபட்டுக் கொள்கிறார் இந்துமத பயங்கரவாதியான பெண்சாமியாரிணி.

இப்படி எல்லா மதங்களும் மனிதத்தைக் கொன்று குழி தோண்டி புதைத்து விட்டது.
இப்பொழுது சொல்லுங்கள் மதம் ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா?


அந்த வகையில் இன்று இயேசு பிறந்த நாளாம் உலகமே கொண்டாடுகிறது. அந்தக் கொண்டாட்டம் பற்றி நாம் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.ஆனால் இயேசு பரிசுத்த ஆவிக்கு பிறந்தார் என்று சொல்லப்படுகிறது அது உண்மையா? எப்படிப் பிறக்க முடியும்? என்பது போன்ற அய்யங்களுக்கு விடை சொல்ல வேண்டிய கட்டாயம் கிருத்துவ மதவாதிகளுக்கு உண்டு. இது குறித்து நீதிமன்றத்தில் எல்லாம் வழக்குகள் நடந்ததுண்டு. கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பாதிரியார்கள் திணறியது கண்டு நீதிபதிகள் அந்த பாதிரியார்களுக்கு ஆறுதல் சொல்லிய நிகழ்ச்சியும் நடந்ததுண்டு.

நாம் தற்போது அதற்குள் போகாமல்,

1939 முதல் 1945 வரை பம்பாயில் “இரட்சண்ய சேனை” என்ற மதத்தில் போதகராக இருந்த ஜ்யார்ஜ் அவர்கள் “கிருத்துவர்களின் சிந்தனைக்கு” என்ற நூலில் எழுதியுள்ள ஒரு அத்தியாயத்தை மட்டும் உங்கள் பார்ர்வைக்கு வைக்கிறேன். படியுங்கள்! தெளியுங்கள்!! உண்மையை உணருங்கள்!!


இயேசுவின் பிறப்பு பற்றியே சந்தேகம்!

“மத்தேயு: 1:18 முதல் 21 வரை –இயேசு கிறிஸ்துவினுடைய ஜனனத்தின் விவரமாவது:

அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாய் அவளை தள்ளி விட யோசனையாயிருந்தான். அவன் இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கர்த்தருடைய தூதன் சொற்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, தாவீதின் குமாரனுமாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள அய்யப்பட்டாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு என்று பெயரிடுவாயாக.ஏனெனில் அவர் தமது ஜனங்களின் வாவங்களை நீக்கி இவர்களை இரட்சிப்பார் என்றான். பரிசுத்த மாற்கும்,யோவானும் இயேசு எப்படிப் பிறந்தார் என்பது பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை.

ஆனால், பரிசுத்த லூக்கா: 1:26 முதல் 31 வரை காபிரியேல் என்னும் தூதன்,நாசரேத் என்னும் ஊரில் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு,தேவனாலே அனுப்பப்பட்டான். அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து கிருபை பெற்றவளே வாழ்க.கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்றான். அவளோ இந்த வாழ்த்து எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். தூதன் இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரணைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக என்றான்.

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வரலாற்றை எழுதிய சுவிசேஷகர்கள் நால்வருள் மாற்குவும், யோவானும் இயேசுவின் பிறப்பைப் பற்றி குறிப்பிடாமல் விட்டதற்குக் காரணம் என்ன? அவர்கள் பார்க்கவோ,கேள்விப்படவோ இல்லையா அல்லது சர்ச்சைக்கு இடமான நிகழ்ச்சியை குறிப்பிடாமல் விட்டார்களா?

ஆவியால் கர்ப்பமாமே!

குறிப்பிட்ட இரண்டு பேர்களிலும் மத்தேயு கூறுகிறார்.
மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. இதையறிந்த யோசேப்பு அவளைத் தள்ளிவி யோசனையாயிருந்தான்;அப்போது ஒரு தூதன் அவனுக்கு சொற்பனத்தில் தோன்றி அவளைசேர்த்துக் கொள்ள அய்யப்பாடாதே என்று கூறியதாகச் சொல்லுகிறார்.

ஆனால் லூக்காவோ,ஒரு தூதன் மரியாளிடமே நேரில் போய் கிருபையை வெற்றவளே வாழ்க என்று சொன்னதாகவும், நீ ஒரு குமாரனைப் பெறுவாய் அவருக்கு இயேசு என்று பெயரிடுவாய் என்று கூறியதாகவும் குறிப்பிடுகிறார்.

