Search This Blog

13.12.08

கலைஞர் பேனரை, உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்திய கன்னடர்கள்


தமிழர்களை வம்புக்கு இழுக்காவிட்டால் கன்னட அமைப்புகளுக்குத் தூக்கமே வராது போலிருக்கிறது. தமிழக முதல்வர் சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்த போது அங்குள்ள தமிழ்ச் சங்கத்தில் பேசுகையில் பெங்களூருவில் திறக்கப்படாமல் உள்ள திருவள்ளுவர் சிலை குறித்தும், அதேபோல் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் போது ஒகேனக்கல் திட்டம் குறித்தும் சில கருத்துக்களைக் கூறினார். அதையே மையப்படுத்தி கர்நாடக அமைப்புகள் கலைஞருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியிருக்கின்றன.

கர்நாடக ரட்சண வேதிகே என்கிற அமைப் பின் தலைவர் நாராயணகவுடே. இவரது ஒரே குறிக்கோள் கர்நாடகாவில் உள்ள தமிழர்களை இம்சிப்பது. அப்புறம் தமிழ்நாட்டுத் தலைவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்துவது.... அந்த வகையில்தான் கடந்த சனிக்கிழமை காலையில் தமிழர்களுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார் இவர். அதை அதிரடியாகச் செய்தும் முடித்தார். அன்று விடியற்காலை ஐந்து முப்பது மணிக்கு சென்னைக்குப் புறப்படத் தயாராக இருந்த லால்பாக் விரைவு ரயிலை போகவிடாமல் தடுத்து தமிழகத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பி அந்தக் காலை வேளையை களேபர வேளையாக்கிவிட்டனர்.

தமிழக முதல்வர் கலைஞர் சமீபத்தில் தலைநகர் டெல்லிக்குச் சென்றிருந்த போது பத்திரிகையாளர்களிடம், `ஒகேனக்கல் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கும் கர்நாடக மாநிலத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி உருவானதாகும். அதில் மீண்டும் உரிமை கோரி, ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று தடுப்பது முறையல்ல. அது சட்டப்படியும் முறையல்ல, தார்மீக நெறிப்படியும் முறையல்ல' என்று பேசியிருந்தார்.

அதேபோல் டெல்லியில் இருக்கிற தமிழ்ச் சங்கத்தில் பேசும்போது, `பெங்களூரூவில் இருக்கிற திருவள்ளுவர் சிலை கடந்த இருபது ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. அந்தச் சிலையைத் திறப்பதில் மேலும் தாமதம் ஏற்படுமேயானால், சிலையை மூடியுள்ள அழுக்குத் துணியையாவது அகற்றுங்கள்' என்று பேசினார்.
அதன் விளைவுதான் இந்த ரயில் மறியல். கூடவே கலைஞருக்கெதிராக அநாகரிக கோஷங்களை எழுப்பினர். இதனை கவனித்த வட்டாள் நாகராஜ் அவர் பங்குக்கு கலைஞர் பேனரை தீயிட்டுக் கொளுத்தி வழக்கம் போலவே போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றிருக்கிறார்.


இந்நிலையில், கர்நாடகா ரட்சண வேதிகேவின் தலைவர் நாராயணகவுடாவிடம் பேசினோம். "கருணாநிதி அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக மக்களின் உணர்வைத் தூண்டுகிறார். திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைக்க வேண்டும் என்கிறார்கள். வேண்டுமானால் சிலையை சென்னையில் வைத்துக் கொள்ளட்டும். அவர் செய்கிற தந்திரத்தால், ஒன்றாக இருக்கும் கர்நாடக மக்களும் தமிழர்களும் வேறுபடுகிறார்கள்.

மக்களைக் குழப்பவே இந்தப் பிரச்னையை அவர் கையில் எடுத்திருக்கிறார். இரு மாநில மக்கள் மனதிலும் விஷத்தைக் கலக்கிறார். எங்களுக்குத் தமிழ் மக்கள் இலக்கு அல்ல. தமிழகத்தை ஆளும் தி.மு.க. தலைவர் கருணாநிதிதான் இலக்கு. அவருக்கெதிராகத்தான் போராட்டங்களை நடத்துகிறோம். கருணாநிதி அரசியல் நடத்துவதற்காக தமிழ், தமிழ் என்று மக்களை ஏமாற்றுகிறார்.

