Search This Blog

25.12.08

அய்.அய்.டி. இயக்குநர் ஆனந்த் என்ற பச்சை வர்ணாசிரம பார்ப்பனரின் பதவி வெறி




சென்னை அய்.அய்.டி. ஆனந்த் அய்யங்காரின் பதவி நியமனம்
முறைகேடானது நியமனக் குழுவுக்குத் தெரியாமலே விண்ணப்பங்கள் கோரப்படாமலே,
விளம்பரம் செய்யப்படாமலே நியமிக்கப்பட்டது செல்லத்தக்கதல்ல

ஆனந்த்மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

சென்னை - அய்.அய்.டி. இயக்குநர் நியமனம் ரத்து செய்யப்பட்ட தீர்ப்புபற்றித்
தமிழர் தலைவர் அறிக்கை


பல நூறு கோடிகள் வெளிநாட்டு - ஜெர்மன் நாட்டு - மற்றும் மத்திய அரசு உதவிகளைப் பெற்று இயங்கும் சென்னை அய்.அய்.டி. என்ற உயர் கல்வி நிறுவனம் இதுவரை சமூக நீதியே உள்ளே நுழைய முடியாத நவீன கல்வித் துறை கர்ப்பக்கிருகமாகவே நடத்தப்பட்டு வந்தது; வருகிறது.

I.I.T. என்பதற்கு Indian Institute of Technology என்பதுதான் உரிய பெயர். என்றாலும் நடைமுறையில் அது Iyer, Iyengar, Team என அழைக்கத் தக்க வழியிலேயே நடத்தப்பட்டு வந்தது.

அதன் இயக்குனராக, விதிகளை எல்லாம் புறந்தள்ளி, ஓய்வு பெற்ற வயது தாண்டியும் கூட தாமே அமர்ந்து கொள்ள வசதியாக முன் கூட்டியே முன் தேதியிட்ட முத்திரைத்தாள் வாங்கி ஏற்பாடு செய்து கொண்டு, அதன் நிர்வாகக் குழுவின் முறைப்படி அனுமதி கூட இல்லாமல், அதன் இயக்குநர் பதவியில் அமர்ந்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பார்ப்பனரல்லாதார் எவரையும் அவரவர்களுக்கு உரிய தகுதியும் ஆற்றலும் இருந்த போதிலும் உள்ளே அனுமதிக்காமல், தனிக் காட்டு சர்வாதிகார சாம்ராஜ்யம் நடத்தி வந்தார் எம்.எஸ். ஆனந்த் என்ற பச்சை வர்ணாசிரம பார்ப்பனர்.

அவரது நியமனம் பதவி நீடிப்பு முறையற்றது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் அளித்த சிறப்பான தீர்ப்பின் மூலம் தெளிவாக்கியுள்ளார்கள்.

தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சட்டப்படி, அய்.அய்.டி.,யின் இயக்குநரை அதற்கான கவுன்சில் தான் நியமிக்கவேண்டும் (மத்திய தொழில்நுட்ப கல்வி அமைச்சர் தலைமையில் எம்.பி.,க்கள், யு.ஜி.சி., தலைவர், அய்.அய்.டி., நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கவுன்சில்).

ஆனந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதாக கடந்த ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி தெரிவிக்கப் பட்டுள்ளது.

அய்.அய்.டி., தலைவருக்கும், ஆனந்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கையெழுத்திடப்பட்ட இந்த முத்திரைத்தாள், கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி வாங்கப்பட்டுள்ளது. இவர்களின் நடத்தையில் இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநரை கவுன்சில் நியமிக்கவில்லை. இவரது நியமனம் குறித்து கவுன்சிலுக்கு தெரிய வில்லை. எனவே, இயக்குனராக ஆனந்த் எப்படி தொடர முடியும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. கடந்த காலங்களில் உள்ள நடைமுறையைப் பின்பற்றியதாகக் கூறுவதை ஏற்க முடியாது. இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்களைக் கோரி பொது அறிவிப்புகூட வெளியிடப் படவில்லை. விளம்பரமும் வெளியிடப்படவில்லை.

இத்தகைய கவுரமிக்க பதவிகளுக்கு பெரிய அளவில் விளம்பரங்கள் கொடுத்திருக்கவேண்டும். குடியரசுத் தலைவருக்கு, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் அனுப்பப்பட்ட குறிப்பில், கவுன்சில் இந்த முடிவை எடுக்கவில்லை என குறிப்பிடப்படவில்லை.

இரண்டாவது முறையாக ஆனந்த் நியமிக்கப்படுவார் என அவருக்கு முன்கூட்டி தகவல் தெரிந்துள்ளது, ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே முத்திரைத்தாளை வாங்கியதில் இருந்து தெரிகிறது.

எனவே, அய்.அய்.டி. இயக்குநராக ஆனந்தை கவுன்சில் நியமிக்கவில்லை. சட்டப்படி இவரது நியமனம் இல்லை. இம்மனு ஏற்கப்படுகிறது. வழக்கு செலவுத் தொகையை 5,000 ரூபாயை ஆனந்திடம் பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது.