மத்தேயு: ஒரு தூதன் யோசேப்புக்கு சொற்பனத்தில் தோன்றி சொன்னான் என்கிறார்

லூக்கா: காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடமே நேரில் சொன்னதாகக் கூறுகிறார்.

தூதன் யோசேப்பிடம் சொன்னது உண்மையா?

தூதன் மரியாளிடம் சொன்னான் என்பது உண்மையா?

சொற்பனத்தில் சொன்னது உண்மையா?


யோசேப்புக்கும், மரியாளுக்கும் உடல் தொடர்பு ஏற்படாத போது பரிசுத்த ஆவியினாலேயே கர்ப்பம் உண்டானதாகச் சொல்வது எந்த அளவுக்கு உண்மையாயிருக்க முடியும்?
யோசேப்பைப் பார்த்து நீ அய்யப்படாதே என்று சொன்னால் சந்தேகப்படும்படியான காரியம் ஏதோ நடந்து விட்டது; அதை மறைப்பதற்குத் தூதனை அனுப்பி கிருபை பெற்றவனே வழ்க, கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்று சொல்லி சமாதானப் படுத்துயிருக்கிறதாகத்தான் கொள்ள முடியுமே தவிர பரிசுத்த ஆவி மரியாள் வயிற்றுக்குள் குழந்தையாக நுழைந்து விட்டதாக ஏற்றுக் கொள்ள எப்படி முடியும்? சிந்தியுங்கள்!

-------------- ஜ்யார்ஜ் – நூல்: “கிருத்துவர்களின் சிந்தனைக்கு” பக்கம்:- 40-41

பெரியார் தொண்டர்கள் கேட்கவில்லை. ஒரு மதபோதகரான ஜ்யார்ஜ் கேட்கிறார்.
இறுதியாக அந்நூலின் கடைசியில் அவர் எழுதியுள்ளதையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

“மதவாதிகள் யாராக இருந்தாலும் மூடநம்பிக்கை வாதிகளே! அவர்கள் பகுத்தறிவுவாதிகளாக சிந்தனையாளர்களாக ஆக வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடேயே இதை எழுதுகிறேனேயல்லாமல், வேறு யாருடைய மணதையும் புண்படுத்த வேண்டுமெற எண்ணத்தோடல்ல என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக் கொண்டு மிகுந்த வணக்கத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்”

----மேற்படி நூல் :- பக்கம் 49

ஜ்யார்ஜ் அவர்களின் கருத்தின் அடிப்படையிலேதான் நான் இந்த பதிவை பதிவுசெய்கிறேன்.
உங்களின் மத எண்ணங்களை கொஞ்ச நேரம் தூர வைத்து விட்டு விருப்பு வெறுப்பில்லாமல் நடு நிலையுடன் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

17 comments:

Robin said...

இயேசு கிறிஸ்து கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்பது கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களின் நம்பிக்கை.

//அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் “இயேசு தான் என்னை ஈராக் மீது போர் தொடுக்கச் சொன்னார்; இயேசுவின் அனுமதியுடன் தான் நான் போர் தொடுத்தேன்” என்று பகிங்கராமாக அறிக்கை விடுகிறார் .// - ஜார்ஜ் புஷ் ஒரு அரசியல்வாதி. அவர் தான் செய்வதை நியாயபடுத்துவதற்காக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அதெயெல்லாம் கிறிஸ்தவர்கள் நம்பவேண்டும் என்றோ நியாயப்படுத்த வேண்டுமென்றோ அவசியமில்லை.

//இப்படி எல்லா மதங்களும் மனிதத்தைக் கொன்று குழி தோண்டி புதைத்து விட்டது.// - தவறான கருத்து. கிறிஸ்தவம் அன்பை போதிக்கும் மதம். ஆனால் அந்த மதத்தை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் கிறிஸ்தவம் எப்படி பொறுப்பாக முடியும்?

//இப்பொழுது சொல்லுங்கள் மதம் ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா?// - கண்டிப்பாக போதிக்கிறது. ஆதாரம் வேண்டுமா?

Robin said...