ஒகேனக்கல் பிரச்னையில் கூட அந்தப் பகுதி யாருடையது என்பதில்தான் பிரச்னையைக் கிளப்புகிறோமே தவிர, தமிழ்நாட்டுக்குக் குடிக்கத் தண்ணீர் தரக்கூடாது என்று கர்நாடக ரட்சண வேதிகே அமைப்பு ஒருபோதும் சச்சரவு செய்த தில்லை; இனியும் செய்யாது. அந்த ஒகேனக்கல் நிலப் பரப்பு கர்நாடக மாநிலத்துக்குட்பட்டதா அல்லது தமிழக எல்லையில் வருகிறதா என்று மத்திய அரசு சார்பாக சர்வே செய்ய வேண்டும். இரண்டு மாநிலத் தினரின் முன்னிலையில் மத்திய சர்வேயினர் வந்து அளந்து கொடுக்கட்டும். அவர்கள் எது சரியானது என்கிறார்களோ அதற்குக் கட்டுப்படுகிறோம்'' என்றார்.

அவரைத்தொடர்ந்து கன்னட சலுவாலி கட்சியின் தலைவர் வட்டாள் நாகராஜைத் தொடர்பு கொண்டு பேசினோம். "நீங்க தமிழ்ப் பத்திரிகையாளர். நாங்கள் சொல்வதைக் கேட்கப் போவதில்லை. தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ஆதரவாகத்தான் எழுதப்போகிறீர்கள். எங்கள் மாநிலத்தில் உள்ள விஷயங்களுக்காக நாங்கள் இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஆரம்பம் முதற்கொண்டு கர்நாடக மாநில மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவன் நான். அதே மாதிரிதான் தற்போதும் கருணாநிதியின் டெல்லிப் பேச்சுக்கு எதிராக அவரது உருவ பொம்மையை எரித்து எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளேன்'' என்றார்.

முதல்வர் கலைஞர் பங்கு பெற்ற டெல்லி தமிழ்ச் சங்க விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துவும் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தக் காரணத்தினால்தான் கடந்த இருபது ஆண்டுகளாக நான் பெங்களூருவுக்கே செல்வதில்லை(!?) புதிதாக உள்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கும் ப.சிதம்பரம் அவர்கள், திறப்பு விழாவைக் காண கடந்த இருபது ஆண்டுகளாக பெங்களூருவில் காத்துக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கிற கோரிக்கையை முன்வைத்தார். என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

------------------------நன்றி:- "குமுதம் ரிப்போர்டர்" 14-12-2008


கருநாடகத்தில் உள்ள அனைத்து அமைப்பினரும் ஒன்றாகச் செயல்படுகிறனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாதபோது கூட அவர்கள் ஒற்றுமையுடன் ஓரணியில் நின்று குரல் கொடுக்கிறார்கள்.

இங்கு தமிநாட்டிலோ பாதிப்புக்கு மேல் பாதிப்பு வந்தாலும் ஓரணியில் செயல்படாமல் சிதறிக்கிடக்கிறார்கள். ஒரே பிரச்சனைக்கு தனித் தனியாக போராடி ஒற்றுமையை சீர் குலைத்து பாதிப்பை மேலும் பாதிப்புக்குள்ளாக்குவதை பார்த்து வேதனையடைய வேண்டிய நிலையில் உள்ளோம்.


இநிலையை மாற்ற நம்மாலான பங்களிப்பை செலுத்தி அனைவரும் ஓரணியில் திரள ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.

20 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திரு தமிழ் ஓவியா,
கன்னடர்களை வெறுப்பேற்றி பெங்களுருவில் திருவள்ளுவர் சிலை வைத்து மனித பலி இடுவதை விட, திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தமிழ்கத்தின் கிராமம் தோறும் பட்டி தொட்டியெல்லாம் பரப்ப பிரச்சார இயக்கம் ஒன்றைக் கலைஞர் ஏற்படுத்தலாம். வள்ளுவரைப் பிடிக்காதவர்களுக்கு வள்ளுவரைக் காட்டுவதைவிட வள்ளுவரைத் தெரியாதத் தமிழகத்துத் தமிழர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாமே?
சிலைகளை வைத்து எதைக் கண்டோம்?