இதில் நீதிபதி அவர்கள் பயன்படுத்திய சொற்கள் சாதாரணமானவை அல்ல. நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என்ற சொற்றொடர், விண்ணப்பங்களைக் கோரி பொது அறிவிப்புக் கூட வெளியிடப்படவில்லை; விளம்பரமும் கூட வெளியிடப்படவில்லை என்பவை, மேலும் இந்த கவுரவம் மிக்க பதவிகளுக்கு பெரிய அளவில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். ஜனாதிபதிக்கு, மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சம் சார்பில் அனுப்பப்பட்ட குறிப்பில் கவுன்சில் இந்த முடிவை எடுக்கவில்லை எனக் குறிப்பிடவில்லை எனப் பயன்படுத்தியுள்ளார்.

சட்டத்தில் சரியானவற்றைக் குறிப்பிடாதது பொய்யைச் சொல்வதாகும் (Suppression of facts are equivalent to suggestion of false) என்ற லத்தீன் மொழிச் சொலவடை உண்டு.

அது மட்டுமல்ல. முத்திரைத் தாள் கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி வாங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் ஜூன் 28 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது, இவர்களின் நடத்தையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது!

- என்றெல்லாம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கியுள்ளார்.

அந்தத் தீர்ப்புரை இது நாள் வரை ஆனந்த அய்யங்காரால் அங்கு நடந்த சமூக அநீதி ராஜ்யத்தினை உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப் பயன் படக்கூடிய தீர்ப்பு ஆகும்

இவர் பதவி விலகினால் போதாது; இவர் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் அரசுகள் தயங்கக்கூடாது.

தயங்கினால் கட்சி வேறுபாடு இன்றி சமூக நீதியில் நம்பிக்கையுள்ளவர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்!

நீதித் தராசின் நடுநிலை தவறாது பிடித்து தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சந்துரு அவர்களைப் பாராட்டி, நல்ல தீர்ப்பை நாடு கண்டது என்ற பெருமிதத்துடன் மகிழ்கிறோம்.

சேர்க்கப்பட்ட பகுதி:


திருத்தம்

சென்னை, அய்.அய்.டி. தொடர் பாக தமிழர் தலைவர் விடுத்து 24.12.2008 விடுதலையில் 7-ஆம் பக்கம் வெளிவந்த அறிக்கை யின் இறுதிப் பகுதியில் விடுபட்டுப் போன வரிகளைக் கீழ்க்காணுமாறு திருத்திப் படித்துக் கொள்ள வேண்டு கிறோம்.

சட்டத்தில் 'உண்மையைக் குறிப்பிடாதது பொய்யைச் சொல்வதாகும்’ (Suppressio veri suggestio falsi) என்ற லத்தீன் மொழிச் சொலவடை உண்டு. அது மட்டுமல்ல. முத்திரைத் தாள் கடந்த ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி வாங்கப்பட்டுள்ளது. ஒப்புதல் ஜூன் 28 ஆம் தேதி தெரிவிக்கப்பட் டுள்ளது, இவர்களின் நடத்தையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது! - என்றெல்லாம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்புரை இது நாள் வரை ஆனந்த அய்யங் காரால் அங்கு நடந்த சமூக அநீதி ராஜ்யத்தினை உலகத்திற்கு வெளிச் சம் போட்டுக் காட்டப் பயன்படக் கூடிய தீர்ப்பு ஆகும்!

210 பார்ப்பனர்களை விரிவுரை யாளராக, பேராசிரியர்களாக நியமனம் செய்த சாதனை ஆனந்த் அய்யங்காருடையது. அதோடு இவர் ஒரு பிஎச்.டி. (டாக்டர்) மாணவரைக் கூட தயாரித்ததில்லை என்பதே இவரது தனித் தகுதி-திறமை!

இவர் பதவி விலகினால் போதாது; இவர் மீது சட்டப்படி கிரிமினல் நட வடிக்கை எடுக்கவும் அரசுகள் தயங் கக்கூடாது.

தயங்கினால் கட்சி வேறுபாடு இன்றி சமூக நீதியில் நம்பிக்கை யுள்ளவர்கள் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும்! நீதித் தராசின் நடுநிலை தவறாது பிடித்து தீர்ப்பு வழங்கிய நீதியரசர் சந்துரு அவர்களைப் பாராட்டி, நல்ல தீர்ப்பை நாடு கண்டது என்ற பெருமிதத் துடன் மகிழ்கிறோம்.

தவறுக்கு வருந்துகிறோம். (விடுதலை 26-12-2008)
(ஆ-ர்)


------------------- 24.12.2008 - "விடுதலை" இதழில் கி.வீரமணி அவர்களின் அறிக்கை

15 comments:

அக்னி பார்வை said...

தங்களின் பதில்கள் பதிவாக...

http://agnipaarvai.blogspot.com

தமிழ் ஓவியா said...

நன்றி
தோழர் அக்னி

Unknown said...

