Search This Blog
19.12.08
சமுதாய சீர்திருத்தத்திற்கு பாடுபட்டவர்களுக்கு பார்ப்பனர்கள் அளித்த பட்டங்கள்
"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"
என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட
தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.
*******************************************
2. பகுத்தறிவு - II
நம்மில் சமுதாய சீர்திருத்தத்திற்கு யார் பாடுபட்டாலும் அவர்களுக்கு பார்ப்பனர்கள் அளிக்கும் பட்டங்கள் என்னவென்றால், ராட்சதன், அரக்கன், அசுரன் என்கின்றதான பட்டங்களாகும்.
பட்டங்களின் தத்துவம்
இந்தம் பெயர்களின் தத்துவம் என்னவென்று சிந்தித்துப் பார்த்தால், இன்று இந்நாட்டில் நடந்துவரும் சமுதாயம் (பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்) போராட்டமானது, ஆயிரம் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் தொடங்கி நடந்து வந்திருக்கிறது என்பது தான்.
அவதாரக் கரடி
கடவுள் (விஷ்ணு) அவதாரங்கள் என்கின்ற பார்ப்பன கற்பனைகளைப் பார்த்தால், நமது அரசர்கள் அக்காலங்களில் பார்ப்பனர் விஷயங்களில் எப்படி எப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவற்றைப் பார்ப்பனர்கள் எப்படி-எப்படிச் சமாளித்திருக்கிறார்கள் என்பதும் விளங்கும். அந்த விஷ்ணு அவதார எண்ணிக்கை 10 என்றாலும் பத்துக்கும் கதைகள் இல்லை.
அவற்றில் (1) மச்ச (2) கூர்ம (3) வராக (4) நரசிம்ம (5) வாமன, (6) பரசுராம (7) ராம, (8) பலராம, (9) கிருஷ்ண என்பவை யான ஒன்பது அவதாரங்களுக்குத்தான் கதைகள் இருக்கின்றது. பத்தாவது அவதாரம் இனிமேல் ஏற்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த அவதார காலத்தில் இன்ன இன்ன காரியம் நடக்கும்; மக்கள் இப்படி இப்படி நடந்து கொள்வார்கள் என்பதாகக் காணப்படுகிறது.
அப்படிக் காணப்படுவதற்கேற்ப இன்று காரியங்கள் நடக்கின்றனவா?
இதுதான் தசாவதாரம்
அதாவது, இன்றைய பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டம் தான் பத்தாவது அவதாரப்போராட்டம்; அதுதான் இன்று நடைபெறுகிறது என்பதற்கு, அந்த அவதாரங்களுக்கு எதிரிகளாக இருந்த ராட்சதர்கள் முதலிய பெயர்களை இன்று பார்ப்பனர் நமக்குச் சூட்டுவதே ஆதாரமாகும். அதாவது ராஜாஜி நம் தலைவர்களை
ராவணன், இரணியன், சூரபத்மன் என்றெல்லாம் சொல்லுவதும், அந்த ஆதாரத்தையே நமக்குக் காட்டுகிறது. அத்துடன் சத்தியமூர்த்தியும் இப்படி நம் தலைவர்களைப் பலமுறை சொல்லியிருக்கிறார்.
இந்த அவதாரங்களின் தத்துவம் என்னவென்றால், பார்ப்பனன் என்பவன், எந்ததுறையிலும், ஒழுங்காக, ஒழுக்கமாக, நாணயமாக, நேர்மையாக, உண்மையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தனது நலத்திற்கு எந்தத் தவறான காரியத்தையும் செய்யலாம். உயர் வாழ்வும், வெற்றியும் தான் முக்கியம் என்பதைப் பார்ப்பனர்களுக்கு படிப்பிப்பதேயாகும். இவை ஏதோ ஒரு காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், இன்று பார்ப்பனர் நடப்பில் இருந்து வரும் நடத்தைகளையும் குணங்களையும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
துருவிப்பார்த்தால் விளங்கும்
இந்த நூல்கள் ஆயிரம் - இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் எழுதப்பட்ட நூல்களாய் இருந்தாலும் அக்காலத்திலேயே பார்ப்பனர் தங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகளைச் சமாளிக்கவும், மேலால் ஏற்படக்கூடும் என்று நினைத்து முன் எச்சரிக்கையாகவும், எக்காலத்துக்கும் பொருந்துமாறு பார்ப்பன மக்களுக்கு வழிகாட்டவும் எழுதப்பட்டவைகளாகும்.
இவைகளைத் துருவிப் பார்த்தால், கவனமாக சிந்தித்தால் பார்ப்பனரின் இன்றைய நிலை என்ன? அதற்கு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது விளங்கும்.
-------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 6-7
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//இந்த அவதாரங்களின் தத்துவம் என்னவென்றால், பார்ப்பனன் என்பவன், எந்ததுறையிலும், ஒழுங்காக, ஒழுக்கமாக, நாணயமாக, நேர்மையாக, உண்மையாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தனது நலத்திற்கு எந்தத் தவறான காரியத்தையும் செய்யலாம். உயர் வாழ்வும், வெற்றியும் தான் முக்கியம் என்பதைப் பார்ப்பனர்களுக்கு படிப்பிப்பதேயாகும்.//
பெரியார் கணித்தது போலவே பார்ப்பனர்களும் நடந்து வருவதை கவனித்திருக்கிறேன்.
பார்ப்பனரல்லாதவர்கள் இனிமேலாவது திருந்த வேண்டும்.
பார்பனர்களின் பித்தலாட்டமே அவதாரங்கள்தான்.
இன்றைய பட்டங்கள்:
இன நலம்--இந்திய் எதிரி
மனித நேயம்-பார்ப்பன எதிரி
செம்மொழி தமிழ்-சோறு போடுமா
தாழ்த்தப்பட்டவர்--திறமையில்லாதவர்
இடஒதுக்கீடு=கருவறை(கோவிலும்,உச்ச அநீதி மன்றம்)எதிர்ப்பு.
நீதி மன்றம்-கடைசிக் கருவறை
சகோதரச் சண்டை-கோவில் திருவிழா
மதச் சார்பின்மை-இந்து மத வெறி
நியாயம்-மத வெறியில் கொலை
மோசடி-ஜெகத் குரு
நேர்மையில்லை-பத்திரிகா தர்மம்.
தங்கலின் வருகைக்கும்
கருத்துக்கும்
மிக்க நன்றி.
Post a Comment