//இயேசு பரிசுத்த ஆவிக்கு பிறந்தார் என்று சொல்லப்படுகிறது அது உண்மையா? எப்படிப் பிறக்க முடியும்? என்பது போன்ற அய்யங்களுக்கு விடை சொல்ல வேண்டிய கட்டாயம் கிருத்துவ மதவாதிகளுக்கு உண்டு.// இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரால் பிறப்பிக்கப் பட்டார் என்பது நம்பிக்கை. பரிசுத்த ஆவியானவர் என்பவர் திருத்துவத்தின் ஒரு பகுதி. முதலில் இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவிக்கு பிறந்தார் என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

//இது குறித்து நீதிமன்றத்தில் எல்லாம் வழக்குகள் நடந்ததுண்டு. // இதையெல்லாம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்பவர்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது? இறைவனை எப்படி மனிதன் நியாயம் தீர்க்க முடியும்?

//மத்தேயு: ஒரு தூதன் யோசேப்புக்கு சொற்பனத்தில் தோன்றி சொன்னான் என்கிறார்

லூக்கா: காபிரியேல் என்னும் தூதன் மரியாளிடமே நேரில் சொன்னதாகக் கூறுகிறார்.

தூதன் யோசேப்பிடம் சொன்னது உண்மையா?

தூதன் மரியாளிடம் சொன்னான் என்பது உண்மையா?// - இதில் என்ன முரண்பாடு இருக்கிறது? மத்தேயு ஒரு தூதன் யோசேப்புக்கு சொன்னான் என்றால் மரியாளுக்கு சொல்லவில்லை என்று அர்த்தமாகி விடுமா? பகுத்தறிவுவாதிகள் என்று சொல்பவர்களால் ஏன் இப்படியெல்லாம் சிந்தித்து பார்க்க முடியவில்லை?

//யோசேப்பைப் பார்த்து நீ அய்யப்படாதே என்று சொன்னால் சந்தேகப்படும்படியான காரியம் ஏதோ நடந்து விட்டது; அதை மறைப்பதற்குத் தூதனை அனுப்பி கிருபை பெற்றவனே வழ்க, கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்று சொல்லி சமாதானப் படுத்துயிருக்கிறதாகத்தான் கொள்ள முடியுமே தவிர பரிசுத்த ஆவி மரியாள் வயிற்றுக்குள் குழந்தையாக நுழைந்து விட்டதாக ஏற்றுக் கொள்ள எப்படி முடியும்? // - உண்மையிலேயே கன்னி மரியாள் தவறு செய்திருந்தால் கடவுள் எதற்காக அப்படி தூதனை அனுப்பி சமாதானப்படுத்த வேண்டும்? தவறு செய்து பிள்ளை பெறுபவர்களின் கணவர்களை எல்லாம் சமாதானப்படுத்துவதுதான் கடவுளின் வேலையா? உண்மை என்னவென்றால் பொதுவாக ஒரு பெண் கணவனுடன் உறவு கொள்ளாமல் கர்ப்பமானால் சந்தேகப்படுவது இயற்கை. ஆனால் இங்கோ கன்னி மரியாள் எந்த தவறும் செய்யவில்லை; காரணம் கன்னி மரியாள் வயிற்றில் கரு உருவானது பரிசுத்த ஆவியானவரால். அப்படியிருக்கும்போது அவரது கணவனின் அய்யத்தை போக்குவதும் கடவுளின் கடமையாகிறது. அதைத்தான் அவர் செய்துள்ளார்.

//பெரியார் தொண்டர்கள் கேட்கவில்லை. ஒரு மதபோதகரான ஜ்யார்ஜ் கேட்கிறார்.// - மதப் போதகர் என்பவர் வானத்திலிருந்து குதித்தவர் அல்ல; அவரும் மனிதன்தான். மதப் போதகர்களில் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு; அறிவாளிகளும் உண்டு இவரை போன்ற முட்டாள்களும் உண்டு. எனவே மதப் போதகர் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும் மிக்க நன்றி .

////இப்பொழுது சொல்லுங்கள் மதம் ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா?// -

கண்டிப்பாக போதிக்கிறது. ஆதாரம் வேண்டுமா?//

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.
சான்றுகள்தானே உறுதிப் படுத்தும்.