IIT-M will appeal.The decision has been taken by HRD Ministry headed by Arjun Singh.So you should firt accuse him for giving Ananth an extension.The whole world knows about the corruption of Karunanidhi and CO. Sarkaria
Commission observed that Karunanidhi indulged in corruption in a 'scientific' way. In 2008 Spectrum Scandal is the biggest scandal in indian politics.
Let the court decide on the merits
of extension given to Ananth.
Ananth has not swindled public money, nor has amassed wealth
running to crores.Veeramani is
in the 'good' company of the
corrupt politicians and everyone
knows that.

Thamizhan said...

பார்ப்பனீயத்திற்கு வக்காலத்து வாங்கும் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஆனந்த்,வேணுகோபால் போன்று இன்னும் உள்ள பல பார்ப்பனர்களின் ஆதிக்கம்.
யாரைப் பிடிக்க வேண்டுமோ,என்ன செய்ய வேண்டுமோ எல்லாம் செய்து இவர்கள் செய்து வரும் அநியாயங்களை இன்னும் பலர் நீதி மன்றங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழின வழக்கறிஞர்களே தயை செய்து விழித்தெழுங்கள்.

குப்பன்.யாஹூ said...

veeramani can take up this issue with Arjun singh or soniaji with Kalaignar's support. Why does's nt he do that.

If he dies, then Veermani's correcution, frauds , cheating of DK's assets, vallam college frauds all will come out.

IIT is very open, so ask Veeramani to take up this issue with central Govt with the help of Kalaignar.

We all know veeramani wont do, because he is the one who gave samooga neethi kaattha veeranganai certificate to ammaiyaar, j.jeyalalitha ayyangaar.

குப்பன்.யாஹூ said...

sorry there is a typing error. the 2nd praragraph should be read as if veeramani does... (not dies)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்த கருத்துக்கள் வேறு யாரிடமும் இருந்து வந்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். இதைச் சொல்வதற்கு திரு. வீரமணி ஐயா ஒரு சரியான நபராக எனக்குப் படவில்லை. நீங்கள் அவரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தால் இதை அவரிடமே தெரிவிக்கலாம். ஒரு இருபதாண்டுகளுக்கு முன் இருந்த திரு.வீரமணி ஐயா அவர்களை இப்போது நாங்கள் தேடுகிறோம். கிடைக்கவில்லை. ஈழப்பிரச்சனையில் இன்னும் கலைஞரை நம்பிக்கொண்டு இருக்கிறவர், இது போன்ற பிரச்சனைகளை நேரடியாக கலைஞர் மூலம், அவர் சமூக நீதி காத்த வீரர் என்று நம்பிக் கொண்டு இருக்கும் பெரியவர் திரு அர்ஜுன் சிங்கிடம் கொண்டு செல்லாமல் விடுதலையில் எழுதினால் என்ன நடக்கும்?

Thamizhan said...

அர்ஜுன் சிங் போன்றவர்களையே வளைத்து விடுகிறது அக்கிரஹாரம்
என்ற உண்மையை விளங்கிக்
கொள்ள வேண்டுகிறேன்.
அன்புமணி அக்கிரஹாரத்திடம் பட்ட
பாடு தெரியாதா?
ஆனந்தின் விவஹாரம் மூடி மறைக்கப் படுகிறதா,முழுதும் வெளியே வருகிறதா என்பதில் தெரியும் உண்மைகள்.

தமிழ் ஓவியா said...

ஜோதிபாரதி அவர்களின் சிந்தனைக்கு:

சமுகநீதிப் பிரச்சனையில் நம்முடைய மைல்கல்லை எட்டுவதற்கு எத்தனையோ தடையிருந்தாலும் அதில் முக்கியமான தடை தந்தைபெரியார் சொன்னதுதான்: "நம்மைப் பிடித்த சனியன்கள் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தான் "
இன்னும்கூட அப்படித்தான் இருக்கின்றன.


அர்ஜீன்சிங் அவர்களிடம் இது குறித்தெல்லாம் தெளிவாகத் தெரிவித்தாகிவிட்டது ஜோதிபாரதி. விடுதலையில் இதுகுறித்த செய்திகள் வந்துவிட்டது.

வீரமணி அவர்களை உங்களைப் போல் நானும் 25 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். அவர் கொள்கை வழியில் எந்த சமரசமுமின்றி சரியாகவே இருந்து வருகிரார் என்பது எனது கருத்து.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வணக்கம் திரு தமிழ் ஓவியா ஐயா!
தங்களின் மேலான கருத்துக்கு நன்றி!!
சொல் ஒன்று அர்த்தங்கள் ஆயிரம் என்பதை பலமாக நம்புகிறவன் நான்.
திரு.கி.வீரமணி ஐயாவின் மீதான எனது பார்வை மற்றும் எதிர்பார்ப்பு வேறாகவும் தங்கள் பார்வை எதிர்பார்ப்பு வேறாகவும் இருக்கலாம். இது தவறில்லை.