அன்புடன்,
ஜோதிபாரதி.

bala said...

//வள்ளுவரைப் பிடிக்காதவர்களுக்கு வள்ளுவரைக் காட்டுவதைவிட வள்ளுவரைத் தெரியாதத் தமிழகத்துத் தமிழர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாமே?
சிலைகளை வைத்து எதைக் கண்டோம்?//

அதானே.வள்ளுவன் சொன்ன "புலால் உண்ணாமை","மாற்றான் மனைவி விரும்பாமை" போன்ற உன்னத கருத்துக்களை புறந்தள்ளி இழி பிறவிகளாக வாழும் இந்த கருப்பு சட்டை வெறி நாய்கள் திருவள்ளுவர் சிலையை பங்களூரில் வைக்கவேண்டும் என்று துடிக்கிறதாம்.என்ன ஒரு கயமைத்தனமான நாடகம்?
அது சரி இந்த மூஞ்சிகள் பயங்கரவாதி தாடிக்காரன் சிலயை ஏன் கர்நாடகாவில் நிறுவக்கூடாது.கன்னடம் தமிழுக்கு தந்த சாபம் அல்லவா அந்த மூஞ்சி?அந்த மூஞ்சியை அவர்களே வைத்துக் கொள்ளட்டுமே?

பாலா

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும்
வருகைக்கும்
நன்றி ஜோதிபாரதி.

புலவர் வீட்டு அலமாரியில் இருந்த குறளை மக்கள் மத்தியில் பரப்பியவ பெரியார்.

இன்று படநூல்களில் குறளை வைத்து திருவள்ளுவரைத் தெரியாத த்மிழன் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டோம் ஜோதிபாரதி.

சிலைகளை வைப்பது அதை வணங்குவதற்கு அல்ல. இவர்தான் திருவள்ளுவர் என்று நாம் தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய சந்ததியினர் தெரிந்து கொள்வதற்கும்
ஒரு ஏற்பாடு அவ்வளவே.
இதுவும் ஒருவகை பிரச்சாரம்தான்.

தமிழ்நாட்டில்கூட வேறு மாநிலத்தவரின் சிலைகள் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாடு எடுத்தால் நிலமை என்ன ஆகும்?

கர்நாடகா இந்தியாவுக்குள்தானே இருக்கிறது?.

காந்திசிலை மற்ற நாடுகளில் வைத்து அவருக்கு மரியாதை தருகின்றனவே.

திருவள்ளுவர் எழுதிய குறளில் வாழ்வியல் கருத்துக்கள்தானே இருக்கிறது. தமிழன் கன்னடன் என்று பிரித்து எழுதி உள்ளாரா?

அப்படிப்பட்டவருக்கு சிலை வைக்ககூடாது என்று சொல்லுவது
அயோக்கியத்தனம் இல்லையா?

சிலை வைத்தால் மனித உயிர்கள் பலியாகும் என்கிறீர்களே, பேருந்தில் போகும்போது விபத்துஏற்பட்டு உயிர் போய்விடுகிறது அதற்காக பயணம் செய்யாமல் இருக்கிறோமா?

இப்படி எதிர் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

திருவள்ளுவர் சிலை வைப்பதால் கன்னடர்களுக்கு என்ன நட்டம் அல்லது பாதிப்பு என்ன?

சிந்தியுங்கள்

நன்றி ஜோதிபாரதி.

ஜோ/Joe said...

//திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தமிழ்கத்தின் கிராமம் தோறும் பட்டி தொட்டியெல்லாம் பரப்ப பிரச்சார இயக்கம் ஒன்றைக் கலைஞர் ஏற்படுத்தலாம். //

ஜோதிபாரதி,
பேருந்துகள் தோறும் குறளை பொறிக்க செய்தது யார்?

தலைநகரில் வள்ளுவனுக்கு கோட்டம் கண்டது யார்?

முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் வான் முட்டும் வள்ளுவன் சிலை அமைத்தது யார்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//தமிழ் ஓவியா said...
தங்களின் கருத்துக்கும்
வருகைக்கும்
நன்றி ஜோதிபாரதி.

