Search This Blog

9.12.08

பொன்சேகா என்ற வெறி நாயின் செய்கையைக் கண்டிக்க வேண்டும்.


சிங்களத் தளபதியின் சீற்றத்திற்கு ஒரு முடிவு தேவை!

ஈழத்தில் உள்ள தமிழர்களின் உறவு எமது தொப்புள் கொடி உறவு; இனம் இனத்தோடு சேருவது இயல்பு. அதிலும் இனப் படுகொலை பச்சையாக அங்கே நடைபெறும் போது அதைக் கண்டும் கேட்டும் வாழும் மனிதர்கள் யாராக இருந்தாலும் கண்டித்து தடுத்து நிறுத்திடுவது மனிதநேயக் கடமை அல்லவா?

அதைத்தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்கின்றனர்; இங்கே உருவாகியுள்ள எரிமலை உணர்வு, டில்லி மத்திய அரசை அசைக்கும் அளவுக்குச் சென்று, தங்களுக்கு எச்சரிக்கை விடுவதோடு நிறுத்திக் கொண்டார்கள் என்ற கட்டம் எல்லாம் தாண்டி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரே இலங்கை அதிபர் சிங்கள இராஜபக்சேவை சந்தித்து போரை நிறுத்தச் சொல்ல இலங்கைக்கு வரவிருக்கிறார் என்பதும், சேற்றில் சிக்கி அவதியுற்ற யானைபோல விடுதலைப்புலிகளின் தாக்குதல்களில் பருவ மழையில் சிக்கித் தவித்து விட்டால் ஓடும் நிலைக்கு சிங்கள இராணுவம் நிலை குலைந்து, செயல் இழந்து, செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற் பட்டதாலும். உள்ளம் கொதித்துப் போய் இருக்கின்றனர் சிங்கள வெறிநாய்கள்!

பொன்சேகா என்ற இராணுவத் தளபதி எவ்வளவு நிலை குலைந்துள்ளார் என்பதற்கு அடையாளம், தனது எல்லைதாண்டி தமிழ் நாட்டுத் தலைவர்கள், குறிப்பாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் காகப் மாபெரும் உரிமை முழக்கமிடும் எமது சகோதரர்களை நாக்கில் நரம்பின்றி, நாத்தழும்பேறி குக்கல் குரைப்பதுபோல, விமர்சித்துள்ளதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்!

இங்குள்ள இலங்கைத் தூதுவரிடம் இந்த உணர்வுகள் பற்றியும், வாய்க்கொழுப்பு சீலையில் வடிகின்றது என்ற பழமொழிக்கேற்ப இப்படி ஜன்னி கண்டவன்போல உளறுவது கண்டு எமது தமிழ்நாட்டவர் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அமைதி காப்பார்களா?


மத்திய அரசின் முக்கிய பொறுப்பாளர்கள் இதுகுறித்து இலங்கைத் தூதுவரை அழைத்து, கண்டனம் தெரிவித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது என்று கூறி எச்சரித்து, வருத்தம் தெரிவிக்கச் செய்ய வேண்டும்.

இந்நாட்டுத் தலைவர்களைப் பற்றிப் பேச அந்நாட்டு சிங்கள இராணுவத்துக்காரனுக்கு ஏது உரிமை?

சகோதரர்கள் வைகோ பற்றியோ, நெடுமாறன் பற்றியோ இந்நாட்டிலுள்ள நாங்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வது வேறு; இன்னொரு நாட்டில் உள்ள ஒரு பொறுப்பான இராணுவத் தளபதி இப்படி பொறுப்பற்றுப் பேசினால் அனுமதிக்க முடியுமா? மத்திய அரசு இதனைக் கண்டித்து வருத்தம் தெரிவிக்க முன் வர வேண்டும்.

கலைஞரின் திரைப்பட வசனம் ஒன்று நமக்கு நினைவுக்கு வருகிறது. அரண்மனை நாயே, அடக்கடா வாயை என்றுதானே நம் இளைஞர்கள் இனி பேசி, கொந்தளிப்பை உண்டாக்குவார்கள்.

இந்நிலை தேவையா? விரும்பத்தக்கதா? பொறுத்துக் கொள்ளத்தக்கதா?

சிங்கள இராணுவம் - இங்குள்ள ஊடகங்களும், இலங்கை அரசின் பயங்கரவாத அமைப்புகளின் தணிக்கை செய்யப்பட்ட செய்திகளும் தருவது போன்ற வெற்றிச் சூழ்நிலை அந்த நாட்டு இராணுவத்திற்கு இருந்திருந்தால், இப்படி ஒரு வெறி பிடித்து, தமிழ்நாட்டில் குரல் கொடுக்கும் தலைவர்களை தாறுமாறாக விமர்சிக்க எண்ணம் வந்திருக்குமா?