தமிழகத்தின் வெகு சன ஊடகத்தில் இன்று வந்திருக்கும் செய்தி. தாங்களும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது ஒரு பொய்யான செய்தியாக கருத இயலாது. ஏனெனில் தமிழக முதல்வர் கலைஞர் தெரிவித்த கருத்தாக வெளிவந்திருக்கிறது. யாரும்(கலைஞர் தரப்பில்) இதுவரை மறுப்பு தெரிவிக்க வில்லை. இது பற்றிய தங்களுடைய மேலான கருத்தை எதிர் பார்க்கிறேன். அதன் மீது எனது விமர்சனத்தை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கிறேன். நன்றி!
தாங்கள் இன்னும் படிக்கவில்லை என்றால் இந்த சுட்டியில் போய் பார்க்கவும்.

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2599&cls=row3

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்த தகவல் தினமலரால் குழப்பி விடப்பட்ட குட்டையாக இருந்தால், கி.வீரமணி ஐயா தினமலர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாமே, முதல்வர் நடவடிக்கை எடுக்கலாமே?

தமிழ் ஓவியா said...

இலங்கைப் பிரச்சனை தொடர்பாக கலைஞரின் நிலைப்பாடு என்ன என்பது தங்களுக்கு தெரியாதா?

முதல்வர் கலைஞர் சுப. தமிழ்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதிய போது எதிர்கட்சிகள் ஆடிய ஆட்டம் பற்றி தாங்கள்அறியவில்லையா?

தி.மு.க.தலைவர் கலைஞருக்கும், முதல்வர் கலைஞருக்கும் உள்ள வேறுபாட்டை அல்லது பொறுப்பை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

இலங்கை பிரச்சனையில் தங்கள் நிலைப்பாடு என்ன? என்பதை தொல்.திருமா, மீ.கி. வீரமணி அவர்கள் தெளிவுபடுத்திப் பேசியது இதோ:

சென்னை டிச.24 தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி

திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்கள்
பார்ப்பன ஆதரவாளர்கள் - சுப. வீரபாண்டியன்

எங்களைப் பிரிக்க அதிமுக ஆதரவு
காங்கிரசார் முயற்சி - தொல் திருமாவளவன்

என்றைக்கும் கலைஞருக்குப்
பாதுகாப்பு அரணாக இருப்போம் - தமிழர் தலைவர்

சென்னை, டிச.26- திராவிட இயக்கத்தை எதிர்ப்பவர்கள் பார்ப்பனர் களுடைய ஆதரவாளர்களாகத்தான் இருப்பார்கள் என்று சுப. வீரபாண்டி யனும், எங்கள் உறவைப் பிரிக்க அதிமுக ஆதரவு காங்கிரசார் முயல் கின்றனர் என்று தொல். திருமாவளவனும், எங்கள் மூவரையும் கலை ஞரிடத்திலிருந்து பிரிக்க யாராலும் முடியாது. தள்ளி நின்றாலும் கலைஞருக்கு பாதுகாப்பு வளையமாக இருப்போம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் கூறினர்.

தந்தை பெரியார் அவர்களின் 36-ஆம் ஆண்டு நினைவு நாள் சென்னை பெரியார் திடலில் 24.12.2008 அன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு வரவேற்று பேசினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார்.

சுப. வீரபாண்டியன் உரை

அடுத்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசியதாவது:

நம்முடைய ஆசிரியர் அவர்களும் தொல். திருமாவளவன் அவர்களும் நானும் ஒரே மேடையில் இருக்கிறோம். இதைப் பார்த்து முதலில் மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள் காங்கிரஸ்காரர்கள்தான். ஏனென்றால் இந்த மூன்று பேரையும் ஒரே இடத்தில் கைது செய்தால் மகிழ்ச்சி அடையக் கூடியவர்கள் காங்கிரஸ்காரர்களாகத்தான் இருக்க முடியும்.

மூன்று பேரும் கைது செய்யப்பட்டிருக்கின்றோம்

இந்த மூன்று பேரும் இன்றல்ல. ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கின்றோம். கலைஞர் என்ற இதயச் சிறையில் கைதானவர்கள்தான் நாங்கள் மூன்று பேரும். இன்று காலையில் கூட ஒரு செய்தி. இலங்கை அதிபர் ராஜபக்சே சொல்லியிருக் கின்றார். கிளிநொச்சியைப் பிடிக்காமல் சிங்கள இராணுவத்தினர் திரும்ப மாட்டார்கள் என்று சொல்லியிருக்கின்றார். தம்பிகள் கொடுக்கிற அடியைப் பார்த்தால்

அவர் சொல்லியிருப்பது உண்மைதான். கடந்த அயந்தாறு நாட்களாக ஈழத்தில் தம்பிகள் கொடுக்கின்ற அடியைப் பார்த்தால் நிச்சயம் இலங்கை இராணுவம் திரும்பாது என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. எனவே ராஜபக்சே சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்.

இந்த நாட்டிலே உண்மையைச் சொன்ன அந்துலே அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது. அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தையே நடக்கவிடாமல் செய்கின்ற அராஜக பாஜககாரர்கள் இருக்கின்ற நாடுதான் இந்த நாடு.

உலகத்தில் ஒரே தலைவர்

தந்தை பெரியார் அவர்கள் கடவுள், மொழி, ஜனநாயகம் இந்த மூன்றைப் பற்றியும் மிகத் தெளிவாக கருத்துக்களைச் சொல்லி யிருக்கின்றார்.