இயேசு வாழ்ந்தார்,போதனைகள் செய்தார் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
பகுத்தறிவுக்கு முரணாக ஒரு விசயத்தை சொல்லும் போது அது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த அய்யத்தை சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பு.

நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றவர்கள் கிறித்துவபாதிரியார்கள்தானே தவிர பகுத்தறிவாளர்கள் அல்ல.

விவாதிப்போம்.

Unknown said...

அனைத்து மதங்களும் இட்டுக்கட்டி கதை கற்பிப்பதில் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. நல்ல பதிவு.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்

ரவி said...

கிறித்தவ மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளலாம், மற்ற டுபாக்கூர்களை அம்பலப்படுத்தவேண்டும்...

அன்பை போதிக்கும் மதம் என்றால் ஆயிரக்கனக்கானவர்களை கொன்று குவித்த சிலுவைப்போர்களை ஏன் நடத்தினீர்கள் ??

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி செந்தழல் ரவி.

Robin said...

// ////இப்பொழுது சொல்லுங்கள் மதம் ஒழுக்கத்தையும், நல்ல பண்புகளையும் போதிக்கிறதா?// -

கண்டிப்பாக போதிக்கிறது. ஆதாரம் வேண்டுமா?//

ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.
சான்றுகள்தானே உறுதிப் படுத்தும்.//

இதோ ஆதாரம்:என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
- நீதிமொழிகள் 1:9

ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
- நீதிமொழிகள் 3:13

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
-- நீதிமொழிகள் 3:27

அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும் தெரிந்துகொள்ளாதே.
-- நீதிமொழிகள் 3:29-31

துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
அதை வெறுத்துவிடு அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.
-- நீதிமொழிகள் 4:14,15

வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.
--- நீதிமொழிகள் 6:26-29

பின் குறிப்பு: மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் பைபிளிருந்து எடுக்கப்பட்டது.

Robin said...

//பகுத்தறிவுக்கு முரணாக ஒரு விசயத்தை சொல்லும் போது அது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அந்த அய்யத்தை சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பு.// - பகுத்தறிவுக்கு எட்டாத விஷயங்களும் உண்டு. உதாரணமாக மரணம், உயிர், கடவுள்.

Robin said...

//கிறித்தவ மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளலாம், மற்ற டுபாக்கூர்களை அம்பலப்படுத்தவேண்டும்...// - கிறிஸ்தவத்தில் நல்ல விசயங்கள் உண்டு என்று என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. டுபாக்கூர்களை அம்பலப்படுத்துங்கள்; தவறில்லை.
//அன்பை போதிக்கும் மதம் என்றால் ஆயிரக்கனக்கானவர்களை கொன்று குவித்த சிலுவைப்போர்களை ஏன் நடத்தினீர்கள் ??// - நான் முன்பு எழுதியதை மீண்டும் படித்துப் பாருங்கள்; பதில் உள்ளது.

தமிழ் ஓவியா said...

விவாதம் ஆரோக்கியமாக போய்கொண்டிருக்கிறது தொடர்ந்து விவாதிப்போம் Robin

நம்பி said...

Blogger Robin said...

//இதையெல்லாம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்பவர்களின் அறிவின்மையை என்னவென்று சொல்வது? இறைவனை எப்படி மனிதன் நியாயம் தீர்க்க முடியும்?//

இதை சொல்வதும் மனிதன் தானே...இறைவன் அல்லவே...இப்பொழுது மட்டும் மனிதன் எங்கேயிருந்து வந்தான்?...இறைவனை பற்றி கற்பனையாக மனிதன் சொல்லும் விஷயங்களை மனிதனால் கொண்டு அமைக்கப்பட்ட நீதிமன்றங்களால் தான் தீர்க்க முடியும். அவன் சொல்வது கற்பனையா? உண்மையில் நடந்ததா? என்பதை மனிதர்களின் நடுநிலை அமைப்பை கொண்டு தானே விசாரிக்க முடியும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் தானே...? அப்படித்தானே சட்டம் சொல்லுகிறது.

நம்பி said...

//Blogger Robin said...

//பகுத்தறிவுக்கு எட்டாத விஷயங்களும் உண்டு. உதாரணமாக மரணம், உயிர், கடவுள்.

