Search This Blog

20.12.08

பரிதாபத்துக்குரிய சூத்திர பஞ்சம மக்களே பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர்!


அரசு வங்கிதானா?


தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர்தான் மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர்.

தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம்; அதனை எந்த வகையில் கடைப்பிடித்தாலும் தண்டனைக்கு உரியது என்று கூறுகிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பிரிவு.

கணவன் இறந்தவுடன் பெண்ணை கணவன் சடலத்தோடு கொளுத்த வேண்டும் என்கிற சதி எனும் உடன்கட்டை ஏற்றுதலைப் பச்சையாக ஆதரித்தவரும் இவர். இதுவும் சட்டப்படியான குற்றமே!


குழந்தைகள் திருமணத்தையும் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி ஆதரித்த ஆச்சாரியாரும் அவரே. இதுவும் தண்டனைக்குரிய குற்றமே என்று சொல்ல வேண்டியதில்லை.

இப்படிப்பட்ட ஒருவருக்கு கோடி அர்ச்சனை செய்யப் போகிறார்களாம் - செய்யட்டும் தாராளமாக! அது அவாளுக்கே உள்ள இனவுணர்வும் - பாமர மக்கள் மத்தியில் ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் ஏற்பாடாகும். அது எப்படியோ நாசமாகப் போகட்டும்.

இந்தக் காரியத்தைச் செய்ய தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கி (இந்தியன் வங்கி) எப்படித் துணை போகலாம் அல்லது பயன்படுத்தப்படலாம் என்பதுதான் நம் கேள்வி.

இந்தியன் வங்கி எல்லாக் கிளைகளிலும் கோடி அர்ச்சனைக்கான நன்கொடையைக் கட்டணமின்றிச் செலுத்தலாமாம். வங்கிகளுக்கு என்று சட்ட திட்டமோ வரைமுறைகளோ கிடையாதா? பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற நிலைதானே இது.

கோடி அர்ச்சனை காணிக்கை இரசீதுகளை குறிப்பிட்ட இந்தியன் வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாமாம்.

இவையெல்லாம் எந்த விதிமுறைகளுக்குக்கீழ் வருகின்றன என்பது அவாளுக்கே வெளிச்சம்.

காஞ்சி மடம் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்து இருப்பதாகவேகூட வைத்துக் கொள்வோம்;

அதற்காகக் கட்டணமின்றிப் பணம் செலுத்துவது எப்படி? அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல.

ஒரு ஸஹஸ்ர நாம நன்கொடைக் காணிக்கை ரூ.300 என்ற கணக்கின்படி கோடி அர்ச்சனை என்றால் 300 கோடி ரூபாய் கட்டணமின்றிச் செலுத்தப்படுகிறது என்றால், இதனால் வங்கிக்கு எவ்வளவு பெரிய இழப்பு?

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டாலும் அதில் பெரிய நிலை அதிகாரிகள் எல்லாம் பார்ப்பனர்களாகவே நுரை தள்ளி வழிந்து காணப்படுவதால் வங்கி என்பது அவாளின் சங்கரமடத்தின் அடுப்பங்கரை சாம்பார்ச் சட்டியாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

காஞ்சி மடத்துக்காகக் காட்டப்படும் இந்தச் சலுகை மற்றவர்கள் விஷயத்திலும் பின்பற்றுவார்களா?

வங்கிகள் கடன் கொடுக்கும் விழாக்களில்கூட சங்கராச்சாரியார்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அவர்கள் மூலமாகக் கடன் வழங்கும் பார்ப்பன வேலைகூட நடப்பதுண்டு. சங்கராச்சாரியாரே கடன் கொடுப்பதுபோல பாமர மக்கள் மத்தியில் ஒரு மாயை ஏற்படுத்தும் பார்ப்பனத்தனம் இது.

யாருடைய அனுக்கிரகத்தால் இந்தக் கோடி அர்ச்சனை நடைபெறுகிறதாம்? ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகிய இருவரின் பூர்ண அனுக்கிரஹத்துடன் இந்தக் கோடி அர்ச்சனை நடைபெறுகிறதாம்.

கொலைக் குற்றவாளிகளாக - ஜாமீனில் அலைந்து கொண்டிருக்கும் இந்தப் பேர்வழிகளின் அனுக்கிரகமாம் - கோடி அர்ச்சனையாம்.

பார்ப்பனர்களின் யோக்கியதை எந்த டிகிரியில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?


இதுபோன்ற குற்றத்தை பார்ப்பனரல்லாத ஒருவர் செய்தால் இந்தப் பார்ப்பன ஏடுகள் எப்படி எப்படியெல்லாம் கொச்சைப் படுத்துவார்கள் - இழிவுபடுத்துவார்கள்!

கொலை குற்றம் மட்டுமல்ல - பெண்கள் விஷயத்தில் இந்தக் காம கோடி எப்படி எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்று சிரிப்பாய்ச் சிரிக்கவில்லையா?

இவை அத்தனையையும் உதிர்த்துவிட்டு பெரிய மனுஷன் போல - பெரிய வாளாக இவாள் திரிகின்றனர் - இந்தத் தீய சக்திகளுக்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கி துணை போகிறது என்றால் இதன் தன்மையை எடை போட்டுப் பார்க்க வேண்டாமா?

பார்ப்பான் கொலை செய்தால் அவன் சிகையை (மயிரை) மட்டும் முண்டிதம் செய்தால் போதும் என்கிற மனுதர்மம் - இன்னொரு வகையில் இங்கே ஆட்டம் போடுகிறது என்பதல்லாமல் வேறு என்ன?

பரிதாபத்துக்குரிய சூத்திர பஞ்சம மக்களே பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர்!

--------------- மின்சாரம் அவர்கள் 20-12-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

Thamizhan said...

தமிழின வழ்க்கறிஞ்ர்கள் தயை செய்து இந்த அநியாயத்தை நீதி மன்றங்களுக்கு வழ்க்குகளாக எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்தியாவின் சுவிஸ் வங்கியாக விளங்கி வந்த ரக்சியங்கள் வெளிவரவும் பல வழக்குகள் தொடரப்பட்டு உண்மைகள் வெளி வர வைக்கப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.