மக்கள் ஏற்காத ஒன்றைச் சொல்லியே மக்கள் தலைவர் ஆன உலகத்தில் ஒரே ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தான்.

தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டால் அய்ந்து முதலமைச்சர்களை உருவாக்கியிருக்கின்றார். அதில் ராஜாஜி வேண்டுமானால் அவரைப் பார்ப்பனர் என்று பிரித்து விடலாம். மற்றபடி காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். இந்த நான்கு முதலமைச்சர்களையும் சொல்லலாம்.

ஓ.பன்னீர்செல்வம் அவர்களைக் கூட சொல்லலாம். ஈழத் தமிழர் பிரச்சினையிலே அவருடைய உணர்வை சொன்ன பொழுது பச்சைத் தமிழர் பன்னீர் செல்வம் என்று சொல்லலாம். ஒரு வேளை அதுவே அவருடைய பதவிக்கு ஆபத்தாகி விடுமோ? தந்தை பெரியாருடைய உணர்வுதான்

தந்தை பெரியார் அவர்களுடைய தமிழின உணர்வு ஆதரவு இருந்த காரணத்தினால்தான் அந்த உணர்வு இன்றைக்கு தமிழீழம் வரை சென்றிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. யாராவது திராவிட இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்றால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை நம்மாலே நன்கு அறிய முடியும். எழுகதிர் என்று ஒரு இதழ்

எழுகதிர் என்று ஒரு ஏடு நான் படித்த செய்தியை உங்களுக்குச் சொல்லுகின்றேன். 1944-லே நீதிக்கட்சி சேலத்திலே திராவிடர் கழகமாக தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையிலே மாறுகிறது. இந்த எழுகதிரில் ஒரு புதுக்கரடியை விட்டிருக்கின்றார்கள். நமக்குப் படிக்கும் பொழுது அதிர்ச்சி யாகவும், வியப்பாகவும் இருந்தது.

1944 சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் காலையில் தமிழர் கழகம் என்றுதான் தந்தை பெரியார் அவர்கள் பெயர் வைக்க முடிவு செய்தார். ஆனால் மாலையில் திடீரென்று அந்தப் பெயரை மாற்றி திராவிடர் கழகம் என்று பெயர் வைத்து விட்டார். அதற்கு என்ன காரணம் என்பதை அந்த எழுகதிர் ஏடு எழுதியிருக்கிறது. மாநாட்டு மதிய உணவு இடைவேளையின் பொழுது திடீரென்று சத்தியமூர்த்தி அய்யர் தந்தை பெரியாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாராம். எந்த அளவுக்கு டெலிஃபோன் வசதி அப்பொழுது இருந்தது என்பது நமக்குத் தெரியவில்லை. தந்தை பெரியார் அவர்கள்மீது எப்படிப்பட்ட தவறானப் பிரச்சாரத்தை அவதூறு செய்திகளை செய்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு எப்பொழுதுமே ஆண்டுகளை செய்திகளை நினைவில் வைத்துக் கொள்ளுகின்ற பழக்கம் உண்டு. எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே பழைய செய்திகளைப் புரட்டிப் பார்த்தேன்.

1943-லேயே சத்தியமூர்த்தி அய்யர் இறந்து விட்டார்

1943-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சத்தியமூர்த்தி அய்யர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஆதாரப் பூர்வமாக படித்தேன். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை இவ்வாறு பேசிய சுப. வீரபாண்டியன் மேலும் பல கருத்துக்களை விளக்கிப் பேசினார்.

திருமாவளவன் உரை

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

தமிழீழ ஆதரவாளர்களாக இருப்பவர்கள் பெரியாரின் பாசறையில் வளர்ந்தவராகத் தான் இருப்பார்கள். அதில் நானும் ஒருவன். தமிழீழம் பற்றி பேசுவதற்கு தடை விதித்து விட்டார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழீழம் பற்றி பேச தடை கிடையாது.

ஒரு நேரத்தில் ராஜீவ்காந்திகூட விடுதலைப்புலிகளை பார்த்து வெறும் 2 ஆயிரம் பொடியன்கள் என்று கூறினார். அந்த 2 ஆயிரம் பொடியன்களை இந்திய ராணுவத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. இவர்களைப்பற்றி பேசினால், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து ஒரு வருடம் சிறையில் அடைப்பார்கள்.

ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் அடைக்க முடியாது

இந்தியாவில் உள்ள எந்த சட்டத்தாலும் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் அடைக்க முடியாது. பெயில் இருக்கிறது. பரோல் இருக்கிறது. இதை எல்லாம் நினைத்தாலே தானாக துணிச்சல் வந்துவிடும். எனது உருவ பொம்மையை தினமும் காங்கிரஸ் நண்பர்கள் எரிக்கிறார்கள். ஏசுநாதர் ஒரு முறை தான் உயிர்த்தெழுந்தார். ஆனால் நான் தினமும் உயிர்த்தெழுகிறேன்.