புலவர் வீட்டு அலமாரியில் இருந்த குறளை மக்கள் மத்தியில் பரப்பியவ பெரியார்.

இன்று படநூல்களில் குறளை வைத்து திருவள்ளுவரைத் தெரியாத த்மிழன் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டோம் ஜோதிபாரதி.

சிலைகளை வைப்பது அதை வணங்குவதற்கு அல்ல. இவர்தான் திருவள்ளுவர் என்று நாம் தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய சந்ததியினர் தெரிந்து கொள்வதற்கும்
ஒரு ஏற்பாடு அவ்வளவே.
இதுவும் ஒருவகை பிரச்சாரம்தான்.

தமிழ்நாட்டில்கூட வேறு மாநிலத்தவரின் சிலைகள் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாடு எடுத்தால் நிலமை என்ன ஆகும்?

கர்நாடகா இந்தியாவுக்குள்தானே இருக்கிறது?.

காந்திசிலை மற்ற நாடுகளில் வைத்து அவருக்கு மரியாதை தருகின்றனவே.

திருவள்ளுவர் எழுதிய குறளில் வாழ்வியல் கருத்துக்கள்தானே இருக்கிறது. தமிழன் கன்னடன் என்று பிரித்து எழுதி உள்ளாரா?

அப்படிப்பட்டவருக்கு சிலை வைக்ககூடாது என்று சொல்லுவது
அயோக்கியத்தனம் இல்லையா?

சிலை வைத்தால் மனித உயிர்கள் பலியாகும் என்கிறீர்களே, பேருந்தில் போகும்போது விபத்துஏற்பட்டு உயிர் போய்விடுகிறது அதற்காக பயணம் செய்யாமல் இருக்கிறோமா?

இப்படி எதிர் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

திருவள்ளுவர் சிலை வைப்பதால் கன்னடர்களுக்கு என்ன நட்டம் அல்லது பாதிப்பு என்ன?

சிந்தியுங்கள்

நன்றி ஜோதிபாரதி.//

//புலவர் வீட்டு அலமாரியில் இருந்த குறளை மக்கள் மத்தியில் பரப்பியவ பெரியார்.

இன்று படநூல்களில் குறளை வைத்து திருவள்ளுவரைத் தெரியாத த்மிழன் இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டோம் ஜோதிபாரதி.//

நீங்கள் சொல்வது பகுதி மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கொடியது. மற்றது விகுதியாக கருத வேண்டியிருக்கிறது. எனக்குத் தெரிந்து கிராமங்களில் திருவள்ளுவரைத் தெரியாத கூடானு கோடி தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அதைத் தான் நான் சொல்லி இருக்கிறேன். நீங்கள் சொல்வது படித்த நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தைப் பற்றி.


//சிலைகளை வைப்பது அதை வணங்குவதற்கு அல்ல. இவர்தான் திருவள்ளுவர் என்று நாம் தெரிந்து கொள்வதற்கும், நம்முடைய சந்ததியினர் தெரிந்து கொள்வதற்கும்
ஒரு ஏற்பாடு அவ்வளவே.
இதுவும் ஒருவகை பிரச்சாரம்தான்.//

சரி. அதை திருவள்ளுவரை வெறுக்கிற அரசாங்கம், மக்கள் இருக்கிற இடத்தில் வைக்காமல், திருவள்ளுவரை விரும்புகிற அரசாங்கம் இருக்கும் இடத்தில், மக்கள் இருக்கும் இடத்தில் வைத்தால் தவறொன்றும் இல்லையே. அதை தானே நான் சொல்லி இருக்கிறேன். அமெரிக்காவிலோ, இலண்டனிலோ வைத்தால் யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். நம்முடன் நதிநீர் பிரச்சனையில் முரண்டு பிடிப்பவர்களிடம் சிலை வைத்து நமக்கு என்ன ஆகப் போகிறது.

//தமிழ்நாட்டில்கூட வேறு மாநிலத்தவரின் சிலைகள் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாடு எடுத்தால் நிலமை என்ன ஆகும்?