1987-இல் ஜெயவர்த்தனேயுடன் அந்நாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஒப்பந்தம் போடச் சென்றபோது, கொழும்பில் இராணுவ மரியாதையை ஏற்கச் சென்ற நிலையில் சிங்கள இராணுவ சிப்பாய் அணி வகுப்பில் நின்றவன் - தனது துப்பாக்கிக் கட்டையால் ராஜீவ்காந்தியை, தாக்கியபோது அவர் சற்று குனிந்து அனிச்சையாய் நடந்து கொண்டிருக்காவிட்டால் அவர் நிலை என்ன வாயிருக்கும்?

அச்சிப்பாய்மீது ஒப்புக்கு வழக்கு போட்டார்கள்; கொலை வெறித் தாக்குதல் குற்றச்சாட்டுகூட கிடையாது - வீடியோ சாட்சியபதிவு இருந்தபோதிலும்கூட! அப்படிப்பட்ட சிங்களர்களின் முந்தைய வெறித்தன நிகழ்வுகளை எவரே மறந்துவிட முடியும்? எவரே மறைத்துவிட முடியும்?

எனவே மத்திய அரசு இலங்கைத் தூதுவரிடம் இதுபற்றி எச்சரித்து, அத்தளபதி என்ற வெறி நாயின் செய்கையைக் கண்டித்து வருத்தம் தெரிவிக்க முன் வர வேண்டும்.

இன்றேல், இதுவே பெருங் கிளர்ச்சியாக வெடித்து விடக் கூடும். எச்சரிக்கை!

-------------------- கி . வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -"விடுதலை" தலையங்கம் -9-12-2008

4 comments:

Jeyapalan said...

மத்திய அரசுக்கு இது தானாகவே செய்ய வேண்டிய வேலை என்று ஏன் உறைக்கவில்லை? பொன்சேகாவின் பேட்டி வெளிவந்த மறு கணமே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். தன் நாட்டவரை அதுவும் அரசியல் தலைவர்களைக் கேலி செய்ததைக் காணாமல் இருப்பது என்ன மடைத் தனம். இந்தியாவிற்குச் சுரணை இல்லையா அல்லது தமிழ்த் தலைவர்கள் இந்தியத் தலைவர்கள் இல்லையா அல்லது அவர்கள் இந்தியரே இல்லையா? இந்தியாவை இனி எல்லோருமே இலகு இலக்கு என்று சர மாரியாகத் தாக்குவார்களே. இது போன்றவற்றை முளையிலேயே கிள்ளி விட வேண்டும் இல்லா விட்டால் நல்லதல்ல.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி

bala said...

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை வெறி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

மானமிகு முண்டம் ஏற்க வேண்டிய கருத்தை தான் சொல்லியிருக்கிறது.பொன்சேகா சொன்னது தவறு.கருப்பு சட்டை,மஞ்சள் துண்டு போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகளா என்ன?கோமாளிகள் மக்களுக்கு தீங்கிழைப்பவர்கள் அல்லர்.மக்களுக்கு காமெடி செய்து மகிழ்விப்பவர்கள்.திராவிட அரசியல்வாதிகள் கொடிய கிருமிகள்,சமூகத்தை பிடித்துள்ள தொழு நோய் அல்லவா இந்த முண்டங்கள்.ஜாதி வெறி பிடித்து அலையும் அயோக்யர்கள் அல்லவா தமிழக அரசியல்வாதிகள்.பொன்சேகா கண்டிக்கப் படவேண்டியவர் தான்.

பாலா

தமிழ் ஓவியா said...

பார்ப்பானுக்கு பைத்தியம் பிடித்தது என்பதை தெரிந்து கொள்ள சுலவழி எது தெரியுமா?

பார்ப்பன பாலா பின்னூட்டத்தில் உளறியது போல் உளறிக் கொண்டிருப்பார்கள்.

காஞ்சி சங்கராச்சாரி ஊத்தவாயன் ஜெயெந்த்ரன் கொலைகேசு, பொப்பளைகளை இம்சிச்ச கேசு என்ன ஆகுமோன்னு பயத்திலே உளறிக் கிட்டு இருப்பதாக கேள்வி.

இதுவே நீடித்தால் பைத்தியம்தான் என்று கழுகாரும் ஆந்தையாரும் சொன்னார்கள்.

பாலா உன்னுடைய அநாகரிகமான பின்னூட்டங்கள்தான் உனக்கு எதிரி. மற்ரவர்களல்ல.

பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இது நன்றாகவே தெரியும்.