December 30, 2008 3:00 PM//

எட்டாத விஷயமாக கருதுவது...சிந்தனைக்கு வைக்கும் முற்றுபுள்ளி...தனி மனிதன் தன் சிந்தனைக்கு வைக்கும் முற்றுமுள்ளியை அனைத்து மனிதர்களுக்குமான முற்றுப்புள்ளியாக மாற்றுவது தவறு...நிலவுக்கு செல்லவே முடியாது...அது பகவான்...இது சிந்தனைக்கு வைத்த முற்று முள்ளி...அதையும் தாண்டி சிந்திப்பது பகுத்தறிவு...அதன் விளைவு அதன் மீது கால்வைக்கும் வழியை கண்டுபிடிக்க பகுத்தறிவு உதவியது.

அதே போன்று தான் இந்த மூன்றும்...மரணம்...மரணபயம் அதை பற்றிய சிந்தனைக்குள் செல்லாமல் முற்றுபுள்ளி வைக்க உதவுகிறது.

அதன் தொடர்பாக உயிர். உயிர் இல்லையென்றால் என்ன செய்வது? நாம் எப்படி இருப்போம்...? நம்மை சுற்றி யார் அழுவார்கள்? நமக்கு காது கேட்குமா? இப்படி அதை பற்றிய சிந்தனை வரும்பொழுது அதை பற்றிய பயம் வருகிறது? பிறப்பதற்கு முன் எப்படி இருந்தது...? அதுவரை எங்கேயிருந்தோம் போன்ற சிந்தனைகள் இயற்கையாக தோன்றிவிடுகின்றன...அதை பற்றிய கற்பனைகளும் தோன்றிவிடுகின்றன.

உயிர் இல்லை என்றால்...இந்த பின்னூட்டம் இல்லை...பதிவும் இல்லை..கடவுள் இல்லை...மரணம் மரணம் மரணம்....வெற்று...பிறப்பதற்கு முன்னாடி அப்படித்தானே...அதை வைத்து இருப்பவர்களை கவனிக்கலாம் அதை பற்றிய சிந்தனையே எழாது.

இங்கே இந்த பரந்த வலைப்பதிவில் எத்தனையோ பேர் எழுதியிருப்பார்கள் பலர் திடீரென் மறைந்திருப்பார்கள்...அதன் பிறகு எழுத்து தொடர்கிறதா...அவரை போன்ற எண்ணங்கள் மட்டும் தான் இன்னொருவரால் தொடர்ந்து கொண்டிருக்கிறது...அதைப் போலத்தான் எல்லா விஷயங்களும்...

பெர்முடா முக்கோணம் அங்கு போகின்ற அனைவரும் மரணம்..அங்கு போகவே முடியாது பகுத்தறிவுக்கு வைத்த முற்றுப் புள்ளி.....அதையும் மீறி உயிரைக்கொடுத்து இன்னும் கண்டுபிடித்து கொண்டிருப்பவர்கள் தான்...அதிகம்..அங்கு நடப்பவை பூமியின் காந்தப்புல விசையால் ஏற்படும் மாறுதல்களே அங்கு நடைபெறும் விபத்துக்கான காரணங்கள்...என தொடர்ந்து பகுத்தறிவுகள் உயிர் போனாலும் பரவாயில்லை என்று ஆராய்ந்துகொண்டே இருக்கின்றன...அப்படிஆராய்ந்து இதே போன்று பூமியின் நேர் அந்த பக்கம் இருக்கும் ஜப்பானிய கருப்புக்கடல் பக்கத்திலும் அதே போன்று விசை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது..அங்கே போகும் விமானங்களும் செயலிழந்து விடுகின்றன...கப்ப்ல்களும் செயலிழந்து விடுகின்றன....இது தான் பகுத்தறிவின் தொடர்ச்சி...இது எல்லையற்றது. சிந்தனைக்கு முடிவே இல்லை அது போய்க்கொண்டேயிருக்கும்...பூமி தாண்டி இன்னும் பல கிரகங்கள் தாண்டி போய்க்கொண்டேயிருக்கும்.

