Search This Blog

24.12.08

பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை

தலைநகரம் தரும் தகவல்கள்

பெண்களின் திருமண வயது 18 என்பதும், ஆண்களில் திருமண வயது 21 என்பதும் சட்டப்படியான நிலையாகும். இந்த வயது வரம்புச் சட்டம் என்பது பல கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது.

பார்ப்பன இந்து மதவாதிகள், பார்ப்பன தேசியத் திலகங்கள் எல்லாம் பெண்களின் திருமண வயதினை உயர்த்துவதற்குக் கடும் முட்டுக்கட்டைகளைப் போட்டு வந்தனர்.

பெண் திருமண வயதை நிர்ணயிக்கும் சாரதா சட்டத்தை - இந்து மதத்தை ஒழிப்பதற்கான சட்டம் என்றெல்லாம்கூட விமர்சனம் செய்தனர்.

பெண் ருது அடைவதற்குமுன் திருமணம் செய்து வைக்கப்படவேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால், ரவுரவாதி நரகத்துக்குப் போக நேரிடும் என்று யாக்ஞ வல்கியார் கூறுகிறார். நாங்கள் சட்டத்தை மீறி சிறைக்குச் செல்வோமே தவிர சாஸ்திரத்தை மீறி ரவுரவாதி நரகத்துக்குச் செல்லமாட்டோம் என்றெல்லாம் சல்லடம் கட்டி ஆர்ப்பரித்தனர்.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம் என்பவையெல்லாம் பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பினைத் தாண்டித்தான் நிறைவேற்றப்பட முடிந்தன.

சட்டம் எப்படியோ இருந்தாலும் இந்தியாவில் இன்னும் குழந்தைகள் திருமணம், 18 வயதுக்குட்பட்ட பெண்களின் திருமணம் என்பதெல்லாம் சர்வசாதாரணமாக நடந்துதான் வருகின்றன.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டாலும், சிதம்பரத்தில் பார்ப்பன தீட்சதர்களின் வீடுகளில் குழந்தைத் திருமணம் என்பது சர்வசாதாரணமாகும். சொத்துகள் தங்கள் குடும்பங்களை விட்டுப் போகக் கூடாது என்பதும் ஒரு காரணமாகும்.


பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், குறிப்பாக ராஜஸ் தானில் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டுதான் வந்திருக்கின்றன.

18 வயதினை அடைவதற்குமுன் பெண்கள் அதிகமாக திருமணம் செய்துகொள்வதில் இந்தியாவின் தலைநகரமான டில்லிதான் முதலிடம் வகிக்கிறது என்று வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.

இதற்காக டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கருத்துத் தெரிவித்த பெண்களில் 24.2 விழுக்காடு பெண்கள் இதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியாவின் தலைநகரிலேயே இந்த நிலை என்றால், மற்ற மற்ற மாநிலங்களில் இதனுடைய தாக்கம் இருக்கத் தானே செய்யும். அதுவும் பெண் ஒருவர் முதலமைச்சராக இருக்கும் - இந்தியாவின் தலைநகரில் இந்த நிலை இருப்பது பாராட்டத்தக்கதல்ல. நம்முன் உள்ள சட்டத்தின் செயல்முறை அங்கு தேவைப்படுகிறது.

பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடைபெறுவதிலும் டில்லிதான் முதலிடம் என்கிற தகவலும் விரும்பத்தக்கதல்ல. வெளிநாடுகளில் இருந்துவரும் பெண்கள்கூட இத்தகு கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்டனர் என்று வந்த தகவல் இந்தியாவைத் தலைகுனிய வைத்ததாகும்.

இது ஒரு கட்சி - பிரச்சினையல்ல; ஒட்டுமொத்தமான சமுதாயப் பிரச்சினை, நாட்டுப் பிரச்சினையாகும். சட்ட விரோதமாக நடக்கும் பெண் திருமணங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் மக்கள் மத்தியிலே விழிப்புணர்வுப் பிரச் சாரத்தை மேற்கொள்ளவேண்டும். அரசும், ஊடகங்களைப் பயன்படுத்தி இத்தகு பிரச்சாரங்களை செய்யவேண்டும்.

சட்ட விரோதமாக நடக்கும் திருமணங்கள் தங்கள் கவனத்துக்கு வருமேயானால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும்.

நமக்கு ஏன் வீண் வம்பு? அது எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்கிற தற்காப்பு மனப்பான்மை தான் சமுதாயத்தில் இத்தகைய சட்ட விரோதத் தீயசெயல்கள் தடங்கலின்றி நடைபெறுவதற்குக் காரணம் ஆகும்.

அரசே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது; குடி மக்களின் ஒத்துழைப்புகள் மிகவும் அவசியமாகும்.


பெண் ஒருவர் டில்லி முதலமைச்சராக இருப்பதால், இந்தப் பிரச்சினையில் கூடுதல் பொறுப்பும், அக்கறையும் அவருக்கு அதிகம் உண்டு என்று நாம் சொல்லவேண்டியது அவசியம் இல்லை.

-------------------------நன்றி: "விடுதலை" 23-12-2008

5 comments:

Unknown said...

In 2002 AIMPLB wanted muslims to be exempted from Acts banning child marriage.In early decades of 20th century that was an issue.Today it is the muslim organization All India Muslim Personal Law Board that is defending childrens marriage in the name of relegious
freedom.Brahmins are not asking for any exception.Child marriages
are prevalent among muslims in India and in many other countries.
Yet Viduthalai wont write anything
criticising muslims or AIMPLB.

Anonymous said...

\\நாங்கள் சட்டத்தை மீறி சிறைக்குச் செல்வோமே தவிர சாஸ்திரத்தை மீறி ரவுரவாதி நரகத்துக்குச் செல்லமாட்டோம் என்றெல்லாம் சல்லடம் கட்டி ஆர்ப்பரித்தனர்\\.
அவர்களாக திருந்தினாற்சரி

Anonymous said...

மக்களுக்கு விழிப்புனர்வு வந்து அவர்களாகத்தான் திருந்த வேண்டும்,

Anonymous said...

அருமையான பத்திவு

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும்
வருகைக்கும்
மிக்க நன்றி கவின்.