காங்கிரசில் திமுக காங்கிரஸ், அதிமுக காங்கிரஸ் என இரண்டு வகை உண்டு. அதில் அதிமுக காங்கிரஸ் என்னை கைது செய்ய சொல்லி தூண்டி வருகிறது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு நான் பொறுப்பாக முடியாது. அவன் அடிக்க வந்தான் இவன் திருப்பி அடித்தான் அவ்வளவு தான். தி.க., திமுக., விடுதலை சிறுத்தைகள் என்றைக்கும் கைகோத்து நிற்பார்கள் யார் நினைத்தாலும் எங்களைப் பிரிக்க முடியாது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் முக்கிய பகுதி வருமாறு:

இந்த மேடையில் இருக்கின்ற சுப. வீரபாண்டியனாக இருந்தாலும், சகோதரர் தொல். திருமாவளவனாக இருந்தாலும் எங்களிடையே ஒரே கருத்து ஒரே கொள்கைதான் இருக்கிறது. எங்களை கைது செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படியாவது கலைஞர் ஆட்சிக்குத் தொல்லை கொடுத்தே ஆக வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்து எதிரிகளினுடைய கைக் கூலிகளாக சிலர் மாறியிருக்கிறார்கள்.

புழல் சிறையைப் பார்க்க வேண்டும்

நாங்கள் என்ன சிறைச் சாலையைப் பார்க்காதவர்களா? எப்பொழுதும் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கக் கூடியவர்கள். அதுவும் புழல் சிறையைப் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஒரு ஆசை. புழல் பகுதிக்கு எப்பொழுது சென்றாலும், புழலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவித்து விட்டுத்தான் ஒவ்வொரு முறையும் வருகிறோமே தவிர புழல் சிறைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு ரொம்ப நாளாகவே உள்ளது.

டெல்லி திகார் சிறைச்சாலைக்குச் சென்றால் அங்கே இந்தியை கற்றுக் கொண்டு வடபுலத்திலும் பெரியார் கொள்கையை பரப்ப ஒரு சுற்று சுற்றி வர வேண்டும் என்ற ஆசையும் உண்டு.

காங்கிரஸ்காரர்கள் சிறையைப் பார்க்காமல் இருக்கிறார்கள்

காங்கிரஸ்காரர்கள்தான் இது வரை சிறைச்சாலையைப் பார்க்காமல் இருக்கிறார்கள். எனவே கைது செய், கைது செய் என்று சொல்லி இந்த பூச்சாண்டி வேலையை எல்லாம், மிரட்டலை எல்லாம் எங்களிடத்திலே காட்ட வேண்டாம். எந்த அமைப்பாக இருந்தாலும், எந்த ஒரு கட்சியாக இருந் தாலும் ஒரு அலுவலகத்திற்குள்ளே, ஒரு நிறுவனத்திற்குள்ளே புகுந்து தாக்குதல் நடத்துவது என்பதை யாரும் ஆதரிக்க முடியாது. மோதிக் கொள்ள வேண்டுமே தவிர வன்முறை அதற்குத் தீர்வாகாது. சத்தியமூர்த்தி பவனில் தகராறு என்பது இன்று நேற்று அல்ல. அது நரசிம்மராவ் காலத்திலே மிகப் பெரிய அளவுக்கு நடந்திருக்கிறது.

அது மட்டுமல்ல சத்தியமூர்த்தி பவனில் வாஸ்து சாஸ்திர முறைப்படி இடித்தார்களா? அல்லது வேறுவிதமாக இடித் தார்களா? என்று இன்னமும் அங்கு கோஷ்டி தகராறுகள் இல்லாமல் இல்லை. யார் எந்த அணி என்பதையும் புரிந்து கொள்ள முடியாத ஒரு நிலைதான் பட்டிமன்றம் நடத்தக் கூடிய நிலைதான் அந்த கட்சியில் இருக்கிறது.

தள்ளி இருந்தாலும் கலைஞரை பாதுகாப்போம்

எந்தக் காரணத்தை முன்னிட்டும் கலைஞரிடமிருந்து எங்களைப் பிரிக்க முடியாது. நாங்கள் தள்ளி இருந்தாலும்கூட கலைஞர் அவர்களுக்குப் பாதுகாப்பு வளையமாகத்தான் இருப்போம். கலைஞர் அவர்கள் ஆதரித்தாலும், எதிர்த்தாலும் எதிலும் உறுதியாக இருப்பவர் என்பதை இந்திராகாந்தியே சொல்லியிருக்கின்றார். ஒரு சிலர் தி.மு.க காங்கிரஸ் உறவை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்று டெல்லிக்குச் சென்று படை எடுத்துப் பார்த்தார்கள். டெல்லி காங்கிரஸ் போய் விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு கூட்டணியில் டெல்லி தலைமை உறுதியாக இருக்கிறது.

தங்கபாலு கலைஞரிடம் பேசியிருக்க வேண்டாமா?

கலைஞர் அவர்கள் தமிழகத்தில் கூட்டணியில் வகுத்த வியூகத்தினால், நாற்பதுக்கு நாற்பது தொகுதி வெற்றி பெற்ற தினால் தான் மத்தியிலே. காங்கிரஸ் ஆட்சியே அமைந்திருக்கிறது.