பூமியை சுற்றித்தான் பிற கோள்கள் சிந்தனைக்கு வைத்த முற்றுப் புள்ளி...இல்லை இல்லை சூரியனை மைய்யமாக வைத்து தான் பிறகோள்கள் சுற்றிவருகின்றன...பூமி உட்பட...இது தொடர்ச்சி...நம்முடையை சிந்திக்கும் திறனின் இயலாமையை அடுத்தவருக்குமான முடிவாக அறிவிப்பாக வைக்கிறோம்...ஆனால் இன்னொரு சிந்தனை அதை எடுத்து மேலும் ஆராய்கிறது..அவரின் முற்றுபுள்ளியை தகர்த்து ஆராய்கிறது....கண்டுபிடிக்கிறது.

என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்று கேட்கப்படும் WH Questions இவைகளே பகுத்தறிவு...இது ஒவ்வொன்றை பார்த்தும் கேட்டுக்கொண்டேயிருக்கும்? இது முடிவற்றது.

நம்பி said...

அனைவருக்கும் என்ன தெரியவேண்டும் இப்பொழுது இறப்பிற்கு பின் எந்த நிலை அது தான் ஆவல்...அந்த பயம்...அது தான் பகுத்தறிவிற்கு முட்டுக்கட்டை போடுகிறது...பிறப்பிற்கு முன் எந்த நிலையோ? அந்த நிலை தான் இறப்பிற்கு பின்னும். அது தான் உயிருடன் இருக்கும் நம்மால் உணரக்கூடியது. இப்பொழுதைக்கு அவ்வளவு தான்...முடிந்தால் ஆதாரத்துடன் கண்டுபிடித்து நிருபியுங்கள். ஆனால் கண்டுபிடிக்கவே முடியாது என்று கற்பனையான ஒன்றை வைத்து முற்று புள்ளி வைக்காதீர்கள்.

நம்பி said...

Blogger Robin said...
//கிறிஸ்தவம் அன்பை போதிக்கும் மதம். ஆனால் அந்த மதத்தை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்பவர்கள் செய்யும் தவறுக்கெல்லாம் கிறிஸ்தவம் எப்படி பொறுப்பாக முடியும்?//

மதங்கள் இப்படித்தான் தப்பித்துக் கொள்ளும், மனிதம் இப்படி எவரையும் தப்பிக்கவிடுவதில்லை. அதனால் தான் மனிதம் மட்டுமே மனிதர்களால் பெரும்பாலும் போற்றப்படுகிறது. இங்கு தேவை மனிதம் மட்டுமே!

நம்பி said...

Blogger Robin said...
//இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியானவரால் பிறப்பிக்கப் பட்டார் என்பது நம்பிக்கை. பரிசுத்த ஆவியானவர் என்பவர் திருத்துவத்தின் ஒரு பகுதி. முதலில் இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவிக்கு பிறந்தார் என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? //

எப்படி? தங்களுக்கு மட்டும் கிடைத்த வரலாற்று ஆதாரத்துடன் அனைவரும் அறிய, மறுதலிக்காமல் நிரூபிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறீர்களோ? அதை அப்படியே, அதே வரலாற்று ஆதாரத்துடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நிரூபிக்க விரும்புகிறோம்!
//Blogger Robin said...
மதப் போதகர் என்பவர் வானத்திலிருந்து குதித்தவர் அல்ல; அவரும் மனிதன்தான். மதப் போதகர்களில் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு; அறிவாளிகளும் உண்டு இவரை போன்ற முட்டாள்களும் உண்டு. எனவே மதப் போதகர் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது.//

இதுதான் பகுத்தறிவு இதை இந்தளவுதான் பயன்படுத்தவேண்டும், இதற்கு மேல் அளவு இல்லை என்று வரையறுக்க முடியாது. மதப்போதகரை சரியானவர் , சரியில்லாதவர் என்று பகுத்தறியும் அறிவு ஒருவருக்கு இருக்கும் பொழுது...மற்றவர்கள் அனைவருக்கும் இதுபோன்று முட்டாள்கள், அறிவாளிகள் என்று பகுத்தறியும் அறிவு இருக்காதா?

அதைத் தான் எல்லோரும் பாரபட்சமில்லாமல் செய்து கொண்டிருக்கின்றனர்,

இன்னுஞ் சொல்லப்போனால், மதவாதிகளும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றனர். இல்லையென்றால், கத்தோலிக்கம், ரோமன் கத்தோலிக்கம், பாராம்பரிய கிருத்தவம், மிகவும் பாரம்பரிய கிருத்தவம், புரோட்டஸ்டான்ட், பெந்தகொஸ்தே, செவன்த் டே, அல்லைலுயா......இப்படி 50, 60 க்கும் மேற்பட்ட (தெரிந்தவரை) கிருத்துவங்கள் உலகில் தோன்றக் காரணமென்ன?