கர்நாடகா இந்தியாவுக்குள்தானே இருக்கிறது?.//


உங்கள் கேள்வி நீர்த்துப் போய் ரொம்ப காலம் ஆகிவிட்டது தமிழ் ஓவியா. நடுவர் மன்றம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளை கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பார்வையிட்டு விட்டு 205 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்திரவிட்டார்கள். அதை செயல் படுத்தவில்லை. அப்போதும் கர்நாடக இந்தியாவில் தான் இருந்தது. பின்னர் சமீபத்தில் உச்சநீதி மன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதையும் செயல் படுத்தாமல் முரண்டு பிடித்தது கர்நாடகா. அப்போதும் இந்தியாவில் தான் இருந்தது. கன்னடர்களுக்கு ஓர் இறையாண்மை, தமிழர்களுக்கு ஓர் இறையாண்மை என்று பிரித்து வைத்திருக்கும் போது அவர்கள் எப்படி சிலை வைக்க விடுவார்கள். இந்திய அரசு அவர்கள் பக்கம் அல்லவா எப்போதும் இருக்கிறது?


//காந்திசிலை மற்ற நாடுகளில் வைத்து அவருக்கு மரியாதை தருகின்றனவே.

திருவள்ளுவர் எழுதிய குறளில் வாழ்வியல் கருத்துக்கள்தானே இருக்கிறது. தமிழன் கன்னடன் என்று பிரித்து எழுதி உள்ளாரா?

அப்படிப்பட்டவருக்கு சிலை வைக்ககூடாது என்று சொல்லுவது
அயோக்கியத்தனம் இல்லையா?

சிலை வைத்தால் மனித உயிர்கள் பலியாகும் என்கிறீர்களே, பேருந்தில் போகும்போது விபத்துஏற்பட்டு உயிர் போய்விடுகிறது அதற்காக பயணம் செய்யாமல் இருக்கிறோமா?

இப்படி எதிர் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

திருவள்ளுவர் சிலை வைப்பதால் கன்னடர்களுக்கு என்ன நட்டம் அல்லது பாதிப்பு என்ன?

சிந்தியுங்கள்

நன்றி ஜோதிபாரதி.//

உங்கள் எதிரி நீங்கள் வணக்கும் கடவுளை வணங்குவதில்லை. இதைப் புரிந்து கொண்டால் போதும்.
உங்கள் உவமை சரியாக வரவில்லை. நல்ல ஓட்டுனர் நல்ல பஸ் இருந்தால் பிரச்சனை வர வாய்ப்பு குறைவு -மாறாக பெரும்பான்மை பயணிகளும், ஓட்டுனரும் தண்ணி போட்டுட்டு பஸ் ஓட்டினால் என்ன நடக்குமோ அது தான் நடக்கும். நீங்கள் பிரச்சனைக்கு வெளியில் இருந்து பார்த்தால் நன்றாகத் தெரியும்.

நன்றி தமிழ் ஓவியா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// ஜோ / Joe said...
//திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை தமிழ்கத்தின் கிராமம் தோறும் பட்டி தொட்டியெல்லாம் பரப்ப பிரச்சார இயக்கம் ஒன்றைக் கலைஞர் ஏற்படுத்தலாம். //

ஜோதிபாரதி,
பேருந்துகள் தோறும் குறளை பொறிக்க செய்தது யார்?

தலைநகரில் வள்ளுவனுக்கு கோட்டம் கண்டது யார்?

முக்கடலும் சங்கமிக்கும் குமரியில் வான் முட்டும் வள்ளுவன் சிலை அமைத்தது யார்?//


ஜோ நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். அதை யார் இல்லை என்று சொன்னது? இப்போது விவாதம் பெங்களுருவில் சிலை வைப்பது மற்றும் அதனால் ஏற்படும் பலன் பற்றி குறிப்பிடுகிறேன்.

தமிழ் ஓவியா said...

அவனுக்கு விருப்பமில்லை அதனால் நீ அதைச் செய்யாதே என்கிறீர்கள். துஸ்டனைக் கண்டால் தூரவிலகு என்றபொழமொழி போல் இருக்கிறது உங்கள் நிலைப்பாடு.

அந்த துஸ்டனை முறையான சட்ட திட்டங்களுக்கு அடங்கி நடக்க சொல் என்பது எனது நிலைப்பாடு.

//இந்திய அரசு அவர்கள் பக்கம் அல்லவா எப்போதும் இருக்கிறது? //

என்ன செய்வது ஜோதிபாரதி தமிழனிடம் ஒற்றுமை இல்லையே!