ஆனால் இங்குள்ள காங்கிரசார் எதிர்கட்சிகளைவிட மிக மோசமாக விமர்சிப்பதா? ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்றவுடனே - சத்தியமூர்த்தி பவனில் தாக்குதல் பிரச்சினை என்றவுடனே காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியில் இருக்கிறது. உடனடியாக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு முதலமைச்சர் கலைஞரிடம் தொலைபேசியில் பேசியிருக்க வேண்டாமா? எந்த நேரத்திலும் பேசக்கூடிய 20 மணி நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய நிலையில் இருக்கக் கூடிய ஒரு முதலமைச்சர் நம்முடைய முதல்வர் கலைஞர். நள்ளிரவு இரண்டு மணியானாலும் தொடர்பு கொண்டு பேசலாமே. பொது வாழ்க்கையில் உழைப்பின் உருவமாகத் திகழக்கூடிய வராயிற்றே அவர்.

அவரிடம் தங்கபாலு அவர்கள் பேசியிருக்க வேண்டாமா? விஷமப் பிரச்சாரம்

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நீங்கள் சொல்லலாமா?

ஈழத் தமிழர்களுடைய உணர்வு பொங்கு மாங்கடலென பொங்கி வருகின்ற உணர்ச்சியை திசை திருப்ப ஒரு சிலர் இந்த விஷமமான பிரச்சாரத்தை செய்து கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் ஈழம் சொன்னவர் தந்தை செல்வா

தமிழ் ஈழம் வேண்டும் என்று சொன்னவர் ஈழத் தந்தை செல்வா அவர்கள். நாடு பிரிய வேண்டும் என்று இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் இதை ஒரு பிரச்சினையாகவே வைத்து வெற்றி பெற்றார்கள்.

வாஜ்பேயை கைது செய்ய வேண்டும்

கலைஞர் தலைமையில் டெசோ மாநாடுகளை தமிழகத்தின் முக்கிய தலைநகரங்களில் நடத்தினோம்.

தமிழீழம்தான் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று நாங்கள் மதுரையில் நடத்திய மாநாட்டில் வந்து பேசியவர் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி. தமிழ் ஈழத்தைப் பற்றி தமிழ்நாட்டில் பேசக்கூடாது என்று சொல்லுகிறவர்களுக்குச் சொல்லுகின்றோம் அப்படியானால் முதலில் வாஜ்பேயி அவர்களைத் தான் கைது செய்ய வேண்டும்.

மதுரையிலே தமிழீழ மாநாட்டை நடத்தியவர்கள் நாங்கள்.

தமிழ் ஈழத்தை தடுத்து நிறுத்த முடியாது

யார் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் தமிழ் ஈழம் அமையப் போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். யாரை நம்பியும் அவர்கள் இல்லை.

தமிழன் அங்கே செத்துக் கொண்டிருக்கின்றான்

தமிழினம் செத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதைப் பற்றியே பேசக் கூடாது என்று ஒரு சிலர் தமிழினத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள். பூச்சாண்டி காட்டாதீர்

நாங்கள் தான் நிறைய இரத்ததானம் செய்கிறோமே. எங்களுடைய இரத்தத்தைப் பெற்றாலாவது காங்கிரஸ்காரர் களுக்கு மான உணர்வு வராதா என்பதுதான் எங்களுடைய கவலை.

எனவே எங்களை மிரட்டலாம். பூச்சாண்டி காட்டலாம் என்று கருதாதீர்கள். தொல்.திருமாவளவன் தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார். தாய் வீட்டுக் கதவு என்றைக்கும் அவருக்குத் திறந்தேயிருக்கும்.

ஆகவே கலைஞரிடமிருந்து எங்களைப் பிரித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். கலைஞர் அவர்கள் பதவியில் இருந்துதான் ஆக வேண்டும் என்று நினைக்கக் கூடியவர் அல்லர். கலைஞர் பதவியில் இருந்தாலும், இல்லையென்றாலும் தமிழினத்தின் மீட்சிக்காக தொண்டு செய்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர். இவ்வாறு உணர்ச்சிகரமாகப் பேசினார்.

தமிழர் தலைவர் உரைக்கு
மக்களின் தொடர் கரவொலி இதுவரை காணாத எழுச்சி

சென்னை பெரியார் திடலில் 24.12.2008 அன்று மாலை நினைவு நாள் பொதுக் கூட்ட நிகழ்ச்சி மிகச் சிறப்பானதொரு எழுச்சி நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தொல். திருமாவளவன் ஆகியோர் சிறப்பாக உரையாற்றினர். இறுதியாக தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் அவர்களது உரை அனல் தெறிக்கும் உணர்ச்சிகரமானதொரு உரையாக அமைந்தது தமிழர் தலைவர் அவர்களது கருத்து உரை ஏ.கே. 47 துப்பாக்கியிலிருந்து வெளிவரும் தொடர் கருத்து குண்டு மழையாக இருந்தது. தமிழர் தலைவர் அவர்களின் உரையைப் பாராட்டி மேடையில் இருந்த தலைவர்கள் தொல். திருமாவளவன், சுப. வீரபாண்டியன் ஆகியோர் தலைக்கு மேல் கரங்களை உயர்த்தி கரவொலிகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

தமிழர் தலைவரின் உரைக்கு நடிகர் எம்.ஆர். ராதா மன்றத்தில் குவிந்திருந்த மக்கள் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தொடர் கரவொலியை எழுப்பி தங்களுடைய எழுச்சி கரமான உணர்ச்சிகளை, ஆதரவை வெளிப்படுத்தினர் என்பது தமிழர் தலைவர் உரையின் சிறப்பம்சமாகும்.