இவர் சொன்னது முட்டாள் தனம், அவர் சொன்னது அறிவாளித்தனம் என்று மதத்துக்குள்ளேயே பகுத்தறிய ஆரம்பித்து விட்டனர். பகுத்தறிந்து மீண்டும் மீண்டும் புதிய மூடநம்பிக்கைக்குள் தள்ள ஆரம்பித்து விட்டனர். இதுதான் மதவாதிகள் பின்பற்றும் பகுத்தறிவுக் கொள்கை.....

நாங்கள் பின்பற்றுவது ''எவனும்'' கிடையாது..''எதுவும்'' கிடையாது.

''நாங்கள்'' (திராவிடர்கள்) தான் உயர்ந்தவர்கள் எங்களை தாழ்த்தும் உரிமை எவனுக்கும் கிடையாது. எங்களோடு இணைந்தவர்கள் அனைவருமே உயர்ந்தவர்கள்.

நம்பி said...

Blogger Robin said...
//வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். //--- நீதிமொழிகள் 6:26-29

இங்கேயே கிளின் போல்ட் ஆயிடுச்சு பார்!......நாலே நாலு விஷயத்துலேயே அவுட்....

இது ''நீதிமொழி'' மாதிரி இல்லையே! மனித குலத்தை ''பீதியுடன்'' ''பேதியாக்குகின்ற'', ''பெண்குலத்தை'' ''கேவலமாக்குகின்ற மொழியாகத்தான்'' இது இருக்கிறது....

''விபசாரி'' என்பவர் பெண்ணை குறிப்பது....பெண் ஆண் துணையின்றி தனித்து இயங்குபவர் அல்ல. இவர,உம் அப்பா, அம்மா என்ற இருவரால் பெற்று வளர்க்கப்பட்டவர் தான்..... தனிப்பிறவியும் அல்ல.....

ஆண் துணையில்லாதவர், ஆண் வற்புறுத்தல் இல்லாமல் ஒரு பெண் விபசாரியாக ஆகவும் முடியாது. வறுமையை பயன்படுத்தி ஆண் பெண்ணை தவறான வழிக்கு இட்டுச் செல்வதே விபச்சாரம். ''விபசாரி'' என்ற பட்டத்தை கொடுத்தவனும் ''ஆண் போடுகாள்'' தான்.

அப்படியிருக்க இங்கே அவள் எப்படி இன்னொரு உயிரை வேட்டையாடமுடியும். அவளைத்தான் ஆண் வேட்டையாடுகிறான். விபச்சாரத்திலும் தள்ளுகிறான்.

(இதற்கு சப்பைக்கட்டு கூடாது...ரெடியா வைச்சிருக்கும்...அதெல்லாம் செல்லுபடியாகாது...அந்தக்காலத்தில அப்படித்தான் பெண்களை கீழ்த்தரமாக பார்த்தனர்.. இப்பொழுதும் பார்க்கும் பொழுது....அப்பொழுது இதெல்லாம் சர்வ சாதாரணம்....)

இது ஒரு ஆணாதிக்க, ஆண் மகனை காப்பாற்றுகின்ற செயலாகத்தான் இந்த வாசகம் நுழைக்கப்பட்டிருக்கிறது.

விபசாரம் எந்த பெண்ணும் விரும்பி பண்ணுவதில்லை. இந்த விஷயம் எப்படி நடுநிலையானவர் என்று சொல்லுகின்ற ''அப்பா டக்கர் கடவுளுக்கு'' தெரியாமற் போயிற்று...

அப்ப இதை எந்த ''போடுகாள்'' பேர்வழியோ கடவுள் பேரை சொல்லி, பெண்கள் மேல இருக்கிற வெறுப்பில உள்ளே அவமானப்படுத்தனும்னு இந்த வரியை பைபிள்ல நுழைச்சு இருக்குது.....இது மாதிரி நிறைய பைபில் முழுக்க நுழைச்சு இருக்கலாம்.....