இந்திய அரசை நம் பக்கம் உள்ள நியாயமானவைகளுக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதையாவது ஒற்றுமையாகச் செய்ய வைக்க முயற்சி செய்வோம்.

நன்றி ஜோதிபாரதி

தமிழ் ஓவியா said...

தமிழன் என்றவுடன் எப்போதும்போல் வெறுப்பை உமிழ்ந்திருக்கிறது பார்ப்பன பாலாவின் பின்னூட்டம்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும்

கருத்துக்கும் நன்றி ஜோ.

bala said...

//அந்த துஸ்டனை முறையான சட்ட திட்டங்களுக்கு அடங்கி நடக்க சொல் என்பது எனது நிலைப்பாடு.//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை பொறிக்கி நாய்,திராவிட முண்டம்,அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

முதலில் கருப்பு சட்டை/மஞ்ச துண்டு துஷ்டர்களின் கும்பல் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கட்டும்.பிறகு அவர்களுக்கு கன்னடர்களை விமர்சிக்கும் தார்மிக உரிமை வரும்.சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளை அலட்சியம் செய்த பெருமை நமது கீழ்த்தர கழக அரசியல்வாதிகள் ஆரம்பித்து வைத்த அயோக்யத்தனம் அல்லவா?இது புரியாமல் மானமிகு முண்டத்தின் பாசறை நாய்கள் வெறி பிடித்து குரைப்பதை,கருப்பு சட்டை திராவிட மோகினியின் காபரே ஆட்டத்தில் மயங்கியிருக்கும் தமிழன் வேண்டுமானால் ரசிக்கலாம்;மற்ற மாநிலத்தவர்களும் அதை ரசிக்க வேண்டும் என்று சொல்வது ஓவர்.

பாலா

ஜோ/Joe said...

//ஜோ நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். அதை யார் இல்லை என்று சொன்னது? இப்போது விவாதம் பெங்களுருவில் சிலை வைப்பது மற்றும் அதனால் ஏற்படும் பலன் பற்றி குறிப்பிடுகிறேன்.//

அப்படியா ? ஏதோ தமிழகத்தில் திருக்குறளை பரப்ப கலைஞருக்கு அறிவுரைகளை அள்ளி விட்டீர்களே .அதனால் தான் சொன்னேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

// தமிழ் ஓவியா said...
அவனுக்கு விருப்பமில்லை அதனால் நீ அதைச் செய்யாதே என்கிறீர்கள். துஸ்டனைக் கண்டால் தூரவிலகு என்றபொழமொழி போல் இருக்கிறது உங்கள் நிலைப்பாடு.

அந்த துஸ்டனை முறையான சட்ட திட்டங்களுக்கு அடங்கி நடக்க சொல் என்பது எனது நிலைப்பாடு.

//இந்திய அரசு அவர்கள் பக்கம் அல்லவா எப்போதும் இருக்கிறது? //

என்ன செய்வது ஜோதிபாரதி தமிழனிடம் ஒற்றுமை இல்லையே!

இந்திய அரசை நம் பக்கம் உள்ள நியாயமானவைகளுக்கு நியாயம் கிடைக்க என்ன செய்ய வேண்டுமோ அதையாவது ஒற்றுமையாகச் செய்ய வைக்க முயற்சி செய்வோம்.

நன்றி ஜோதிபாரதி//

நமது குரலுக்கு தில்லியில் மதிப்பு இருக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு கட்டுப்பாடாத அரசாங்கங்கள் அடுத்த வினாடியே கலைக்கப் படவேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கலைஞர் அரசைக் கலைத்த காங்கிரஸ் அரசாங்கம் ஏன் நீதிமன்றத் தீர்ப்பை அமுல் செய்யாத கர்நாடக அரசைக் கலைக்கவில்லை. ராவும், மன்மோகனும்(சோனியாவும்) எதற்குப் பயந்தார்கள். தமிழகத்தில் பட்ட மரம் காங்கிரஸ். கர்நாடகாவில் இன்னும் கொஞ்சம் பசை இருக்கிறது என்று தானே?
இந்த நிலையில் கலைஞர் குரல் கொடுப்பதால் என்ன பலன் ஏற்பட்டு விடும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். நூறு அப்பாவிகள் இறக்க நேரிடும், இருபது தமிழக பேருந்துகள் கொளுத்தப்படும். செயல்பாட்டு முறைப்படி கொஞ்சம் சிந்தித்தால் இதுதான் நடக்கும்.
நன்றி தமிழ் ஓவியா!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஜோ / Joe said...
//ஜோ நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். அதை யார் இல்லை என்று சொன்னது? இப்போது விவாதம் பெங்களுருவில் சிலை வைப்பது மற்றும் அதனால் ஏற்படும் பலன் பற்றி குறிப்பிடுகிறேன்.//