தொல்.திருமாவளவன் மாநாட்டில்
நான் ஆற்றிய உரையாக

தொல்திருமாவளவன் நடத்துகிற 26-ந் தேதி மாநாட்டிற்கு என்னால் வர இயலவில்லை காரணம் சுற்றுப் பயணம் செல்லுகிறேன் ஆகவே அந்த மாநாட்டிலே கலந்து கொண்டு உரையாற்றியதாகவே இந்த உரையை விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
(தமிழர் தலைவர் உரையிலிருந்து 24.12.2008 பெரியார் திடல்)

உலகத்திலேயே முப்படை
வைத்திருப்பவர்கள் விடுதலைப்புலிகள்

உலகத்திலேயே வான்வழி புலிகள் படை, கடற்புலிகள் படை, தரைப்படை என்று இப்படி முப்படைகளையும் வைத்திருக்கின்ற தீவிரவாத அமைப்பு என்று சொல்லு கின்றார்களே - அந்த விடுதலைப்புலிகளைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படி ஒரு முப்படைகள் கொண்ட அமைப்பு கிடையாது.
(சென்னை பெரியார் திடல் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 24.12.2008)

-----------நன்றி: "விடுதலை" 26-12-2008

தமிழ் ஓவியா said...

ஜோதிபாரதி சுட்டிக் கட்டிய சுட்டியில் தினமலர் ஏடு வீரமணி அவர்களைப்பற்றி எழுதிய விஷமச் செய்தி இதோ:

"இதுவரை கி.வீரமணி என இருந்த தன் பெயரை "நியூமராலஜி' அடிப்படையில் மீ.கி.வீரமணி என மாற்றிக் கொண்டுள்ள தி.க. தலைவர் வீரமணி"

இது குறித்து 26-12-2008 "விடுதலை" இதழ் எழுதியது இதோ:

"

அட, துப்புக்கெட்ட தினமலரே!

"தினமலர்" (26.12.2008) என்ற பார்ப்பன நஞ்சு கக்கும் ஏடு வழக்கம்போல தனது துப்புக்கெட்ட தனத்தை அரங்கேற்றி யுள்ளது.

சென்னை - பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி - திராவிடர் கழக மகளிரணி மாநாடு நடைபெற்றது. அம் மாநாட்டில் குழந்தைகளின் பெயர்களுக்குமுன் முன்னெழுத்து (Initial) தந்தையார் பெயரோடு, அம்மாவின் பெயரின் முன்னெழுத்தும் குறிக்கப்படவேண்டும் என்ற பெண்ணுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் - அதற்கு நானே முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறி, தமது தாயார் பெயரான மீனாட்சி அம்மையார் என்னும் பெயரில் உள்ள முதல் எழுத்தை யும், ஏற்கெனவே உள்ள "கி"யுடன் இணைத்து "மீ.கி. வீரமணி" என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

அந்த நேரத்திலேயே ஒரு விளக்கத்தையும் தெரிவித்தார். விஷமிகள் இது ஏதோ எண் சாஸ்திரம் (Numerology) என்று விஷமப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று எச்சரித்திருந்தார்.

"தினமலர்" போன்ற பார்ப்பன நச்சரவங்கள் தனது உச்சிக் குடுமித் தனத்தைச் செய்யும் என்று தந்தை பெரியாரின் சீடரான அவருக்குத் தெரியாதா?

அவர் எதிர்பார்த்தபடியே பார்ப்பன விஷப்பாம்பு தனது பாஞ்சாலி வேலையைச் செய்திருக்கிறது.

பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடிக்கும் தமிழர் தலை வரைக் கொச்சைப்படுத்தவேண்டும் என்ற கொழுப்பு "தினமலர்" கூட்டத்தின் தலையில் ஏறியிருப்பதாகத் தெரிகிறது.

நல்ல மாட்டுக்கு ஒரு "சூடு!" இன்னும் எத்தனைச் சூடு களைத்தான் தமிழர்கள் கொடுப்பார்களோ தெரியவில்லை."
நன்றி.

தமிழ் ஓவியா said...

கி.வீரமணி அவர்கள் அறிக்கையின் விடுபட்ட பகுதி மேலே சேர்க்கப்பட்டுள்ளது. மீண்டும் அறிக்கையை படிக்க வேண்டுகிறேன்

Unknown said...

சென்னை அய்.அய்.டி. ஆனந்த் அய்யங்காரின் பதவி வெறியை அம்பலப்படுத்தியமைக்கு நன்றி.