அப்படியா ? ஏதோ தமிழகத்தில் திருக்குறளை பரப்ப கலைஞருக்கு அறிவுரைகளை அள்ளி விட்டீர்களே .அதனால் தான் சொன்னேன்.//

ஜோ, மேலே உள்ள எனது பின்னூட்டத்திலேயே உங்களுக்கு விளக்கமான பதில் இருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கலைஞர் அரசைக் கலைத்த காங்கிரஸ் அரசாங்கம் //

காங்கிரஸ் தயவில் நடந்த அரசாங்கம் என்றிருக்க வேண்டும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//அப்படியா ? ஏதோ தமிழகத்தில் திருக்குறளை பரப்ப கலைஞருக்கு அறிவுரைகளை அள்ளி விட்டீர்களே .அதனால் தான் சொன்னேன்//

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார்
இல்லானும் கெடும்.

அரசர்களுக்கு குடிமகன் வேண்டுகோள் வைப்பதில் தவறேதும் இல்லை என்பது ஏன் கருத்து.

உங்கள் புரிதல் வேறு விதமாக இருந்தால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.

தமிழ் ஓவியா said...

பார்ப்பன பாலாவின் அருவருப்பான பின்னூட்டத்தை அலட்சியப்படுத்திவிட்டு அரோக்கியமான விவாதத்தை தொடருவோம் ஜோதிபாரதி மற்றும் ஜோ.

நன்றி.

ஜோ/Joe said...

//இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார்
இல்லானும் கெடும்.

அரசர்களுக்கு குடிமகன் வேண்டுகோள் வைப்பதில் தவறேதும் இல்லை என்பது ஏன் கருத்து.

உங்கள் புரிதல் வேறு விதமாக இருந்தால் அதற்கு என்னிடம் பதில் இல்லை.
//

சரி..சரி ..இந்த விடயத்தில் கலைஞர் செய்தது போதாது என்றால் இனிமேல் கலைஞர் வீடு வீடா போய் திருக்குறள் வகுப்பெடுத்தால் தான் உண்டு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//சரி..சரி ..இந்த விடயத்தில் கலைஞர் செய்தது போதாது என்றால் இனிமேல் கலைஞர் வீடு வீடா போய் திருக்குறள் வகுப்பெடுத்தால் தான் உண்டு.//

மீண்டும் சரியாகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு திட்டத்தைச் செயல் படுத்த முதல்வரோ பிரதமரோ வீடு வீடாகச் செல்ல வேண்டியதில்லை. அப்படிச் செல்ல வேண்டும் என்றால் நாட்டில் எந்த திட்டமும் நிறைவேறாது.

bala said...

//இனிமேல் கலைஞர் வீடு வீடா போய் திருக்குறள் வகுப்பெடுத்தால் தான் உண்டு.//

ஏற்க்க வேண்டிய கருத்து.யாராவது மஞ்ச துண்டு அய்யாவின் வீடு வீடாய்(மனைவியார் வீடு,துணைவியார் வீடு,ஏனைய வைப்பாட்டிகளின் வீடு) போய் மஞ்ச துண்டு அய்யாவுக்கு திருக்குறள் அவருக்கு புரியும் லெவலில் பாடம் எடுத்தால்,வள்ளுவன் சொன்னபடி முறையான அமைச்சு கொண்டு ஆட்சி தர முடியும்.துணிந்து இந்த கருத்து சொன்ன ஜோவிற்கு ஒரு ஜே.

பாலா

ஜோ/Joe said...

ஐயா பாலா,
இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையோ :)